
உலகமே மரணபீதியில் உறைந்திருக்கின்றது . மழலைபேச ஆரம்பித்திருக்கும் குழந்தை முதல் முதியவர்வரை தினமும் உச்சரிக்கும் வார்த்தை கொரோனா !
வல்லரசு,மக்களரசு , அணுவாயுத அரசுகள் என உலகின் அனைத்து அரசு இயந்திரங்களும் கொரோனாவினால் கொத்துக்கொத்தாக செத்துமடியும் தம்மக்களை பார்த்து செய்வதறியாது திகைக்கின்றன . தாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதரையுமே பார்த்து “இவருக்கு கொரோனா இருக்குமோ?” என்கிற அச்சத்தில் தூரவோடும் பேரவலம் மனிதகுலத்திற்கு இன்று. இத்தகைய கொடியநோய் சீனாவில் முதல்முதலாக எப்படி வந்தது? எதன்மூலம் வந்தது என இரண்டுவருடங்கள் கடந்தநிலையிலும் மர்மமாகவே இருக்கின்றது. பாம்பிலிருந்து வந்தது, வௌவாலிலிருந்து, புனுகுப்பூனையிலிருந்து, வூஹான் இறைச்சி சந்தையிலிருந்து வந்தது இப்படி பல்வேறு ஊகங்கள் உலகம் முழுவதும் சுற்றிவருகின்றன .
அதேநேரம் சீனாவின் உயிரியல் ஆயுதமா கொரானா வைரஸ்? எனவும் உலகநாடுகள் உற்றுநோக்குகின்றன . சீனாவில் ரகசியமாக தயாரிக்கப்பட்ட உயிரியல் அணுவாயுத கசிவினால் ஏற்பட்ட விளைவு கொரோனாவைரஸ் என முதன்முதலில் சந்தேகம் எழுப்பியவர் இஸ்ரேலை சேர்ந்த உயிரியல் நிபுணர் டேனியல் சோகோ! 1993ஆம் ஆண்டு சீனாவில் உயிரியல் ஆயுதகூடம் திறக்கப்பட்டதிலிருந்து மிகக்கொடிய வைரஸ் நோய்கள் பரவுகின்றன என்பதையும் சார்ஸ் (SAARS Virus) மெர்ஸ்ஸை (Mers Virus) வைத்து உலக அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Dr. லி வென்லியாங் (Dr. Li Wenliang) எனும் கண்மருத்துவர் ஒருவர் வூஹான் பொது மருத்துவமனையில் பணியாறியவர் . 2019 டிசம்பர் மாதமே புதிய வைரஸ் ஒன்றின் பரவல்பற்றிய அச்சத்தினை வெளியிட்டிருந்தபோதிலும், போலியான வதந்திகளை பரப்பமுற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சீன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டதோடு, மன்னிப்புக் கடிதமும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் என இந்த வைரஸ் பரம்பல் பற்றி ஆரம்பகாலகட்டத்தில் வாய்திறந்தவர்களையெல்லாம் சீன அரசு ஒடுக்கியது. எனினும் 2020ம் ஆண்டு முற்பகுதியிலேயே வைரஸ் தாக்கி பலர் தொடர்ந்தும் மரணமாகியதுடன் வைத்தியர் லீயும் கொரோனா தாக்கி மரணித்தார் .
அதன்பின் சுதாரித்துக்கொண்ட சீன அரசு, வைரஸ் பரவலை ஒப்புக்கொண்டதுடன் லீயின் உடலை சகல அரசமரியாதையுடன் அடக்கம்செய்ததுடன் அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்புகோரியது. இப்படி சீனாவின் முன்னுக்குப்பின் முரணான நடவடிக்கைகளும் சீனா மீதான சந்தேகத்தை கிளப்பின. சீனாவின் ராணுவத்தளபதியான “chen wei” என்பரை சீனாவின் உயிரியல் சோதனை மையத்தலைவராக சீன அரசு நியமித்தமையும் அவர் கொரோனா பரவ சில மாதங்களுக்குமுன் (2019 அக்டோபர்) வுஹான் ஆய்வகத்திற்கு சென்றுவந்தமையும் சந்தேகத்தை வலுப்படுத்தின . சார்ஸ் பரவாமல் இருப்பதற்கான ஸ்பிரே (spray) மருந்து கண்டுபிடித்தவர் இவர் என்பதோடு எபோலாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் “Terminator of ebola” என அழைக்கப்படுபவருமாவார் .

அதுமட்டுமன்றி, 2019 முற்பகுதியில் கனடாவில் உள்ள மனிடோபா (Manitoba) பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சீன பெண் ஆராச்சியாளர் ஒருவர் உற்பட மூன்று ஆண் ஆராச்சியாளர்கள் கனேடிய தேசிய நுண்ணுயிர் ஆய்வகத்தை ரகசியமாக கண்காணித்தமை கனேடிய இறையாண்மைக்கு எதிரானது என குற்றம்சாட்டப்பட்டு நால்வரும் பணிநீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .
அறிவியல்பூர்வமான ஆய்வுகளை அறிவியலாளர்கள் செய்துகொண்டிருக்கையில், இலக்கியவாதிகள் நாற்பது ஆண்டுகளுக்குமுன் வெளியாகிய “The eyes of darkness” நாவலின் “Wuhan 400” எனும் சர்ச்சைக்குரிய பக்கங்களை விவாதத்துக்குள்ளாகியுள்ளனர் . 1981ல் அமெரிக்க எழுத்தாளரான “Dean koontz” என்பவரால் எழுதப்பட்ட இந்நாவலானது ஆய்வுகூடமொன்றில் தயாரிக்கப்படும் “வுஹான் 400” எனும் உயிரியல் ஆயுதமான வைரஸ் கசிவு பற்றிய கதையாகவே எழுதப்பட்டுள்ளது. ராய்ட்டர் செய்திநிறுவனம் இதுபற்றி அறிய முற்பட்டபோதும் இதுவரையில் அந்த எழுத்தாளரிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. மேலும் 2008ஆம் ஆண்டு சில்வியா பிரௌன் எழுதிய “End of days” நாவலில், இந்த உலகம் 2020இல் நுரையீரல் தொற்றுநோயால் பெருமளவு மரணத்தை எதிர்கொள்ளும் என எழுதியுள்ளார் . அமெரிக்க டிஸ்னி வேர்ல்ட் கார்ட்டூன் அலைவரிசையில் , 1993இல் வெளியான “The simpsons” தொடரில் “Osaka flu” எனும் வைரஸ் ஜப்பானிலிருந்து உலகம்முழுவதும் 2020இல் பரவி மரணங்கள் நிகழ்வதாக தயாரிக்கப்பட்டிருந்தமையும் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இப்படி கொரோனாவை முன்பே கணித்த கலை மற்றும் இலக்கியங்கள் வியப்பை அளிக்கின்றன . இன்னொருபுறம் நோஸ்ட்ரடாமஸ் கணிப்பின்படி கடல்சார்ந்த நகரமொன்றிலிருந்து (வுஹான் கடல்சார்ந்த நகரம் என்பதையும் கருத்திற் கொள்க ) உருவாகும் ஒருவகை பிளேக் நோயினால் குற்றங்கள் நிகழாமலேயே 2020ஆம் ஆண்டு கொத்துக்கொத்தாக உலகம் முழுவதிலும் மரணங்கள் நிகழும் என குறிப்பிடப்பட்டமை ஆச்சர்யத்தின் உச்சம் .
இவை எல்லாவற்றையும் தூக்கிசாப்பிடும் அளவிற்கு Microsoft நிறுவனர் பில்கேட்ஸ் 2015இல் ஆற்றிய உரையொன்றில் , “அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றால் இனி யுத்தங்கள் நடைபெறப்போவதில்லை. 10 கோடி மக்கள் தொற்றுநோய் வைரசின் மூலம் இறக்கப்போகிறார்கள், வைரஸ்களின் கொல்லும்திறனை அதன் வீரியம் அறியாமல் நாம் அணுவாயுதங்களுக்கு குறைவானதாகவே ஒப்பிடுகின்றோம். அடுத்துவரும் தொற்றுநோய் விமானத்திலிருந்தோ உங்கள் ஊரில் இருக்கும் சந்தையிலிருந்தோ வரப்போகிறது என பேசிய உரை தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

1918 “Spain flu” தொடங்கி எபோலா வரையில் எத்தனையோ வைரஸ்களின் தாக்கங்களை உலகம் எதிர்கொண்டாகிவிட்டது . அடுத்த பத்து ஆண்டுகளில் உலகின் பேராபத்தாக போர் இருக்காது அதைவிட பேராபத்தாக வைரஸ் இருக்கும். எபோலா ஒரு முன்னெச்சரிக்கை மணி , இப்போதே உலகநாடுகள் விழித்துக்கொள்ளவேண்டும் என பில்கேட்ஸ் கூறியது இன்று நிஜமாகியுள்ளது .
தொற்றுநோய் தடுப்பு ஆய்வுகளில் பில்கேட்ஸ் பெருமளவில் முதலீடுசெய்து தடுப்பூசி சாம்ராஜ்யத்தை ஆவர் கையிலெடுத்துள்ளமையினாலேயே வைரஸ் குறித்து பேசியுள்ளார் என அவர்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா வவைரஸ் கொடுமையானது என்றாலும் அதைவிட கொடுமையானது வதந்திகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள், ஆராச்சிகள் என திரும்பும் திசையெங்கும் கொரோனாவின் எதிரொலியே . சமூக வலைத்தளங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துகளாக சொல்லப்படும் தகவல்கள் மருத்துவ உலகத்திற்கு இன்னொரு தலைவலியாக மாறியுள்ளது.