எளியவரிடம் அதிகாரம் வலியவரிடம் பணம்

பங்காளி வா, ரெண்டு பேரும் சேர்ந்து தற்கொலை பண்ணிப்போம்னு சொல்லு!, நான் கேள்வி கேட்காம உன் கூட வரேன். ஆனா “ஸ்டேட் பேங்க்” மட்டும் கூப்டாதடா!, இது என் பெரும்பான்மையான நண்பர்களின் குரல், காரணம் அங்கு அதிகமாக கூட்டம் இருக்கும் என்பது மட்டும் இல்லை அங்கு இருக்கும் அதிகாரிகளின் சிடு சிடு குணமும்தான். எள்ளு அளவுக்குக்கூட சிரிக்க மாட்டார்கள், எடுப்பதோ  இல்லை போடுவதோ அது நம் பணம் தானே அவர்களிடம் கடன் கேட்டா போகிறோம்!. டேய், ஒரு நாளைக்கு எவ்ளோ பேர் வறாங்க தெரியுமா? அதுனாலதான் கொஞ்சம் சிடு சிடுனு இருக்காங்க என்று வங்கியில் பணிபுரியும் நண்பன் கூறினான். ஓ! அப்டினா பேசாம அவங்களாம் ஆளே எங்க வரமாட்டாங்களோ அங்க வேலைக்கு போக வேண்டியதுதானே என்றதும் உர் என்று முகத்தை வைத்துக் கொண்டான்.

எனக்கு ATM அட்டை வேலை செய்யவில்லை என்று போனால் அங்கு தான் பெரும் வரிசை நின்றது, வேலை செய்யும் அட்டையை விட செய்யாத அட்டைகள்தான் அதிகம் போல என்று நினைத்துக்கொண்டு நின்றேன். (deccanchronicle.com)

தலையெழுத்து என்று தனியாய் போனேன், அங்கு பணம் போட, எடுக்க என எல்லாத்துக்கும் மெஷின் கொண்டுவந்துட்டாங்க போல (ஆனா மக்களுக்கு பயன்படுத்த தெரியணும்ல! வழக்கம்போல வித்தை தெரிந்த ஒரு ஜீவனை தம்பி எனக்கும் எனக்கும் என்று படுத்திக் கொண்டிருந்தனர்.) எனக்கு ATM அட்டை வேலை செய்யவில்லை என்று போனால் அங்கு தான் பெரும் வரிசை நின்றது, வேலை செய்யும் அட்டையை விட செய்யாத அட்டைகள்தான் அதிகம் போல என்று நினைத்துக்கொண்டு நின்றேன். அப்பொழுது 45 வயது மதிக்கத்தக்க கிராமத்துப்பெண், ஒவ்வொரு அதிகாரியாய் பார்த்து கடைசியாய் கண்ணாடி போட்ட அதிகாரியிடம் வந்தார். அந்த பெண்மணியை பார்த்து உங்களுக்குலாம் சொல்லி புரியவைக்க முடியாதுனு திட்ட ஆரம்பித்தார் அந்த அதிகாரி, நேரம் ஆக ஆக வசவு கூடியது!. வரிசையில் நின்ற ஒருவர் சரி சார் உங்களால இத பண்ணித்தர முடியாதுனு ஒரு பேப்பர்ல எழுதி கொடுத்துருங்க என்று சொன்னதும் அவர் முகம் மாறியது. சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணியின் பிரச்சனையும் தீர்ந்தது. அப்படி என்றால் அவரால் செய்யக்கூடிய வேலை ஒன்றுக்கு ஏன் அவர் இவ்வளவு திட்ட வேண்டும்? படிப்பறிவு இல்லாத மக்களுக்கு உதவுவதுதானே அதிகாரிகளின் வேலை?.

எல்லா அரசு அலுவலகங்களிலும் நிலை இதுதான். எந்த அரசு  அலுவலகத்திலாவது அங்கு இருக்கும்  உயர் அதிகாரிகளின் முன் அமரந்து பேசிய அனுபவம் உண்டா? (ப்யூன்-ஏ கெத்து காட்டுவாப்ல) உங்கள் வயது என்னவாக இருந்தாலும் நீங்கள் நிற்கத்தான் வேண்டும்!, மாவட்ட ஆட்சியர் ஏன் பாரத பிரதமர் என்றாலும் அவர் நம்முடைய “ஊழியரே” நம் வரிப்பணமே அவர்களின் சம்பளம், பின் எங்கிருந்து வந்தது இந்த அதிகார மனநிலை?, ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற ஒன்றை இறுக்கமாக பிடித்துள்ளனர் நம் அரசு ஊழியர்கள்.

ஈரோட்டில் மதுவுக்கு எதிராக போராடிய மக்களை தடியடி நடத்தி கலைத்தது காவல் துறை. அதில் ஒருவரின் மண்டையை உடைத்தனர், ஓரு பெண்ணை அறைந்ததில் அவருக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது இவை அத்தனைக்கும் ஆதாரம் உள்ளது. மதுவுக்கு எதிராக போராடுவது என்பது அவ்வளவு பெரிய குற்றமா?, முதலில் அடிக்கும் உரிமையை யார் தந்தது?. அத்தனையும் அதிகாரத் திமிர்! அது சாமானியன் மேல் மட்டுமே கட்டவிழ்க்கப்படும்.

நண்பனின் தம்பிக்கு வருமானவரி சான்றிதழ் பெற  தாலுகா அலுவலகம் சென்றேன். MBA! வெட்கம் இல்லாமல் சொல்லிக் கொள்கிறேன், “பாரம்” பூர்த்தி செய்ய திண்டாட்டம், வாசலில் படிப்பறிவு இல்லாதவர்கள் பக்காவாய் பூர்த்தி செய்கிறார்கள். அவர்களின் துணையுடன் முடித்து RI அவர்களிடம் சென்றோம். 27-30 வயது நபர் இருந்தார். சுற்றி 6 நாற்காலி போட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். நிற்கும் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை அவரின் உதவியாளர் கையில் 100 கொடுத்தால் உடனே கையெழுத்து, எங்கள் முறை வர சண்டையிட்டு பணம் கொடுக்காமல் கையெழுத்து வாங்கி வந்தோம்..

(wixstatic.com)

கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா?, என்ற கேள்வி போன்றதே!, அவர்கள் கேட்பதால் நாம் இலஞ்சம் தருகிறோமா இல்லை நாம் கொடுத்ததால் அவர்கள் வாங்கினார்களா? என்ற இந்த கேள்வியும். ஜெர்மனியின் பெர்லினில் “டிரான்ஸ்ஃபரன்ஸி இன்டர் நேஷனல்” என்ற அமைப்பு ஆசிய -பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 17 நாடுகளில் ஊழலை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள் (இந்த அமைப்பு தொடர்ந்து ஊழலுக்கு எதிராக இயக்கும் அமைப்பு) ஆய்வின் முடிவில், “இலஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்வதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.”  69% இந்தியர்கள் தாங்கள் இலஞ்சம் கொடுப்பதை ஒப்புக்கொள்கிறார்கள், அதாவது 10 இல் 7 பேர் இந்தியாவில் இலஞ்சம் கொடுக்கிறார்கள். (நிர்பந்திக்கப் படுகிறார்கள்), துறைவாரியாக சொல்வதென்றால் 89% காவல் அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகிறார்கள், கல்வியிலும் 58% பேர் இலஞ்சம் வாங்குகிறார்கள்.

சரி, “அதிகார வெறி” பத்தி பேசிட்டு இருந்தான் இப்ப எதுக்கு இலஞ்சம் பத்தி பேசுறானு உங்களுக்கு தோணலாம், எங்கலாம் அதிகாரம் பயன்படாதோ (பணம் அதிகமாக இருக்கின்ற, அரசியல் செல்வாக்கு இருக்கின்ற நபர்களிடம்) அங்கெல்லாம் இலஞ்சமாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் அரசு ஊழியர்கள், இதில் மாட்டி முழிப்பது ஏழைகள்தான். பணம் தர இயலாத மக்களை அவர்கள் நடத்தும் விதம் மிகக்கொடுமை. சில தினங்களுக்கு முன் பொது மருத்துவமனையில் படுக்கை தராமல் தரையில் கிடத்தி பெண் இறந்தது போன்ற சம்பவங்கள் இங்கு ஏராளம்.

(transparency.org)

நாம் அதிகாரத்திற்கும், இலஞ்சத்திற்கும் எதிராக ஏன் போராடவில்லை என்று கேட்கலாம். சில மாதத்திற்கு முன் சுயமாக நிறுவனம் ஆரம்பிக்க நினைத்த இளைஞர் ஒருவர் தான் யாரிடம் எவ்வளவு இலஞ்சம் கொடுத்தேன் என்று இணையத்தளத்தில் காணொளி காட்சியே வெளியட்டார். அதன் பலன் அவரின் நிறுவனம் மூடப்பட்டது. அப்ப இலஞ்சம் வாங்கியவங்க?? (அவுங்க இன்னும் வாங்கிட்டுதான் இருகாங்க), இங்க ஊழலை விசாரிக்கும் அதிகாரிகள் வரை இலஞ்சம் பரவிக்கிடக்கிறது பின் எப்படி இலஞ்சம் வாங்குபவர்கள் தண்டிக்கப்டபடுவார்கள்.

இலஞ்சத்தை எப்படி குறைக்கலாம்னு கேட்டா எல்லா அரசு அலுவலகத்திலும் இந்த இந்த வேலைக்கு இவ்வளவு பணம் கொடுக்கனும்னு  எழுதி போட்டா அது எப்படி இலஞ்சம் ஆகும்னு சொன்னான் ஒரு பாவி (இந்தியா வல்லரசு ஆயிரும் தம்பி நீ இருக்க ஒரே காரணத்துக்காகவே) சரி அரசு ஊழியர்கள்கிட்ட இந்த கேள்வி கேட்டா!, அவுங்க எங்களுக்கு பின்னாடி இந்த வேலையை எங்க பிள்ளைகளுக்குனு சொன்னா எதுக்கு இலஞ்சம் வாங்க போரோம்னு சொல்றாங்க! (மன்னர் ஆட்சிய திரும்பி கொண்டுவர சொல்றிங்க).,

அப்ப தீர்வுதான் என்ன, நம்மில் பலர் பணம் கேட்டதும் கொடுப்பதின் விளைவே இது. பணம் கேட்டால் எதிர்க்கும் அளவு நாம் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும், ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாய் ஒரே நாளில் காரியத்தை சாதிக்க துடிப்பது தவறு. நமக்கு முன் இருப்பவர்களும் மனிதர்களே! அதிகார திமிர் எவ்வளவு தவறோ அது போன்றதே அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்வதும். அரசு ஊழியர்களே நீங்கள் வேலையை சேவையா பண்ண வேணாம், வாங்குற சம்பளத்துக்கு உண்மையா இருந்தா போதும்”. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பது மட்டுமே உண்மை, எல்லா அரசு ஊழியர்களையும் குற்றம் சொல்வது மட்டுமே இந்த ஆக்கத்தின் நோக்கம் இல்லை. தன் மனைவி இறப்பிற்கு கூட விடுப்பு எடுக்காமல் வேலைக்கு செல்லும் ஊழியர்களும் இங்கு உண்டு!…..

“இனி ஒரு விதி செய்வோம்

அதை எந்த நாளும் காப்போம்”

Related Articles

Exit mobile version