உங்கள் அவசரத்திற்கு பணம் பெற்றுக்கொள்ள இலகுவான வழி இதோ!

தலைப்பைப் பார்த்ததுமே இது ஏதோ தந்திரமான வழி என்று எண்ணியிருக்கக் கூடும். ஆனால் அவசரத்தேவைகளுக்கு உடனடியாக  பணம் பெறுவதற்கு எந்த மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. இருக்கும் ஒரே வழி, கையில் இருக்கும் பணத்தை சேமித்து வைப்பதுதான். ஆனால் பிரச்சினையே அங்கே தான் ஆரம்பிக்கின்றது. சேமிப்பை இலகுவாக்கிட வழி தேவைப்படுகிறது. அதைப்பற்றிய பதிவே இது!

வேலைக்குச் செல்லும் / சுயதொழில் புரியும் / வருமானம் ஈட்டும் நபரா நீங்கள்? பணம் சம்பாதித்தல், செலவு செய்தல், சேமித்தல்  ஆகிய பிரிவுகளுக்குள் நீங்கள் அடங்குவீர்கள் தானே? உங்கள் அன்றாடத் தேவை தொடக்கம், மாதாந்தச் செலவுகள் மற்றும் நீண்டகாலத் திட்டமிடல் ஆகிய அனைத்து செலவுகளுக்கும் பணம் தேவைப்படுகிறது அல்லவா! அப்படியான சூழ்நிலைகளை முன்கூட்டியே எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது.. கையில் இருக்கும் பணத்தை கவனமா எப்படிக் கையாள்வது… எந்த நேரத்திற்கும் ஏற்ற வகையில் பணத்தை எப்படி ஆயத்தம் செய்து கொள்வது போன்ற பயனுள்ள தகவல்களை இங்கே தருகிறோம்.  பயன்படுத்திக்கொள்ளமுடிகிறதா என்று பாருங்கள்!

திட்டமிடுதல்

thebalancesmb.com

எந்தவொரு செயலுக்கும் திட்டமிடுதல் தான் முதல் படி. நம் வரவு செலவுகளைத் திட்டமிடுதல் அவசியம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் குறிப்பெடுங்கள். எதையும் தவிர்க்காதீர்கள். உங்கள் கைகளில் இருக்கும் பணம் எவ்வாறு செலவாகிறது என்று தெரிந்தால் தானே, அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்!

அத்தியாவசியமான பொருட்களை முதலில் வாங்குதல்.

spar-international.com

நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களை முதலில் பட்டியலிடுங்கள். வீட்டிற்கும் நமக்கும்  தேவையான பொருட்கள் எவை என்பதையும் அவசியமான பொருட்கள் எவை என்பதையும் பட்டியலிடுங்கள். உணவுப் பொருட்கள், காய்கறிகள் மளிகை போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுவே உங்கள் தேவை எது அவசியம் எது என்பதை பிரிக்கும் முதல் வழி!

அட்டவணைப்படுத்துதல்

save.ca

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பணம் செலவு செய்ய முன்னர், அச் செலவின் மூலம் நீங்கள் அடையும் பலன் உங்களுக்கு எந்த வகையில் உதவும் என்பதை அறிந்து வைத்திருத்தல் நலம். எனவேதான் உங்கள் கையில் ஒரு அட்டவணையை தயார் செய்து வைத்திருத்தல் அவசியமாகிறது. உங்கள் அன்றாடத் தேவைகள் எவை? மாதாந்தச் செலவுகள் எவை? வீடு, வாகனம் அல்லது சொத்து ஒன்றை வாங்குவது போன்ற நீண்ட காலத் திட்டதிற்கு என்று ஒரு அட்டவணையை தயார் செய்து வைத்துள்ளீர்களா என்று பாருங்கள்! அட்டவணையைத் தயார் செய்வது அதீத செலவைக் குறைக்க உதவும்.

விலைப் பட்டியலை சரிபார்த்தல்

videoblocks.com

நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களை உறுதி செய்த பின்னர், பொருளின் தரத்தோடு அதன் விலையை சரிபார்க்கத் தவற வேண்டாம். ஒரு பொருள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலைகளில் கிடைக்கலாம். அவற்றை வாங்க முன்னர் விலையை சரிபார்க்கும் பழக்கத்தினை எற்படுத்திக்கொள்ளுங்கள். விலைக்கழிவுகள் கிடைக்கும் பொருட்களை வாங்குங்கள். மொத்தக் கொள்வனவு செய்கையில் கிடைக்கும் சலுகைகளை பற்றி சிந்தியுங்கள்!  அவசியமான ஒன்றை விலை குறைத்து வாங்கும் போது, அதன் மூலம் பணம் வீண்விரயம் ஆவதை தடுக்கப்படுவதை காண்பீர்கள். அந்த உணர்வை நீங்கள் உங்கள் பலமாகக் கருதுவீர்கள்!

பொருட்கள் போன்று சேவைகளையும் கணக்கில் எடுங்கள்

videoblocks.com

நாம் வாங்கும் பொருட்கள் கண்ணுக்கு புலப்படுவதைப் போல, நாம் பெற்றும் கொள்ளும் சேவைகளும் ஒரு வகையிலான கொள்வனவு தான். கண்ணுக்கு புலனாகாத செலவுகளை அடையாளம் காணத்தவற வேண்டாம். பொதுப்போக்குவரத்துகளில் பயணம் செய்வது நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் செல்வது போல அமையாது என்றாலும், நீங்கள் உங்கள் போக்குவரத்து தேவைக்கு பயன்படுத்தும் எரிபொருள் செலவை பற்றிச் சிந்தியுங்கள்!

இணையவழி பொருட்கொள்வனவு

earnfromdating.com

இணையதளத்தின் வழி பொருட்களை வாங்கும் சந்தர்ப்பத்தில், உங்கள் கைகளுக்கு கட்டுப்படியாகும் பொருட்களை வாங்க முன்வாருங்கள். மாதாந்த கொடுப்பனவு அடிப்படையில் பொருட்களை வாங்கும் வசதிகளை பயன்படுத்திக் கொண்டு மாதாந்தம் உங்கள் பணம் மொத்தமாக கரைவதை கட்டுப்படுத்தலாம். வட்டி அற்ற கொள்வனவுகளை கண்டறிந்து அச்சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவைகளைக் கண்டறிந்து செலவு செய்யுங்கள்

i.pinimg.com

நீங்கள் வாங்கும் உடை, கைப்பேசி, வீட்டு அலங்காரப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் மின்சாதனங்கள் என்பவை உங்கள் தேவைக்கு உட்பட்டவையாக இருக்கும்படி பார்த்து செலவு செய்யலாம். உடைகளை வாங்கும் போது பயன்படுத்தும் தரத்தில் உள்ளவையா என்பதை கண்டறியுங்கள். உங்கள் சருமத்திற்கு, காலநிலைகளுக்கு பொருத்தம் தானா என முன்கூட்டியே அறிந்து கொண்டால், அழகுசாதனப் பொருட்களை வாங்கி வைத்து உபயோகிக்காமலேயே தூக்கியெறியும் நிலைகளை தவிர்த்திடலாம்.

பொருட்களின் தரத்தை ஆராயுங்கள்

images.mentalfloss.com

தரமற்ற நான்கு பொருட்கள் வாங்குவதைக் காட்டிலும் தரமான இரண்டு பொருட்களை வாங்குதல் சிறப்பு. சமைப்பதற்கு வாங்கும் மரக்கறி, காய்கள், பழங்கள் தொடங்கி உங்கள் வாசனைத்திரவியங்கள் வரை தரம் பிரித்து பார்த்து வாங்கத்தவற வேண்டாம். உணவுப் பொருட்களின் தரத்தை போலவே காலாவதி ஆகும் திகதியையும் ஆராயுங்கள், நீண்டகாலம் பாவிக்க உகந்தவைகளுக்கு உங்கள் செலவுப்பட்டியலில் முன்னுரிமை கொடுங்கள்! நுகர்வுக்குரிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பது உங்கள் அடுத்த மாதச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் காண்பீர்கள்.

இதர செலவுகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துங்கள்

healthyeating.sfgate.com

உங்கள் மாதாந்த செலவினங்களை குறித்து வைத்துக்கொண்டே வந்தால், உங்கள் பிரதான செலவுகளையும், இதர செலவுகளையும் அறிந்துகொள்ளலாம். தியேட்டர் செலவுகள், ஃபாஸ்ட் ஃபுட் செலவுகள் போன்ற இதர செலவுகள் தவிர்க்கமுடியாதவை தான். சிலசமயம் இதரசெலவுகள் அதிகரித்துக்கொண்டே செல்வதை அறிய முடியாது போகவும் வாய்ப்புண்டு. இப்படியான செலவுகளை தவிர்க்கமுடியாது போனாலும் கட்டுப்படுத்தலாம். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் உங்கள் நண்பர்களோடு சேர்ந்து செலவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். விசேட சலுகைகளை வழங்கும் இடங்களை கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்துங்கள்! பரிசளிப்பு பொருட்கள் வாங்கும் போது அதைப் பெரும் நபரின் உபயோகத்தின் அடிப்படையில் வாங்கலாம். இதர செலவு செய்தாலும் அதையும் திட்டமிட்டு செய்வது நல்ல உறவுமுறைக்கும் உதவலாம் தானே?

இவை அனைத்தும் உங்கள் செலவினத்தில் மாத்திரமல்ல சேமிப்பிலும் தாக்கம் செலுத்தும். இனிவரும் கேள்விகளை கவனமாக உள்வாங்கிக்கொள்ள முடிகிறதா என்று பாருங்கள். உங்கள் தேவைக்குரிய பணம் உங்கள் கையிலேயே இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இவை உதவலாம்.

வரையறை தொகையை மீறிய செலவு அவசியம் தானா?

static.deshaya.lk

நீர், மின்சாரம் மாத்திரமல்ல, நாம் செய்யும் செலவுகளில் கூட வீண்விரயத்தை தடுக்க வழிகள் உண்டு. வரையறுக்கப்பட்ட தொகையை மீறி பணத்தை செலவு செய்யும் முன் அதை ஈடு செய்ய முடியுமா என்று பல தடவை யோசிக்கவும். முன்கூட்டிய திட்டமிடல் உங்கள் செலவில் தாக்கம் செலுத்தும் என்பதை மேலே பார்த்தோம்.

வீண்விரயத்தைத் தடுக்க வழி உள்ளதைப் போலவே சேமிக்கவும் உங்களிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா?

nsb.lk

சேமிப்பு அவசரகால நிவாரணி. சிறியதோ பெரியதோ நம்மால் இயன்ற தொகையை சேமிக்கப் பழக வேண்டும். சேமிப்பை எப்படி இலகுவாகச் செய்யலாம்? மாதாமாதம் ஒரு குறித்த தொகையை சேமிக்க முயற்சிசெய்யுங்கள். முதன் முறை சேமிக்கும் அளவை, அடுத்தடுத்த மாதங்களில் அதிகரித்துக்கொள்ளப் பாருங்கள். மிச்சப்படுத்தும் தொகை கூடக் கூட அவை உங்கள் சேமிப்பிற்கு உதவும் வழியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பணம் அதிகம் கிடைக்கும் பொதெல்லாம் செலவையும் அதிகரிக்க நினைக்க வேண்டாம். அவசியத்திற்கு போக மிச்சம் உள்ள தொகையை சேமிக்கத் திட்டம் வகுத்திடுங்கள்.

கடன் தேவைப்படுகிறதா?

nsb.lk

ஒரு பொருளையோ சேவையையோ பெற்றுக்கொள்ள போகும் வேளைகளில் கையிலிருக்கும் பணத்தை விட அதிகம் பணம் தேவை எற்படின் கடன் வாங்கி அதனை கொள்வனவு செய்ய நினைக்க வேண்டாம். முக்கிய தேவை இருப்பின் பொருத்தமான திட்டமிடலுடன் அடுத்துவரும் வருமானத்தில் அதைப் பூர்த்திசெய்யும் வழியைத் தேர்ந்தெடுங்கள். கடன் உங்கள் கையிலிருக்கும் வாய்ப்பு என்று கருதாதீர்கள். கடன் படும் சந்தர்ப்பத்தை தவிர்த்துக்கொள்ள சேமிப்புதான் ஒரே வழி!

வைப்புத்தொகை ஒன்றைப் பேணுகிறீர்களா?

wavesnbackpack.com

உங்கள் கைகளில் பணம் இருப்பின், அவசரத்திற்கு யாரையும் தேடவேண்டிய தேவை ஏற்படாது . கையிருப்பு ஒன்றைப் பேணுகள். நீங்கள் பணம் சேர்க்கவில்லை எனில் சேமிப்பு இருக்காது. உங்கள் சேமிப்பை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தும் பழக்கத்தைக் கடைபிடிக்கவும். உடனடித்தேவைக்கு ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். பணம் பாதுகாப்பாகவும் இருக்கும்.

சேமிப்பை பணமாக மாத்திரமா மேற்கொள்ள முடியும்?

compro-oro-arezzo.it

உங்கள் கையில் உள்ள பணம் திரவநிலையில் இருப்பதை விட சொத்துக்களாக இருப்பது எதிர்காலத்திற்கு உதவலாம். தங்க நகைகளை வாங்குவது, காணிநிலம் வாங்குவது, கட்டிடம் ஒன்றை வாங்கி வாடகைக்கு விடுவது போன்ற திறமையான வழிகளை கண்டு உங்கள் பணத்தின் மதிப்பை இரட்டிப்பாக்கிக்கொள்ளுங்கள். நீங்களே உங்களுக்கு எஜமானனாக வாழ வழிகளை சிந்தியுங்கள். அவற்றை கடைபிடியுங்கள்! பொறுமையாக இருந்தால் அதன் பலனை நீங்களே அடையலாம்! சேமிப்பில் பொறுமை மிக முக்கியம்!

Always More, Everyday With An HSBC Platinum Cashback Card

Cover image courtesy: i.pinimg.com

Related Articles

Exit mobile version