Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

உலகின் மிக அரிதானதும், சக்தியானதுமான நான்கு நோய்க்குறிகள் | வாசகர் கட்டுரை

அகிலம் அற்புதமானது. அண்டவெளியின் விண்மீன்கள் போல புவியில் பரந்து விரிந்திருக்கும் ஒவ்வொரு மனிதனின் சிந்தனைகளும் திறன்களும் கடுகளவேனும் நபருக்கு நபர் வேறுபடுகின்றது என்பது இயற்கையின் விந்தையாகும். மனிதன் பல்வேறுபட்ட எண்ணங்களின் கீழ் தொழினுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்வது ஒரு புறம் இருக்க, மனிதனின் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு பற்றியும் ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. மர்மங்களும் புதிய உளவியல் அதிசயங்களும் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன.

உலக அறிவியல் மற்றும் உளவியல் நிபந்தனைகளுக்கு இணங்க அறிவியலாளர்கள் மனிதனின் பல்வேறுபட்ட திறமைகளையும், இயல்புகளையும் சில வரையறைகளின் கீழ் பிரதிநிதித்துவப்படுதுகின்றனர்.எப்படியாகிலும் இந்நியதிக்குட்பட்ட இயல்புகளுக்கு நேர் எதிரான திறமைகள் மற்றும் மாறுபட்ட செயற்பாடுகளை உடையதுமான மனிதர்களும் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்

இயற்கையின் நியதிகளுக்கு அப்பாற்பட்டதாக காணப்படும் இவ்வகை மனித நிகழ்வுகளை அறிவியல் ஞானிகள் “நோய்குறிகள்” என அடையாளங்காணுகின்றனர். அந்த வகையில் உலகில் மிக அரிதாகவும் உண்மையில் மனிதனுக்கு சக்தியாகவும் அமையும் நான்கு முக்கிய மற்றும் சுவாரஸ்யமான நோய் நிலைமைகளை பற்றி நோக்குவோம்

1: மீயுயர் ஞாபகசக்தி எனப்படும் Super memory.

Hyperthymesia எனும் மருத்துவ விஞ்ஞான பெயரால் அழைக்கபடும் இந்நோய் நிலைமையானது தனித்துவமான அதி உயர் ஞாபக சக்தியை குறிக்கிறது. அதாவது இந்நிலைமைக்குரியவர்கள் தங்கள் வாழ்நாளின் அனைத்து சம்பவங்கள் மற்றும் அனுபவங்களை நினைவில் வைத்திருக்கக்கூடிய திறன் படைத்தவர்களாக இருக்கின்றனர்.

இந்நோயுள்ளவர்கள் தாங்கள் கடந்து வந்த ஒவ்வொரு நாளிலும் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களையும், அதே போல் தங்களின் சூழலில் நிகழ்ந்தவை மற்றும் தாங்கள் கேட்ட, பார்த்த விடயங்களை கூட தெளிவாக நினைவுறுத்தி கூறக்கூடிய ஆளுமையை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். நம்முள் பலரால் சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த விடயங்களை கூட நினைவில் வைத்திருக்க முடியாத நிலையில், உண்மையில் இவர்களின் ஞாபகத்திறன் மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது அல்லவா?

இவர்களின் இந்நிலைக்கு முக்கிய காரணமாக அமைவது இயல்பில் இவர்களால் எதையும் மறக்க இயலாது என்பதாகும். தங்கள் வாழ்வியல் சம்பவங்கள் வலுக்கட்டாயமாக பதியப்படுவதும் மற்றும் தானாக பெறப்படுவதுமே இவர்களின் நினைவியல் அமைப்பாக காணப்படுகிறது. மேலும், இவர்களில் சிலருக்கு Autism அல்லது savant syndrome (மனஇறுக்க மற்றும் கற்றறிஞரின் நோய்க்குறி)போன்று குறித்த ஒரு நாளினை நினைவுப்படுத்தி, அந்நாளில் நடந்த அனைத்து சம்பவங்களையும் விளக்கமாக கூறக்கூடிய திறமையும் காணப்படுகிறது. மேலும் அதிக இலக்கங்களையுடைய எண்களை நினைவுப்படுத்தல், தாங்கள் வாசித்த ஒரு புத்தகத்தின் குறித்த ஒரு பக்கத்திலுள்ள தகவல்களை உள்ளவாறே கூறுதல், குறிப்பிட்ட ஒரு தினத்தில் தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ தான் பார்த்த, கேட்ட விடயத்தை நினைவுப்படுத்தல் போன்ற அதீத ஆற்றல்களையும் இவர்கள் கொண்டுள்ளனர்என்பது அறிவியல் விந்தையாகும்.

இந்நோய்ந்நிலைமைக்குரியவர்களுக்கு மிகவும் அறிந்த உதாரணமாக, Hollywood நடிகையாகிய Marliu Hanner ஐ சுட்டிக்காட்டலாம்.

இவர் 2010ல், பிரபல்யமான நிகழ்ச்சியாகிய CBS செய்தியின் ஒரு பகுதியாகிய 60 Minutes ற்கு வழங்கிய பேட்டியில் “தன்னால் என் வாழ்நாளின் ஒவ்வொரு நாளையும் அதன் சில முக்கிய சம்பவங்களையும் ஞாபகப்படுத்தி கூற முடியும் “என தன்னுடைய தனித்துவமான ஞாபகத்திறனை பற்றி வெளிப்படுத்தியிருக்கின்றார்.

Marilu Hanner
Marilu Hanner 

இவ்வாறாக இவ்வபூர்வ திறனானது ஏன் ஒரு நோய்க்குறியாக கருதப்படுகிறது என நம்முள் பலர் சந்தேகிக்கலாம் இது தொடர்பாக Rebecca Sharrock எனும் அவுஸ்திரேலிய எழுத்தாளர் BBCற்கு வழங்கிய பேட்டியில், “நான் இந்நிலைமையை ஒரு திறனாக கருதவில்லை ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் எனக்கு தொடர்ச்சியான தலைவலி ஏற்படும்.நான் அதிகப்படியான களைப்பு மற்றும் சோர்வு தன்மையை உணர்வேன் ” என்று கூறியிருக்கிறார்.

Rebecca sharrock 

ஆய்வுகளின் படி உலகின் மக்கள் தொகையில் 60 பேர் இந்நோய் நிலைக்குரியவர்கள் என கூறப்படுகிறது.

இது நோய்நிலைமை எனினும் உலகில் இவ்வகையான ஞாபகத்திறன் கொண்ட மனிதர்கள் இருப்பது அதிசயமாக இருக்கிறதல்லவா?

மேலதிக தகவலுக்கு, 

http://www.peoplewithpotential.org/hyperthymesia

2: கற்றறிஞர் நோய்க்குறி எனப்படும் Savant syndrome.
இந்நோய் நிலைமையானது முன்பு குறிப்பிட்ட Hyperthymesia உடன் நெருங்கிய தொடர்புடையதான ஒரு நிலையாகும். இந்த savant syndrome நோய்குறிக்கு உரியவர்கள் பொதுவாக அனைத்து கலைகளிலும் கைதேர்ந்ந்தவர்களாக இருப்பார்கள். அதாவது இவர்களுடைய அறிவு திறனானது கணிதம் சார் செய்முறைகள், நிலப்படக்கலை, இசை, வரைதல், வர்ணம் தீட்டுதல், 3D ரீதியான வரைதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் அதி உயர் ரீதியில் தேர்ந்து காணப்படும். இவ்வகை நிலைமை Autism (மனஇறுக்கம் ) எனும் நோய்நிலையை ஒத்ததாக காணப்படுகிறது. இந்நோய்க்குரியவர்களின் ஞாபகத்திறன் Hyperthymesia நோய்நிலைக்குரியவர்களின் ஞாபகத்திறனை போன்று மிகவும் தனித்துவமானது. இவர்களால் மிகப்பெரிய கணித செய்கைகளையும் குறுகிய நேரத்தில் தங்கள் மனதிலேயே தீர்க்கமுடியும்; அதேபோல் மிக நீண்ட நேரத்திற்கும் மிக வேகமாகவும் இவர்களால் இசைக்கருவிகளை வாசித்தலில் ஈடுபட முடியும். இவர்களின் அறிவுக்கூர்மை பற்றிய தேடலில் ஆச்சர்யப்பப்படுத்தும் விடயம் யாதெனில், பயிற்சிகள் ஏதுமின்றி ஒரு தடவை மாத்திரம் கேட்ட அறிவுறுத்தல்களை கொண்டு இவர்களால் மிகக்கடினமான எந்திரவியல் ரீதியான செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடியதாக இருப்பது என்பதாகும்.

Stephan wilt shire


இந்நிலைக்கு உதாரணமாக, இங்கிலாந்தை சேர்ந்த மிகப்பிரபல்யமான ஓவியக்கலைஞர் Stephen Wilt Shire ஐ அறியலாம். ஒரு தடவை மாத்திரம் London ஐ சுற்றி விமானவலம் வந்த இவரால் அந்நகரின் துல்லியமான வரைபடத்தை ஒரே தடவையில் வரைய முடிந்ததாக தகவல்கள் 2018ல் National Geography ல் வெளியாகின. மெய்யாகவே ஆச்சர்யம் அளிக்கிறது அல்லவா?

இந்நோய் நிலைக்குரியவர்களை நம்மில் பலர் அறிவாளிகள் எனக்கூறுவதுண்டு. மேலும் இவர்கள் குறிப்பிட்ட சில துறைகளில் மிகவும் கைத்தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
ஆனால் உண்மையில் இவர்களது செயற்பாடுகளும் திறமைகளும் உயரிய நிலையில் இருந்தாலும் இவர்களின் மனமானது முழுமை இல்லாததும் குறைப்பாடுகளை கொண்டிருப்பதுமே இவ்வதிசய நிலைமைக்கு காரணம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக தகவலுக்கு, 

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2677584/

https://www.nationalgeographic.com/news/2017/04/autism-artist-stephen-wiltshire-cities-genius/

3: பிறப்பிலிருந்தான வலி உணர்வின்மை எனப்படும் Congenital Insensitivity to Pain.

In – Born Analgesia என்ற மருத்துவ விஞ்ஞான பெயரால் அழைக்கப்படும் இந்நோய் நிலைமையானது மேற்குறிப்பிட்ட நோய்நிலைமைகளிலிருந்து பெரிதும் வித்தியாசமானதாகும். இது ஒரு மரபியல் ரீதியான நோயாக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோய்க்குரியவர்கள் வலி என்ற உணர்விலிருந்து முற்றாக விலக்கப்பட்டவர்கள் என்றே கூற வேண்டும். அதாவது இவர்களால் தங்களுக்கு ஏற்படும் எந்தவொரு வலியையும் உணரமுடியாது. உலகமெங்கும் அதிகமான இடங்களில் இந்நோய்க்குரியவர்கள் காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த தேடலில் சுவீடன் நாட்டின் சில கிராமப்பகுதிகளில் 40ற்கும் அதிகமான மனிதர்களுக்கு பிறப்பிலிருந்து இந்நோய்க்குறி காணப்பட்டதாக அறியப்பட்டுள்ளது. இன்னும் அதிகமானோர் கிழக்கு மற்றும் தென்னாபிரிக்க பிரதேசங்களில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக வலிகளை உணரும் திறனை இவர்கள் கொண்டிராமையும், மரபு ரீதியாக வலியை உணரும் இயல்பானது கடத்தப்படாமையுமே இந்நிலைக்குரிய முக்கிய காரணமாக எம்மால் அறிய முடியும். இந்நோய்க்குரியவர்களுள் சிலரால் பிறரின் தொடுகையை கூட உணர முடிவதில்லை என்பது எம்மை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

Ashlyn Blocker ( In-Born Anlgesia நோய்க்கு உற்பட்ட ஒரு பெண் )

நடைமுறையில் இந்நிலை என்பது மிகவும் பாதகமானதாகும். ஏனெனில் உடலானது தனக்கு எற்படும் சில பிரச்சனைகளை வலி எனும் உணர்வூடாகவே மூளைக்கு அறிவிக்கிறது; Analgesia நோய்க்குறிக்குட்பட்டவர்களால் இவ்வகை அறிவித்தலை பெறமுடிவதில்லை. இதற்காக இவர்கள் பிறருடைய உதவியை நாடியிருக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக சிறுவர்களுக்கு இந்நிலை மிகவும் ஆபத்தானது. விளையாட்டுகளின் போதும் ஏனைய கடினமான செயற்பாடுகளில் ஈடுபடும் போதும் தற்செயலாக நிகழும் பிழைகளால் எலும்பு முறிவடைதல், தசைகள் காயத்திற்குள்ளாதல் போன்றவற்றை கூட உணரமுடியாததால் இவர்கள் வேறுவிதமான உடலியல் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கவும் நேரிடுகிறது.

மேலதிக தகவல்களுக்கு, 

https://rarediseases.info.nih.gov/diseases/12267/congenital-insensitivity-to-pain

https://daily.jstor.org/people-who-cant-feel-pain/

4: காட்டேரிக்குரிய நோய்க்குறி எனப்படும் The Vampire syndrome.

நாம் பல Hollywood திரைப்படங்களிலும், கதைப்புத்தகங்கள் மற்றும் நாவல்களிலும் “காட்டேரிகள் (Vampire)” எனப்படும் இரத்தம் குடிக்கும் விலங்கு பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம் .அவ்வாறான காட்டேரிகளின் உருவவியல் அமைப்பு மற்றும் இயல்புகள் ஆகியன இயற்கையில் மனித இயல்புகளுக்கு அப்பாற்பட்டதாக காணப்படுகிறது. உண்மையில் இந்த காட்டேரிகள் என்ற ஒன்று இருக்கிறதா அல்லது இது ஒரு சுவாரஸ்யமான கட்டுக்கதையா என்ற கேள்விகளுக்கு இந்நோய்ந்நிலைமை ஒரு பதிலாக அமைகிறது.

Hypohdrotic Ectodermal Dysplasia என்ற வேறுபட்ட மருத்துவ விஞ்ஞான பெயரால் அழைக்கப்படும் இந்நோய் நிலைமையானது தோற்றத்திலும், இயல்பிலும் காட்டேரிகளை ஒத்த மனிதர்களை குறித்து நிற்கின்றது.

இந்நோய்க்குரியவர்கள் நியம அளவிலும் பார்க்க மிகவும் குறைந்த அளவில் வியர்வை வெளியேறும் மரபியல் குறைபாடு கொண்டவர்களாவர். அதாவது, இவர்களின் உடலின் வியர்வை வெளியேறும் தொழிற்பாடானது ஏனைய மனிதர்களிலிருந்து மிகவும் மாறுபட்டதாக காணப்படுகிறது. வியர்வை வெளியேறுதல் என்பது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் மிக முக்கியமான கருமம் ஆகும். இந்த Vampire Syndrome நிலைக்குரியவர்களுக்கு இத்தொழிற்பாடு சீராக நடைப்பெறாமையினால் இவர்களால் வெப்பக்காலநிலைகளில் அதிக நேரம் இருக்கமுடியாது. இதனால் அவர்கள் எப்போதும் தங்கள் உடலை மிகவும் குளிர்ந்த நிலையில் வைத்துக்கொள்ளும் தேவை கொண்டவர்களாக உள்ளனர். இவ்வதிசய உடலியல் இயல்புகளை போலவே உருவவியல் அம்சங்களும் இவர்களில் வேறுபட்டு காணப்படுகிறது. அதாவது இவர்கள் உலர்வான மற்றும் வெளிறிய சருமம், மிக மெல்லியதும் நீண்டதுமான உடலமைப்பு, சுற்றி கருவளையமுள்ள உலர்வான கண்கள், நீண்ட காதுகள், கூர்மையான பற்கள் என உண்மையில் காட்டேரிகளை உருவகிப்பதற்கான தோற்றத்தை கொண்டவர்களாக காணப்படுவது அகிலத்தின் அதிசயமாகும்.

Michael Berryman

இந்நோய்க்குறிக்குற்றப்பட்டவருக்கு மிக அறிந்த உதாரணமாக Hollywood திகில் திரைப்படங்களில் நடித்துவரும் கொரிய நாட்டினை சேர்ந்த நடிகரான Michael Berryman ஐ எடுத்துக்காட்டலாம். இரத்தம் குடிக்கும் காட்டேரிகள் என்ற கதாப்பாத்திரத்தின் தோற்றம் எங்கிருந்து வந்தது என்பதை இப்போது அறிய முடிகிறதா?

மேலதிக தகவல்களுக்கு, 

https://www.nfed.org/learn/types/hypohidrotic-ectodermal-dysplasia/

அகிலம், நாம் நினைப்பதற்கும் அதிகமாகவே நம்மை வியக்கவைக்கிறது என்பதற்கு இவைகளும் ஒரு சான்றே;

எது எவ்வாறாயினும் நாம் அறிவதற்கும், புரிவதற்கும் இன்னும் அதிசயங்களும், அறிவியல் தகவல்களும் காத்துக்கொண்டே இருக்கின்றன. அலைகளை போன்று அறிவதற்கும் எல்லை இல்லை. உலகம் இயங்கும் வரை நம் அறிவியல் தேடலும் தொடர்ந்தவண்ணமே இருக்கும் !

Related Articles