ஒரு நாட்டில் பாரியதொரு பொருளாதார நெருக்கடி சூழ்நிலை ஏற்படும்போது மக்களின் வாழ்வில் மிக பெரிதான ஒரு பிரச்சினை தலையோங்குகிறது. அது தேவையான உணவை அடைவதற்கான போராட்டம்.
இலங்கையில் தற்போது ஏறத்தாழ 3.9 மில்லியன் மக்கள் உணவு உறுதி இன்மை நிலையில் உள்ளனர். அவர்களின் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியப்படும் உணவை தொடர்ந்து கொள்வனவு செய்யும் நிலையில் இல்லை. மொத்த மக்கள் தொகையில் 17%மானோர் அடிப்படை ஊட்டச்சத்து கொண்ட உணவினை கூட உட்கொள்ள சிரமபடுகின்றனர்.
அதேவேளை நம்மில் பலர் நமது மேசையில் தேவைக்கதிகமான உணவினை கொண்டிருப்பதோடு மிகைப்படியான உணவை எரிந்து விடுகிறோம். நாம் அனைவரும் சாப்பிட்டது போக மிஞ்சிய உணவுகளை சேமித்து, பின்னர் அவற்றை வீசிவிடுகிறோம்.
நமது தட்டுகளுக்கு வரும் உணவின் ஒரு சிறு பகுதியைக் கூட உற்பத்தி செய்வதற்கும், அறுவடை செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், போக்குவரத்து செய்வதற்கும், பொதிசெய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் அதிக உழைப்பு, நிலம், நீர் போன்ற வளங்கள் மற்றும் ஆற்றல் தேவைப்படுகிறது. உண்மையில் இவ்வாறு உணவு வீணாகவில்லையெனில் இலங்கையில் மில்லியன் கணக்கான உணவற்ற மக்கள் பயனடைய முடியும்.
“உணவு இழப்பு” மற்றும் “உணவுக்கழிவு” என்பதினூடாக நாம் கூறவருவது என்ன?
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) 2019 அறிக்கையின்படி, உணவு இழப்பு என்பது உணவு விநியோகச் சங்கிலியில், அறுவடைக்குப் பிந்தைய நிலை முதல் சில்லறை விற்பனைக்கு முந்தைய நிலை வரை ஏற்படுகிறது. மறுபுறம், உணவு கழிவு என்பது சில்லறை விற்பனை, உணவு சேவை மற்றும் நுகர்வோர் மட்டத்தில் நிகழ்கின்றது. ஆகவே, உணவு வீணாவதைக் குறைப்பதில் நுகர்வோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
உணவு வீணாவதைக் குறைப்பதில் நுகர்வோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். உணவுக்கழிவு என்பது உங்கள் தட்டில் உள்ள எஞ்சிய உணவுகள் மட்டுமல்ல, உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள கெட்டுப்போகும் உணவும், உணவகத்தில் வாங்கி உண்ணாமல் எறியும் உணவும், நீங்கள் சமைப்பதற்காக வாங்கிச் சமைக்காததால் அழுகிப்போகும் காய்கறிகளும் இதில் உள்ளடங்கும்.
உணவு வீணாவதைத் தடுக்க நுகர்வோர் பல விடயங்களை செய்ய முடியும்.
ஆனால் உணவுக்கழிவு இலங்கையில் அவ்வளவு மோசமான பிரச்சினையாக இருக்க முடியாது, இல்லையா?
2021 ஆம் ஆண்டின் UNEP உணவுக் கழிவுக்குறியீட்டு அறிக்கையின்படி, எமது சிறிய நாடு 1.6 மில்லியன் டன் உணவுக் கழிவுகளுக்குப் பொறுப்பாளியாகியுள்ளது. இது எமது வீடுகளில் இருந்து வெளியாகும் உணவுக்கழிவு மட்டுமே என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விடயம்.
“நமது மொத்த திண்மக்கழிவுகளில் 64% உணவுக் கழிவுகளைக் கொண்டுள்ளது. இது குறிப்பாக வீடுகள், உணவகங்கள், இறைச்சி மற்றும் காய்கறி சந்தைகள் சார்ந்தது. உணவுக்கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது” என கொழும்பு மாநகரசபையின் பொறியியல் பணிப்பாளர் (திண்மக்கழிவு முகாமைத்துவம்) ஷாஹினா மைஸன் தெரிவித்தார்.
ஆக, நாம் உணவை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். இது அவசியம் பேசப்படவேண்டிய ஒன்றா?
முக்கியமான விடயம். யாதெனில், உணவு இழப்பு மற்றும் கழிவினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் மீள முடியாதவை. நாம் உயிர்வாழ்வதற்கு மிகவும் அவசியமான நீர் மற்றும் காற்று மாசுபாட்டின் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். 2015இல் மொத்த பைங்குடில்/பச்சைவீட்டு (Greenhouse) வாயு உமிழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு காரணமாக உலகளாவிய ரீதியில் நேர்ந்த உற்பத்தி முதல் நுகர்வு காரணமாக அமைந்தது. உணவு இழப்பு மற்றும் உணவுக்கழிவு இதில் பாதிக்கு காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித ஆரோக்கியம், விவசாயம், காடுகள், வனவிலங்குகள், நீர் வளங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் அனைத்தும் இந்தப் பைங்குடில்/பச்சைவீட்டு (Greenhouse) வாயு வெளியேற்றத்தால் ஏற்படும் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படக்கூடியவை.
ஆக, நாம் நுகர்வோராக நமது உணவு வீணாவதை எவ்வாறு குறைக்கலாம்?
குறிப்பு: இது அவ்வளவு சிக்கலான விடயமல்ல.
நமது தினசரி வாழ்வில் உணவுப் பாதுகாப்பையும் இணைத்தல்.
உணவுப் பாதுகாப்பு என்பது உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் முறையில் உணவைக் கையாளுதல், தயாரித்தல் மற்றும் சேமித்து வைப்பதாகும். இந்நடைமுறைகள் உணவு வீணாக்கப்படுவதையும் கட்டுப்படுத்த வழிவகுக்கும். வேறு விதத்தில் கூறுவதானால், உணவுப் பாதுகாப்பு என்பது உணவு வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். இந்தச் சில குறிப்புகளை ஒரு பழக்கமாக நீங்கள் மாற்றி கொண்டால், உணவுப் பாதுகாப்பு உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும்.
துணுக்கு #1: முறையான குளிர்ப்பதப்படுத்தல் மூலம் உயிர்களைக் காக்கலாம்.
குளிர்சாதனப்பெட்டியானது மிகவும் குளிர்ந்த வெப்பநிலையில் உயிர்வாழ முடியாத பற்றீரியாக்களை உடனடியாக அழிக்கிறது. குளிர்சாதனப் பெட்டியின் 41°F (5°C) அல்லது அதற்கும் குறைந்த நிலையான வெப்பநிலையானது “சால்மோனெல்லாசிஸ்” (Salmonellosis என்பது சால்மோனெல்லா வகையின் பற்றீரியாவால் ஏற்படக்கூடிய ஒரு அறிகுறி தொற்று) போன்ற உணவினால் பரவும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். இங்கே மிகவும் அவசியமான மூன்று விதிகள் உள்ளன:
- இறைச்சி, கோழி, முட்டை போன்ற விரைவில் கெட்டுப்போகும் பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் குளிரூட்டவும் அல்லது உறைய வைக்கவும்.
- பச்சை இறைச்சி, கோழி, முட்டை, சமைத்த உணவு, வெட்டப்பட்ட புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு முன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சாதாரண அறை வெப்பநிலையில் வைத்திருக்காதீர்கள்.
(வெப்பநிலை 90 ° F அல்லது 32 ° C க்கு மேல் இருந்தால் அவை ஒரு மணிநேரத்திலேயே கெட்டுப்போய்விடும்) .
- இந்தத் தகவல் சிலருக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். சாதாரண அறை வெப்பநிலையில் இருந்துகொண்டு உறைய வைத்த உணவை ஒருபோதும் கரைக்க (உறைந்திருத்தலை நீக்க) வேண்டாம். உணவைக் கரைக்க மூன்று பாதுகாப்பான வழிகள் உள்ளன: குளிர்சாதனப் பெட்டியில், குளிர்ந்த நீரில் மற்றும் மைக்ரோவேவில் (Microwave Oven).
சமைத்த உணவைப் பொறுத்தவரை, அவற்றை சூடான (60°C இல் அல்லது அதற்கு மேல்) அல்லது குளிர்ந்த நிலையில் (5°C இல் அல்லது கீழே) சேமிக்கவும். குறிப்பாக உங்களுடைய உணவுப்பொருட்கள் அதிக அளவிலான நாட்கள் குளிர்சாதனப் பெட்டியினுள் பேணப்படுகிறதென்றால் குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலை குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
துணுக்கு #2: சுவைக்காக மாத்திரமின்றி பாதுகாப்பாகவும் சமையுங்கள்
உணவு பதார்த்தங்கள் சரியான உட்புற வெப்பநிலையை அடையும்போது உணவுப் பாதுகாப்பாக சமைக்கப்படுகிறது. இதன் மூலம் உணவினால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கின்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளும் கொல்லப்படுகின்றன.
பொதிசெய்யப்பட்ட அல்லது உறைந்த உணவை மைக்ரோவேவ் (வெப்பமாக்கிச் சமைத்தல்) செய்யும் போது, சமைக்கும் வழிமுறைகளைப் படித்து அதை முழுமையாக மைக்ரோவேவ் செய்ய வேண்டும்.
நீங்கள் மிகுந்த பசியோடு இருந்தாலும், மைக்ரோவேவ்வில் சூடாக்கிய பிறகு உணவை சாப்பிடுவதற்கு முன்பு சில நிமிடங்கள் ஆற வைக்கவும். ஒவ்வொரு வகை உணவுக்கும் எந்தெந்த வெப்பநிலை சிறந்தது என்பதற்கான முழு பட்டியல் இங்குக் காட்டப்பட்டுள்ளது. .
உங்கள் சமையலறையில் எப்போதும் பச்சை யான(சமைக்காத) மற்றும் சமைத்த உணவுகளைப் பிரித்துப்பேணுவதற்கு மறக்காதீர்கள். வெவ்வேறு உணவுகளைத் தயாரிப்பதற்கு/சமைப்பதற்கு இடையில் வெதுவெதுப்பான நீர் மற்றும் சவர்க்காரமிட்டு உங்கள் சமையல் மேடைகளை கழுவிச் சுத்தமாக வைத்திருங்கள்.
துணுக்கு #3: கடினமாக அல்லாமல் நுட்பமாகக் கொள்வனவு மேற்கொள்ளுங்கள்.
உணவுகளைக் கொள்வனவு செய்யும்போது அவதானமாக இருப்பீர்களானால் வீண் விரயங்களைக் குறைக்கலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பல உணவுகள் அவற்றின் இயற்கையான தன்மையில் கொள்முதல் செய்வது சிறந்தது. பால், மீன் மற்றும் இறைச்சி பொருட்கள் போன்ற விரைவில் கெட்டுப்போகக்கூடிய உணவுகளை வாங்கும் போது பல காரணிகளைக் கருத்திற்கொள்ள வேண்டும். உதாரணமாக, எப்போதும் பச்சை பாலை வாங்காமல் பதப்படுத்தப்பட்டப் பாலை வாங்கவும். உணவு பதப்படுத்துதல் என்பது உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நீண்டகாலம் அவற்றைப் பேணுவதற்கும் பின்பற்றப்படுகிறது என்பதை நீங்கள் கொள்வனவு செய்யும்போது நினைவில் கொள்ளுங்கள். கீரை வகைகள் போன்ற பச்சையாக(பெரும்பாலும் சமைக்காமல்) உண்ணப்படும் சில உணவுகளை நன்கு கழுவ வேண்டும்.
எப்போதும் உணவுப்பொதிகளின் விவரத்துணுக்குகளை (labels) கவனமாகப் படித்துப்பார்த்து கொள்வனவு செய்யுங்கள். அதில் உணவுப்பற்றிய விபரம், ஊட்டச்சத்துத் தகவல், உணவுப் பாதுகாப்பிற்கு இன்றியமையாத பிற காரணிகள் பற்றிய முக்கிய அறிவுறுத்தல்களை அறியலாம். காலாவதி திகதிகளையும் சரிபார்க்கவும்.வாங்குவதற்கு முன், சேதமடைந்த அல்லது திறக்கப்பட்ட பொதிகள் உறைகள் கொண்ட எந்த உணவு பொருட்களையும் வாங்க வேண்டாம். காலாவதி திகதி(expiration date) நுகர்வோருக்கு ஒரு தயாரிப்பினை உட்கொள்ளுவதற்கு பாதுகாப்பான கடைசித் தினத்தை அறிவுறுத்துகின்றது. எனினும் , உகந்த பாவனைக்கால திகதி (best before date) அந்தத் அந் நாளிலிருந்து அவ்வுணவுஅதன் சிறந்த தரத்தை இழக்கின்றது பாவிக்க உகந்ததல்ல என்பதை அறிவுறுத்துகின்றது நீங்கள் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் இறுதியாகவே ‘உறைந்த உணவுகளை’ கொள்வனவு செய்யவதைப் பழக்கமாக்குங்கள்.
இறுதியாக, நீங்கள் நிச்சயமாக உட்கொள்ளாத எதையும் கொள்வனவு செய்யாதீர்கள். நீங்கள் வெளியிடங்களிலிருந்து உணவு வாங்கி வீட்டில் சாப்பிடும் போதும் அல்லது உணவகங்களில் உணவருந்தச்செல்லும் போதும் இது பொருந்தும். உங்களிடம் எஞ்சிய உணவு இருந்தால், அவற்றை இரண்டு மணிநேரத்திற்கு மாத்திரம் பேணவும். அவற்றை உட்கொள்ளும் முன் அதிக நேரம் காத்திருக்க வேண்டாம். இது உங்கள் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் கொள்வனவையும் பயனுள்ளதாக்குகிறது. அதாவது வீணாவத்தைக் குறைக்கிறது.
உணவுப்பாதுகாப்பு மூலம் உணவுக்கழிவுகளைத் தடுப்பது மிகப்பெரிய காரியமல்ல.
இத் தகவலின் சாராம்சம் என்ன?
உணவுக்கழிவைக் குறைக்க கைக்கூடும் சிறியதொரு முயற்சியின் மூலம் சிறந்த உணவுப் பாதுகாப்பை அடையமுடியும். இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலின் ஒரு முக்கியப் பகுதிஅனைத்து மக்களுக்கும் உணவு கிடைப்பதின் நிச்சயத்தன்மை. சிறந்த உணவுப் பாதுகாப்புடன், உணவு விரயத்தைக் குறைக்கும் வகையில் செயற்படும்போதே நாம் உணவு உறுதி இன்மையை தவிர்க்கலாம். நாம் எதிர்பார்க்கும் ஒரு தொடர்விளைவு (domino effect) அதுவே,
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது (FAO) ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பினோடு (UNIDO) இணைந்து விவசாய உணவுத்துறைக்கான சிறந்த தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள் (BESPA_FOOD) திட்டத்தை செயல்படுத்துகின்றது. இந்த திட்டம் இலங்கையில் உணவு பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளை மறுசீரமைக்கவும் மேம்படுத்தவும் செயல்படுகிறது. நாட்டின் உணவுப்பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கான கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் மூலம், குறைவான உணவு கழிவுகளுக்கு வழிவகுக்கலாம்.
இவ் உணவு இழப்பு மற்றும் கழிவு குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தில், இந்த இலக்கை அடைய நம் அனைவரதும் கூட்டுமுயற்சி தேவை என்பதை உணர்ந்து கொள்வோம்.