யாழ் பழங்கால ஒளிப்படக் கண்காட்சி – ஒரு கண்ணோட்டம்
வெறுமனே வீடுகளின் பரண்களில் தூங்கும் பழைய கருப்பு வெள்ளை ஒளிப்படங்களை சேகரித்துக் கொண்டுவந்து காட்சிப்படுத்துவதை மட்டும் அவர்கள் செய்யவில்லை. ஒரு முழுமையான தேடலைச் செய்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஒளிப்படக்கலை முகிழ்த்த காலத்தின் அத்தனை தடயங்களையும் எடுத்துக் கொண்டுவந்து நம்முன் கொட்டியிருக்கிறார்கள்.