
இலங்கைக்கான துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி டி.வெங்கடேஷ்வரன் அவர்களின் அழைப்பின் பேரில் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனரும் தயாரிப்பாளருமான உலகநாயகன் கமல்ஹாசன அவர்கள் சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முதன் முறையாக கடந்த ஜூலை 24ம் திகதி வருகை தந்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமா துறைப்பற்றி பிரதி உயர்ஸ்தானிகருடன் திரு.கமல்ஹாசன் அவர்கள் கலந்துரையாடினர்.

புகைப்பட உதவி- Sri Lanka Deputy High Commission Chennai
மேலும் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், தென்னிந்திய திரையுலகத்தினர் மற்றும் நாடகக் குழு உறுப்பினர்களுடன் திரு.கமல்ஹாசன் இலங்கைக்கு வருகை தர வேண்டுமென பிரதி உயர்ஸ்தானிகர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த திரு.கமல்ஹாசன், தனது நலன்புரிச் சங்கத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வின் பின்னர் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்களுடனும் உலகநாயகன் கலந்துரையாடினார்.

புகைப்பட உதவி- Sri Lanka Deputy High Commission Chennai
அண்மையில் வெளிவந்த உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் இலங்கையில் அமோக வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.