இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கனிய வளங்கள் முக்கிய இடத்தைப்பெறுகின்றன. குறிப்பாக இரத்தினக் கற்கள் மிகப் புராதன காலத்திலிருந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது. காரியம், சுண்ணாம்புக்கற்கள்,களிமண் வகைகள்,கனிய மணல் வகைகள், இரும்புத்தாது, மற்றும் உப்பு முதலியன இலங்கையின் முக்கிய கனிய வளங்களாக இருந்து வருகின்றன.