Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

விசா இல்லாமல் வெளிநாடு – போகலாம் வாருங்கள்

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

எப்போதும் பழக்கப்பட்ட ஒரேமாதிரியான வாழ்க்கையை வாழ்வதை விடவும், நல்ல கலகலப்பான வாழ்க்கையை வாழ்வதன் மூலம் வாழ்வை சுவைக்கலாம். இப்படி சந்தோசமாக வாழ்வைக் கழிப்பதற்காக பலரும் பல பொழுதுபோக்கு அம்சங்களைக் கடைப்பிடிக்கின்றனர். சுற்றுலா செல்வதும் இவ்வாறான ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சம்தான். திட்டமிட்டு மேற்கொள்ள நினைக்கும் சுற்றுலா சிலபோது நடைபெறாமல் போவது போன்றே, விமானம் மூலம் மேற்கொள்ளும் சுற்றுலாக்களையும் நினைத்த உடனேயே மேற்கொள்வதில் சிக்கல்கள் வந்துசேரும். ஏனெனில், அதற்கு கடவுச்சீட்டும், வீசாவும் தேவைப்படுகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ கதிர்காம் சென்று வாகனத்துக்கு கடவுளின் காப்புறுதியை பெற்றுக்கொள்வது போன்று, வேறு ஒரு நாட்டுக்கு சுற்றுலா செல்ல முன்னர் நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய இந்த ஆவணங்கள், அதாவது கடவுச்சீட்டு மற்றும் வீசா பற்றியும், வீசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகள் பற்றியும் இந்தக் கட்டுரையில் விளக்கமளிக்க உள்ளோம்.

(webnode.cz)

(webnode.cz)

நமது மலைநாட்டுக்கும், கரையோரத்திற்கும் சென்று வருவதுபோன்றே, பொழுதுபோக்கிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுவரவும் முடியும். பெரும்பாலும் தொழிலுக்காக வெளிநாடு செல்வது பிரபலமாயிருக்கின்றபோதும், கலாசாரங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கும், புதிய சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கும், அனுபவங்களை சேகரித்துக் கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும், கிணற்றிலுள்ள தவளைகள் போன்றல்லாது தீவு மனப்பான்மையை இல்லாமலாக்கி விரிவான, திறந்த மன நிலைமையை உருவாக்கிக்கொள்வதற்கும் வெளிநாட்டு சுற்றுலாக்கள் உதவி புரிகின்றன.

கடவுச்சீட்டு, வீசா என்றால் என்ன?

வெளிநாடொன்றுக்கு செல்வதற்கு முன்னர் உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். உலகில் பரவியுள்ள பயங்கரவாதச் செயல்கள், போதைப் பொருள் உள்ளிட்ட சட்டவிரோத வியாபரங்களிலிருந்து, நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு எல்லா நாடுகளும் எடுக்கும் அடிப்படை முயற்சிகளே இதற்கான காரணமாகும். இந்த நடவடிக்கையை இலகுபடுத்துவதற்காக கடவுச்சீட்டு மற்றும் வீசா என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதன் மூலம் உங்களது பயணம் குறித்து நமது நாடு மொத்தமாக பொறுப்புக்கூறும்.

பாஸ்போட் என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம், துறைமுகத்தை தாண்டிச் செல்லல் அல்லது தகைமை உறுதிப்படுத்தப்பட்டு சித்தி பெற்றுள்ளமை என்பவற்றைக் குறிக்கும். அந்த வகையில், இலகு பயன்பாட்டுக்காக, ஒரு சிறிய புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டில், உங்களது பெயர், உங்களது புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்பட்டு சட்டபூர்வமான அனுமதிப் பத்திரமாகவும், அடையாளத்தை உறுப்படுத்தும் ஆவணமாகவும் அது உங்களுக்கு வழங்கப்படுகின்றது.

வீசா என்பது நாம் ஏன் பயணம் மேற்கொள்கிறோம் என்பதைக் குறிக்கும் ஆவணமாகும். நாம் தொழிலுக்காக பயணிக்கிறோமா? உயர் கல்விக்காக பயணிக்கிறோமா? மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக பயணிக்கிறோமா? என்பன போன்ற தகவல்களும், அதற்காக நாம் செலவழிக்கவுள்ள நாட்களின் எண்ணிக்கையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். பெரும்பாலும், வீசாவும் கடவுச்சீட்டுடன் இணைக்கப்படும்.

வீசா அவசியமற்ற நாடுகள்

உங்களது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்கு உங்களுக்கு காரணங்கள் தேவைப்படுவதில்லை. அதேபோன்று சில நாடுகளுக்கு இடையில் உள்ள நட்புறவு உடன்படிக்கைகள் காரணமாக, முதலீட்டு மற்றும் சுற்றுலா தொழிற்துறையின் பரஸ்பர முன்னேற்றத்துக்காக, குறிப்பிட்டதொரு காலப் பகுதிக்குள் எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாது, சில நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. அதாவது, அந்தக் காலப்பகுதியில் வீசா இல்லாமலேயே சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம். இலங்கைக்கும் இவ்வாறான நட்பு நாடுகள் உள்ளன. ஆனால், பலர் இந்த நாடுகள் குறித்து அறிந்திருப்பதில்லை.

அது தவிர, சுற்றுலா கவர்ச்சியுள்ள, பார்த்து இரசிப்பதற்கான இடங்கள், பொருட்கள் வாங்குவதற்குப் பொருத்தமான சந்தைகள், பொழுதுபோக்கு சூழல்கள் போன்ற விடயங்கள் இல்லாத ஒரு நாட்டுக்கு செல்வது அர்த்தமற்றது. எனவே, சற்று முக்கியத்துவமுள்ள, விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள் குறித்துப் பார்ப்போம்.

  1. சிங்கப்பூர்

63 தீவுகளைக் கொண்டுள்ள சிங்கபூர் குடியரசு, சுற்றுலாத்துறை போன்றே வியாபாரத் துறையிலும் முன்னணியில் இருக்கின்ற ஒரு நாடாகும். எனவே, ஆச்சரியமான விடயங்களை பார்த்து இரசிப்பது போன்றே, சுற்றித் திரிந்து பொருட்களை வாங்குவதற்கும் இது மிகவும் பொருத்தமான இடமாகும்.

(theinnovationenterprise.com)

(theinnovationenterprise.com)

சிங்கப்பூர் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லின் மூலம் சிங்கங்களின் நகரம் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்ற இந்த நாட்டுக்கு, இந்தப் பெயர் வந்த கதை சுவாரஸ்யமானதாகும். அதாவது, சங் நீலா எனப்படும் இந்தப் பிரதேசத்தை கண்டறிந்தவர், சிங்கம் போன்ற ஒரு மிருகத்தை இந்தப் பகுதியில் கண்டிருக்கிறார். அதனாலேயே இந்தப் பெயர் நிலைபெற்றுள்ளது. உண்மையில், அந்தப் பகுதியில் மலாயா புலிகளே இருக்கின்றன. சிங்கங்கள் இந்தப் பகுதியில் இருந்ததில்லை.

அழகான சுற்றுப்புறம், நகரங்களை நிர்மாணிக்கும் கலைஞர்கள் உருவாக்கியுள்ள சொகுசான சூழல் மற்றும் பொழுதை இன்பமாகக் கழிப்பதற்கான பல்வேறு வசதிகளையும் செய்திருக்கின்ற ஒரு நாடு என்ற வகையில், நீங்கள் முதலாவதாகவே தெரிவு செய்ய முடியுமான இந்த நாட்டில், ஒரு மாத காலம் (30 நாட்கள்) விசா இல்லாமல் சுற்றித் திரியலாம்.

  1. இந்தோனேசியா

சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவுகளுடன் பயணிக்க முடியுமான ஒரு நாடான இந்தோனேசியா பச்சை பசேலாக இருப்பதனால், இலங்கையைப் போன்றே அங்கும் இயற்கையை நன்கு அனுபவிக்கலாம். தெற்காசியாவின் மிகப் பெரிய தேசிய பூங்கா, போரோபுதூர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரைகள் போன்று கண்டுகளிக்கக்கூடிய பல இடங்கள் உள்ள இந்த நாட்டில், உலகின் பெரிய பல்லி இனமான கொமொடோ விலங்கும் உள்ளது.

(yallabook.com)

(yallabook.com)

வயல்வெளிகள், நீர் பாயும் விளையாட்டு, பசுமை மற்றும் பௌத்த கலாசாரம் என்பன காரணமாக, இலங்கையில் இருப்பது போன்றே ஓர் உணர்வு இதன் மூலம் கிடைக்கின்றது. இங்கும் 30 நாட்களுக்கு விசா அவசியப்படுவதில்லை.

  1. பஹாமாஸ்

எப்போதும் குளிரான காலநிலையைக் கொண்டிருக்கின்ற பஹாமாஸ் தீவு, எமது இலங்கையைப் போன்றே உலகில் பல சுற்றுலாப் பயணிகள் தமது குளிர்காலத்தை கழிக்கின்ற ஓர் இடமாகும். உள்ளத்தை கொள்ளைகொள்ளும் ஆழமற்ற கடற்கரை, நீர் விளையாட்டுக்கள், லுகெயன் தேசிய பூங்கா மற்றும் உள்நாட்டு தயாரிப்புக்களைக் கொண்ட சந்தைத் தொகுதிகளைக் கொண்டிருக்கின்ற பஹாமாஸ் குடியரசு, நம்மைப் போன்றே ஆரம்பத்தில் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு நாடாகும். இங்கு 03 மாத காலத்துக்கு நாம் விரும்பியதுபோன்று விசா இன்றி சுற்றித் திரியலாம்.

(rackcdn.com)

(rackcdn.com)

ஏனைய நாடுகள்

இந்த நாடுகள் தவிர, விசா இல்லாமல் சுற்றித் திரிய முடியுமான இன்னும் சில நாடுகளும் உள்ளன. இந்தக் கட்டுரையை எழுதும்போது, இலங்கையர்கள் 14 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயயணிக்கக்கூடிய வசதி உள்ளது.

  1. பாபடோஸ் – 06 மாதங்கள்

  2. டொமினிகா – 06 மாதங்கள்

  3. இகுவடோர் – 03 மாதங்கள்

  4. கிரனடா – 03 மாதங்கள்

  5. ஹைட்டி – 03 மாதங்கள்

  6. லெஸொதோ – 03 மாதங்கள்

  7. மைக்ரோனீசியா – 01 மாதம்

  8. செய்ன்ட் கிட்ஸ் என்ட் நெவிஸ்

  9. செய்ன்ட் வின்ஸன்ட் என்ட் க்ரென்டின்ஸ் – 01 மாதம்

  10. வனுவாட்டு – 01 மாதம்

இவற்றில் நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகிறீர்கள்? அங்கு சென்று வரும்போது சுவையான நினைவுகளுடன் வாருங்கள். அத்தோடு, எங்களுக்கு டொபி, சொக்கலேட் கொண்டு வருவதற்கும் மறவாதீர்கள்.

உசாத்துணைகள்:  PassportIndex, Quora, telegraph.co.uk, Wikipedia, BradtGuides, LonelyPlanet, The Smart Local

Related Articles