கலாமின் கனவு – ஒரு தலைசிறந்த ஆசிரியரின் வழிகாட்டல்

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்” என்பது வள்ளுவன் வாக்கு.

மனிதகுலம் உலகில் தோன்றிய காலத்திலிருந்து இன்று இந்த நிமிடம் வரை உலகில் கோடான கோடி மக்கள் பிறந்து, வாழ்ந்து மறைந்தும்விட்டனர். வரலாற்றுப் பக்கங்களில் அவர்களனைவரது பெயர்கள் பெரும்பாலும் புள்ளிவிபரங்களாகவே பதியப்பட்டுள்ளன. புறநடையாக வெகுசிலரே வரலாற்று ஏடுகளில் நித்திய நிலைபெற்றுப் புகழுடல்கொண்டு புவியில் இன்றும் வாழ்கின்றனர்.

ஒரு குடியரசுத் தலைவர், ஒரு தலைசிறந்த விஞ்ஞானி, ஒரு எழுத்தாளர் இப்படிப் பல பரிமாணங்கள் எடுத்தாலும் தன்னை ஓர் ஆசிரியராக அறிமுகப்படுத்திக்கொள்வதையே பெருமையாகக் கருதி, மாணவ சமுதாயத்திற்கு என்றும் ஓர் உந்துசக்தியாய், வழிகாட்டியாய், நண்பனாய் வாழ்ந்துகாட்டி, பலநூறு மாணவர்கள் மத்தியில் ஓர் ஆசிரியராகவே உயிர்நீத்த தலைமகன் கலாநிதி ஆ.ப.ஜெ அப்துல் கலாம் அவர்களின் பிறந்ததினம் இன்று.

தமிழகத்தின் கடைக்கோடியான ராமேசுவரம் தீவில், படகு உரிமையாளரான ஜெயினுலாப்தீன்- ஆஷியம்மா தம்பதியரின் கடைசி மகனாக, 1931, அக். 15-இல் பிறந்தார் ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம். படம் - udayavani.com

தமிழகத்தின் கடைக்கோடியான ராமேசுவரம் தீவில், படகு உரிமையாளரான ஜெயினுலாப்தீன்- ஆஷியம்மா தம்பதியரின் கடைசி மகனாக, 1931, அக். 15-இல் பிறந்தார் ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம். படம் – udayavani.com

ஒரு சிறந்த மனிதன், ஓர் வெற்றிகரமான சாதனையாளன், ஓர் அறிவியலாளன், பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்புக்குரிய தலைவன் இப்படிப்பல கோணங்களில் தடம்பதித்த இவ்வேவுகணை நாயகனின் பிறப்பு, வாழ்வு, மறைவு, அதற்குப்பின்னான வாழ்வு இவையனைத்துமே வெற்றிப்பாதையில் தன் பயணத்தைத் தொடர ஏங்கும், அதற்காகப் போராடும் அனைத்து முயற்சியாளர்களுக்கும் ஓர் நீலப்படியாகவே இருக்கும்.

கலாநிதி கலாமின் பிறந்ததினத்தைக் கொண்டாடும் இளம் மாணவர்கள். கலாமின் பால்ய வாழ்க்கை வறுமை நிரம்பியது. பள்ளி செல்லும் வயதிலேயே பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ராமேஸ்வரத்திலேயே ஆரம்பக் கல்வி பயின்ற கலாம், ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், திருச்சியிலுள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டம் (1954) பெற்றார். படம் - firstpost.com

கலாநிதி கலாமின் பிறந்ததினத்தைக் கொண்டாடும் இளம் மாணவர்கள். கலாமின் பால்ய வாழ்க்கை வறுமை நிரம்பியது. பள்ளி செல்லும் வயதிலேயே பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ராமேஸ்வரத்திலேயே ஆரம்பக் கல்வி பயின்ற கலாம், ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், திருச்சியிலுள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டம் (1954) பெற்றார். படம் – firstpost.com

குறிப்பாக மாணவ சமுதாயம், வெற்றிகரமான இந்தியா, சூழல் காப்பு, மக்களின் நலன் என பல்வேறுபட்ட கனவுகளைச் சுமந்து, அவற்றை வெற்றிகரமாகக் கொண்டுநடாத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அக்கனவுகள் நனவாக்கப்படும் திட்டத்துக்கான வாரிசுகளை வளப்படுத்தி, பிரதியுபகாரம் எதிர்பாராது தன்னோடு சார்ந்தவர்களையும் சாதனையாளர்களாக்கிய இவ்வேவுகணை நாயகன் வெற்றிக்காய் வகுத்துவைத்த நியதிகள்தான் யாவை? இக்கட்டுரை கலாமவர்கள் எமது கருத்திற்காய் விட்டுச்சென்ற வெற்றியின் இரகசியங்களைப் பேசும்.

1955-இல் சென்னை எம்.ஐ.டி.யில் சேர்ந்த கலாம், அங்கு விண்வெளிப் பொறியியலில் பட்டம் பெற்றார் (1960). படிப்பை முடித்தவுடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பில் (DRDO) விஞ்ஞானியாகச் சேர்ந்தார். சென்ற புதிதிலேயே ராணுவத்துக்கான சிறிய ரக ஹெலிகாப்டர் (Hovercraft) ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தார். இதனிடையே, விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசியக் குழுவிலும் (INCOSPAR) கலாம் இடம் பெற்றிருந்தார். படம் - topyaps.com

1955-இல் சென்னை எம்.ஐ.டி.யில் சேர்ந்த கலாம், அங்கு விண்வெளிப் பொறியியலில் பட்டம் பெற்றார் (1960). படிப்பை முடித்தவுடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பில் (DRDO) விஞ்ஞானியாகச் சேர்ந்தார். சென்ற புதிதிலேயே ராணுவத்துக்கான சிறிய ரக ஹெலிகாப்டர் (Hovercraft) ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தார். இதனிடையே, விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசியக் குழுவிலும் (INCOSPAR) கலாம் இடம் பெற்றிருந்தார். படம் – topyaps.com

01 – தோல்வியைக் கையாளக் கற்றுக்கொள்ளல்

வாழ்க்கை என்பது பல்வேறுபட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது. தனது இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றி, தோல்வி இவை இரண்டுமே மாறி மாறி வரக்கூடியன. தோல்வி என்கின்ற தருணம், அது தருகின்ற ஏமாற்றம், மன உளைச்சல் இவை ஓர் மனிதனை ஆட்கொள்ளும் பட்சத்தில் அவன் வெற்றிப்பாதையில்நின்றும் தூரமாகிறான். அதேசமயம் தோல்வி என்னும் தற்காலிகத்தைத் துடைத்தெறிந்துவிட்டு வெற்றியின் படிகளைத் தேடவிழைபவன் தனது இலக்குகளைநோக்கி விரைந்து செல்கின்றான். தோல்வியைக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள் வெற்றிகள் வந்து உங்கள் கைகோர்க்கும் என்கிறார் கலாம்.

திருவனந்தபுரம் இஸ்ரோ, கலாமின் கர்மபூமியானது. அங்கு செயற்கைக்கோள் ஏவூர்தி-3 (Satellite Launching Vehicle: SLV-III) திட்டத்தின் இயக்குநராக கலாம் பொறுப்பேற்றார். அதுவரை செயற்கைக்கோள்களை ஏவ, வெளிநாடுகளையே இந்தியா சார்ந்திருந்தது. அத்திட்டத்தில் பலகட்டங்களில் தோல்விகளைச் சந்தித்தபோதும், இடைவிடாத முயற்சியாலும் கடின உழைப்பாலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏவுகணை வெற்றியடைந்தது. 1980-இல் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ரோகிணி செயற்கைக்கோளை, இந்த ஏவுகணையே சுமந்துகொண்டு விண்ணைச் சாடியது. அது வெற்றிகரமாக இயங்கி, சரியான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. எஸ்எல்வி தொழில்நுட்பம் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்தது. படம் - thehindu.com

செயற்கைக்கோள் ஏவூர்தி-3 (Satellite Launching Vehicle: SLV-III) திட்டத்தின் இயக்குநராக கலாம் பணியாற்றினார். அத்திட்டத்தில் பலகட்டங்களில் தோல்விகளைச் சந்தித்தபோதும், இடைவிடாத முயற்சியாலும் கடின உழைப்பாலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏவுகணை வெற்றியடைந்தது. 1980-இல் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ரோகிணி செயற்கைக்கோளை, இந்த ஏவுகணையே சுமந்துகொண்டு விண்ணைச் சாடியது. அது வெற்றிகரமாக இயங்கி, சரியான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. அதுவரை செயற்கைக்கோள்களை ஏவ வெளிநாடுகளையே சார்ந்திருந்த இந்தியா, எஸ்எல்வி தொழில்நுட்பம் உள்ள நாடுகளின் வரிசையில் சேர்ந்தது. படம் – thehindu.com

02 – கனவு காணுங்கள்

புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புக்கள் போன்றவை இலகுவில் நிகழ்ந்துவிடுவதில்லை. படைப்பாற்றலுள்ள ஆளுமைகளே இவ்வாறான கண்டுபிடிப்புக்களுக்கு தூண்டுகோலாக அமைகின்றனர். அப்படைப்பாற்றலுள்ள எண்ணங்களோடுகூடிய கனவுகள், அல்லது விளைபொருள்பற்றிய கற்பனைகள் தொடர் முயற்சிகளைக் கடந்துவரும்போதுதான் ஆக்கங்கள் பிறக்கின்றன. ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரும், படைப்பாளியும், கலைஞனும் தனது ஆக்கம் அல்லது அடைவுபற்றிய கற்பனையை நனவாக்கும் முயற்சியின் வெற்றியாகவே புத்தாக்கங்களைப் பிரசவிக்கின்றனர். கனவு எனப்படுவது தூக்கத்தில் வருவதல்ல, மாறாக, வெற்றிப்பாதையில் உள்ள உங்களைத் தூங்கவிடாமல் செய்வது என்னும் பின்குறிப்பையும் அடிக்கோடிடுகிறார் அவர்.

கலாம் தலைமையிலான விஞ்ஞானிகளின் தொடர்ந்த உழைப்பால், நாக் (2010), பிருத்வி (1988), ஆகாஷ் (1990), திரிசூல் (1985), அக்னி (1989) ஆகியவை வெற்றியடைந்தன. இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்திலும் இடம்பெற்று, இந்தியாவின் நாட்டின் பாதுகாப்பை வெளிநாட்டு உதவியின்றி உறுதிப்படுத்தியுள்ளன. படம் - sivadigitalart.files.wordpress.com

கலாம் தலைமையிலான விஞ்ஞானிகளின் தொடர்ந்த உழைப்பால், நாக் (2010), பிருத்வி (1988), ஆகாஷ் (1990), திரிசூல் (1985), அக்னி (1989) ஆகியவை வெற்றியடைந்தன. இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்திலும் இடம்பெற்று, இந்தியாவின் பாதுகாப்பை வெளிநாட்டு உதவியின்றி உறுதிப்படுத்தின. படம் – sivadigitalart.files.wordpress.com

03 – நேர்மை வெற்றியின் முக்கிய படி

கல்வி எனப்படுவது நேர்மை, கீழ்ப்படிவு, நல்லொழுக்கம் மற்றும் சிறந்த பண்புகளோடு சேர்கையிலேயே அக்கல்வியின் நோக்கமும் பெறுதியும் முழுமையடைகிறதெனலாம். ஒரு மனிதனின் முறையான கல்வி எனப்படுவது அவனது பண்பு மற்றும் நடத்தைக்கோலத்தை வைத்தே அடுத்த கட்டத்தை அடையும் என்பது வரலாறுகண்ட உண்மை. வெற்றிகரமான ஆழுமைகள் அத்தனையும் வெளிப்படுத்திய, வாழ்ந்துகாட்டிய ஒற்றுமையியல்பு இவையே! எந்த ஒரு மனிதன், மனித விழுமியங்களை சீர்தூக்கிக் கடைப்பிடித்து தன்னையும் பிறரையும் நல்வாழ்க்கையை நோக்கி நகர்த்திச் செல்கிறானோ அவன் வெற்றியாளர் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு முன்செல்வான் என்பது அவர் கருத்து.

கலாமின் மிகப் பெரிய சொத்தே அவரது நூல்கள்தான். கடைசி வரை விலைமதிப்பில்லாத சொத்தாக தனது புத்தகங்களைத்தான் கருதினார் கலாம். நிறைய புத்தகங்களைத்தான் அவர் மிகப் பெரிய சொத்தாக விட்டுச் சென்றுள்ளார். இது போக, அவருடைய பழமையான பாரம்பரியமான வீணை, ஒரு லேப்டாப், ஒரு கைக்கடிகாரம், 2 பெல்ட்டுகள், ஒரு சிடி பிளேயர், அவருடைய நீல நிறச் சட்டை ஆகியவை இதர சொத்துக்கள் ஆகும். படம் - india.com

கலாமின் மிகப் பெரிய சொத்தே அவரது நூல்கள்தான். கடைசி வரை விலைமதிப்பில்லாத சொத்தாக தனது சொத்தாகக்கருதினார். அதுபோக, அவருடைய பழமையான பாரம்பரியமான வீணை, ஒரு மடிக்கணினி, ஒரு கைக்கடிகாரம், ஒரு இறுவட்டு இயக்கி, அவருடைய நீல நிறச் சட்டை ஆகியவையே அவரது இதர சொத்துக்கள் ஆகும். படம் – india.com

04 – நீங்கள் நீங்களாகவே வாழுங்கள்

ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன், தனக்கென்ற பிரத்தியேக குணம், திறமை, பலம், பலவீனம் இப்படி தனக்கேயுரிய தனிச்சிறப்பியல்புகளோடு இருப்பவன். தனது இயல்பு, தனக்கேயுரிய தனிச்சிறப்பு, திறமை போன்றவற்றை இனங்கண்டு அவற்றுக்கான  தேடல் மற்றும் பயிற்சியை அவன் தொடர்வதன்மூலமே தான் எடுத்துக்கொண்ட குறித்த துறையில் உச்சம்தொட இயலும். இருந்தும் எம்மைச் சூழ உள்ள சமுதாயம் நம்மை நாமாக வாழ விடாமல், மற்றவர்களாக மாற்றியமைக்கவே பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டவண்ணம் இருக்கிறது. இதுவே தனது சுயத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவாலாகும். இச்சவாலை எதிர்கொண்டு முன்செல்பவன் வெற்றியாளனாவதில் சந்தேகமில்லை என்கிறார் கலாம்.

கலாம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவை மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல விற்பனையிலும் முன்னணியில் உள்ளவை. இந்த நூல்களில் சிலவற்றை அவரது உதவியாளர்கள், கலாமுடன் இணைந்து எழுதியுள்ளனர். அவரது நூல்களிலேயே தலை சிறந்தது அக்னிச் சிறகுகள்தான். 1999ம் ஆண்டு வெளியான இந்த நூல். இதுவரை இந்த நூல் 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. தொடர்ந்து அமோகமாக விற்பனையாகியும் வருகிறது. படம் - http://photos.filmibeat.com

கலாம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவை மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல விற்பனையிலும் முன்னணியில் உள்ளவை. இந்த நூல்களிலேயே தலை சிறந்தது அக்னிச் சிறகுகள்தான். 1999ம் ஆண்டு வெளியான இந்த நூல். இதுவரை 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. தொடர்ந்து அமோகமாக விற்பனையாகியும் வருகிறது.
படம் – http://photos.filmibeat.com

05 – தடைகளையும் எல்லைகளையும் கடந்துசெல்லுங்கள்

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் சாதனையாளர்கள் அனைவரும் சாத்தியமற்றைவை என்று எல்லோராலும் கருதப்பட்ட விடயங்களை சாத்தியமாக்க முடியும் என்ற சிந்தனையையுடன் போராடியவர்கள். வரையறுக்கப்பட்ட கூட்டுக்குள்ளிருந்து பரந்த உலகைநோக்கிச் சிறகடித்துப் பறந்தவர்கள். உலகை மாற்றக்கூடிய திறமை அவர்களிடமே உள்ளது. அது அவர்களாலேயே இயலும். நான்கு நிமிடங்களில் ஓடி முடிப்பது இயற்கைக்குப் புறம்பானது, அது உயிராபத்தையும் சம்பவிக்கலாம் என்று மருத்துவர்களும் நிபுணர்களும் ஆருடம் கூறிய ஓட்டத்ரத்தை நான்கு நிமிடங்ஙழகளில் ஓடிக்கடக்க முடியும் என்று தன் உயிரையும் பணயம்வைத்து ஓடிச் சாதனை படைத்த ரோஜ்ஜர் பனிஸ்டரையும் இவ்வுலகு கடந்தே வந்திருக்கிறது. எனவே உங்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் கண்ணாடிச் சுவர்களை தகர்த்துக்கொண்டு வெளியேறுங்கள் அது உங்களை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்லும் என்பது அவரது அறிவுரை.

தனது பதவிக் காலத்தில் நாடு முழுவதும் பயணித்து, கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டினார் கலாம். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகும் அவரது கல்விப் பயணம் தொடர்ந்தது. பல உயர் கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது மரணமும்கூட, மாணவர்களிடையே இருந்தபோதே நிகழ்ந்தது. படம் - india.com

தனது பதவிக் காலத்தில் நாடு முழுவதும் பயணித்து, கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டினார் கலாம். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகும் அவரது கல்விப் பயணம் தொடர்ந்தது. பல உயர் கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது மரணமும்கூட, மாணவர்களிடையே இருந்தபோதே நிகழ்ந்தது. படம் – india.com

06 – பாடையில் ஏறினும் ஏடது கைவிடேல்

படம் - timesofindia.indiatimes.com

படம் – timesofindia.indiatimes.com

கல்வி ஒரு மனிதனது ஆக்கத் திறனை மேம்படுத்தும். மேம்பட்ட ஆக்கத்திறன் அவனைச் சீரிய வழியில் சிந்திக்கத் தூண்டும். தேர்ந்த சிந்தனை அவனது அறிவாற்றலை விரிவுபடுத்தும். பரந்த அறிவு அவனைச் சிறந்தவனாக்கும். தொடர்ச்சியாகக் கல்வியறிவைப் பெற்றுக்கொள்வது வெற்றியாளர்களுக்கு இன்றியமையாதது. நாளுக்கு நாள் அவனது கல்வி அவனை மேம்படுத்தும், சிந்தனையைத் தூண்டும். அதுவே அவனது வெற்றியை உறுதிசெய்யும் என்கிறார்.

07 – கற்றுக்கொடுங்கள்

தன்னை எப்போதும் ஒரு ஆசிரியராகவே அடையாளப்படுத்த விழையும் கலாமவர்கள் வெற்றியாளராகவேண்டுமெனில் கற்றுக்கொடுப்பவராக இருங்கள் என்கிறார். தனக்குத் தெரிந்த ஒரு விடயத்தை இன்னொருவருக்குக் கற்றுக்கொடுப்பது ஒரு எளிமையான செயற்பாடாகத் தோன்றலாம். இருப்பினும் அது மற்றவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியதாக இருக்கும். ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததியின் வாழ்க்கை முறையை, பெறுபேறை வேறுநிலைக்குக் கொண்டுசெல்லும் வலிமை கல்விக்கு உண்டு. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த எனது கனவுகளை, இலட்சியங்களை அன்று நான் சிறுவனாக இருந்தபோது எனது ஆசிரியர் இனங்காட்டி, வடிவமைத்து செய்த அரும்பணியே இன்று நான் பெற்றிருக்கும் வெற்றிகளனைத்திற்கும் படிக்கல்லாகும். கற்றுக்கொடுத்தல் எங்கள் அறிவை மேம்படுத்தும் அதேவேளை அது அடுத்தவர்களையும் வெற்றியின்பால் இட்டுச்செல்லும் என்றும் பதிவுசெய்துள்ளார்.

அமெரிக்காவின் ஹூவர் பதக்கம் (2009), இங்கிலாந்தின் ராயல் சொûஸட்டியின் கிங் சார்லஸ் பதக்கம் (2007), இந்திய அரசின் சாவர்க்கர் விருது (1998), பத்மபூஷண் (1981), பத்ம விபூஷண் (1990), பாரத ரத்னா (1997) உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற கலாம், 40 பல்கலைக்கழகங்களின் கெüரவ முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். படம் - news.indianservers.co

அமெரிக்காவின் ஹூவர் பதக்கம் (2009), இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியின் கிங் சார்லஸ் பதக்கம் (2007), இந்திய அரசின் ஜவகர் விருது (1998), பத்மபூஷண் (1981), பத்ம விபூஷண் (1990), பாரத ரத்னா (1997) உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற கலாம், 40 பல்கலைக்கழகங்களின் கெளரவ முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். படம் – news.indianservers.co

08 – நேர்மையும் நாணயமும்

தனித்தோ அல்லது ஒரு சமுதாயத்தின் தலைவராகவோ செயற்படும் போது என்றைக்கும் நாணயமாக நடந்துகொள்ளல் அவசியம். ஒரு மனிதனை புனிதனாக்கும் பாதை நேர்மைக்கும் நாணயத்திற்கும் பழக்கப்பட்ட பாதை. தான் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு காரியத்திலும், தான் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கவேண்டும் அதில் வெற்றியும் காணவேண்டும். நேர்மையும் நாணயமும் உள்ள எந்த மனிதனும் வெற்றியின் நிலையை அடையத்தேவையான அடிப்படைத் தகுதியைப் பெற்றவனாகவே கருதலாம் என்பது அவரது வெற்றிக்கான அறைகூவல்.

கலாம் சிறந்த விஞ்ஞானி, மக்கள் தலைவர் மட்டுமல்ல, அற்புதமான எழுத்தாளரும்கூட. அவரது அக்னிச்சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், எனது வானின் ஞானச்சுடர்கள் உள்ளிட்ட 9 நூல்களும் இளைஞர்களாலும் மாணவர்களாலும் வெகுவாக விரும்பிப் படிக்கப்படுகின்றன. கலாம் பிறந்த நாளை தமிழக அரசு இளைஞர் எழுச்சிநாளாக அறிவித்துள்ளதுடன், கலாம் பெயரில் சுதந்திர தின விழாவில் பரிசினையும் வழங்கி வருகிறது. ஒடிஸாவிலுள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு "அப்துல் கலாம் தீவு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படம் - mensxp.com

கலாம் சிறந்த விஞ்ஞானி, மக்கள் தலைவர் மட்டுமல்ல, அற்புதமான எழுத்தாளரும்கூட. அவரது அக்னிச்சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், எனது வானின் ஞானச்சுடர்கள் உள்ளிட்ட 9 நூல்களும் இளைஞர்களாலும் மாணவர்களாலும் வெகுவாக விரும்பிப் படிக்கப்படுகின்றன. கலாம் பிறந்த நாளை தமிழக அரசு இளைஞர் எழுச்சிநாளாக அறிவித்துள்ளதுடன், கலாம் பெயரில் சுதந்திர தின விழாவில் பரிசினையும் வழங்கி வருகிறது. ஒடிஸாவிலுள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு “அப்துல் கலாம் தீவு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படம் – mensxp.com

நேர்மையுள்ள, நற்பண்புகள் நிறைந்த உள்ளம் ஒரு மனிதனை அழகிய குணம் பொருந்தியவனாக மாற்றும், குணாதிசயங்கள் அழகாக மாறும்போது வீடுகளில் அமைதியும், ஒற்றுமையும் உருவாகும், வீடுகளில் உருவாகும் நல்லிணக்கம், நாட்டை, நாட்டு மக்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் , ஒழுங்கமைத்த நாடுகள் உலகில் சமாதானத்தையும் சாந்தியையும் நிலைநாட்டும். என வெற்றிகரமான வாழ்க்கை முறையை வகுத்தளித்துள்ளார் எமது மரியாதைக்குரிய கலாநிதி அப்துல் கலாமவர்கள்.

மாணவர்களே! உங்களது வெற்றியின் பாதை பெயர்பெற்ற பாடசாலைகளோ, பெற்றார் உங்களுக்காய் செய்துதரும் வசதி வாய்ப்புக்களோ, பணமோ, பொருளோ எதுவுமேயில்ல. படகோட்டி ஒருவரின் மகனாகப்பிறந்த ஒரு மனிதன் வாழ்ந்து காட்டிய நிதர்சனமான வாழ்க்கைமுறை நம் கண்ணெதிரே நடந்தேறியிருக்கிறது. ஆம் அது சாத்தியமென்றால், தெளிந்த நோக்கு, சீரிய சிந்தனை, விடாமுயற்சி, உயர்ந்த பண்புகள், தொடர்ந்த கல்வி, இவைமட்டுமே உங்கள் வெற்றிக்கு வித்தாகும்! மாணவ சமுதாயமே இவ்வுலகின் சிறந்த எதிர்காலம். சிறந்த மாணவர்களால் உருவாக்கப்படும் சிறந்த மனிதர்கள்மூலம், தான் கனவுகண்ட உலகை உருவாக்குவதே அவரின் கனவாக இருந்தது. இந்தியாவுக்குமட்டுமல்ல கலாமவர்களின் கனவை சுமந்துசெல்லும் ஒவ்வொருவருக்கும் இன்று இளைஞர் எழுச்சி தினமே!

 

 

Related Articles

Exit mobile version