
கௌதம புத்தர் பிறந்த, ஞானம் அடைந்த மற்றும் பரிநிர்வாணமடைந்ததொரு தினமாகக் கருதி, உலகெங்கும் உள்ள பௌத்தர்களால் இந்த ”வெசாக்” தினமானது அனுட்டிக்கப்படுகின்றது. இலங்கையிலும், இப்பண்டிகையானது சிங்கள பௌத்த மக்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவதுடன் இன,மத பேதமின்றி பல இடங்களிலும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இலங்கையில் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு இம்முறை வெசாக் பண்டிகையானது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வெசாக் தினத்தன்று தலைநகர் கொழும்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இந்தப் பதிவில் காணலாம்.
புகைப்படங்கள் : Roar Media/Nazly Ahmed





நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு இம்முறை வெசாக் தினமானது வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களில் பலர், தற்போது பொருளாதாரச் சவால்களில் சிக்குண்டு மீண்டெழமுடியாமல் திணறி வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.


