Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பாதீடு – 2018

இலங்கையின் 2018ம் ஆண்டுக்கான பாதீடானது நேற்று  பாராளுமன்றத்தில் தற்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்பிக்கப்பட்டது. 2018ம் ஆண்டுக்கான பாதீடானது, “Blue Green Budget” என்கிற பெயரினால் அழைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்கான காரணம், இம்முறை பாதீடானது முழுமையாக துறை ரீதியான வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் அடிப்படையாக கொண்டிருப்பதுடன், சூழலுக்கு இசைவான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவதுமாக உள்ளமையுமே ஆகும்.

இதன் பிரகாரம், இம்முறை பாதீடானது மொத்த பற்றாகுறையை 4.5%மாக குறைப்பதை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2020ம் ஆண்டில் இதனை 3.5%க்கும் கீழாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை பாதீட்டில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயங்கள் எவை எனப் பார்க்கலாம்

வாகன மற்றும் போக்குவரத்து (Automobile Industry)

  • 2040ம் ஆண்டளவில் முழுமையாக எரிபொருள் சார் வாகனப் பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதன் ஆரம்பப்படியாக, மின்சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், மின்சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு ஒரு மில்லியன் வரை வரிச் சலுகை வழங்கப்படவுள்ளது.
  • மின் சக்தியில் இயங்கும் பேரூந்து, கார் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான கொள்வனவு கடன் 90% வரை வழங்கப்படவுள்ளது.
  • முச்சக்கர வண்டி பாவனையிலும், எரிபொருள்சார் முச்சக்கர வண்டி பாவனையை அதிகரிக்கும் பொருட்டு, டீசல் எரிபொருளில் இயங்கும் முச்சக்கர வண்டிகளுக்கு இறக்குமதி வரி 50,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 2500 CC க்கு அதிகமான வாகனங்களுக்கு ஆடம்பர வரி அமுலாக்கம் செய்யப்படவுள்ளதுடன், ஆடம்பர வாகனங்களாக வகைப்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான வரி 25 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வாகனங்களுக்கான சுங்கத் தீர்வை (Exercise Duty) அவற்றின் இயந்திர வலுவுக்கு அமைவாக தீர்மானிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.
  • முச்சக்கர வண்டிகளின் மீட்டர் பாவனையில் சட்ட ஒழுங்கு முறைகளை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது.

கல்வித்துறை (Education)

  • திருகோணமலையின் கிண்ணியாவில் பல்கலைக்கழக கல்லூரி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் சார் கல்வித்துறைகளுக்கு 3.5 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை (Tourism)

  • இணையவழி சுற்றுலா முகவர்களால் இலங்கைக்குள் உழைக்கப்படும் தரகு வருமானத்தில் 1%த்தினை வரியாக செலுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
  • 01.05.2018 முதல் இலங்கைக்கு வருகைதந்து செல்லும் வெளிநாட்டு கடவுச்சீட்டு கொண்டவர்கள் இலங்கையில் செலுத்தும் பெறுமதிசேர் வரியை விமான நிலையைத்தில் மீளவழங்க ஏற்பாடு செய்யப்படும்.
  • சுற்றுலாத்துறை சார் முச்சக்கரவண்டி பாவனைக்கு சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
  • மோட்டார் பயன்பாடற்ற நீர்சார் விளையாட்டு உபகரணங்களுக்கு PAL மற்றும் NBT வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • சுற்றுலாத்துறைசார் பயன்பாட்டுக்கான உணவு மற்றும் குடிபானங்களுக்கு தீர்வை வழங்கப்படவுள்ளது.
  • வீட்டினை சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடமாக பயன்படுத்தும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், அதற்கான கடனுதவிகள் வழங்கப்படவுள்ளது.

தொலைத்தொடர்பு சேவைகள் (Telecommunication Industry)

  • தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை வழங்கும் கோபுரங்களுக்கு வருகின்ற அழைப்புக்களின் பிரகாரம் புதிய முறை வரி அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர் மீது சுமத்தபடலாமா? இல்லையா என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.
  • குறுஞ்செய்தி வழியாக விளம்பரங்களை செய்வோர், இனிவரும் காலத்தில் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் 0.25 வரியாக செலுத்த வேண்டும்.

மதுபானம் (Liquor)

  • இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 01.04.2018 முதல் தேசத்தை கட்டி எழுப்பும் வரியினை (NBT Tax) செலுத்த பொறுப்பாகின்றன.
  • மதுபானத்தின் வலு (Alcohol Strength) அடிப்படையில் சுங்கத் தீர்வை விதிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • கடின மதுபானவகைகள் – லீட்டருக்கு 3,300
  • பீர் மற்றும் வைன் – லீட்டருக்கு 2,400
  • மதுபானம்சார் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது.
  • டின்களில் அடைக்கப்பட்ட பீர் வகைகள் மீதான தீர்வையில் விலக்களிப்பட்டுள்ளது.

நிதிசார் சேவைகள் (Financial Services)

  • 01.04.2018 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிதி நிறுவனங்கள் செய்யவுள்ள பண (Cash) பரிமாற்றங்களுக்கு 0.2% கடனை மீளச்செலுத்தும் வரி (Debt Repayment Levy) அமுலாக்கப்பட உள்ளது. இந்த வரியை நிதி நிறுவனங்களே செலுத்த வேண்டும். இதனை அதன் வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவது குற்றமாகும்.

மீன் மற்றும் விவசாயத்துறை (Fishing and Agriculture Industry)

  • விவசாயம் சார்ந்த பின்னோக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு (Backward integrated activities) 14% வரி விதிக்கப்பட்டு குறித்த நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
  • விவசாயத்துறைசார் உபகரணங்கள் தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT) நீக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகளின் நலன்கருதி, பயிர்களுக்கான காப்புறுதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கென சுமார் 3 பில்லியன் ரூபா நிதியானது ஒதுக்கப்படுகிறது. அனர்த்தத்தின்போது, குறைந்தது ஒரு ஏக்கருக்கு 40,000 பிரகாரம் ஆறு விதமான பயிர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • 55 அடிக்கு அதிகமான மீன்பிடி வள்ளங்களுக்கான 50% செலவை அரசு ஏற்பதாகவுள்ளது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டு வசதிகள் (FDI Facilitation)

  • வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரவும், அவர்களது செயல்பாட்டை இலகுபடுத்தவும் வணிக பதிவில் இலகுவான முறை அறிமுகபடுத்தப்படவுள்ளது.
  • வெளிநாட்டு உரிமையாளர்களின் உரிமைத்துவத்தை கொண்ட பட்டியல்படுத்தப்பட்ட கம்பனிகள் நிலக்கொள்வனவில் ஈடுபடுவதில் உள்ள தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது.
  • வெளிநாட்டு பிரஜாவுரிமை கொண்டவர்கள் மாடிக் குடியிருப்புக்களில் (Apartments) நான்காம் மாடி அல்லது அதற்கு குறைவான மாடிகளில் வீட்டை கொள்வனவு செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் (SME)

  • EXIM வங்கியுடன் இணைந்ததாக 10 பில்லியன் பெறுமதியிலான விசேட அபிவிருத்தி திட்டம் மூலமாக, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு நீண்டகால கடன் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • இலங்கையின் கடன் திட்டங்களுக்கு அமைவாக, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றும் வழங்கப்படவுள்ள கடன்களின் வட்டி செலுத்துகையில் சுமார் 750 மில்லியன் வரை வரிவிலக்கு வழங்கப்படவுள்ளது.
  • உடல்சார் பாதிப்புக்களைக் கொண்ட முயற்சியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்கு அதீதமாக 15% வட்டிசலுகை வழங்கப்படவுள்ளது.
  • பெண் முயற்சியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்கு அதீதமாக 10% வட்டி சலுகை வழங்கப்படவுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடக்கநிலை வணிகங்களின் ஊக்குவிப்பு, நிதி தேவைகளுக்காக 3 பில்லியன் தொகை வழங்கப்படவுள்ளது.
  • இலங்கை வங்கி மற்றும் சுங்க திணைக்களம் ஆகியவை தமக்கின்டையே மின் வர்த்தகத்தை நிறுவிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு 250 மில்லியன் நிதியானது உதவுத்தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் (Environment)

  • கழிவுகளை மீள்சுழற்சி செய்துகொள்ளவும் கழிவு மேலாண்மைக்கும் (Waste Management) சுமார் 38 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சூழலுக்கு பாதிப்பை தராத பொலித்தீன்கள் மீதான செஸ் வரி நீக்கப்படவுள்ளது.
  • பச்சை வீட்டு திட்டத்துடன் தொடர்புடைய இறக்குமதிகளுக்கு NBT வரி விலக்களிக்கப்படவுள்ளது.
  • ஏரிகளை சுத்தப்படுத்தி மழை நீரை சேகரிக்க 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சூழலுக்கு அமைவான உற்பத்திகளுக்கு சுமார் 75 பில்லியன் கடனுதவி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி/ஏற்றுமதி

  • மீள் ஏற்றுமதி நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டு மீள் உருவாக்கம் செய்யப்படும் பெறுமதியான கற்களுக்கு (Precious Stones) NBT வரி விலக்களிக்கப்படவுள்ளது.
  • வாழைப்பழம் மற்றும் அன்னாசி உற்பத்தி சார் ஏற்றுமதிகளின் ஆய்வுகளுக்கு 125 மில்லியன் வழங்கப்படவுள்ளது.
  • விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் சப்பாத்துகளுக்கான இறக்குமதி தீர்வை விலக்களிக்கப்படவுள்ளது.

வியாபர பொருட்கள் (Commodity)

  • உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் தேங்காய் எண்ணெய் சார் உற்பத்தி பொருட்களுக்கு ஒருவருடகால NBT வரிசலுகை வழங்கப்படவுள்ளது.
  • குடிபானங்களில் உள்ள ஒவ்வொரு 1 கிராம் சீனியின் அளவுக்கு 50 சதம் வரியாக அறவிடப்படும். இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது நீரழிவு நோய்க்கு பயன்படுத்தபடவுள்ளது.

வங்கி மற்றும் மூலதன சந்தை

  • 01.04.2018முதல் அடுத்துவரும் 3 வருடங்களுக்கு வங்கிகளில் பரிமாற்றப்படும் ஒவ்வொரு 1,000 ரூபாவுக்கு 20 சதம் என்கிற அடிப்படையில் வரி அறவிட முன்மொழியப்படுகிறது. இதன்மூலம் பெறப்படும் பணம், இலங்கையின் மொத்த கடனான 7,000 பில்லியன் ரூபாவின் மீளச்செலுத்துகைக்கு பயன்படுத்தப்படும்.
  • இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன மூலதனம் மற்றும் கடன் மூலதனத்தை திரட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மூலதன சந்தையை உறுதிபடுத்தும் எந்தவொரு கொள்கை மாற்றத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகள் (Infrastructure)

  • 10,000 மில்லியன் ரூபா கண்டி அதிவேக நெடுஞ்ச்சாலை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 1,200 மில்லியன் ரூபா சுகதாச விளையாட்டு அரங்கை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு விமான நிலையங்கள் பொது மற்றும் தனியாரது கூட்டு முயற்சியுடன் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • வருமானம் குறைந்த மக்களுக்கு 20,000 வீடுகளை அமைக்க 17.5 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Featured Image : lankabusinessonline.com

Related Articles