Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கொலம்பஸ் அமெரிக்காவையும் கண்டுபிடிக்கவில்லை ஆட்டுக்குட்டியையும் கண்டுபிடிக்கவில்லை

கொலம்பஸ் அமெரிக்காவையும் கண்டுபிடிக்கவில்லை ஆட்டுக்குட்டியையும் கண்டுபிடிக்கவில்லை என்பது உங்களில் அநேகருக்கு தெரிந்திருந்தாலும், பின்பு  எதற்காக அமெரிக்காவில் “Columbus day”  எனும் நாள் இன்றுவரை கொண்டாடப்படுகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்காது! உண்மையில் பின்னனியில் இருப்பது  ஒரு அரசியல் ரீதியிலான காரணம் தான். ஐரோப்பியர்கள் ஒரு புதிய உலகத்தை கண்டுபிடித்தார்கள் என்பதைக் கொண்டாடுவதற்காக ஒரு நாளை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒரு காரணம் என்றால் மற்றையது 1930 களில் இத்தாலியிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்களுக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்படவில்லை, அவர்களை பாகுபாடாக அமெரிக்க அரசு நடத்துகிறது என எழுந்த   குற்றச்சாட்டை சுமுகமாக தீர்த்துவைக்கும்பொருட்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி “ப்ராங்கிளின் டி  ரூஸ்ட்வெல்ட்”  1937இல் முதன்முதலில் அதிகாரபூர்வமாக  அறிவித்த   ஒரு நாளே இந்த Columbus day என இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்  பின்னணியில் பின்னாளில் உருவாக்கப்பட்ட கதைகளே கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார், அவர் ஒரு வீரர் தீரர் என்பதெல்லாம் .

உண்மையில் கொலம்பஸ் ஒரு வீரர்தானா ?

1451 இல் இத்தாலி ஜெனோவாவில் பிறந்த கொலம்பஸ் சிறுவயதிலிருந்தே கடற் பயணங்களில் ஈடுபாடுடையவர் என்பதால் போர்த்துக்களை ஆட்சிசெய்த இரண்டாம் ஜான் மன்னனது கப்பற்படையில் மாலுமியானார் . அரேபியர்கள் மூலம் இந்தியாவிலிருந்து ஏகப்பட்ட யானை  தந்தங்களும் , முத்துக்களும் , வாசனைதிரவியங்களும் ஐரோப்பா முழுவதிலும் ஏகபோகமாய் வணிகம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலமது . எப்படியாவது இந்தியாவை கண்டுபிடித்து அங்கிருக்கும் செல்வதை நாமும் அடையவேண்டும் என முயன்றுகொண்டிருந்த ஐரோப்பியர்களில் கொலம்பசும் ஒருவர் . “உலகம் உருண்டை” எனும் கோற்பாடு மிகவேகமாக பரவிக்கொண்டிருந்த நேரமது என்பதால்,  கிழக்கே அரேபியா ஊடாக இந்தியாவை அடைவதைவிட மேற்கே பயணப்பட்டால் இலகுவாக இந்தியாவை அடைந்துவிடலாம் எனும் கொலம்பஸ்சின் (முட்டாள்தனமான )  கருத்து  போர்த்துக்கல் மன்னனால் நிராகரிக்கப்பட்டது.

இதனால், 1492 இல் கடல் வாணிபத்தில் போர்த்துக்களுக்கு இணையாக ஸ்பெயினும் முன்னேறவேண்டும் என நினைத்த ஸ்பெயின் மன்னன் பெர்டினண்ட் மற்றும் ராணி இசபெல்லா ஆகியோரின் நிதி வழங்களின்மூலம் “The Nina “, “The Pinta “ , “The Santa Maria”  எனும் மூன்று கப்பல்களில் தன்னுடைய சக மாலுமிகளையும் அழைத்துக்கொண்டு இந்தியாவை கண்டுபிடிக்க கிளம்பினார் கொலம்பஸ். இந்தியாவை கண்டுபிடித்து அங்கிருந்து கொண்டுவரப்படும் செல்வதில் 10% கொலம்பஸுக்கு கொடுக்கப்படும் எனவும், போகும் வழியில் வேறு ஏதேனும்  தீவுகள் அல்லது நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றுக்கு கொலம்பஸே  ஆளுநராக நியமிக்கப்படுவார் எனவும், முதலில் தீவுகளை கன்டுபிடிக்கும் சக மாலுமிகளுக்கு மாதாமாதம் பத்தாயிரம் ஸ்பெயின் பணம் வழங்கப்படும் எனவும்  ஸ்பெயின் மன்னரால் கூறப்பட்டது .

பயணம் ஆரம்பித்து இரண்டுமாதங்களின்பின் (அக்டோபர் 12) நள்ளிரவில் சக மாலுமியான  றொட்ரிக்கோ  என்பவரால் தூரத்தே ஒரு மணல் திட்டு கண்டுபிடிக்கப்பட்டு கொலம்பஸுக்கு சொல்லப்பட, “அடடே மாதாமாதம் வழங்கப்படப்போகும் ஸ்பெயின் பணம் பத்தாயிரமும் பறிபோய்விடுமே” என நினைத்து இதை நேற்றே நான் பார்த்துவிட்டேன் உனக்கு முதல்” என றொட்ரிக்கோவை துரத்திவிட்டு, காலையில் அந்த புதிய தீவில் காலடிவைத்தார் கொலம்பஸ். தான் வந்திருப்பதுதான் இந்தியா என்றும் பக்கத்தில் இருக்கும் தீவுதான் (கியூபா) சீனா   என்றும் நினைத்துக்கொண்டார். உண்மையில் அவர் வந்திறங்கியது அமெரிக்க கண்டதை ஒட்டியிருந்த கரீபியன் தீவுகளில் (West Indies ) ஒன்றான பஹாமஸ் (The Bahamas) தீவு ஆகும்.

ஆனால் , அங்கே அவர் எதிர்பாத்ததுபோல் தங்கமும் வைரமும் கிடைக்கவில்லை . இதனால் அந்த தீவில் பல நூறு வருடங்களாக வாழ்ந்துவந்த பூர்வகுடிகளை (டைனோ TAINO பழங்குடியினர்) சிறைப்பிடித்து ஸ்பெயினுக்கு அடிமை வணிகம் செய்ததுடன், பழங்குடி பெண்களை பாலியல் அடிமைகளாகவும் விற்று விட்டார். அதுமட்டுமன்றி பக்கத்து தீவான (Haiti) ஹைடியில் மிகச்சிறிய அளவிலான தங்க சுரங்கம் இருப்பதை கண்டுபிடித்து, அதில் டைனோஸ் பூர்விகக்குடிகளை கட்டாய தங்கவேட்டையில் இறக்கினார். தங்கத்தை கொண்டுவராதவர்களின் கைகள் வெட்டப்பட்டு பல ஆயிரக்கணக்கானோர் இறந்துபோயினர். தன் பெயரைக்கேட்டாலே தீவில் உள்ளவர்கள் அலறி நடுங்கவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கானோரின் காதுகளை வெட்டியெறிந்தார். 

பூர்வகுடி பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுகளுக்கு உற்படுத்தப்பட்டதுடன்,  தாய்ப்பால் மறுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஏழாயிரம் குழந்தைகளுக்குமேல் கொல்லப்பட்டனர், கர்ப்பிணிகள் கொடூரமாக வேலைவாங்கப்பட்டதால் கருவுடன்சேர்ந்து அவர்களும் இறந்துபோயினர். போதாக்குறைக்கு கொலம்பஸ் வருகையின்பின் ஏற்பட்ட கொலரா, சின்னம்மை போன்ற தொற்று வியாதிகள் என கிட்டத்தட்ட பஹாமஸ் தீவின் 90% மக்கள் மாண்டுபோயினர். தீட்டிய வாளில் கூர் பார்ப்பதற்கென பழங்குடியினர் காரணமின்றி வெட்டிவீழ்த்தப்பட்டனர். கொலம்பஸின் கொடுமை தாளாமல் விஷம் அருந்தியும், கத்தியால் குத்திக்கொண்டும் (குழந்தைகள் உட்பட) பல்லாயிரம் டைனோஸ் இறந்துபோனதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.   உலக வரலாற்றில் ஒரு ஒட்டுமொத்த மனித இனத்தையே அழிவின் விளிம்பிற்கு கொண்டுசென்ற ஒரே மனிதன் கொலம்பஸ் .

பலவருடங்களுக்குபின் இவரது அட்டூழியங்கள் ஸ்பெயின் மன்னரது காதுகளுக்கு எட்ட , கரீபியன் தீவுகளின் ஆளுநர் பதவி பறிக்கப்பட்டு , அரச  அங்கீகாரத்துடன் வழங்கப்பட்ட அத்தனையும் திரும்பபெறப்பட்டது . இதனால் மனமுடைந்த கொலம்பஸ் தன் இறுதி காலத்தில் பெருத்த மன உளைச்சலிலேயே மரணத்தை தழுவிக்கொண்டார். சரி,கொலம்பஸின்   இந்த அராஜகங்கள்  எல்லாமும் எப்படி வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டதுஎன்பதை பார்ப்போமேயானால், கொலம்பஸின் மாலுமிகளுள் ஒருவராக இருந்து பின்னாளில் மனம் திருந்தி கிறிஸ்தவ மத போதகராக மாறிய  “ Bartolome de las casas “ என்பவரது பதிவுகளில் மேற்குறித்த சம்பவங்கள் பற்றி எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Designs: Roar Media/Jamie Alphonsus

Related Articles