Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இந்திய நாணயப் பிரச்சினை சுற்றுலாப்பயணிகளில் தாக்கம் செலுத்துமா?

கடந்த வருடத்தில் இந்தியாவில் அறிவிப்பு செய்யப்பட்ட பணபரிவர்த்தனை கட்டுப்பாடும், சில பணத்தாள்களின் பயன்பாடு செல்லுபடியாகாது என்கிற அறிவிப்பும் ஐம்பது நாட்களை தாண்டி இன்றுவரை மிகப்பெரும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் ஒட்டுமொத்த பணபரிவர்த்தனையுமே சீராக, மேலும் மூன்று தொடக்கம் ஆறுமாத காலம் செல்லக்கூடும் என மத்தியவங்கி அறிவித்துள்ளது.

(ftnnews.com)

இந்தியா நோக்கி பயணிப்பவர்கள் பணப்பிரச்சனையை எதிர்கொள்ள எவ்வாறான தயார்படுத்தல்களுடன் செல்லவேண்டும் என சில குறிப்புக்கள் (ftnnews.com)

இப்படியான நிலையில், இந்தியாவின் சென்னைக்கு மார்கழியில் சென்றே ஆகவேண்டிய பயண ஒழுங்கை மூன்று மாதங்களுக்கு முன்பே தயார்செய்துவிட்டு யோசித்துகொண்டிருந்தேன். சாதாரணமாக, இந்தியாவுக்கு செல்லும்போது, இலங்கையிலேயே ரூபா நோட்டுக்களை நியாயமான முறையில் இந்திய பணமாக மாற்றிக்கொண்டு செல்லமுடியும். ஆனால், இம்முறை புதிய பணத்தாள்களின் வருகை அதனை தலைகீழாக மாற்றியிருந்தது. குறிப்பாக, சந்தையின் பணப்பரிமாற்றல் பெறுமதியிலும் பார்க்க, மோசமான பெறுதியிலேயே பணப்பரிமாற்றங்கள் நடந்துகொண்டு இருந்தன. அதிலும், இணைத்யதளங்கள் யாவும் ஒரு இந்திய ரூபாய் இலங்கையின் நாணய பெறுமதியில் 2.20/- என்கிற போதிலும், சந்தையில் அது 2.60/- தொடக்கம் 3/-வரை சென்று கொண்டிருந்தது (இலங்கை பணத்தை வழங்கி, இந்திய பணத்தை பெற மட்டுமே இந்த பணப்பெறுமதி பொருத்தமானது). அதிலும், பணப்பரிமாற்றத்தில் இரண்டாயிரம் ரூபாய் இந்தியாவின் புதிய நாணயத்தாள்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. குறைவான தாள்களை பெற்றுக்கொள்ளவேண்டுமெனில் (100/-, 50/- நாணயத்தாள்கள்) அதற்கான இந்திய-இலங்கை பணப்பெறுதி விகிதம் இதனைவிடவும் மோசமானதாக இருந்தது.

இந்தநிலையில், குறைந்தது இந்தியா சென்று அங்குள்ள வங்கிகளிலாவது வெளிநாட்டவர்கள் என்கிறவகையில், பணத்தை மாற்றிக்கொள்ள இலகுவழிமுறைகள் உள்ளதா? என சோதித்து பார்த்தேன். இதற்காக, இந்தியாவில் உள்ள INDIAN OVERSEAS BANKஐ தொடர்பு கொண்டபோது, வெளிநாடுகளிலிருந்து வருகின்ற ஒரு சுற்றுலாப்பயணிக்கு தற்போதைய சட்டத்தின்பிரகாரம், நாளொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய்களையே அதிகபட்சமாக வழங்கமுடியும் என்று கூறிவிட்டார்கள். இப்படியான நிலையில், இந்திய பயணத்தை சுமுகமாக முடித்துத் திரும்பியவன் என்கிற முறையில் இந்தியா நோக்கி பயணிப்பவர்கள் பணப்பிரச்சனையை எதிர்கொள்ள எவ்வாறான தயார்படுத்தல்களுடன் செல்லவேண்டும் என சில குறிப்புக்கள் :-

செய்திகளின் நம்பகத்தன்மை

முதலில், இந்திய ஊடகங்களில் காட்டப்படும் செய்திகளையும், சமூகவலைத்தளங்களில் தன்னிலையாக வெளியிடப்படும் செய்திகளையும் அப்படியே நம்புவதை விட்டுவிடுங்கள். நீங்களே நேரடியாக உண்மையை அறிந்துகொள்ள இணையம்தோறும் பல்வேறு வழிகள் உண்டு. அவற்றின் மூலமாகவும், உங்களுக்கு நம்பகதன்மை கொண்டவர்களிடமும் செய்திகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இணையத்தளங்களின் வழியாக, இந்திய அரசின் சேவை வழங்கல் தொலைபேசி எண்களை அறிந்துகொள்ள முடியும். அவற்றினை பயன்படுத்தி, போதிய தகவல்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இதன்போது, ஊடக செய்திகளுக்கும், உண்மை நிலைக்குமான வேறுபாட்டை நிச்சயம் அறிந்து கொள்வீர்கள்.

இலங்கையிலேயே இந்திய பணம்

நான் மேலே கூறியது போல, இலங்கையில் இந்திய பணத்தை மாற்றிக்கொள்ளுவது நமக்கு இழப்பாகவே உள்ளபோதிலும், மிக சிறிய தொகையை இந்திய நாணயத்தாளாக இலங்கையிலேயே மாற்றிக்கொண்டு செல்லுங்கள். காரணம், குறித்த பணம், குறைந்தது விமானநிலையத்தில் ஏதேனும் தேவை ஏற்படின் அதனை சமாளிக்க பயன்படகூடும். இலங்கை விமானநிலையத்தில் இலங்கை ரூபாயை கொண்டோ அல்லது அமெரிக்க டொலர்களுடனோ சமாளித்துகொள்ள முடிந்தாலும், இந்திய எல்லைப்பரப்புக்குள் எவ்விதமான நிலையிருக்குமென எதிர்பார்க்க முடியாது. எனவே, பாதுகாப்புக்காகவாவது சிறிய தொகையை வைத்திருப்பதே நல்லது. இது பயணத்தடங்களை தவிர்ப்பதுடன், இந்தியாவுக்குள் நுழைந்து, நிலைமைகளை அறிந்து நம்மை திட்டமிட்டுக்கொள்ளும்வரைக்குமாவது உதவியாக அமையும்.

பொது பணத்தை பயன்படுத்தல்

செலவுக்கென திட்டமிட்டு உங்கள் கைகளில் உள்ள மிகுதி பணத்தினை இலங்கையிலிருந்து செல்லும்போதே, அமெரிக்க டொலராக மாற்றிக்கொள்ளுங்கள். அமெரிக்க டொலர் என்பது, சர்வதேச மொழி ஆங்கிலம் போன்றது. பெரும்பான்மையான இடங்களில் கொடுக்கல்,வாங்கல்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருக்கும். அத்துடன், நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் டொலரின் பணப்பெறுமதியானது, நீங்கள் மீண்டும் அமெரிக்க டொலரை இலங்கை பணமாக மாற்றும்போதோ, இந்திய பணமாக மாற்றும்போதோ உங்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தாது. மாறாக, இதனால், மேலதிகமாக பணத்தினையே பெற்றுக்கொள்ள முடியும்.

(newindianexpress.com)

பயணம் செல்ல முன்பு, உங்கள் குறித்த வங்கிக்கு நீங்கள் எந்த நாட்டுக்கு, எத்தனை நாட்கள் பயணப்பட இருக்கிறீர்கள் என அறிவித்து விட்டாலே போதுமானது! அதற்குபின், தாரளமாக உங்கள் கடனட்டைகளை பயன்படுத்திகொள்ள முடியும். (newindianexpress.com)

குறிப்பாக, நான் பயணப்பட்ட சென்னையின் எல்லா இடங்களிலும் சர்வதேச பணப்பரிமாற்ற விகிதத்துக்கு சமனான முறையில் அமெரிக்க டொலர்களை இந்திய பணமாக மாற்றி தருகின்ற நிலையங்கள் இருந்தன. கூகிள் உதவியுடன் அவற்றை கண்டறிந்துகொள்ள முடிவதுடன், இலகுவாக அதிக பணத்தினை அங்கீகாரமிக்க வகையில் இந்திய பணமாகவும் மாற்றிக்கொள்ள முடிகிறது. எனவே, அது தொடர்பில் கவலைகொள்ளவேண்டிய அவசியமில்லை. இவற்றுக்கு மேலதிகமாக, இந்தியாவுக்கு பொருட்களை (குறிப்பாக பெண்கள் தமக்கான ஆடைகள்) கொள்வனவு செய்பவர்களாக இருந்தால், மிகப்பெரும் கடைகளில் கூட, உங்கள் மொத்த பட்டியலையும் (Bill) டொலர் மூலமாகவே செலுத்திவிட முடியும். இதன்போது, அன்றைய தினத்தில் சந்தையில் உள்ள பணப்பெறுமதியினையே பயன்படுத்துகிறார்கள். எனவே, இந்திய பணம் கைகளில் குறைவாக உள்ளது என்கிற நினைப்பையே விட்டுவிடலாம்.

பணமில் கொடுக்கல் வாங்கல்

கையில் அதிக பணத்தினை எடுத்து செல்வது சிக்கலானது என நினைப்பவர்கள் அல்லது பெருந்தொகையை எடுத்து செல்ல விரும்பாதவர்கள் தாராளமாக, கடனட்டை (Credit Card) , வரவட்டை (Debit Card) மூலமாகவும் பணத்தினை எடுத்து செல்லமுடியும். பயணம் செல்ல முன்பு, உங்கள் குறித்த வங்கிக்கு நீங்கள் எந்த நாட்டுக்கு, எத்தனை நாட்கள் பயணப்பட இருக்கிறீர்கள் என அறிவித்து விட்டாலே போதுமானது! அதற்குபின், தாரளமாக உங்கள் கடனட்டைகளை பயன்படுத்திகொள்ள முடியும். (01/01/2016க்கு பின், இலங்கை அரசின் புதிய சட்டங்களுக்கு அமைவாக, இலங்கைக்கு வெளியில் நடக்கின்ற கொடுக்கல் வாங்கல் ஒவ்வன்றிலும், ஒவ்வரு 1,000/-க்கும் 25/- முத்திரை வரியாக அறவிடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.) குறிப்பாக, இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட பெரிய மாற்றமாக இந்த பணமில் கொடுக்கல் வாங்கல்களின் அதிகரிப்பை பார்க்கிறேன். உதாரணமாக, தெருவோரத்தில் பழ விற்பனையில் ஈடுபடுகின்றவர்கள் கூட, கடனட்டைகளை ஏற்கும் இயந்திரங்களையோ அல்லது பணவடிவமற்ற கொடுக்கல் வாங்கல்களையும் (Example – Paytm https://paytm.com/) ஏற்கின்ற நிலையில் உள்ளமை வரவேற்க கூடியதாக உள்ளது. இதன்விளைவாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட, எந்தவித தயக்கமுமின்றி பணமில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட கூடியதாக உள்ளது. .

பொருத்தமான APPSஐ பயன்படுத்தல்

இவற்றுக்கு மேலதிகமாக, இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், நமது அனைத்து தேவைகளையும் நமது தொலைபேசிகளை பயன்படுத்தி இணையத்தின் மூலமாகவே நிகழ்த்திவிட முடியும். குறிப்பாக, தொலைபேசியில் உள்ள பல்வேறு Appsகளும் கூட, இந்திய பயணத்தில் உங்களுக்கு உதவக்கூடும்.

(iamwire.com.s3.amazonaws.com)

சென்னையில், அறிமுகபடுத்தப்பட்டுள்ள மெட்ரோவகை அதிவிரைவு புகையிரத பயணங்களுக்கான நுழைவுச்சீட்டைக் கூட, தொலைபேசி APPSஐ பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ள முடியும். (iamwire.com.s3.amazonaws.com)

குறிப்பாக, நெரிசல்மிகுந்த இந்திய போக்குவரத்தில் வீதியில் பேருந்துக்கும் சரி, முச்சக்கர வண்டிகளுக்கும் காத்திருப்பதைவிட, UBER, OLA , FAST TRACK போன்ற வளர்ந்த போக்குவரத்து வலையமைப்புக்கள் மூலமாக, அவற்றையும் பணமில் கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்திகொள்வதினால், நேரத்தை மீதபடுத்திக்கொள்ள முடியும். சென்னையில், அறிமுகபடுத்தப்பட்டுள்ள மெட்ரோவகை அதிவிரைவு புகையிரத பயணங்களுக்கான நுழைவுச்சீட்டைக் கூட, தொலைபேசி APPSஐ பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ள முடியும். எனவே, பயணம் தொடர்பில் முன்பே திட்டமிட்டுக் கொள்ளக்கூடியது சிறப்பானதாகும்.

இதைவிடவும், உணவினை வீட்டுக்கே கொண்டுவந்து வழங்கும் சேவையினை பெற்றுக்கொள்ளவும், தங்குமிடங்களை கண்டறிந்து அவற்றினை முன்பதிவு செய்யவும், உங்களுடைய பொருட்களை இன்னுமொரு இடத்தில் கொண்டு சேர்க்கவும், இணையவழி பொருட்களை வாங்கவும் என்று பல்வேறு செயல்பாடுகளுக்குமென இந்தியாவுக்கென பிரசித்திபெற்ற தனியான Appsகளும், சர்வதேச பிரபல்யம் பெற்ற Appsகளும் வியாபித்து கிடக்கின்றன. இவற்றினை முறையானவகையில் கண்டறிந்து பயன்படுத்திக்கொள்வதன் மூலமும், பல்வேறு நடைமுறை சிக்கல்களை தவிர்த்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

என்னுடைய பயண அனுபவத்தில், நான் வெளிநாட்டவர் என்பதனாலோ என்னவோ, இந்தியாவில் உள்ளவர்கள் சொல்வதனைபோல, பணத்தினை மாற்றிக்கொள்ளுவதிலோ, பணத்தினை பெற்றுக்கொள்ளுவதிலோ சிக்கல்நிலைமையினை எதிர்கொள்ளவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்தியர்களுக்கே 2,000/-யினை சில்லறையாக மாற்றிக்கொடுக்க கூடிய அளவுக்கு நிலைமை அமைந்திருந்தது. சில வியாபர இடங்களிலும் சரி, உணவகங்களிலும் சரி வெளிநாட்டவர்கள் என தெரியவருகின்றபோது எவ்வித தயக்கமுமின்றி, முன்னுரிமையாக பணத்தினை மாற்றிக்கொடுக்கும் மனிதாபிமானத்தன்மையும் பார்க்க நேரிட்டது.

எனவே, இந்தியாவில் உள்ளவர்களே, என்ன சொல்லி உங்களை பயமுறுத்தினாலும், அவற்றை எல்லாம் கிடப்பில்போட்டுவிட்டு சரியான முறையில் பயணத்தையும், உங்கள் செலவீனங்களையும் திட்டமிட்டுக்கொண்டு சென்றால், எந்தவித பயமுமில்லாமல் முழுமையாக உங்களுடைய சுற்றுலா பயணத்தை இரசித்துகொண்டே, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீளதிரும்பலாம்.

Related Articles