Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சோழர் கோயில்களின் தனித்தன்மை | #தமிழ்பாரம்பர்யமாதம்

சரியாக பகுத்துப்பார்த்தால் சேர அரசர்களும், சோழ அரசர்களும், பாண்டிய அரசர்களும் மற்றும் பல்லவர்களுமே சிற்பக்கலையையும், பெரிய கோயிலகளையும், அரண்மனைகளையும் கட்டி பாதுகாத்து வந்தனர். இயந்திரங்களின் ஆதிக்கம் துளி கூட இல்லாத அந்த சங்க காலத்தில் இவர்கள் கட்டிய அனைத்து கட்டிடங்களும் மனிதர்களின் உழைப்பாளே கட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அரச வம்சத்திற்கும் ஒவ்வொரு விதமான கட்டிடக்கலை இருந்தது. அதில் சோழர்கள் கட்டிய கோயில்களின் அழகினையும் சிறப்பினையும் பற்றி இந்தக் கட்டுரையில் காண இருக்கிறோம்.

தென்னிந்திய அரசர்கள்

தென்னிந்தியாவை மன்னர் ஆட்சி காலத்தில் பரவலாக ஆண்ட மன்னர்கள் என்று எடுத்துக்க்கொண்டால் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள். ஆங்காங்கே குறு நிலங்களை ஆண்டு வந்தனர் நாயக்கர்கள். ஆனால் சங்க காலம் தொட்டு தென்னிந்திய நிலப்பரப்பை ஆண்டு வந்த முதன்மையான அரசர்கள் என்று எடுத்துக்கொண்டால் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மட்டும் தான். நாயக்கர்களும் இன்னபிற சிற்றரசர்களும் கோலோச்சியதே 16 ஆம் நூற்றாண்டில் தான்.

அதாவது, வாஸ்கோட காமா 15 ஆம் நூற்றாண்டில் கோழிக்கோட்டில் காலைப்பதித்து, இந்திய சமவெளிக்கான நிலப்பரப்பை வகுத்து 10 முதல் 15 ஆண்டுகள் கழித்து தான் இவர்கள் சிறிது கோலோச்ச துவங்கினர். இருப்பினும் தான் வைத்திருந்த சிறிய படையைக் கொண்டு ஆண்டை நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் அவர்கள் பெரிதாக செயல்படாமல் தனது அரசாட்சியின் நிர்வாகத்தை சரிவர செய்ததுடன், பழங்கால கட்டிடக்கலைகளையும் பாதுகாத்து வந்தனர்.

Rajendra cholan and Karikalan (Pic: cliparts-and-images-of-india.blogspot.in/facts4u.co.in)

சோழர்களின் முதன்மையான கோயில் தில்லை

சோழர்களது கோயில்களிலேயே மிகவும் தொன்மையனது சிதம்பரம் நகரில் உள்ள தில்லை நடராஜர் திருக்கோயில் தான். தில்லை மரங்கள் படர்ந்து கொண்டைருக்கும் நிலப்பரப்பில் ஆடலரசர் அவதாரத்தில் சிவனுக்கு கோயில் அமைக்கப்பட்டதால் அது தில்லை  நடராஜர் கோயில் என்று பெயர் பெற்றது. இந்த கோயிலை சுற்றி உள்ள கட்டிடங்களின் வயதே 500 ஆண்டுகள் முதல் 600 ஆண்டுகள் இருக்கும். பெரும் பாராங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த கோயிலை கட்டி முடிப்பதற்கே பல வருடங்கள் ஆகியிருக்கும் என்கின்றனர் கட்டிடக்கலை வல்லுனர்கள். இந்த கோயில் எத்தனை வருடம் தொன்மையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கூட சரியாக கணிக்க முடியவில்லை. எப்படியும் ஈராயிரம் ஆண்டுகள் இருக்கும் என்கின்றது ஒரு சில குறிப்புகள். 3500 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கூறிகிறார்கள் சிலர். பராந்தக சோழ மன்னன் இந்த கோயிலுக்கு தங்கத்தில் விமானம் அன்பளிப்பாக வழங்கியதாக ஒரு குறிப்பு கூறுகின்றது. மேலும் சிதம்பரம் திருக்கோயிலில் பல சோழ அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு விஞ்ஞானப் பூர்வ தகவல் என்னவென்றால், பொதுவாக சிவபெருமான் இடது கால் தூக்கி வலது காலை பூமி மீது வைத்திருப்பார். இந்த கோயிலில் இருக்கும் நடராஜரின் வலது கால் பதிந்திருக்கும் தடம் தான் பூமியின் சரியான மையப்பகுதி என்பது தான். கணிதம், நிலவியல், பொறியியல் போன்ற துறைகளுக்காக பலகலைக்கழகங்கள் இல்லாத காலத்திலேயே அன்று இருந்த ஒலைச்சுவடிக் கல்வியில் படித்த மேதைகளின் அறிவு அவ்வாறு அங்க சிவனுக்கு கோயில் எழுப்பும் வண்ணம் அமைந்த தன்மை நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் தில்லை நடராஜர் கோயில் ஆகாயத்திற்கான ஸ்தலமாக கருதப்படுகிறது. அதனாலேயே இந்த கோயிலில் இருக்கும் சிலையை ஆகாச லிங்கம்(ஆகாய லிங்கம்) என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோயிலில் நான்கு வாசல்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் கோபுரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வண்ணம் இதன் கட்டிடக் கலை அமைந்திருக்கிறது. சோழர்களின் கட்டிடக்கலையை இந்த கோயிலின் பல இடங்களில் கண்டு புரிந்து கொள்ள முடியும். தஞ்சை பெரிய கோயிலையும், கங்கை கொண்ட சோழபுரத்தையும் அறநிலைத் துறை பாதுகாப்பது போன்று இந்த கோயிலையும் பாதுகாப்பது, இந்த விஞ்ஞானப் பூர்வமான கோயிலுக்கு கிடைத்த மரியாதை என்றாலும் இந்த கோயிலுக்கே உடைய பல விடயங்கள் இடைப்பட்ட காலத்தில் (200 முதல் 300 வருடங்களுக்கு முற்பட்ட காலம்) பாதுகாக்க தவறியதே இந்த கோயிலின் தொன்மை பற்றி சரியான குறிப்பு இல்லாததற்கு காரணம்.

Thillai Gopuram (Pic: tamilnadu-favtourism.blogspot.in)

தஞ்சை பெரியக்கோயில்

சோழர்களின் குறிப்பிடும்படியான கோயில்கள் என்று பார்த்தால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில். 1003 ஆம் ஆண்டு துவங்கி 1010 ஆம் ஆண்டு முடிய 7 ஆண்டுகளில் இயந்திரங்கள் இல்லாமல் வெறும் மனிதர்களைக் கொண்டே கட்டி முடிக்கப்ப்ட்ட கோயில் அது. இந்தியாவின் பாரம்பரியத்தை குறிக்கின்ற 36 இடங்களை UNESCO வகுத்து வெளியிட்டுள்ளது. அதி தஞ்சை பெர்ய கோயில் என்று அழைக்கப்படுகிற பிரகதீஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்த கோயிலின் மாதிரியே கங்கைகொண்ட சோழபுரம் கோயில் என்பது சோழர்களில் கோயில் வரலாற்றில் ஒரு முக்கிய சிறப்பு. ராஜ ராஜ சோழன் 1 அவர்களால் கட்டப்பட்டதாக சொல்லும் இந்த கோயிலின் கோபுரத்தை வடிவமைக்க தேவைப்படும் பெரிய கற்களை கங்கை கொண்ட சோழபுரம் கோயிலிலிருந்து பாளம் அமைத்து ரதங்களையும் யானைகலையும் கொண்டு எடுத்து வந்து வடிவமைத்தனராம்.

Tanjore Temple (Pic: templepurohit.com)

சைவம் வளர்த்த சோழர்கள்

சோழர்கள் சைவம் வளர்த்தவர்கள் என்பதால் அவர்கள் சிவனுக்கென்றே கோயில் நிறுவினர். அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதில் தாராசுரம் ஐராவதீஸ்வரர்  கோயிலும், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரர் கோயில்கள் சிறந்த சான்றுகள் ஆகும். முதலாம் இராஜராஜனுக்கு முந்தைய சோழர் காலக் கட்டிடங்கள் ஏனோ பெரியவையாகவோ நுட்பங்கள் நிறைந்ததாகவோ அமையவில்லை. எனினும் இராஜரஜன் காலத்திலும் அவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும் தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற அளவிற் பெரிய மற்றும் சிற்பக் கலையில் சிறந்த கோயில்கள் தோன்ற ஆரம்பித்தன.

இந்த குறிப்பிற்கு ஏற்றவாறு தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட காலத்திலும் அதற்கு பிறகும் கட்டப்பட்ட கோயில்களின் சிற்பக்கலையின் நுணுக்கங்கள் சற்றே பிரம்மைக்க வைக்கின்றது என்பதில் ஐயமில்லை.

அதற்கு ஒரு தேரை குதுரைகளை இழுத்துக்கொண்டு செல்லும் வடிவத்தில் அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயிலும், பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்டிசியளிக்கும், கரூர் கல்யாண பிரக்தீஸ்வரர் கோயிலும் சிறந்த உதாரணமாகும்.  இந்தியாவில் உள்ள கோயில் குளங்களிலேயே பெரிய கோயில் குளத்தைக் கொண்ட கோயிலைக் கட்டிய பெருமையும் சோழர்களையே சாரும். மன்னார்குடி, இராஜகோபால்சாமி திருக்கோயிலே அது. இராஜராஜசோழன் காலத்திலிருந்து கோயில்களை பராமரிக்கின்ற பணிகளும் சிறப்பாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதே காலம் தொட்டு பல்லவர்களின் சிற்பக்கலையைப் பார்த்தும் சோழர் சாம்ராஜ்ஜியத்தின் சிற்பிகள், சிற்பக்கலையில் பல நுணுக்கங்களை கற்று, தனது கட்டிட வடிவமைப்பில் அத்தகைய தனித்திறன் களை வெளிப்படுத்தியிருக்கின்ரனர்.

Airavatheeswarar Temple (Pic: tamil.nativeplanet.com)

அந்திய ரங்கனின் திருக்கோயில்

இரங்கநாதருக்கென்று காவிரி நதிக் கரையினில் எழுப்பப்பட்ட மூன்று இரங்கநாத ஸ்தலங்களில் ஆதி ரங்கா, மத்திய ரங்கா திருக்கோயில்களைத் தவிற அந்திய ரங்கா கோயிலான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைக் கட்டிய பெருமை சோழர்களையே சாரும். ஆனால் அதே கோயிலில் ஹொய்சால, பாண்டிய, சோழர்கள் மற்றும் விஜயநகர வம்சத்தின் கையெழுத்துப் பிரதிகள் தோன்றுவதால், சோழர்களையும் தாண்டி அந்த கோயிலின் கட்டிடக் கலைகலையை மராமத்து செய்த இன்னபிற சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஸ்ரீரங்க கோயிலை வடிவமைத்ததின் சிறப்புகள் சாரும். ஆனால் இந்த கோயில் கோபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு சிறப்பு வடிவம் சேர்த்தவர்கள் கர்னாடக மாநிலத்திற்கு உட்பட்ட நிலங்களை 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 நூற்றாண்டு பாதி முடிய ஆண்ட ஹொய்சால அரசர்களையே சாரும். திரிரங்க கோயில்கள் என்று அழைக்கப்படும் மூன்று இரங்கநாதரின் தளங்களிலும் கோபுர சிறப்க்க்லையில் ஒற்றுமையைக் காணமுடியும். இன்றும் வைகுண்ட ஏகாதசி அன்றி சொர்க வாசல் திறக்கப்படுகின்ற நேரத்தில் கோயிலைச் சுற்றி மழை பொழியும் அதிசயம் நிகழ்கிறது.

Srirangam Temple (Pic: srirangam.org)

திருவையாறு மற்றும் கும்பேஸ்வரர்

சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வன்மிகி நாதருக்கென்று ஒரு சந்நிதியும் தியாகராஜருக்கென்று ஒரு சந்நிதியும் இருக்கும். இங்கே சிவனுக்கென்று இருப்பது லிங்கம் அல்ல ஒரு புற்று மட்டும் தான். மேலும் 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயத்திமும் சிவனுக்கென்று உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.

Aathi Kumbeswarar (Pic: wikipedia.org)

நவகிரகக் கோயில்கள்

முன்னோர்கள் செய்த பாவங்களே நாம் தற்போது படும் துன்பங்களுக்கு காரணம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு கருதப்படும் இந்து மதத்திற்கே உரிய நவகிரக ஸ்தலங்களும் சோழர்களால் கட்டப்பட்டது தான். சூரியனுக்குரிய நவகிரகஸ்தலமான சூர்யனார் கோயில் குலோத்துங்க சோழதேவனால் கட்டப்பட்டது, சந்திர நவகிரகஸ்தலமான திங்களூர் கைலசநாதர் திருக்கோயிலும் சோழர்களால் கட்டப்பட்டது. அங்காரனுக்கு வைத்தீஸ்வரர் கோயிலும், பூத நவகிரகஸ்தலமாக திருவென்காட்டில்சுவேதாரண்யேசுவரர் கோயிலையும், குருவுக்கு ஆலங்குடியிலும், சுக்ரனுக்கு கஞ்சனூரிலும், சனிபகவானுக்கு திருநள்ளாரிலும், ராகுவுக்கு திரு நாகேஸ்வரத்திலும் மற்றும் கேதுவிற்கு கீழ்பெரும்பாளத்திலும் திருக்கோயில் எழுப்பியவர்கள் சோழர்களே.

Navagraha Maps (Pic: jawaman.blogspot.in)

பேரூர் பட்டீஸ்வரர்

சோழர் கட்டிய கோயில்களில் மற்றொரு சிறப்பு வாய்ந்த கோயில்,. கோவைக்கு அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இந்த திருக்கோயிலை கட்டியவர் கரிகாலச் சோழன் ஆவார். இந்த கோயிலின் சிற்பங்களையும் சுந்தரர், வந்து தேவாரம் பாடிய இத்திருக்கோயிலையும், இக்கோயிலுக்கேயுரிய பிரதான உடைமைகளையும் பராமரித்த பெருமையும் ஹொய்சலர்களையே சாரும். காவிரியின் கிளை நதியான நொய்யல் நதிக்கரையிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோயில் கோவை மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சிவன் கோயில்களில் இது முதன்மையானது. ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் எந்த சிறிய சிதைவும் ஏற்படாமல் இருக்கும் ஒரே சங்க கால கோயில் இதுவாகத்தான் இருக்கமுடியும். பேரூர் கல்வெட்டுகள் மற்றும் கோவிலில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ள இலக்கியங்களில் கற்பனை இலக்கியச்சுவை, பொருட்சுவை தத்துவக்கருத்து, வழிபாடு ஆகியவை பரவிக்கிடக்கின்றன.

Perur Patteeswarar (Pic: wikipedia.org)

ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கிழக்கு பார்த்த வாசல். ராஜகோபுரத்தை அடுத்துள்ள பல தூண்கள் மிகுந்த கலையம்சமுள்ள சிறபங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் 63 நாயன்மார்களின் உருவங்களும் கோவிலின் தல் வரலாற்றை கூறும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. சோழர்களின் கட்டிடக்கலை வலிமையானது என்பதற்கு 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இன்று வரை வலிமையானதாக நிற்கும் கல்லணையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது மட்டுமா இன்னும் குறிப்பிடாத பல கோயில்கள் உள்ளன. வாய்ப்பிருப்பின் அடுத்த கட்டுரையில் அவைகளைப் பற்றி குறிப்பிடுகிறேன்.

Web Title : Temples of Cholas.

Featured Image Credit : sjoneall.net

Related Articles