Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையின் அபிவிருத்தியில் உலக வங்கியின் பங்களிப்பு

2010-2018 காலகட்டத்தில் இலங்கையின் பொருளாதாரம் சராசரியாக 5.6 சதவீதமாக வளர்ந்துள்ளது.

உலக வங்கி

உலக வங்கி சிறு கண்ணோட்டம்..

அமெரிக்கா வாஷிங்டன் டி.சி இல் உள்ள உலக வங்கி
nepalsamya.com

உலக வங்கியை இன்டர்நேஷனல் பேங்க் ஃபார் ரீகன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டெவலப்மென்ட் (International bank for reconstruction and development) என்ற பெயரில் 1944-ம் ஆண்டு உருவாக்கினார்கள். இதன்மூலம் சர்வதேச அளவில் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி உதவி அளிக்க வேண்டும் என்பது நோக்கமாகக் கூறப்பட்டது. வறுமை ஒழிப்பு, பருவநிலை மாறுபாடு, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றையும் கவனத்தில்கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது. உலக வங்கிக்கான மூலதனத்தில் பல நாடுகள் பங்களிப்பு செய்கின்றன. அதிகபட்ச பங்களிப்பை அமெரிக்கா செய்கிறது. எனவே, இதில் அமெரிக்காவின் கையே ஓங்கியிருக்கிறது. உலக வங்கி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் பெரும்பாலும் அமெரிக்காவின் திட்டத்தையே இது செயல்படுத்தும். அமெரிக்கா தவிர, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதில் முக்கிய பங்களிப்பு தருகின்றன.

 இலங்கையில் உலக வங்கியின் வரவு மற்றும் பணி

சுமார் ஆறு தசாப்த காலமாக உலக வங்கி குழுவானது இலங்கையின் அபிவிருத்தியில் ஒரு பங்காளியாக இருந்து வருகின்றது. இந்தக் காலப்பகுதியில் நாடு குறைந்த வருமான நிலையிலிருந்து நடுத்தர வருமானம் பெரும் நாடுகளின் தரத்தை அடைந்துள்ளது. கடுமையான வறுமை ஒழிப்பு மற்றும் பகிரப்பட்ட சௌபாக்கியத்தை ஊக்குவித்தல் எனும் இரட்டை இலக்குகளை அடையும் உறுதியுடன் அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்திகள், சர்வதேச அபிவிருத்தி அமைப்பு, சர்வதேச நிதிக் கூட்டமைப்பு, பலதரப்பு முதலீட்டு உத்தரவாத முகவரகம், மற்றும் முதலீட்டு முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையம் எனும் ஐந்து நெருங்கிய இணை அமைப்புக்களை இதற்காக கொண்டுள்ளது. சர்வதேச வங்கி, சர்வதேச அபிவிருத்தி அமைப்பு மற்றும் சர்வதேச நிதிக் கூட்டமைப்பு எனும் மூன்று உலக வங்கி அமைப்புக்கள் இலங்கையில் செயற்படுகின்றன.

இலங்கைக்கு நிலையான ஆதரவை வழங்குவதாக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி உலக வங்கியின் உப தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து வாக்குறுதி அளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

கடன் வழங்கல் உத்தரவாதங்கள் என்பனவற்றுடன் பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை சேவைகள் போன்ற கடன் அல்லாத சேவைகள் ஊடாக நிலைத்திருக்கும் அபிவிருத்தியை ஊக்குவிப்பதுடன் வறுமையைக் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது இவ்வமைப்பு. நடுத்தர வருமான மற்றும் கடன் வேண்டப்படும் வறிய நாடுகளுக்கு மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்திகள் சர்வதேச வங்கி நிதி உதவிகளை வழங்குகின்றதுடன் சர்வதேச அபிவிருத்தி அமைப்பு வறிய நாடுகளுக்கு கூடிய சலுகைகளுடன் அல்லது வட்டியில்லா நிதி உதவிகளை வழங்குகின்றது. இலங்கை குறைந்த நடுத்தர வருமான நாடாக மற்றும் சர்வதேச வங்கியின் அனுசரணை நாடாக உள்ளது.

இலங்கைக்காக உலக வங்கியின் முதலாவது கடன் 1954 இல் அபர்டீன–லக்சபான மின் உற்பத்தித் திட்டத்திற்காக வழங்கப்பட்டது. 

1954 முதல் இன்றுவரை சர்வதேச அபிவிருத்தி அமைப்பு 4.86 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்திகள் சர்வதேச வங்கி 315 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் வழங்கியுள்ளது.

உலக வங்கியின் செயல்திட்டங்கள்

“இலங்கையில் மக்கள்தொகை மாற்றம்” குறித்து உலக வங்கியுடன் 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடல்

10 ஆம் திகதி அக்டோபர் மாதம் 2019இன் நிலவரப்படி சர்வதேச அபிவிருத்தி அமைப்பு மற்றும் மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்திகள் சர்வதேச வங்கி அமைப்புகளின் செயல்களில் 18 அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இதற்கான மொத்த நிகர தொகை 2.26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். நிலையான அபிவிருத்தியை கொண்டுசெல்லும் கடமைகளுக்காக 65 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது. அவற்றுள் நகர்ப்புற அபிவிருத்தி, காலநிலை பின்னடைவு, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் நீர் உள்ளடங்குகின்றன.மனித மேம்பாட்டிற்காக 24 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் கல்வி, சுகாதாரம்,மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளடங்குகின்றன. உள்கட்டமைப்பில் 7 சதவீதம் மற்றும் நிதித்துறையில் 4 சதவீதம் என எல்லாமாக 100 சதவிகித அபிவிருத்தி திட்டங்கள் உள்ளன. இலங்கையில் அறக்கட்டளை நிதி வளங்களின் மொத்த மதிப்பு 2016 ஜூலை முதல் 9.8 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து சுமார் 22 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது, மேலும் இது 32 மானியங்களை உள்ளடக்கியுள்ளது.

உலக வங்கியின் திட்டங்களின் பெறுபேறுகள்

கல்வி

கல்வியில் இலங்கையின் சாதனைகள் சுவாரஸ்யமாக உள்ளன என்று உலக வங்கி கூறுகிறது. முதல் நிலை கல்வியில் உலகளாவிய அணுகல் மற்றும் பங்களிப்பு, இடை நிலை கல்வியில் அதிக சேர்க்கைகள் மற்றும் பொதுக் கல்வியில் பாலின சமத்துவம் எனபன அவற்றுள் அடங்குகின்றன. இதில் முதல் நிலை கல்வி நிகர சேர்க்கை விகிதம் 99 சதவீதமும் முழுமையான விகிதம் 95 சதவீதத்திற்கும் அதிகமாகும் என தெரிவித்துள்ளது. பல தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை கல்வி முறையில் பாலின சமத்துவம் அதிகமாக உள்ளதாம். ஆரம்பக் கல்வியில் பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளின் எண்ணிக்கை சமமான விகிதத்திலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியில் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கின்றது உலக வங்கியின் அறிக்கை.

உயர் நடுத்தர வருமான நாடு எதிர்பார்க்கும் அளவை விட உயர் கல்விக்கான அணுகல் இலங்கையில் குறைவாக உள்ளதாக உலக வங்கி தெரிவிக்கின்றது

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உலக வங்கி தலைவர் Dr. Idah Pswarayi-Riddihough

கல்வி மற்றும் பயிற்சியின் அனைத்து மட்டங்களிலும் மனித மேம்பாட்டின் வளர்ச்சிக்கு உலக வங்கி உதவுகிறது. அக்டோபர் 2018 இல் தொடங்கப்பட்ட பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் பொது கல்வி துறைக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இது மாணவர்களின் கற்றல் விளைவுகளையும் சமூக-உணர்ச்சி திறன்களையும் ஊக்குவிக்க முயல்கிறது.

இந்த திட்டம் பொது கல்வி முறையின் செயன்முகமை தரத்தினை மேம்படுத்தவும் பலப்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாது ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் கற்றல் விளைவுகளை செழுமைப்படுத்தவும் ஆசிரியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் பங்களிக்கிறது. அதேசமயம் உயர் தர மாணவர்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான முன்னுரிமை பிரிவுகளில் சேருவதை அதிகரிக்கவும், பட்டப்படிப்புத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் மற்றும் வணிகமயமாக்கல் போன்ற விடயங்களை உயர்கல்வி விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டில் அதிகரிக்க AHEAD திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இந்த AHEAD திட்டம் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள உயர் கல்வித் துறையில் செயற்படுத்தப்படும் முதல் Program for Results (PforR) திட்டம் ஆகும்.

சுகாதாரம்

1980 களின் பிற்பகுதியில் சர்வதேச வங்கி மேம்பாட்டுக் கழகத்தின் பகுப்பாய்வு பணிகள் மற்றும் வரவுகள் மூலம் உலக வங்கி இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஆதரவளித்தது தற்போது புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி உதவி வழங்குகிறது.

இலங்கையின் சுகாதார அமைப்பு நீண்ட காலமாகவே வலுவான செயற்திறனை கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவிக்கின்றது. குறைந்தது 50 ஆண்டுகளாக, பிள்ளை மற்றும் மகப்பேறு ஆரோக்கியத்திலும் மற்றும் தொற்று நோய் கட்டுப்பாடு பிரிவு ஆகியவற்றிலும் அவற்றின் வருமான மட்டத்தின் விட சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கின்றது. கடந்த அரை நூற்றாண்டில் தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதம் 100,000 க்கு 39 என்ற விகிதத்தில் குறைந்துள்ளது ஒரு சிறந்த சுகாதாரத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதற்கு சிறந்த சான்றாகுமாம்.

சுகாதார சேவையை வலுப்படுத்த உலக வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் தருவதாக கைச்சாத்திடப்பட்டபோது

சுகாதார அமைப்புக்களின் சேவையை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கை மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய பயனளிக்கும் என்கிறது உலக வங்கி. முன்னேறிவரும் சுகாதார வசதிகளுக்கு ஏற்ற மாதிரி சிகிச்சை முறையும் சிறப்புப் பெறும் என்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில் பகுப்பாய்வுகளில் அரச கோட்பாடுகள் கணிசமா அறிவை உண்டாகியுள்ளதாக தெரிவிக்கின்றது. சுகாதார நிதி முறையின் மதிப்பீடு, ஊட்டச்சத்துக்கான நேர்மறையான விலகல் ஆய்வு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான பொது செலவு மதிப்பாய்வு மற்றும் மனித மூலதன வளர்ச்சியின் பகுப்பாய்வு ஆகியவை சில முக்கிய பகுப்பாய்வுப் பணிகளில் அடங்கும்.

நகர அபிவிருத்தி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முதன்மையான முறையில் Colombo Metropolitan Region (CMR) இனால் இயக்கப்படுகிறது. இது தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதத்தை உருவாக்குகிறது. நிலையான வளர்ச்சி மற்றும் நீண்டகால செழிப்பு ஆகியவை பொருளாதார வாய்ப்பை இன்னும் சீரான முறையில் விநியோகிப்பதன் விளைவாக ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நகர அபிவிருத்தி திட்டத்தில் கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற முக்கிய நகர மையங்களையும் உள்ளடக்கியுள்ளது. இலங்கை நகரமயமாக்கல் மற்றும் கிராமப்புற-நகர ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உலக வங்கி இலங்கைக்கு ஆதரவளித்து வருகிறது.

உலக வங்கி நீர் வழங்கல் மற்றும் தூய்மை மேம்பாட்டு திட்டத்திற்கு நிதியளிக்கும் பொது எடுக்கப்பட்ட புகைப்படம்

மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தி திட்டம் – Metro Colombo Urban Development Project (MCUDP) அடிப்படை நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நகர்ப்புற வெள்ள கட்டுப்பாடு மற்றும் நகர்ப்புற ஈரநில மேலாண்மை அணுகுமுறையை செயல்படுத்தவும் Colombo Metropolitan Region
உடன் சேர்ந்து உதவுகிறது. இத்திட்டங்களின் முடிவுகளாக 3 கி.மீ தூரத்திற்கு கால்வாய்கள் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது, 2 மைக்ரோ வடிகால் துணை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, மேலும் நிர்ணயிக்கப்பட்ட தரங்களின் அடிப்படையில் 29 கி.மீ சாலைகள் கட்டப்பட்டும் புனரமைக்கப்பட்டும் உள்ளன.  

காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு இடர் மேலாண்மை

காலநிலை தொடர்பான அபாயங்கள் இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளன. இந்நிலை தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டளவில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.2 சதவீதம் இழப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகம் மற்றும் போட்டித்திறன்

வர்த்தக மற்றும் போட்டித்திறன் திட்டம் என்பது இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார சீர்த்திருத்த நோக்கங்களை ஆதரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளின் தொகுப்பாகும். இந்த திட்டம் உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் (டி.எஃப்.ஏ.டி) கூட்டு முயற்சியாகும்.

134 உள்ளூர் அரசாங்க சேவைகளை வலுப்படுத்த உலக வங்கி 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்

திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் பாலினம், இளைஞர்கள், இயலாமை மற்றும் வறுமை ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன. குறிப்பாக, தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், பொருளாதார பல்வகைப்படுத்தலை அதிகரிப்பதற்கும், பின்வரும் பிரிவுகள் வழியாக ஏற்றுமதியின் அளவு மற்றும் மதிப்பு கூட்டலை மேம்படுத்துவதற்கும் தனியார் துறையின் வர்த்தகம் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டம் செயல்படுகிறது. அப்பிரிவுகளாவன இலங்கையின் வர்த்தக திறனை மேம்படுத்துதல், இலங்கையின் காலநிலை ஒழுங்குமுறை எளிமைப்படுத்தலை மேம்படுத்துதல் மற்றும் உறுதியான வளர்ச்சி, உற்பத்தித்திறன் மற்றும் வேலைகள் ஆகும்.

இத்தரவுகள் உலக வங்கியினால் 15ஆம் திகதி அக்டோபர் மாதம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும். உலக வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வணிக தரவரிசையில் 190 நாடுகளில் 100 வது இடத்திலிருந்து 99 வது இடத்திற்கு இலங்கை முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல்கள் : https://www.worldbank.org/en/country/srilanka

Related Articles