ஆண்டாண்டு காலமாக வறுமையின் பிடியில் சிக்கி முன்னேற துடிக்கும் மலையக சமுதாயத்திற்கு ஆரம்ப கால கட்டங்களில், கல்வி என்பதே எட்டாக்கனியாகத்தான் இருந்தது. பல்வேறு தடைகளை தாண்டி இன்று ஓரளவேனும் மலையக தமிழர்கள் தேயிலை தோட்டத்தை விட்டு முன்னேறியிருக்கின்றார்கள் என்றால் அதற்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது! மாணவர்களின் அடிப்படை கல்வியறிவினைத்தாண்டி அவர்களின் கலை திறன்களை வெளிகொனரும் பல்வேறு முயற்சிகளும் இன்று பரவலாக மலையகத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.
அந்தவகையில் ஹட்டன் நகரில் நவரச நிர்த்திய நர்த்தனாலயா எனும் நடனக்கல்லூரி ஒன்றினை நிறுவி அதன் மூலம் மலையக மாணவர்களுக்கு நாட்டியம் கற்பிக்கும் அசிரியர் ராணி சுலோட்சனா அவர்கள் பற்றிய பதிவு தான் இது!