
எத்தனை விதமான ஆபரணங்கள் வந்தாலும் தங்கம் மீதான மதிப்பும் மோகமும் நம்மிடையே குறையப்போவதில்லை. அந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் நமது செல்வநிலையை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது தங்கம்.
தங்கம் ஒரு உண்ணத்தக்க உலோகம் என்று கூறப்படுகிறது.

பட உதவி : thetravel.com
உலகத்தின் ஒவ்வொரு கண்டத்திலும் தங்கம் இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பட உதவி : static.vecteezy.com
உடலில் 0.2 மில்லிகிராம் தங்கம் இருக்கிறது இது பெரும்பாலும் இரத்தத்தில் சேர்ந்துள்ளது.

பட உதவி : www.tech-connect.info
யூகலிப்டஸ் மரத்தின் இலைகளில், தங்கத்துக்கான சிறு தடயங்கள் காணப்படுகின்றன.

பட உதவி : rutupic.pw
ஒலிம்பிக் கோல்டு மெடலில் 1.34 % மட்டுமே தங்கம் சேர்க்கப்பட்டிருக்கும்.

பட உதவி : www.businessinsider.com
பல கோடி டன் எடையுள்ள தங்கம் சூரியனில் இருக்கிறது.

பட உதவி : pinterest.com
உலகத்திலுள்ள கடல்கள் முழுவதிலும் சுமார் 20 மில்லியன் டன் தங்கம் இருக்கிறது.

பட உதவி : shutterstock.com
ஆரோஃபோபியா (Aurophobia) என்பது தங்கம் குறித்த அச்ச உணர்வாகும்.

பட உதவி : www.om1.ru
தலை முடியிலும் சிறு தடயங்களில் தங்கத்தைக் கண்டறிய முடியும்.

பட உதவி : silviomessina.pw
தொலைபேசிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் இருக்கின்றது அதைக்கொண்டு உலகில் உள்ள அனைவருக்கும் நான்கு கிலோ தங்கம் கிடைக்கும்.

பட உதவி : curentcontinuu.blogspot.com
உலகின் பாதி அளவு தங்கம், தென்னாப்பிரிக்காவில் உள்ள விட்வாட்டர்சரண்ட் (Witwatersrand) எனும் பகுதியில் இருந்து கிடைக்கிறது.

பட உதவி : sawoasamkuningabangijo.subir.pw
துபாயில் தங்கக்கட்டிகளை ஏ.டி.எம் ஊடாக பெற்றுக்கொள்ள கூடிய தொழிநுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பட உதவி : vtvgujarati.com
அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் கடுகளவாவது தங்கம் நிச்சயம் நம்மிடம் இருக்கும். ஏனெனில் தங்கமானது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓர் அங்கமாக மாறிவிட்டது. நம்மை அலங்கரிக்கும், ஜொலிக்கும் தங்க ஆபரணம் இல்லாமல் எந்த ஒரு விசேஷமும் முழுமையடையாததாக இருக்கிறது.இயற்கையின் அரியதோர் அறிவியல் நிகழ்வால் உருவாவதால் என்னவோ, தங்கத்தின் மதிப்பு எப்போதும் நம் மக்களிடையே குறைவதே இல்லை.