ஏறுதழுவலின் பின்னால்….

இந்த ஆக்கம், ஏறுதழுவல் என்பது என்ன ? அது எப்படியாக தோற்றம் பெற்றது ? அதனுடைய விதிமுறைகள் என்ன ? ஏறுதழுவலுக்கு பயன்படும் எருதுகளின் வகைகள் என்ன ? என்பதனை விளக்குவதல்ல. ஏறுதழுவல் தடைக்கு பின்னால் இழையோடியிருக்கும் அரசியல், வணிகம் மற்றும் மக்களது உரிமைக்குரல் தொடர்பிலான தொகுப்பே ஆகும்.

2008ல் ஏறுதழுவலில் நிகழ்ந்த திருப்பம்

(forumartgallery.com)

தமிழக அரசு இவ்விடைக்கால தடையை எதிர்த்து மேன்முறையீட்டை செய்ததுடன் ஏறுதழுவல் தொடர்ச்சியாக முறையான விதத்தில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக 2009ம் ஆண்டு அளவில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவந்தது. (forumartgallery.com)

பாரம்பரியம் தொட்டு தமிழ்நாட்டில் நடைபெற்றுவருகின்ற ஏறுதழுவல் நிகழ்வில் 2008ம் ஆண்டு என்பது மறக்கமுடியாத ஒன்றாக மாறப்போகிறது என்பதனை யாரும் எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டார்கள். காரணம், இந்தியாவின் விலங்குகள் நல போராளி மேனகா காந்தி மற்றும், PETA என்று அழைக்கப்படும் விலங்குகளை காக்கும் சர்வதேச அமைப்பு என்பவற்றின் கூட்டாக, ஏறுதழுவலில் எருதுகள் முறையற்ற வகையில் கையாளப்படுவதாகவும், அதனால் அவை போட்டிகளுக்காக துன்புறுத்தப்படுவதாகவும் புகார் அளிக்கபட்டு நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்யப்பட்ட ஆண்டாகும். இதன்போது, இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏறுதழுவல் நிகழ்வு முறையற்றவகையில் இடம்பெறுவதாக உறுதிசெய்து இடைக்கால தடையை விதித்தது.

இந்நிலையில், தமிழக அரசு இவ்விடைக்கால தடையை எதிர்த்து மேன்முறையீட்டை செய்ததுடன் ஏறுதழுவல் தொடர்ச்சியாக முறையான விதத்தில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக 2009ம் ஆண்டு அளவில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இந்த சட்டத்தின் பிரகாரம், ஏறுதழுவல் நிகழ்வு இடம்பெறுவதற்கு சுமார் 2-3 மாதங்களுக்கு முன்பதாகவே போட்டியில் ஈடுபடும் எருதுகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், போட்டிக்கு முன்னதாகவும், போட்டிக்கு பின்னதாகவும் குறித்த எருதுகளும், ஏறுதழுவல் போட்டியாளர்களும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம், ஏதேனும் மிருகவதை இடம்பெறுவதை கண்டறிய முடியும். இவற்றுக்கு கூடுதலாக, ஏறுதழுவல் நிகழ்வில் எருதுகள் வெளியேறும் வாசல்படி எனும் பிரதேசம் உட்பட அனைத்து பிரதேசங்களும் CCTV தொழில்நுட்படத்துடன் கண்காணிக்கபட வேண்டும் என வலியுறுத்தபட்டதுடன், அந்ததந்த மாவட்ட ஆட்சியாளர்களின் மேற்பார்வையின்றி ஏறுதழுவல் நிகழ்வை நடாத்துவது தண்டனைக்குரிய குற்றமாகவும் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. (இதனை விடவும், அதிகமான விதிமுறைகளை இந்த சட்டம் கொண்டுள்ளது)

இச்சட்ட அமுலாக்கலின் பின்பும், ஏறுதழுவல் நிகழ்வில் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களும், காயங்களும் குறைவடைந்திருந்தது. ஆனாலும், தொடர்ச்சியாக PETA மற்றும் இந்திய விலங்கு நல ஆவலர்கள் நீதிமன்றத்தில் ஏறுதழுவல் நிகழ்வில் மிருகவதை தொடர்வதாக கூறி, அந்நிகழ்வை தடைசெய்யகோரி வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடாத்தியே வந்திருந்தனர். இதில் திடீர் திருப்பமாக, 2014ம் ஆண்டு மீண்டும் ஏறுதழுவல் நிகழ்வை நடாத்த உச்சநீதிமன்றம் தடையுத்தரவை வழங்கியது. இதற்கு மிக முக்கிய காரணமாக, ஏறுதழுவல் நிகழ்வில் மிருகவதை தொடர்வதாகவும், இதனை குறைப்பதை விட, இல்லாது செய்யவே இந்த தடை கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டது, அன்றுமுதல் 2017வரை உச்சநீதிமன்றம் தடையுத்தரவை விலக்ககூடும் என ஏங்கி நிற்பதே தமிழர் பொங்கலாக போனது.

ஏறுதழுவலை ஏன் தடை செய்ய வேண்டும் ?

(staticflickr.com)

2013ல் சுமார் 125 மில்லியன் மெற்றிக்தொன்னுக்கு அதிகமான பால் உற்பத்தி இடம்பெற்று உள்ளதுடன், 2023ம் ஆண்டளவில் அது 200 மில்லியன் மெற்றிக்தொன் அளவுக்கு அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. (staticflickr.com)

ஏறுதழுவல் நிகழ்வினை தடை செய்வதற்காக மிருகவதை என்கிற சொற்பதம் மிகப்பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், அதற்கு பின்னுள்ள நுண்ணிய அரசியல் அபரிதமானது. காரணம், இந்த மிருகவதை என்கிற புரட்சியின் பின்னால் கைகோர்த்துள்ளவர்களை துல்லியமாக அவதானித்தால், அதன் அரசியல் தாற்பரியத்தை அறிந்து கொள்ள முடியும்.

இதனை அறிவதற்கு முன்பு, சற்றே இந்தியாவின் பால் செழுமை மிக்க உற்பத்திகள் தொடர்பிலும், அதன் தேவை தொடர்பிலும் சிறிய தரவுகளை பார்த்துவிடுவோம்.

உலகிலேயே ஜரோப்பிய யூனியனுக்கு (அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளையும் சேர்த்து) அடுத்ததாக பாலினை அதிகளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியாவே உள்ளது. 2013ல் சுமார் 125 மில்லியன் மெற்றிக்தொன்னுக்கு அதிகமான பால் உற்பத்தி இடம்பெற்று உள்ளதுடன், 2023ம் ஆண்டளவில் அது 200 மில்லியன் மெற்றிக்தொன் அளவுக்கு அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. இது , 2023ம் ஆண்டில், பால் உற்பத்தியில் ஜரோப்பிய யூனியனை பின்தள்ளி முதலாமிடத்திற்கு கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா 2023ம் ஆண்டில், பால் உற்பத்தியில் ஜரோப்பிய யூனியனை பின்தள்ளி முதலாமிடத்திற்கு கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஒரு தரவே போதுமானது, இந்தியாவின் பால் சார்ந்த உற்பத்திகளின் வியாபார நிலை எத்தனை சாதக தன்மையை கொண்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ளுவதற்கு! இத்தனையும் கவனத்தில் வைத்துகொண்டு பிரச்சனைக்குரிய காரணிகளை பார்க்கலாம்.

பல்தேசிய கம்பனிகளின் வணிக மனநிலை

தொடர்ச்சியாக, தமிழகத்தில் ஏறுதழுவல் நிகழ்வு நடாத்தபடுவதற்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று, அடுத்துவரும் செழுமையான நாட்டு மாடுகளின் தலைமுறைக்கான சிறந்த இனவிரிவாக்கத்தை தரக்கூடிய எருதினை கண்டறிவதும் ஒன்றாகும். அதாவது, ஏறுதழுவலில் வெற்றிபெறும் காளைகள் பெரும்பாலும் ஆரோக்கியமானதாக இருப்பதுடன், அதன் மூலம் கன்றுகளை பெறுகின்ற போது அதன் இனமும் அதனை போலவே செழுமைமிக்கதாக இருக்கும். ஆனால், இத்தகைய நாட்டு எருதுகள் யாரிடம் இருக்கிறது ?

சாதாரண குடிமக்களிடம்தான் இத்தகைய நாட்டு எருதுகள் இருக்கிறன. ஒவ்வொரு கிரமாத்துக்கும் சிலரிடம் மட்டுமே இது உள்ளது. அதுபோல, இவர்கள் துணையுடன் உருவாக்கப்படும் மாடுகளும், மாட்டு பண்ணைகளும், இவர்களைப்போல கிராமப்புறங்களில் வாழும் மக்களிடம்தான் உள்ளன. அவர்கள் அத்தகைய மாடுகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் பாலை கொண்டு இலாப அடிப்படையில் வாழ்க்கையை நடாத்தி வரும் சாதரணமானவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒன்றும் பல்தேசிய கம்பனிகளின் உரிமையாளர்கள் இல்லை. இவர்கள் ஒன்றும் மிக பெரிய முதலீட்டையோ, மிகப்பெரும் இலாபத்தையோ கொண்டு இருப்பவர்களாக இருக்கமாட்டார்கள்.

(seasonsnidur.files.wordpress.com)

அடுத்தடுத்த சந்ததிக்கான இனவிருத்தியை தடுத்து நிறுத்துவதன் மூலம், அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்து அதிகாரவர்கத்தில் உள்ளவர்கள் நினைப்பதை செயலாக்கவடிவம் கொடுக்க பின்வரும் முறையில் முயற்சிக்கிறார்கள். (seasonsnidur.files.wordpress.com)

இந்நிலையில், இப்படி யோசித்து பாருங்கள் ஒரு பத்துப்பேர் தனியாக மாடுகளை வளர்த்து, அதிலிருந்து பாலை பெற்று, அதனை இன்னுமொருவருக்கு விற்று என சங்கிலி தொடராக சென்று கொண்டிருக்கும் ஒரு சூழலை முற்றாக அழித்துவிட்டு, அனைவரையும் ஒரு பல்தேசிய கம்பனியின் கீழ் ஊழியர்களாக கொண்டு வந்து, அத்தனை மாடுகளுக்கும் ஒரு பல்தேசிய கம்பனிகாரரே உரிமையாளராக இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு சிலரிடம் மட்டுமே பணம் கொட்டி கிடக்கும் அல்லவா? அதனை செய்யவேண்டுமானால், ஒவ்வொரு வீடாக தேடிச்சென்று, மாடுகளை வாங்க முடியுமா? இல்லை மக்கள்தான் தம் வாழ்வாதாரத்தை விட்டு கொடுப்பார்களா?

எனவேதான், ஏறுதழுவலை ஒரு ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்., அடுத்தடுத்த சந்ததிக்கான இனவிருத்தியை தடுத்து நிறுத்துவதன் மூலம், அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்து அதிகாரவர்கத்தில் உள்ளவர்கள் நினைப்பதை செயலாக்கவடிவம் கொடுக்க பின்வரும் முறையில் முயற்சிக்கிறார்கள்.

இந்திய ஒருமைப்பாட்டு நிலையும், அரசியலும்

இந்தியாவினை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரண்டே இரண்டு கட்சிகள்தான் மாறி மாறி ஆண்டுகொண்டு இருக்கிறது. ஒன்று காங்கிரஸ் கட்சி, மற்றையது பாரதிய ஜனதா கட்சி. இரண்டினதும் கொள்கைகளும், கோட்பாடுகளும் வேறுபட்டவையாக இருந்தாலும், இரண்டுமே ஒருபுள்ளியில்தான் இணைந்து இருக்கின்றன. அது, ஒட்டுமொத்த இந்தியர்களையும், இந்தியர்கள் என்கிற பொதுமைபடுத்தலுக்குள் கொண்டு வருதல். அதாவது, ஒவ்வருவருக்கும் தனியான அடையாள சின்னங்கள் எதனையும் கொண்டிருக்காது, எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தும் முயற்சி. இதன் ஆரம்பமாகத்தான், இந்தியாவின் தேசிய உடையாக சுடிதார் போன்ற ஆடையை கொண்டு வரும் நடவடிக்கையும், தேசிய பொது மொழியாக ஹிந்தியை கொண்டுவரும் முயற்சியும் இடம்பெற்றது. இதற்கும் ஏறுதழுவல் தடைக்கும் என்ன தொடர்பு இருக்கும் ?

இருக்கிறது. தனித்துள்ள அடையாளங்களை இல்லாதொழிக்க இந்திய அரசின் மனநிலை இசைவாக்கம் கொண்டதாக இருக்கிறது. இந்த மனநிலைதான் பல்தேசிய கம்பனிகளுடன் கைகோர்த்து கொண்டு PETA போன்ற சர்வதேச அமைப்புக்களை இலகுவாக இந்தியாவிற்குள் நுழையவும், அவை செயல்படவும் அனுமதி அளிக்கிறது. இதற்கு மேலதிகமாக, இவற்றின் மூலமாக ஏற்படுத்தபடும் தாக்கங்களை கண்டுகொள்ளாமல் இருக்கவும் வழிவகுக்கிறது.

இவற்றுக்கு மேலாக, இன்றைய தமிழக அரசியலும் மோசமான நிலையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தை எதிர்த்து எங்காவது ஏறுதழுவல் நிகழ்வு இடம்பெற்றால், தமிழ்நாடு ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என்கிற அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், மறுபுறம் தமிழ்நாட்டில் ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஏறுதழுவல் நிகழ்வை நடாத்த ஆதரவு தெரிவிக்கிறார்கள். இது, ஒரு ஆளுமையான தலைமையில்லாத ஆளும் கட்சிக்கு தனது ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. உத்தியோகபூர்வமாக ஏறுதழுவல் நிகழ்வை தடுத்து நிறுத்த இதுவே போதுமானது, அடுத்தடுத்த வருடங்களுக்கு தமிழர் ஆளுங்கட்சியே ஏறுதழுவல் நிகழ்வுக்கு ஆதரவு தர துணியவில்லை என பிரச்சாரம் செய்யவும் இது பயன்படகூடும்.

கீழ்நிலை மக்களின் எதனையும் எதிர்க்கும் மேட்டுகுடி தன்மை

(jallikattu.in)

இந்தியாவில் பாரம்பரியமாக இடம்பெறும் ஏறுதழுவல் நிகழ்வில் 2009க்கு பின் மட்டுமே மிருகவதை உள்ளது என்பது பூதாகரமாக தெரிய வேறு என்ன காரணம் இருக்க முடியும் ? (jallikattu.in)

இன்றைய அளவில், ஏறுதழுவல் நிகழ்வை எதிர்க்கும் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டின் சென்னையிலும் இருக்கிறார்கள். சரியாக, அவர்களை உற்றுநோக்கின் கீழ்நிலை மக்கள் எதனை செய்தாலும் குற்றம், கிராமபுறங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்புமே இல்லை என்கிற மனநிலையுடன் இருப்பார்கள், இவர்களுக்கு ஏறுதழுவல் நிகழ்வை கீழ்நிலை மக்கள் கொண்டாடும் ஒரு மிருகவதை நிகழ்வு என பிரச்சாரம் செய்வது இலகுவானது. இதனையே பல்தேசிய கம்பனிகளுடன் இணைந்திருக்கும் விலங்கின சர்வதேச அமைப்புக்கள் செய்து வருகின்றன. இத்தகைய மேட்டுக்குடி மக்களுக்கு, இந்தியாவில் பாரம்பரியமாக இடம்பெறும் ஏறுதழுவல் நிகழ்வில் 2009க்கு பின் மட்டுமே மிருகவதை உள்ளது என்பது பூதாகரமாக தெரிய வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

சர்வதேச வணிக நோக்கம்

ஏறுதழுவல் நிகழ்வை தடைசெய்வதன் மூலம், இனவிருத்திக்கு பயன்படக்கூடிய எருதுகளை அழித்துவிட முடியும். (ஏறுதழுவல் தவிர்த்து, வேறு எந்த தேவைக்கும் இவை தற்காலத்தில் அதிகம் பயன்படுத்தபடுவதில்லை). அப்படியாயின், ஒரு கட்டத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவடையும். இதனால், உற்பத்திகள் குறைவடையும். ஒரு நிலையில், சொந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில், இந்திய அரசே பாலை அதிகம் தரக்கூடிய வெளிநாட்டு ஜெர்சி மாடுகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கும். தனியே, அந்த மாடுகளின் இறக்குமதியுடன் இது நின்று விடுமா ? இதற்கு பிறகுதான், இந்தியாவில் சர்வதேசத்தின் வணிக வாயில்கள் திறக்கப்படும். குறித்த மாடுகளுக்கு என பிரத்தியேகமான உணவை வழங்கவேண்டி இருக்கும், இதற்கான மூலபொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படும், முடிவு பொருளை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளை நிறுவவேண்டிய அவசியம் ஏற்படும். அதுபோல, குறித்த கால்நடைகளை பராமரிக்க பிரத்தியேக சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும். கூடவே, அதற்கான மருந்துவகைகளுக்கான வெளிநாட்டு சந்தையும் திறக்கப்படும்.

(i.ytimg.com)

இன்றைய நிலையில், ஏறுதழுவல் நிகழ்வை தடைசெய்து விடக்கூடும். அதற்கு பின், அதனை தடைசெய்ய போராடியவர்களும், சாதாரண மக்களுடன் இணைந்துகொண்டு பல்தேசிய முதலாளிகளிடம் அடிமையாக்கபட்ட தங்கள் உணவினை பெறுவதற்கான போராட்டத்தை தொடங்கவேண்டிய நாளும் வரக்கூடும் (i.ytimg.com)

ஒரு நிமிடம் நிதானமாக சிந்தித்து பாருங்கள்! ஜெர்சி மாட்டை விலைக்கு வாங்கவேண்டும். அதற்கான உணவை வாங்க வேண்டும். அதற்கான மருத்துவ செலவை ஏற்கவேண்டும். அந்த கால்நடைகளை பராமரிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இவற்றை எல்லாம் கிராமபுறங்களில் உள்ள சாதாரண ஒருவரினால், தொடர்ச்சியாக செய்யகூடியதாக இருக்குமா ?

அப்படியானால், இதனை எல்லாம் செய்வதற்கு என வெளிநாட்டு முதலீட்டாளர்களும், இந்திய முதலாளிகளும் கைகோர்ப்பார்கள். அதன்போது, கிராமங்களில் உண்மை உணர்வுடன் கால்நடை வளர்ப்பை செய்துவந்த சாதாரணமானவர்கள் நிலை என்ன ஆகும் ?

இன்றைய நிலையில், ஏறுதழுவல் நிகழ்வை தடைசெய்து விடக்கூடும். அதற்கு பின், அதனை தடைசெய்ய போராடியவர்களும், சாதாரண மக்களுடன் இணைந்துகொண்டு பல்தேசிய முதலாளிகளிடம் அடிமையாக்கபட்ட தங்கள் உணவினை பெறுவதற்கான போராட்டத்தை தொடங்கவேண்டிய நாளும் வரக்கூடும். அப்போது, எதனையும் நொந்து பயனில்லை.

ஏறுதழுவல் நிகழ்வு மிருகவதை அற்றவகையில் இடம்பெறுவதனை உறுதி செய்வது அவசியம். அதற்காக, வாழ்க்கை சுழற்சியையும், ஒரு மக்களின் பாரம்பரியத்தையும் தனியே அழித்துவிட நினைப்பது அவசியமற்றது.

Related Articles

Exit mobile version