Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பழங்கால இந்தியாவின் அறிவியல் கண்டுபிடிப்புகள்

தக்ஷீலா மற்றும் நாளன்தா பல்கலைக்கழகங்கள் உலகளவில் மிகப்பெரிய கல்விச்சாலைகளாக பழங்காலத்தில் விளங்கின. இன்றைய பாகிஸ்தான் நாட்டில் அமைந்த தக்ஷீலா பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் சுமார் பத்தாயிரம் மாணவர்கள் பயின்று வந்தனர். சாணக்யர் “அர்த்தசாஸ்திரம்” எனும் நூலை இங்குதான் தோற்றுவித்தார்.

நளன்தா பல்கலைக்கழகம், இந்தியாவின் இன்றைய பீகார் என்றழைக்கப்படும் மகத சாம்ஜராஜ்ஜியத்தில், குப்தர்கள் வரிசையில் சக்ராதித்யா என்பவரால் 5 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டு 12 ஆம் நூற்றாண்டு வரை சிறப்பாக நடத்தப்பட்டது. – ancientxworld.files.wordpress.com

நளன்தா பல்கலைக்கழகம், இந்தியாவின் இன்றைய பீகார் என்றழைக்கப்படும் மகத சாம்ஜராஜ்ஜியத்தில், குப்தர்கள் வரிசையில் சக்ராதித்யா என்பவரால் 5 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டு 12 ஆம் நூற்றாண்டு வரை சிறப்பாக நடத்தப்பட்டது. வேதம், இலக்கணம், இலக்கியம், தத்துவம், ஆயுர்வேதம், விவசாயம், அறுவை சிகிச்சை, அரசியல், வில்வித்தை என சுமார் 64 வகையான துறைகளில் இவ்விரு பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கல்வி பயில்விக்கபட்டது. உலகம் முழுவதும் இருந்து வந்த மாணவர்கள் இங்கு கல்வி பயின்றதாக கூறப்படுகிறது.

கல்வித்துறையில் மட்டுமல்லாது கண்டுபிடிப்புகளிலும் இந்தியர்களுக்கு பெரும்பங்கு உண்டு. அறிவியல், கலை, ஜோதிடம், கணிதம், வானவியல் என்று பல துறையில் இந்தியர்களின் பங்களிப்பு இருந்துள்ளது.

இந்தியர்களின் கண்டுபிடிப்புகள்:

முதன்முதலில் இரும்புத்தூண் டில்லியில் இரண்டாம் குப்தர் என்றழைக்கப்படும் விக்ரமாதித்யர் காலத்தில் கட்டப்பட்டது. அன்றைய கட்டிட வல்லுனர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் மத்தியில் அது பெரும் வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. சிந்து சமவெளி நாகரீகத்தில் மோகன்ஜதாரோவில்தான் படிகட்டுகளுடன் உடைய கிணறுகள் மற்றும் நீச்சல் குளங்கள் அமைக்கபட்டன. நவீன கழிப்பறைகள் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவின் வீடுகளில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

முதன்முதலில் இரும்புத்தூண் டில்லியில் இரண்டாம் குப்தர் என்றழைக்கப்படும் விக்ரமாதித்யர் காலத்தில் கட்டப்பட்டது. அன்றைய கட்டிட வல்லுனர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் மத்தியில் அது பெரும் வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. – vilagtitkai.com

பழங்கால செம்பு ஸ்கேல், தராசு மற்றும் எடை கற்கள் ஹரப்பாவில் பயன்பாட்டில் இருந்ததாம். இங்கிருந்து இந்த முறை பெர்சியா மற்றும் மத்திய ஆசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. நாட்காட்டியுடன் கூடிய கடிகாரங்கள் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆறாம் நூற்றாண்டில் சீனாவில் இவ்வகை கடிகாரங்கள் காணப்பட்டதாம். ஆனால் அவைகளில் தேவனகிரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதால் அவற்றை புத்த பிக்குகள் இங்கிருந்து வாங்கிச் சென்றிருக்கலாம் என்கின்றர்.

உருக்கு இரும்புகள், இரும்புத்தார், மற்றும் கண்ணாடிகள் முதலியவற்றை கலந்து தென்னிந்தியாவில் கி.பி. 200 களில் தயாரிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றடைந்து விட்டது. வளையும் தன்மையுடைய இரும்பு, சேர மன்னர்களின் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாம். இதை பயன்படுத்தி போர்வாள் மற்றும் கத்தி முதலியவைகள் தயாரிக்கப்பட்டதாக தமிழ் இலக்கியங்களில் ஆதாரங்கள் உள்ளன. சேர மன்னர்கள் இவைகளை ரோம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். இது தமேஸ்கஸ் இரும்பு என்றவர்களால் அழைக்கபட்டிருகிறது.

எரிக்கப்பட்ட எலும்புகள், தார், நிலக்கரி மற்றும் இதர பொருள்களை கொண்டு மை தயாரித்து மாசி என பெயரிட்டுள்ளனர். பழங்கால ஆவணங்களில் சிலவற்றில் இதன் பயன்பாட்டை நம்மால் காணமுடிகிறது. – amazonaws.com

ஹரப்பா நாகரீகத்தில் ஏர் உளும் கலப்பைகள் பயன்பாட்டில் இருந்திருகின்றன. நாலாம் நூற்றாண்டு முதல் இந்தியர்கள் “மை” தயாரித்து அவைகளை பேனாக்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். எரிக்கப்பட்ட எலும்புகள், தார், நிலக்கரி மற்றும் இதர பொருள்களை கொண்டு மை தயாரித்து மாசி என பெயரிட்டுள்ளனர். பழங்கால ஆவணங்களில் சிலவற்றில் இதன் பயன்பாட்டை நம்மால் காணமுடிகிறது. சாம்போ என்ற ஹிந்தி வார்த்தையில் இருந்துதான் “சாம்பூ” என்ற ஆங்கில வார்த்தை உதயமாகி இருக்கிறது. சீயக்காய், செம்பருத்தி இலைகள் மற்றும் மூலிகைகள் கொன்டு 1762 முதலே இந்தியாவில் இது பயன்பாட்டில் இருந்திருக்கிறது. சீக்கியத்தை தோற்றுவித்த குருநானக் இவற்றை இந்தியர்கள் வணிகம் செய்ததைப்  பதிவிட்டுள்ளார்.

சதுரங்க விளையாட்டில் முன்னோடிகளாக குப்தர்கள் அறியப்படுள்ளனர். பழங்கால பெர்சியர்கள் மற்றும் அரேபியர்கள் குறிப்புகளில் இவை இங்கிருந்து சென்றவை என்று காணமுடிகிறது. வைகுண்ட பாளி என்றழைக்கபட்ட “பாம்பு மற்றும் ஏணி விளையாட்டு,” போர் பயிற்சிக்காக தோற்றுவிக்கப்பட்ட கபடி, 6ஆம் நூற்றாண்டில் மொகலாயர்கள் சாம்ராஜ்ஜியத்தில் அக்பர் விளையாடிய தாயம் என்றழைக்கபட்ட தாயக்கரம் முதலியவை இந்தியாவில் உருவாகி பிரபலமானவைகள் தான்.

சதுரங்க விளையாட்டில் முன்னோடிகளாக குப்தர்கள் அறியப்படுள்ளனர். பழங்கால பெர்சியர்கள் மற்றும் அரேபியர்கள் குறிப்புகளில் இவை இங்கிருந்து சென்றவை என்று காணமுடிகிறது. – worldchesshof.org

பழங்கால அலங்கார சட்டை பட்டன்கள் சிந்து சமவெளி நாகரீகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்தவைகளாம். இவை ஓடுகள் மற்றும் கடல் பாசி முதலியவைகளால் தயாரித்து சட்டையில் தைக்கப்பட்டது. சாயம் பூசாத நெசவு செய்யப்பட்ட துணிகளில் பூக்களை ஆச்சிட்டு கலியன் என்ற பெயரில் நமது கேராளா மாநிலத்தின் கோழிக்கோட்டில் சுமார் 11 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டில் இருந்திருகிறது. பிற்காலத்தில் அது குஜராத் வரை சென்று ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. சர்க்கா என்றழைக்கப்பட்ட சுழலும் சக்கரங்களை இந்தியர்கள் முதன் முதலில் உருவாக்கியுள்ளனர். கைகளால் மரச்சக்கரங்கள் சுற்றி பருத்தி விதைகளை உடைக்க பயன்படுத்தி உள்ளனர். அஜந்தா குகைகளின் ஓவியங்களில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

பாபிலோனியர்கள் சைபர் பயன்படுத்தும் இடங்களை வெற்றிடமாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பின்பு அதற்கு பதிலாக புள்ளிகளை பயன்படுத்தினர். இவை இரண்டுமே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் கி.பி. 500களில் முதன்முதலில் ஆர்யபட்டா என்பவர் பூஜ்யம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார். தசம பின்னங்கள் இங்கிருந்துதான் உருவாக்கி பரவியது.

இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுர்வேத மற்றும் சித்த மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சைகள் தரப்பட்டுள்ளன. சித்தமருத்துவம் தமிழ்நாட்டு சித்தர்களால் உருவாக்கப்பட்டு சமஸ்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யபட்டுள்ளது. இந்திய மருத்துவர் சுசுத்ரா முதன் முதலில் கண்புரை அறுவை சிகிச்சை தந்துள்ளார். “ஜபமுகி சலகா” என்ற வித்தியாசமான வளைந்த ஊசியை பயன்படுத்தி கண்புரை அகற்றப்பட்டது.

இந்திய மருத்துவர் சுசுத்ரா முதன் முதலில் கண்புரை அறுவை சிகிச்சை தந்துள்ளார். “ஜபமுகி சலகா” என்ற வித்தியாசமான வளைந்த ஊசியை பயன்படுத்தி கண்புரை அகற்றப்பட்டது. – chakranews.com

உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இங்குவந்து இதை பயின்று சென்றனர். தொழுநோய்க்கான சிகிச்சை குறிப்புகள் அதர்வன வேதத்தில் காணப்படுகிறது. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் வைரங்கள் வணிகம் செய்த தகவல் உள்ளது. வைரசுரங்கள் இங்கு அமைக்கபட்ட தகவல்கள் சரிவர கிடைக்கவில்லை.

நாம் கணிதத்தில் பயன்படுத்தும் ட்ரிக்னாமென்றி, பிபநோசி முறைகளை பழங்கால இந்தியர்கள் பயன்படுத்தியதர்கான ஆதாரங்கள் நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டு நூல்களிலும் உள்ளன. பழங்கால கண்டுபிடிப்புகளின் குறிப்புக்கள் அழிந்து உருமாறி அவை வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் திரும்பி நமது உபயோகத்திற்கு வந்திருக்கலாம். சிந்து சமவெளி மக்களின் அளப்பரிய திறமை என்றைக்கும் போற்றி பாரட்டக்கூடியதே!

Related Articles