பூமியில் உள்ள மொத்த நீரில் சுமார் 1% மட்டுமே மனித பாவனைக்கு ஏற்றது. அதில் ஒரு சிறிய பகுதி மாத்திரமே மனித நுகர்வுக்கு ஏற்றது. ஆதலால், உணவுப் பாதுகாப்பு தொடர்பான உரையாடலில் தண்ணீரை உள்ளடக்குவது எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
உணவுப் பாதுகாப்பு என்பது உணவைப் பாதுகாப்பாகவும், அதை மாசுபடுத்தும் காரணிகள் அற்றதாகவும் வைத்திருக்க உதவும் நடைமுறைகள் என்பதை தாண்டி 4x இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் உணவை வீணாக்குவதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய வழியாகவும் காணப்படுகிறது. ஆனால், உணவுப் பாதுகாப்பிற்கான எந்த முயற்சியும் நீர் குறித்து கவனம் செலுத்தாமல் வெற்றியடையாது.
இலங்கையின் தற்போதைய உணவுப் பாதுகாப்பு முறைக்கு முனைப்புடனான மறுசீரமைப்பு தேவை
இலங்கையில் (கடைசியாக 2011 இல் திருத்தப்பட்ட) 1980 ஆம் ஆண்டிலிருந்து அமலிலிருக்குக்கும் தற்போதைய உணவுச் சட்டத்தினை, இப்போது நாட்டில் காணப்படும் சூழலுக்கும் நிலப்பரப்புக்கும் அமைவாக சீரமைத்துப் புதுப்பிக்க வேண்டியவொரு தேவையை எதிர்நோக்கியுள்ளோம். இச் சட்டமானது அடிக்கடி துரித மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் தற்போதைய உணவுச் சட்டமானது, சந்தைப்படுத்தத் தயார்நிலையிலுள்ளப்) பொருட்களை மாத்திரமே ஒழுங்குபடுத்துகிறது.
எனவே நுகர்வோருக்கு, தாங்கள் கொள்வனவு செய்தத் தயாரிப்புகள் எங்கிருந்து வருகின்றன அல்லது அவை எவ்வாறு உற்பத்திச்
செய்யப்படுகின்றன என்பது தெரியாது.
இது, அதிகமான உணவுக் கெட்டுப்போவதற்கு வழிவகுக்கிறது. இதனால் உணவு வீணாகுவதும் பாதுகாப்பற்ற உணவை மக்கள் உட்கொள்வதும் அதிகரிக்கிறது.
மேலும் முழுமையான உணவுப் பாதுகாப்பு அணுகுமுறையான “Farm-to-Fork / ஃபார்ம்-டு-ஃபோர்க்)” தேவை என Dr. W.M.W வீரகோன் (FAO /உணவு மற்றும் விவசாய அமைப்பின் மூத்த விவசாய நிபுணர் மற்றும்முன்னாள் விவசாயப் பணிப்பாளர் நாயகம்) கருத்துத் தெரிவிக்கிறார்.
Farm-to-Fork / ஃபார்ம்-டு-ஃபோர்க்
(விவசாய நிலம் முதல் சாப்பாட்டு மேசை வரை) என்றால் என்ன?
“உணவுப் பாதுகாப்பு என்பது விவசாய நிலத்திலிருந்துதொடங்குகிறது” என Dr. வீரகோன் தெரிவிக்கிறார்..
ஃபார்ம்-டு-ஃபோர்க் என்பது முழு உணவு விநியோகச் சங்கிலியையும் ஒழுங்குபடுத்துவதாகும். இது விவசாயத்தின், மிக முக்கியமான முதல் கட்டத்திலிருந்துத் தொடங்குகிறது.
ஆனால், இந்த அணுகுமுறையின் நன்மைகளை நாம் முழுமையாக உணருவதற்கு முன் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.
நீர் பாதுகாப்பு நம் உணவில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது
இன்று, இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் குறைவானவர்களுக்கே சுத்தமான நீர் கிடைக்கிறது.
விவசாயத்தின் போது ஏற்படும் உணவுப் பாதுகாப்பு அபாயங்களுக்குப் பாதுகாப்பற்ற தண்ணீர் ஒரு பெரிய காரணம்.
“நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தண்ணீர் சம்பந்தப்பட்டுள்ளது. விவசாயத்தின் போது தண்ணீர் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மாசுபடும் போது- அது நிலத்தில் விளையும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்பிடி போன்ற பிற விவசாயத் துறைகள் வரை உணவுச் சங்கிலியிலிருந்து நாம் உண்ணும் உணவை மாசுபடுத்துகிறது.” என Dr. வீரகோன் கூறுகிறார்.
எனவே, இலங்கை எவ்வாறு பாதுகாப்பான நீர் நடைமுறைகளைத் தனது விவசாய அமைப்பில் ஒருங்கிணைக்க முடியும்?
GAP பற்றி எப்போதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா?
இல்லை, அது பிரபல அமெரிக்க ஆடை நிறுவனம் அல்ல. மாறாக, நல்ல விவசாய நடைமுறைகள் – அதாவது Good Agricultural Practices என்பதாகும். GAP என்பது ஃபார்ம்-டு-ஃபோர்க் அணுகுமுறையில் நீர் பாதுகாப்பை செயல்படுத்துவதற்கு ஓர் இன்றியமையாத கருவியாகும்.
FAO வரையறைப்பின்படி, நல்ல விவசாய நடைமுறைகள் (GAP) என்பது,
“விளைச்சலில் போதான உற்பத்தி மற்றும் விளைச்சலுக்கு பிந்தைய- உற்பத்தியின் போது பின்பற்றப்படவேண்டிய செயல்முறை கொள்கைகளின் தொகுப்பாகும். இதன் விளைவாக, பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான உணவு மற்றும் உணவு அல்லாத விவசாய உற்பத்திகள் (விவசாயத்திலிருந்து பெறப்பட்டாலும் உணவாக உட்கொள்ளப்படாமல் நெசவு, எரிபொருள் மற்றும் பிற தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள்), உற்பத்தி செய்யப்படுவதுடன் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பேணப்படும்.”
GAP தரநிலைகளின்படி, ஃபார்ம்-டு-ஃபோர்க் அணுகுமுறையில் நீர் பாதுகாப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.
“எங்கள் உணவுக்கான நீர் மாசுபடாமல் இருக்க வேண்டும், அதே நேரம் அதன் ஊட்டச்சத்து அளவும் பேணப்பட வேண்டும் . ஆனால், இது விவசாய நிலத்திலிருந்தே தொடங்க வேண்டும்.” என Dr. வீரகோன் மேலும் தெரிவித்தார்.
“விவசாயிகள் பெய்ர (Beira Lake) நீர்நிலையின் தண்ணீரைப் பயன்படுத்தி gotukola (வல்லாரை) வளர்க்கலாம், அது வளரும் – ஆனால், அது பார உலோகங்களால் நிறைந்து மிகவும் மாசுபட்டிருக்கும். நுகர்வோர் என்ற முறையில், நீங்கள் வாங்கிய காய்கறிகள் மாசுபட்டத் தண்ணீரில் வளர்ந்தவையல்ல என்பதை எப்படி அறிவீர்கள்? GAP தரநிலைகள் விவசாயிகளுக்குத் தங்கள் விளைபொருட்களை வளர்க்க பாதுகாப்பான பொருட்களைப் பயன்படுத்துவதில் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.”
நீர் பாதுகாப்பிற்கு GAP எவ்வாறு பங்களிக்கும்?
#1 உற்பத்தியின் போது கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துதல்.
பயன்படுத்தப்படும் தண்ணீருக்குள் தீங்கு விளைவிக்கும் மாசு காரணிகள் பரவுவதைத் தடுக்க, நீர்பாசனம் மற்றும் நீர்வழி உரமிடலுக்குப் பயன்படுத்தப்படும் நீரின் தரம் உறுதிப்படுத்தப்படும்.
FAO இன் நல்ல விவசாய நடைமுறைகள் (GAP) பற்றிய பயிற்சி அறிவுறுத்தலுக்கமைவாக, உண்ணக்கூடிய விளைபொருட்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீரின் தரம் குடிநீருக்கு சமமாக இருக்க வேண்டும். எனவே, தயாரிப்பு நடைமுறையும் ஒழுங்குபடுத்தப்படும்.
#2 நீர் ஆதாரங்களின் பயன்பாட்டை மேம்படுத்துதல்.
“நல்ல விவசாய நடைமுறைகள் (GAP) வளங்களைப் பயன்படும் விதங்களை மேம்படுத்த முயல்கின்றன. குறிப்பாக இது தண்ணீர் விடயத்தில் நடைமுறையாகிறது.” என Dr. வீரகோன் கூறினார்.
“பெரும்பாலான நீர்ப்பாசன விவசாயிகள் தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் மானாவாரி விவசாயிகள் (மழைநீரை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள்) நீர் உபயோகத்தை மேம்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை.”
FAO ஊக்குவிக்கும் GAP இன் மூலோபாயத்தில் ஒரு பகுதியாக நீர் மேலாண்மைத் திட்டம் உள்ளது. இது நீர் பயன்பாட்டை மேம்படுத்துகிறது மட்டுமல்லாது கழிவுகளை குறைக்கிறது. நீர்ப்பாசனம் என்பது பயிருக்கான நீர் தேவைகள், நீர் இருப்பு மற்றும் மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேவைக்கதிகமாகத் தண்ணீர் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும்.
#3 விவசாயத்தின் போது நீர் மாசுபாட்டைக் குறைத்தல்.
பாவனையின் அளவைக் குறைத்தல், முறையான வடிகால் பராமரிப்பு, துல்லியமான பூச்சிக்கொல்லிப் பாவனை, உரம் மற்றும் கழிவு முகாமை ஆகியவற்றில் GAP மூலம் நீர் மாசுபாட்டைக் குறைக்கலாம். முறையான வடிகால் முகாமையானது நீர் தேங்குவதைத் தடுக்கிறது. இது மாசுபாட்டைக் குறைத்து, நீர்நிலைகளில் தோன்றும் பூச்சிக்கொல்லிகளின் அபாயத்தைக் குறைக்கிறது.
பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பொறுப்பான பயன்பாட்டை GAP வலியுறுத்துகிறது. ஏனெனில், இவை தண்ணீரின் தரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், விவசாயத்திற்கான இரசாயனங்களைத் தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மக்கக்கூடியவற்றை உரமாக்குதல் மற்றும் விவசாய இரசாயன கொள்கலன்களைத் தனித்தனியாகச் சேகரித்தல், அந்த இரசாயனங்கள் அருகிலுள்ள நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதைத் தடுத்தல் போன்ற நுட்பங்கள் மூலம் விவசாயக் கழிவுகளை முறையாக அகற்றுவதை GAP ஊக்குவிக்கிறது.
GAP மூலோபாயங்கள், 2016 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளன. மேலும், இது இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்பிற்கான மறைமுக காரணியாக இருக்கலாம். ஆனால், “GAP தயாரிப்புகளை உண்ணும் வாய்ப்பு நம்மில் பலருக்கு இல்லை, ஏனெனில் அவை அதிகளவில் கிடைப்பதில்லை” என Dr. வீரகோன் கூறுகிறார்.
GAP ஏன் இலங்கையில் பெருமளவில் செயட்படுத்தப்படுவதில்லை?
முக்கிய காரணம் – இது குறித்த பொது விழிப்புணர்வு இல்லாமை.
“இலங்கையில் உள்ள சனத்தொகையில் சுமார் ஒரு சதவீதத்தினரே ஃபார்ம்-டு-ஃபோர்க் அணுகுமுறை மற்றும் GAP பற்றி அறிந்திருக்கிறார்கள்” என Dr. வீரகோன் கூறுகிறார்.
“நுகர்வோர் கோரி அழுத்தம் கொடுக்காமல் விவசாயிகள் GAPஇல் ஆர்வம் காட்ட மாட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில், GAP திட்டத்தில் 2000 விவசாயிகளை கூட பதிவு செய்ய முடியவில்லை. அதனால்தான் நுகர்வோர் மட்டத்தில் விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகிறது.”
தடமறி முறைமை (traceability) என்பது ஃபார்ம்-டு-ஃபோர்க் அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான மூலக்கல்லாகும், இது நுகர்வோருக்கு, அவர்களின் உணவு எங்கிருந்து வருகிறது, யார் உணவை உற்பத்திசெய்கிறார்கள்
மற்றும் அது எவ்வாறு வளர்க்கப்படுகிறது என்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது.
QR குறியீடுகள் மூலமாக உற்பத்தி பொருட்களின் சம்பந்தப்பட்ட விவசாய நடைமுறைகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
Dr. வீரகோன் கூறியது போல், “GAPற்கான பாதையை ஒரே நாளில் கட்டியமைக்கமுடியாது. ஆனால், நுகர்வோர் கோரிக்கை அதிகரித்தால், விவசாயிகள் GAP விவசாயிகளாகத் தங்களைப் பதிவுசெய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள்.”
தண்ணீர் நம் உடல் உயிருடன் தொடர்பு கொண்டது
இலங்கையின் உணவு நெருக்கடிக்கு மத்தியில்- உணவு உறுதி இன்மை மற்றும் உணவு கழிவக்கு எதிரான ஆயுதமாக உணவைப் பாதுகாப்பு விளங்குகிறது. ஆனால், உணவுப் பாதுகாப்பு என்பது நீர் பாதுகாப்பையும் சார்ந்தேயுள்ளது.
நிலையான உணவுப் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுவதற்கு தேவையான மாற்றத்தை விரைவுபடுத்த ஃபார்ம்-டு-ஃபோர்க் அணுகுமுறையானது உதவும். ஆனால், அதன் வெற்றியானது மாற்றம் குறித்த நமது விழிப்புணர்வால் மாத்திரமே சாத்தியமாகும்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது (FAO) ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பினோடு (UNIDO) இணைந்து ஒன்றிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் (EU) நிதியளிக்கப்பட்ட விவசாய உணவுத்துறைக்கான சிறந்த தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள் (BESPA_FOOD) திட்டத்தை செயல்படுத்துகின்றது. இத்திட்டம் இலங்கையில் உணவு பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளை மறுசீரமைக்கவும் மேம்படுத்தவும் செயல்படுகிறது.
சர்வதேச உலக உணவு தினத்தின் இவ்வருட கருப்பொருள், “நீரே உணவு, நீரே உயிர்”, இதன் அடிப்படையில் நீர் பாதுகாப்பு மற்றும் நம் வாழ்வாதாரத்திற்கான நீரின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் அனைவரும் செயல்படுவோம்.