

இலங்கையில் Volkswagen வாகனத் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு 70 ஆண்டுகளாகிறது.
முதற்தொகுதிக் கார்கள் 1953ல் சுவிற்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்கு பின்னர் அந்நாளில் சிலோன் என்று பெயர் வழக்கிலிருந்த இலங்கைக்கு முதலாவது உத்தியோகப்பூர்வ ‘Volkswagen’ இறக்குமதிகள் Clarence Amerasinghe & Co.Ltd நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன் அவர்களே அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாகவும் இருந்தனர். 1953-1960 வரையான காலப்பகுதியில் இந்நிறுவனம் பெரிதும் வரவேற்புக்குரியதாக காணப்பட்ட ‘Beetle Cars’ வகை Volkswagen கார்கள் 3500ஐ இறக்குமதி செய்தார்கள்.


அவர்களின் 70வது ஆண்டுநிறைவை முன்னிட்டு மே மாதம் 13ம் திகதி கொழும்பில் இலங்கைக்கு இறக்குமதியான முதற்தொகுதி Volkswagen தயாரிப்புகளில் 8 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

புகைப்படம் மற்றும் தகவல் : Roar Media/Akila Jayawardena