
இலங்கை ஆரம்ப காலம் தொட்டே நீண்டதொரு வரலாறு கொண்ட நாடென்பது நாம் அறிந்ததே. அதில் கலாசாரம் மற்றும் பொருளாதார வரலாற்றிலும் இலங்கைக்கு முக்கிய இடமுண்டு. கிழக்கு முதல் மேற்கு வரை வியாபித்திருக்கும் கடலுக்கு மத்தியில் இலங்கை அமைந்துள்ளதால் பண்டைய காலங்களில் கடல்வழி மற்றும் தரைவழியினூடாக வர்த்தகம் செய்வதற்கும் ஏதுவான நாடாக இருந்துள்ளதென கல்வெட்டுக்கள், வம்சக்கதைகள், பண்டைய கடித ஆவணங்கள் மற்றும் ஏனைய தொல்பொருளியல் சான்றுகளின் ஊடாக அறிந்து கொள்ளலாம். இச்சான்றுகளில் நாணயங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்தவகையில் நாட்டின் வெவ்வேறு காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குற்றிகள் அந்நாட்டின் வரலாற்றினை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாய் அமைகின்றன.
அனுராதபுர காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்

படஉதவி : cbsl.gov.lk
“கஹபான” இலங்கையின் மிகப்பழைய நாணயமாகும். இவை சமஸ்கிருதத்தில் புராண எனவும் ஆங்கிலத்தில் எல்டிங்கஸ் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. வட்டம், சதுரம், செவ்வகம் மற்றும் நீண்ட செவ்வகம் போன்ற வடிவங்களைக் கொண்டது.

படஉதவி : cbsl.gov.lk
“சுவாஸ்திக நாணயங்கள்” ஒரு பக்கத்தில் நடக்கும் யானையொன்றின் உருவத்தையும், அரை பிறை அடையாளங்கள் மற்றும் தாது கோபுரங்கள் , ஸ்வஸ்திகவையும், சதுரக் கோட்டுடன் கூடிய மூன்று கிளைகளைக் கொண்ட அரச மரமொன்றையும் கொண்டிருக்கும்.

படஉதவி : cbsl.gov.lk
செப்பு உலோகத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பிடரிமயிர் இல்லாத சிங்கக் நாணயங்கள் ஒரு பக்கத்தில் சிங்க உருவமும் மறு பக்கத்தில் சிறிய மூன்று அல்லது நான்கு புள்ளிகழளும் கொண்டு காணப்படும். கி.பி. 3 – 4 ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட இந்நாணயங்கள் அநுராதபுரம் அகழ்வுகளின்போதும் வட பிராந்திய அகழ்வுகளின் போதும் பெருமளவு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

படஉதவி : cbsl.gov.lk
“லக்ஷ்மி பளிங்குக்கல்” கி.மு. 3ஆம் மற்றும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டுகளில் பெண்ணின் உருவத்துடன் கூடிய நாணயங்கள் முதற் தடவையாக இலங்கையில் சுற்றோட்டத்தில் காணப்பட்டன. நாணயங்களின் முகப்பில் காணப்படுகின்ற பெண் லக்ஷ்மி என கருதப்படுகின்றது. ஆதலால் இந்நாணயங்கள் லக்ஷ்மி தகடு நாணயங்கள் என அழைக்கப்படுகின்றன.

படஉதவி : cbsl.gov.lk
“கஹவானு அல்லது லங்கேஸ்வரா நாணயங்கள்” சிங்களவர்களின் தங்க நாணயம் ‘ஹகவனு’ என அறியப்பட்டதுடன் இது கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 8ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இவை தங்க உலோகத்தினாலும் தங்க முலாம் பூசப்பட்டும் தயாரிக்கப்பட்டிருந்ததோடு, பெறுமதிக்கு ஏற்ப “கஹவனு”, “அட் கஹவனு”, “தெஹக” மற்றும்”அக” என்றவாறு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை கப்பல்துறை மத்திய நிலையமாக காணப்பட்டதால் சர்வதேச வர்த்தகத்தின்போது கொடுக்கல் வாங்கலுக்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க, உரோம, சீன, அரேபிய மற்றும் இந்திய நாணயங்கள் பலவும் அநுராதபுரம், மிகிந்தலை, சீகிரியா, குருணாகல், மாத்தறை, அகுருகொட மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk
பொலன்னறுவை முதல் கோட்டை இராச்சியம் வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்
செப்பு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இக்காலத்து நாணயங்களில் அப்போது ஆட்சியிலிருந்த மன்னர்களின் பெயர் அச்சிடப்பட்டிருந்தமை இவற்றில் காணப்பட்ட விஷேட அம்சமாகும். முதன் முதலில் ஆட்சியாளரின் பெயருடன் நாட்டில் வெளியிடப்பட்ட நாணயங்களும் இக்காலங்களில் தான் என்கிறது வரலாறு.

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk
சோழர்களின் ஆதிக்கத்தை முறியடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததுடன் பொலன்னறுவை இராசதானியை ஆரம்பித்து வைத்த முதலாவது விஜயபாகு மன்னரும் ‘கஹவனு’ நாணயங்களை வெளியிட்டுள்ளார். அவர் நாணயங்களை தயாரிக்கின்றபோது அவற்றின் மேல் தமது பெரையும் பொறித்துள்ளார். இதன்படி நாணயங்களில் தமது பெயரைப் பொறித்து அவற்றை வெளியிட்ட முதலாவது சிங்கள மன்னர் முதலாவது விஜயபாகு மன்னராவார். அந்த நாணயம் ‘மஸ்ஸ’ என அழைக்கப்பட்டுள்ளது.
தம்பதெனிய காலத்து நாணயங்கள்

படஉதவி : cbsl.gov.lk
இக்காலத்து நாணயங்களில் உள்ளடங்கியுள்ள உருவப் படங்கள் அநேகமாக அநுராதபுர காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களை ஒத்தவையாகக் காணப்படுகின்றன. நாணயத்தின் ஒரு பக்கத்தில்ஆடை ஒரு மனிதன் வலதுபுறம் நோக்கியவாறு உருவமொன்று பொறிக்கப்பட்டுள்ளது. செப்பினால் தயாரிக்கப்பட்ட ‘மஸ்ஸ’ நாணயத்திலும் அதே உருவத்தைக் காணக்கூடியதாக உள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் அமர்ந்த நிலையிலுள்ள ஒரு உருவம் காணப்படுகின்றது. அதேபோன்று நாணயத்தின் இருபுறத்திலும் பல்வேறு விதத்திலான அடையாளங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன.
கண்டிய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் ‘ரிதி (மஸ்ஸ)’ மற்றும் ‘பணம’ எனப்படும் வெள்ளியினாலான இரண்டு நாணய வகைகள் பயன்பாட்டுக்கு வந்தன. ஆயினும் காலமளவில் ‘ரன் பணம’ மற்றும் ‘ரன் மஸ்ஸ’ ஆகிய தங்க நாணயங்கள் ஓரளவு பயன்பாட்டில் காணப்பட்டன. அதன் பின்னர் ‘தங்கம் மஸ்ஸ’, ‘பொடி தங்கம்’, ‘ரிதிய’ ஆகிய நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய வராக நாணயங்கள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டது.
ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்



ஒல்லாந்தர் காலத்தில் கொடுக்கல் வாங்கல்களின்போது அதிகமாக ‘தொய்த்து’ நாணயங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மிகச் சிறிய செப்பு நாணய வகையாகும். அளவில் சிறியதாக காணப்பட்டதால் பெருந் தொகையான பணபரிமாற்றத்துக்கு கடினமாக இருந்துள்ளது. இந்த வசதியீனத்திலிருந்து மீள்வதற்கு 1737 ஆம் ஆண்டளவில் ‘தொய்த்து’ நாணயங்களை 8, 16, 24 வீதம் நாணயக் கோர்வைகளாக சிங்களவர்களின் ‘துட்டு’ 2, 4, 6 பெறுமதியினைக் கொண்டதாக கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk
இலங்கையின் முதலாவது நாணயத் தாள் 1785 மே மாதம் 10 ஆம் திகதி அச்சிடப்பட்டுள்ளது. அந்த முதலாவது நாணயத் தாள் தொகுதி பதாக 50, 100, 500, மற்றும் 1000 பெறுமதிகளைக் கொண்டிருந்தது.
பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk
இலங்கையின் கொடுக்கல்வாங்கல்களுக்காக ஆங்கிலேயர்கள் முதலில் இரண்டு வகை நாணயங்களைப் பயன்படுத்தினர். அதில் ஒன்று, அப்போது அவர்கள் சென்னையில் வார்த்த ‘தாரகை பகோடி’ எனும் தங்க நாணயமாகும். அது 45 பணத்துக்கு அல்லது 180 சிங்கள துட்டுக்கு சமமாகக் காணப்பட்டது.

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk

படஉதவி : cbsl.gov.lk
பிரித்தானியர் ஆட்சியில் பார்தீன், பிரித்தானிய துட்டு, பதாக (வெள்ளி நாணயம்), பணம், இந்திய ரூபாய், அரை ரூபா, கால் ரூபாய் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர ரூபாவைவிடக் குறைந்த பெறுமதியிலான நாணயங்களாக ஒரு சதம், இரண்டு சதம், ஐந்து சதம், பத்து சதம், இருபத்தைந்து சதம், ஐம்பது சதம் ஆகியனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் பாவனையிலிருந்த பழைய நாணய தாள்கள்

படஉதவி : blogspot.com
இலங்கையில் தற்போது சுற்றோட்டத்திலுள்ள பழைய நாணயத் தாள்கள்

படஉதவி : blogspot.com
இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள புதிய நாணயத் தாள்கள்.

படஉதவி : cbsl.gov.lk