குறிப்பு: இந்த வாசிப்பில் தமிழ் மொழியின் வரலாற்றுச் சிறப்பினை சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.
அடிப்படையில் மொழி என்பது கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான கருவி ஆகும். நாவு, உதடு, பல், உள்நாவு, வாய் ஆகியவற்றின் உதவியுடன் ஏற்படுத்தப்படும் ஒலிகளே மொழிக்கான அடிப்படை. இதை ஆங்கிலத்தில் Phonetics என்போம். இந்த ஒலிகள் மட்டுமே ஆரம்பத்தில் மொழியாக இருந்தன. தன் உணர்ச்சிகளையும், மற்றவர்களை அழைப்பதற்குமான சில ஒலிகளைப் பிற உயிரினங்கள் போல தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினான் எம் மூதையன். மொழி பிறந்தது.