தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.- கன்ஃப்யூஷியஸ்
பிறந்திருக்கும் இவ்வாண்டில், பலரும் தமது வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொண்டு புதிய சிந்தனைகளுடன் புதிய வெளிச்சங்களை காண ஆத்மார்த்தமாக தயார்நிலையில் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தம் சாதனைகளை, வெற்றிகளை கனவு காண்கின்றனர். இவ்வுலகின் ஒவ்வொரு உயிரும் தன் இருப்பை நிலைநாட்ட தினமும் போராடிவேண்டியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் செய்யத்தவறியதை இவ்வாண்டில் செய்துவிடும் முனைப்பு பலருக்கும் இருக்கும். அப்படியான முனைப்புகளை வெற்றிபெறச்செய்திட பின்வரும் எளிய வழிகளை பின்பற்றிப்பாருங்கள்.
அதிசயம் அற்புதம் நடந்து உங்கள் வாழ்வு உற்சாகமாய் மாற இவை அனைத்துமோ, அல்லது சிலதோ, அல்லது இதில் ஏதாவது ஒன்றோ கூட உதவலாம்:
தினசரி இலக்குகளை உருவாக்குங்கள் | Regularly creating Goals
நீங்கள் தினமும் உங்கள் நாளை திட்டமிடும் பழக்கம் கொண்டவரா? அப்படியென்றால் நீங்கள் வெற்றிபெறுவது எளிது. தினமும் நீங்கள் செய்ய நினைக்கும் இலக்குகளை முன்கூட்டியே உருவாக்குங்கள். அதுவே உங்கள் நாளை பயனுள்ளதாக்கும்.
திட்டமிட்டதை செய்து முடியுங்கள் | Getting things done
நீங்கள் முன்கூட்டியே தீர்மானித்த காரியங்களை திட்டமிட்டு செய்து முடியுங்கள். திட்டமிடுவது என்பது ஒரு காரியத்தின் வெற்றிக்கு பயனளிக்கும் மிக உன்னதமான ஒரு கருவியாகும். திட்டமிட்டதை அதன் படியே செய்து முடியுங்கள்.
எப்போதும் நல்ல எண்ணங்களை கொண்டிருங்கள் | Keeping a positive outlook
நீங்கள் உங்களை பற்றி எதிர்மறையாக நினைப்பதுண்டா. என்னால் இது முடியாது, எனக்கு இது தெரியாது, நான் தோற்றுவிடுவேன் என்பது போல சிந்திப்பதுண்டா. முதலில் உங்கள் எண்ணங்களை நேர்மறையான பாசிடிவ் எண்ணங்களாக மாற்றுங்கள். உங்கள் பலம் எதுவென்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
தினமும் பணத்தினை சேமியுங்கள் | Regularly saving money
உங்கள் வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் உங்கள் நம்பிக்கைக்கு பலம் சேர்ப்பது உங்களிடம் இருக்கும் பணமாக இருக்கலாம். செலவிடும் பணத்தில் ஒரு சிறிய தொகையை சேமிக்கப் பழகுங்கள். மாதாந்தம் அல்ல. தினமும். தினசரி ஒரு தொகையை சேமிக்க ஆரம்பியுங்கள். அதிசயம் அற்புதம் தானாகவே நடக்கும்.
அவசியப்படும் அளவிலும் அதிகமாய் செயற்படுங்கள் | Doing more than what’s required
ஒரு காரியத்தை செய்து முடிக்க தீர்மானித்த பின்னர் அதற்கான உங்கள் உழைப்பு என்பது எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை திட்டமிடுங்கள். பின்னர் அதற்கான பல்வேறு முறைகளை பின்பற்றுங்கள். அவசியப்படும் அளவிலும் அதிகம் செயலாற்ற முயற்சிசெய்யுங்கள்.
அதிகம் கேளுங்கள் குறைவாய் பேசுங்கள் | Talking less and listening more
அனுபவமே சிறந்த ஆசான். சிலருக்கு சொந்த அனுபவங்கள் உதவலாம். ஆனால் இன்னும் சிலருக்கோ அடுத்தவர் அனுபவங்கள் உதவலாம். நீங்கள் உங்களை சுற்றியுள்ள சாதனை நாயகர்களின் அனுபவங்களை மட்டுமல்லாது துவண்டு போனவர்களின் அனுபவங்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் கேட்டறிந்து கொள்ளுங்கள். அதிகம் பேசுவதை விட அதிகம் கேட்பது நல்ல மாற்றங்களை தரும்.
சுயத்தை அறியுங்கள் | Knowing you why
நீங்கள் உங்களுடன் பேசுவதை நிறுத்த வேண்டாம். உங்கள் எண்ணங்களுடன் பேசுங்கள். உங்கள் பயத்துடன், சோம்பேறித்தனத்துடன், கோழைத்தனத்துடன் பேசுங்கள். நீங்கள் யாரென உங்கள் உணர்வுகளுக்கு தெரியும். உங்கள் பலம் எது என்பதை நீங்களே கண்டறிய வேண்டும். அதே போல உங்களுக்கு எது சிறப்பாக வருகிறது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
துணிச்சலுடன் இருங்கள் | Not giving fear the upper hand
உங்கள் கனவு என்ன? நீங்கள் யாராக வரவேண்டும் என விரும்புகிறீர்கள். அதை தீர்மானிக்கும் முழு உரிமையும் உங்களுக்கானது. எவரும் அதை தடுக்க முடியாது. அதேபோல நீங்கள் நினைப்பதை நடத்தி முடிக்கவும் யாரும் தடையாக வர அனுமதிக்க கூடாது. வெளியில் உங்கள் எதிரிகளை சமாளிக்க முன்னர், உங்களுக்கு உள்ளே உள்ள பயம் எனும் எதிரியை சமாளிக்க பழகுங்கள். நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீதும் உங்கள் கனவின் மீதும் நம்பிக்கை வையுங்கள். துணிச்சலுடன் வெற்றியை நோக்கி நடக்க ஆரம்பியுங்கள். அதிசயம் அற்புதம் நடந்தே தீரும்.