இலங்கையின் பாரம்பரிய கண்டிய நடத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டியவை

கலாசாரம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும் ஒரு அம்சமாகும். ஒவ்வொரு நாடும் தனக்கென தனித்துவமான அடையாளங்களையும் சம்பிரதாய முறைகளையும் கொண்டிருக்கும். இலங்கையை பொருத்த வரையில் ஆரம்பகாலம் தொட்டே கலை கலாசாரங்களுக்கு பஞ்சமில்லை.

இலங்கையில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கென்ற கலைகளையம் சம்பிரதாய முறைகளையும் தொடர்ந்து பின்பற்றிய வண்ணமே உள்ளனர். அதில் சிங்கள சமூகத்தினரின் நடனங்கள் இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அதில் மிகப்பிரபல்யமான “கண்டிய நடனம்” பற்றிய தகவல்கள் பின்வருமாறு :

ஆரம்பம்

19 நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டி அரசர்களால் இதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

இந்திய கதகளி பாணியை ஒத்த இந்நடனமானது புராணக் கதை, புராண நாயகர்கள், மிருகங்களின் நடத்தைகளை கருவாக வைத்தே ஆடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் ஆண்களால் மட்டுமே ஆடப்பட்ட இந்நடனம்  இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் மேடைகளில் ஆடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்து ஆண், பெண் இருபாலரும் ஆடத்தொடங்கினர். இலங்கையின் பண்பாட்டு அடையாளமாக கருதப்படும் இந்நடனம் சிங்களவர்களது கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் கண்டியன் நடனம் ஆடுபவர்கள்
Photo Credits : akpool.co.uk
1950 களில் கண்டியன் நடனம் ஆடுபவர்கள்
Photo Credits: asiasociety.org
ஆண்கள் தலைப்பாகை அணிவதுடன், மேற்சட்டை எதுவும் அணியாமல் மணிகளாலான மார்பணி ஒன்றை அணிந்து  இடுப்புக்குக் கீழ் கணுக்கால் வரை நீண்ட உடை அணிந்து ஆடுவார்கள்.
Photo Credits: Roar Media / Nazly Ahmed
இடுப்பில் ஒட்டியாணம் போல்  முன்புறம் முக்கோண வடிவில் முழங்காலுக்குச் சற்று மேல் வரை நீண்டிருக்கும் ஓரணிகலனும் சலங்கையும் அணிந்து ஆடுவது வழக்கம்.
Photo Credits: thetimes.co.uk
கண்டிய நடனக் கலைஞர் முதன் முதலாகத் தலையணி சூடுவது ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது. இது “வெஸ் மாங்கல்யம்” என அழைக்கப்படுகிறது.
cwarunamangalamandiraya.com
“கெத்த பெர” எனப்படும் ஒருவகை மத்தளம் இந்த கண்டிய நடனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. 
Photo Credits : timeout.com
இது கண்டிய நடனத்துக்கென்றே பிரத்தியேகமாக பயன்படும் ஓர் இசைக்கருவியாகும். மத்தளம் வாசிக்கும் கலைஞர்களும் சிறப்பு உடைகளணிந்து வாசிப்பார்கள்.  
Photo Credits : Roar Media / Nazly Ahmed
அதிகமாக மத்தளங்கள் மட்டுமே வாசித்து ஆடப்படும் கண்டிய நடனங்கள், சில சமயங்களில் பாடல்கள் பாடப்பட்டு இசையோடு ஆடப்படுகிறது.
Photo Credits : Roar Media / Nazly Ahmed
1970 களில் சித்திரசேன டயஸ் என்பவர் தான் கண்டிய நடனத்தை மேடைகளில் ஆடுவதற்கு ஏற்றவாறு சித்தரித்தார்.
Photo Credits : times.com
இன்றும் இலங்கையில் கண்டிய நடனத்தைப் பயிற்றுவிப்பதற்காக இயங்கும் பள்ளிகளில் இவரது சித்திரசேன நடனப் பள்ளியே சிறந்து விளங்குகின்றது. 
Photo Credits : thehindu.com
சிங்களவர்களின் வீதித் திருவிழாவான பெரஹெராக்களில் இந்த கண்டிய நடனத்திற்கு முக்கிய இடமுண்டு.
Photo Credits : 
kandyesalaperaheratickets.com
இலங்கையில் நடைபெறும் கண்டி தலதா “எசல பெரஹெரா”வில் தீ-நடனம்,சவுக்கடி நடனம், யானை அணிவகுப்பு போன்றவைகளில் இந்த கண்டிய நடனம் முக்கியமானது. 
Photo Credits : discoversrilanka.com

கண்டியன் நடனம் பயிற்சி செய்வோரின் காணொளி பின்வருமாறு :

வீடியோ உதவி : YouTube

Related Articles

Exit mobile version