அக்டோபர் 31 திகதியுடன் காலாவதியாகிய 7 மில்லியன் Pfizer தடுப்பூசிகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார் இத்துடன் சுகாதார அமைச்சின் தடுப்பூசிகளுக்கான விசேட பிரிவின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு அகற்றப்பட்ட தடுப்பூசிகளின் பெறுமதி 770 மில்லியன் அமெரிக்க டொலர்கள் USD வரை இருக்குமென தோராயமாக மதிப்பிப்பட்டுள்ளது. இலங்கைக்கான கோவிட் தடுப்பூசிகளானது, நன்கொடைகள் மற்றும் பல்வேறு கடன் உதவிகளின் மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டு ஜூலை மாதம், இலங்கையின் சுகாதார அமைச்சானது, உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையின் பேரில் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட Pfizer தடுப்பூசிகளின் காலாவதி திகதியை மூன்று மாதங்களுக்கு நீட்டித்திருந்தது.
அதன் போது 14 மில்லியன் தடுப்பூசிகள் வாங்கப்பட்டு அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த தொகுப்பில் அக்டோபர் 30ம் திகதி வரை, 8.3 மில்லியன் டோஸ்கள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.