
இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி (பாரம்பரியமற்ற மின் உற்பத்தியான சூரிய, காற்று, மினி-ஹைட்ரோ மற்றும் பயோமாஸ் (Biomass) தவிர்த்து) 2020 ஏப்ரல் மாதத்தில் 964,043 மெகாவாட் ஆக இருந்தது. இது 2020 ஜனவரி மாதத்தில் உற்பத்தி செய்த 12,46,863 மெகாவாட்டிலிருந்து 22.7 சதவீதம் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார வாரியத்தின் தரவுகள் காட்டுகிறது.
COVID-19 இன் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்ட போது, தொழில்துறை, ஹோட்டல் மற்றும் உற்பத்தித் துறைகள் தற்காலிகமாக தமது வணிக நடவடிக்கைகளை நிறுத்தியதை, 2020 ஏப்ரலில் மின்சார உற்பத்தி குறைந்தமைக்கு காரணமாக சொல்லமுடியும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மின்சாரமானது தமிழ்-சிங்கள புத்தாண்டு காரணமாக சரிவைக் காட்டுவது வழக்கம்.

இலங்கை ஜனவரி மாதத்தில் 12,46,863 மெகாவாட், பிப்ரவரியில் 1,228,279 மெகாவாட், மார்ச் மாதத்தில் 1,206,069 மெகாவாட் மற்றும் 2020 ஏப்ரலில் 964,043 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தது.
2020ம் வருடம் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான மொத்த மின்சார உற்பத்திக்கு நிலக்கரி 41 சதவீத பங்களிப்பையும், பிரதான நீர் மின்சார நிலையங்கள் 21 சதவீதத்தையும், எண்ணெய் அனல் மின் நிலையங்கள் 38 சதவீதத்தையும் பங்களிப்பாக வழங்கியுள்ளது.
சுயாதீன மின் உற்பத்தியாளர்களால் இயக்கப்படும் அனல் மின் நிலையங்கள் அல்லது எண்ணெயிலிருந்து அனல் மின் தயாரிக்கும் தனியார் துறையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரை மொத்த மின்சார உற்பத்தியில் 25 சதவீதமாகவே இருந்தது. அதே நேரத்தில் இலங்கை மின்சார வாரியத்தால் இயக்கப்படும் எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்கள் 13 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக, தரவுகள் காட்டுகிறது.

2020 ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையான மாதங்களில் இரவுநேர மின்சாரத் தேவைகளுக்கு, அதிகபட்ச உச்ச மின்சார தேவை இரவுநேர உற்பத்தியளவு 2020 மார்ச் 11 அன்று பதிவாகியுள்ளது. அது, 2,717.50 மெகாவாட் ஆகும்.
2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நீர்த்தேக்க அளவுகள் கீழே காட்டப்பட்டுள்ளன: