Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கையின் சட்ட அமைப்பு எவ்வாறு உதவ முடியும்

உலகெங்கிலுமுள்ள பெண்கள் மாபெரும் விகிதாசாரத்தை கொண்ட ஒரு பிரச்சினைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறையே இப் பிரச்சினையாகும். இலங்கையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் கவனிக்கப்படாத ஒரு எதிரியாக இருந்துவருகிறது. ஏனென்றால் இவ் துஷ்பிரயோகத்திற்கு எதிரான நடவடிக்கைகள்- மற்றும் அவற்றில் காணப்படும் பற்றாக்குறை – இவ்வாறான வன்முறைகளை தொடரச் செய்கின்றது. எனினும் இவைதொடர்பான கொள்கை செயற்படுத்தலானது முக்கியமானது என்பதுடன் இந்த விடயம் தொடர்பான கல்வி மற்றும் இச்சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையான மனநிலையும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணிகளாகும். 

இலங்கையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் கவனிக்கப்படாத ஒரு எதிரியாக இருந்துவருகிறது. ஏனென்றால் இவ் துஷ்பிரயோகத்திற்கு எதிரான நடவடிக்கைகள்- மற்றும் அவற்றில் காணப்படும் பற்றாக்குறை – இவ்வாறான வன்முறைகளை தொடரச் செய்கின்றது

UNHCR இற்கிணங்க, பாலியல் மற்றும் பாலின ரீதியான வன்முறை (sexual and gender-based violence – SGBV) என்பது ஒரு நபரின் விருப்பத்திற்கு எதிராக அவர்கள் மீது புரியப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் குறிக்கும்.  அத்துடன் இது பாலின விதிமுறைகள் மற்றும் சமமற்ற அதிகாரமுடைய உறவுமுறைகளையும் அடிப்படையாக கொண்டது. WHO மதிப்பீட்டின்படி உலகெங்கிலும் 3 இல் 1 பெண் உடலியல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை தங்களுக்கு நெருங்கியவர்கள் அல்லது அந்நியர்கள் மூலமாக தமது வாழ்நாளினுள் அனுபவிக்கின்றனர். இருப்பினும் இவ்வாறான வன்முறை செயல்கள் பதிவு செய்யப்படாது போகின்றன. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

இதன் ஒரு காரணமாக, விளைவுகள் பற்றிய அச்சத்தை குறிப்பிடலாம். இது புகார் அளித்தலால் மேலும் நிலைமை மோசமாக்கப்படலாம் என்ற கவலையையும்மற்றும்  சமூக களங்கம் குறித்த அச்சத்தையும் உள்ளடக்குகிறது. சிலசமயங்களில் பாதிக்கப்பட்டவர், கொடுமையை புரிந்தவர் மீது பொருளாதார ரீதியாக தங்கியிருப்பின் அது புற ஆதாரங்களிலிருந்து உதவி பெறும் எண்ணத்தை திசைதிருப்புகின்றது.

அத்துடன் சட்ட அமுலாக்க அதிகாரிகளும் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பும் புகார்கள் அளிப்பதற்கு  ஊக்குவிக்காமையும் காரணமாக இருக்க முடியும். மேலும் குற்றம் புரிந்தவர்கள் தமது அரசியல் செல்வாக்கு அல்லது சட்ட அமுலாக்க அதிகாரிகளுடனான தொடர்புகளை பயன்படுத்தி நீதியிலிருந்து விடுபடுவதும் பொதுவான செயலாகவே இருந்துவருகிறது. 

இவற்றுடன் தமக்குரிய சட்ட பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள இயலாமையுடன் எவ்வாறு தமக்கு சட்டம் உதவி புரியும் என்பது பற்றிய போதுமான விழிப்புணர்வின்மையும் ஒரு காரணியாக உள்ளது. பெண்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டம் எவ்வாறு உதவும் என்று அறிந்திராமையும் அவர்களை மோசமாக பாதிப்பதுடன் குற்றவாளிக்கு இலகுவாக தப்புவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது.

பாதிக்கப்பட்டவர்களை குற்றஞ்சாட்டுவது பரவலான செயலாக இருப்பதுடன் முடிந்தவரை இது பெண்களுக்கெதிரான வன்முறையினை புரிபவர்களை குற்றஞ்சாட்டலுக்கு கவனம்செலுத்த வேண்டும். வன்முறை நிகழும்போது பாதிக்கப்பட்டவர் தம்மை தாழ்வாக உணர்தல், தாம் முகங்கொடுத்த சூழ்நிலையால் சக்தியற்ற நிலைக்கு தள்ளப்படல் மற்றும் சூழவுள்ளோரால் அவமானப்படுதல் ஆகியன பொதுவானதாகும். இது சுய பழிசுமத்தல் நிலையை ஏற்படுத்தும். சுய பழிசுமத்தலானது பெண்கள் உதவியை நாடுவதை தடுக்கும். இவையனைத்துடன் இணைந்து இன்னும் பல காரணிகளும் பெண்களில் மிகக்குறைவானவர்களே தமக்கெதிரான வன்முறைகளுக்காக புகாரளிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நெருங்கிய துணை வன்முறைக்குட்படுத்தப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாகும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தமது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் போன்று பலரால் கொடுமைக்குள்ளாக்கப்படும் வாய்ப்புள்ளதால் இது கவனிக்கப்பட வேண்டும். இதனாலேயே மக்கள் தமக்குரிய அதிகாரங்கள் பற்றிய அறிவு மற்றும் எவ்வாறு சட்ட ஒழுங்கானது தமக்கு உதவ முடியும் என்பதையும் அறிந்திருத்தல் மிக முக்கியமானது. இன்னும் பல காரணிகளை குறிப்பிடப்பட வேண்டியுள்ள போதிலும் மிகவும் பரவலான வன்முறை சட்டங்கள் மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீதியமைப்பானது எவ்வாறாக பாதிக்கப்பட்டோருக்கு உதவும் என்பதும் கீழே  தரப்பட்டுள்ளன.

குடும்பங்கள் தமது பிரச்சினைகளை மூடி மறைத்தலை சமுகமானது உறுதிப்படுத்துவதானது பெண்கள் மற்றும் சிறுவர்களை இன்னல்களுக்கு ஆளாக்குகின்றது, முக்கியமாக குடும்பத்திற்குள் வன்முறைகளின் வெளிப்பாடுகளைத் தடுக்கும் போது இது இடம்பெறுகின்றது.

உள்ளக வன்முறை

இலங்கையில் குடும்ப விடயங்கள் அதிகமாக மூடி பாதுகாக்கப்படுவதுடன் தனிப்பட்ட ரீதியில் பேணப்படுகின்றன. இது  நாம் கடைபிடித்துவரும் நம்பிக்கையாக இருப்பினும், இது பாரிய சமுக பிரச்சினைக்கு பங்களிக்கின்றது; இதுவே உள்ளக வன்முறை.

இந்தப் பிரச்சினை மிகவும் பரவலாக பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கின்றது. சமுகமானது குடும்பங்கள் தமது பிரச்சினைகளை மூடி மறைத்தலை உறுதிப்படுத்துவதானது பெண்கள் மற்றும் சிறுவர்களை இன்னல்களுக்கு ஆளாக்குகின்றது, முக்கியமாக குடும்பத்திற்குள் வன்முறைகளின் வெளிப்பாடுகளைத் தடுக்கும் போது இது இடம்பெறுகின்றது. இது ஒரு குற்றமாக இருந்தபோதிலும் பெரும்பாலும் பொது மக்களால் அவ்வாறு கருதப்படுவதில்லை. எம்மில் பலர் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஒரு ஆண் மனைவியைத் தாக்குவதை நியாயப்படுத்தும் மக்களும் இருக்கின்றார்கள். இதிலிருந்து ஒரு வழுக்கல் நிலை ஆரம்பமாகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையினால் 2016 இல் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வுக்கமைய 17% பெண்கள் அவர்களின் நெருங்கிய துணையால் உள்ளக வன்முறைக்கு உள்ளாகின்றனர் எனும் தரவு பதிவுசெய்யப்பட்டது. மேலும் ஆய்வுக்குட்பட்டவர்களுக்கு வினாத்தொகுதி வழங்கப்பட்ட போது 7%  மானவர்கள் அவர்களின் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படும் என்ற பயத்தினால் கலந்து கொள்ள மறுத்து விட்டனர். எனினும் ஆய்வுகளின் வெளிப்பாட்டின் படி, உள்ளக வன்முறைக்கு ஆளானதாக பதிலளித்தவர்களில் 20% நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், 16% கிராமப்புறத்தையும் 17% தோட்டப்புறத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

பெண்கள் அமைப்புகளின் பலவருட முயற்சிக்குப்பிறகு உள்ளக கொடுமைகளை தடுத்து பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் 2005 இல் உள்ளக வன்முறை தடுப்புச்சட்டம் அமுலாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் 23 ஆம் பிரிவின்படி ‘உள்ளக வன்முறை’ என்பது உயிரைப் பாதிக்கும் செயல்கள், காயம் ஏற்படுத்துதல், தவறான கட்டுப்படுத்தல் மற்றும் சிறைப்படுத்தல், குற்றவியல் பிரயோகம் மற்றும் தாக்குதல், கடத்தல், பலாத்காரம் மற்றும் அடிமையாக்கல், வன்புணர்வு,கூடாபாலுறவு மற்றும் சில பிரச்சினைகள் தொடர்பான தகவல்களை வெளியிடல்; பலாத்காரமான பணப்பறிப்பு, குற்றவியல் மிரட்டல் மற்றும் மேற்க்கூறிய செயல்களில் ஈடுபட முனைதல்; அல்லது எந்தவித உளவியல் கொடுமைகள், (இவற்றுள் ஒன்று) வீட்டுச்சூழலில் அல்லது வெளியில் சம்பந்தப்பட்ட நபரால் மேற்கொள்ளப்படுத்தல் அல்லது முனைதல் மற்றும் கொடுமைக்காளான நபர் மாறும் சம்பந்தப்பட்ட நபருக்கிடையிலான தனிப்பட்ட உறவிலிருந்து எழுகின்ற செயல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் ஆகும்.

Source: http://www.statistics.gov.lk

பாலியல் துன்புறுத்தல்

2017, UNFPA ஆய்வின் பிரகாரம், பொதுப்போக்குவரத்தின் போது 90% பெண்கள் ஏதோவொரு விதத்திலான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இது குறிப்பட்ட இடத்தில் அல்லது குறித்த காலத்தில்  இடம்பெற்றதாக சொல்லமுடியாமை துரதிஷ்டவசமானதாகும். பாலியல் துன்புறுத்தல்களானவை அலுவலக சூழலிலிருந்து பொது கழிப்பறை வரை மற்றும் வைத்தியசாலைகளிலும் கூட எந்தவொரு இடத்திலும் இடம்பெறலாம். பாலியல்  துன்புறுத்தலுக்கென குறிப்பிட்ட குறியீடு ஏதுமில்லை என்பதுடன் யாராயினும் இதில் எளிதாக பாதிக்கப்படலாம் என்பதால், இது இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பிரச்சினை அல்ல.

பாலியல் துன்புறுத்தல்களானவை அலுவலக சூழலிலிருந்து பொது கழிப்பறை வரை மற்றும் வைத்தியசாலைகளிலும் கூட எந்தவொரு இடத்திலும் இடம்பெறலாம்.

தண்டனை சட்டத்தின் பிரிவு 345 இற்கமைய தாக்குதல் அல்லது குற்றவியல் நடத்தையினால் மற்றொரு நபரை பாலியல் ரீதியாக துன்புறுத்தல், அல்லது வார்த்தைகள் அல்லது நடத்தையின் மூலமாக பாலியல் தொல்லைகள் அல்லது துன்புறுத்தலை  மேற்கொள்ளும் எந்தவொரு நபரும் பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபட முனைந்ததாக கருதப்படுவார். இது ஆபாச சைகைகள், தேவையற்ற முன்னெடுப்பு மற்றும் தவறான முறையில் தகவல் தொடர்பு கொள்ளல் உட்பட இன்னும் பலவற்றை உள்ளடக்கும்.

1980 ஆம் ஆண்டின் ஊழல் சட்டத்தின் கீழ், வேலையிடத்தில் பாலியல் ரீதியான தொடர்பை பெறல் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். அவ்வாறான துன்புறுத்தல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில், மகளிர் மற்றும் சிறுவர் காவல்துறை, Women in Need(WIN) மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையம், NCPA (பாதிக்கப்பட்டவர் 18 வயதிற்கு குறைந்தவராக இருப்பின்) ஆகியன உதவ முடியும். 

நடவடிக்கையானது பொது போக்குவரத்தின் போது இடம்பெறுமாயின் அதனை பொது போக்குவரத்து ஆணையம், காவல்துறை, WIN அல்லது NCPA இல் முறையிட வேண்டும்.

கல்வி நிலையத்தில் இவ்வாறு இடம்பெறுமாயின் அதனை அதிபர் அல்லது உயர் நிர்வாகியிடம் முறையிடவும். எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படாதவிடத்து காவல்துறையினரிடம் முறைப்பட வேண்டும்.

வன்புணர்வு கலாச்சாரத்தின் துரதிர்ஷ்டவசமான விளைவு யாதெனில் பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டப்படும் போது நீதியானது மிகவும் அரிதாகவே கிடைக்கின்றது

வன்புணர்வு/ சட்டரீதியான வன்புணர்வு

பாதிக்கப்பட்டவரின் நிலையை கருத்திற்கொள்ளாது, ஒப்புதலற்ற பாலியல் இடைத்தொடர்பை மேற்கொள்ளும் செயலே வன்புணர்வு ஆகும். பாதிக்கப்பட்டவரின் ஒப்புதலுடன் அல்லாது அல்லது ஒப்புதல் அளிக்காது இடம்பெறின் அது தண்டனைச்சட்டத்தின் 363 ஆம் பிரிவின் கீழ் வன்புணர்வு ஆகும். பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் பெரும்பாலானவை பெண்கள் என்பதுடன், காவல்துறையினர் வெளியீட்டின்படி இலங்கையில் 2015 இல் பதிவான சம்பவங்களில் 80% 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தண்டனைச்சட்டத்தின் 363(e) பிரிவின்படி 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுமி எனின், ஒப்புதலுடனான பாலியல் இடைத்தொடர்பும் வன்புணர்வு ஆகும்.

வன்புணர்வு கலாசாரத்தின் துரதிர்ஷ்டவசமான விளைவு யாதெனில் பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டப்படும் போது நீதியானது மிகவும் அரிதாகவே கிடைக்கின்றது. இது வயதுக்கு கீழ்ப்பட்ட பங்கேற்பாளர்கள், ஊக்கமளித்த நபர்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்குகிறது. வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையானது, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரி ஒருவரிடம் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். 

பின்னர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும்; பெண் காவல் அதிகாரி ஒருவரின் உதவியை கோர முடியும் அல்லது அங்குள்ள மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறையிடலாம்.

இணைய முறைகேடு

நாம் தொழிநுட்பத்தில் தங்கியிருப்பது அதிகரிக்கும் வேளையில், நாம் எமக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்துகொண்டே வருகிறோம். இவ்வாறான வலையமைப்பானது அனுகூலம் பிரதிகூலம் இரண்டையுமே கொண்டுள்ளது. தற்போதுள்ள பாரிய பிரதிகூலம் என்னவென்றால், தவறான எண்ணம் கொண்ட நபர்கள் மற்றவர்களை இணையவழியால் துஷ்பிரயோகம் செய்ய முடியும், அந்த நபருடன் நேரடி தொடர்பு இல்லாத போதும் அழுத்தத்திற்கு உட்படுத்தல், தற்கொலை எண்ணத்தை தோற்றுவித்தல் மற்றும் தற்கொலைக்கு உட்படுத்தவும் முடியும் என்பதுதான்.

CERT|CC இனால் 2017 இல் நடாத்தப்பட்ட ஆய்வில் பதிலளித்தவர்களுக்கமைய 14% தவறாக பயன்படுத்தியும், 12% இணைய மிரட்டல்களாலும் மற்றும் 3% இணைய மோசடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பிரச்சினை யாதெனில், இணைய வழியில் இடம்பெறுவதால் பலரால் இது அச்சுறுத்தலாக எண்ணப்படுவதில்லை. எனினும் இணையவழி துஷ்பிரயோகம் என்பது பாரதூரமானதாகும்.

ஒரு குறிப்பிடத்தக்க சம்பவமானது 2017 இல் உலகெங்கும் பரவியது. Wonder Woman போன்று உடையணிந்த இரு இலங்கையர்கள் அவர்களின் ஆடைக்காக நிந்திக்கப்பட்டதுடன் உடல் ரீதியாக அவமானம் மற்றும் பல memeகளில் பயன்படுத்தப்பட்டு சமுக வலைத்தளங்களில் பல மோசமான கருத்துகளுக்கு ஆளாயினர். இந்த விடயம் Wonder Woman நடிகையான கல் கடோட் (Gal Gadot) மற்றும் இயக்குனர் பெட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins)) ஆகியோரை அடைந்து அவர்களால் அந்த பெண்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டது.

எனினும், பல கீழ்த்தரமான, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தக்கூடிய மற்றும்  அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சம்பவங்கள் உள்ளன. தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமுககுழுக்களுக்கிடையில் விநியோகிக்கப்பட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறான பாரிய சம்பவங்கள், ஒரு நபரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்துவதற்கு மேலதிகமாக பல விளைவுகளை ஏற்படுத்துவதால் சிறிது பாரதூரமானதாகும். இது தனிநபர்களின் அறிவுக்குட்படாமல் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை பதிவேற்றம் செய்தல் மற்றும் மிரட்டல், அச்சுறுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.

ஒருவர் இணைய முறைகேட்டுக்கு ஆளாகும் சந்தர்ப்பத்தில் அவர்கள் காவல்துறை மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு, WIN அல்லது CERT இல் உதவியை நாட முடியும்.

SGBV தொடர்பான சமூக களங்கமானது பாதிக்கப்பட்டவர்களை அவமானத்திற்கு ஆளாக்குவதுடன் அவர்களின் அவஸ்தைகளை வெளிப்புற உதவிகளை நாடுதலிலிருந்து பின்வாங்க வைக்கின்றது

SGBV பாதிப்பாளர்கள் நீதியை பெற்றுக்கொள்வதில் முகங்கொடுக்கும் தடைகள் 

SGBV பாதிப்பாளர்களுக்கு உதவ இலங்கை சட்ட அமைப்பு முறைகள் இருந்தபோதிலும் முக்கியமாக SGBV பாதிப்பாளர்களை நோக்கும் விதம் மற்றும் நடாத்தும் முறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. WIN  சட்டத்தரணிகள் மற்றும் ஆலோசகர்கள், வைத்தியசாலை மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு ஆலோசகர்களுடனான நேர்காணல்களுக்கமைய SGBV பாதிப்புக்குட்பட்டவர்கள் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் பாகுபாடு மற்றும் பிழையான நடத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

எமது சமூகத்தின் பாரம்பரிய அமைப்புக்களால் குடும்பத்திற்குள்ளான SGBV சம்பவமானது ‘உள்ளக பிரச்சினையாக’  சில காவல் அதிகாரிகளால் கருதப்படுவதுடன், அதில் தலையிட மறுப்பதுவும் நிகழ்த்துவருகிறது. இதே வகையில், SGBV உடன் தொடர்பான சமூக களங்கமானது பாதிக்கப்பட்டவர்களை அவமானத்திற்கு ஆளாக்குவதுடன் அவர்களின் அவஸ்தைகளை வெளிப்புற உதவிகளை நாடுதலிலிருந்து பின்வாங்க வைக்கின்றது.

அத்துடன் SGBV பாதிப்பாளர்கள் சில சட்ட அமுலாக்க அதிகாரிகளால் தவறாக நடாத்தப்படும் பிரச்சினைகளும் உள்ளன. பாதிக்கப்பட்டவர் கூறும் சம்பவத்தை கேட்க மறுத்தல், பாதிக்கப்பட்டமைக்காக அந்த நபரை குற்றஞ்சாட்டல், பாதிக்கப்பட்டவர் சம்பவத்தை முதலிலேயே முறையிடாததாக குற்றஞ்சாட்டல் போன்ற பல இவ்வாறான சம்பவங்கள் ஆகும்.

அதுமட்டுமல்லாது சில ஆண் சட்டத்தரணிகள் மற்றும் காவல் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்களின் வழக்கை கருத்திற்கொள்ள பாலியல் திருப்தியை எதிர்பார்த்தல், அந்த நபரை மேலும் பாதிப்படைய செய்கின்றது.

இவ்வாறான இரக்கமற்ற மற்றும் பாதிக்கும் செயல்கள் பாதிப்படைத்தவர்களை, முறையிடல், அதே பாதிப்பான சூழ்நிலையில் அவர்களை இருக்க வைத்தல் மற்றும் அவர்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாக்குகின்றன.

எனினும் , மறுபக்கத்தில் முறையான நீதி துறையிலிருந்து பல சாதகமான விளைவுகளும் கிடைத்துள்ளன. உதாரணமாக, பாதிப்படைந்தவர்கள் நீதிமன்றில் சம்பவத்தை கூறும் போது அவர்களை சௌகரியமாக்கும் மற்றும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிபதிகள் கருணையுடனும் பொறுமையாகவும் வாதியின் நன்மைக்காக விடயங்களை விளக்கவும் முயற்சி எடுத்துள்ளனர்.

எனினும் பாதிப்படைந்தவர்கள் பக்கத்திலிருந்து பார்க்கும் போது அவர்கள் நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்றுக்கொள்ளல் குறிப்பாக இலங்கையின் சட்ட அமைப்பின் படி நம்புதல் மிகவும் கடினமானது. இதனாலேயே பொதுமக்களை, பிரஜைகள் என்ற ரீதியில் அவர்களின் அதிகாரங்கள் பற்றியும்  எவ்வாறு சட்ட அமைப்புக்கள் அவர்களுக்கு உதவுகின்றன எனவும் அறிவுறுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள்ளன.  

SGBV பாதிப்படைந்தவர்களுக்கு உதவி புரியும் நோக்குடன் பல அரசு மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் செயற்படுகின்றன. உதாரணமாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் பாலின ரீதியான முறைப்பாடுகளுக்கான பிரிவானது பாதிப்படைந்தவர்கள் உள்ளக வன்முறை உள்ளிட்டவற்றை முறையிடும் வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.

‘1938’ என்ற அவசர தொடர்பாடல் இலக்கமானது மார்ச் 2016 இல் பாதிக்கப்பட்டவர்களை உரிய அமைப்புடன் இணைக்க அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது பெண்களுக்கான சட்ட உதவிகள் பெண்களுக்கான தேசிய அமைப்பினால் வழங்கப்படும். உரிய அமைப்பிற்கு முறைப்பாடு செய்யப்பட்டவுடன் நிலைமைக்கான தீர்வு வழங்கப்படும் வரை உதவிப்பிரிவினால் கண்காணிக்கப்படும்.

Women In Need (WIN) என்ற அமைப்பானது பெண்களுக்கு அவர்களுடைய அதிகாரங்கள் பற்றி அறிவுறுத்தல், இலவச சட்ட ஆலோசணை வழங்கல் மற்றும் பல உதவிகளை வழங்குகின்றது. இது SGBV பாதிப்படைந்தவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிற்றல் மற்றும் குற்றவாளிக்கு எதிராக எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. இவர்கள் பாதிப்படைந்தவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்குவதுடன் நடப்பிலுள்ள சட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

காசல் வீதியிலுள்ள Women’s Mithuru Piyasa விற்கான வைத்தியசாலையானது பாதிப்படைந்தவர்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் ஏனைய சேவைகளை வழங்குகின்றது. பாதிப்படைந்தவர்களுக்கு சட்ட மற்றும் பொருளாதார உதவி வழங்கும் NGOக்கள் அவர்களை நீதிமன்றிற்கு கொண்டு செல்வதற்கான பொருளாதார உதவிகளை வழங்குகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் Asia Foundation ஆகியன SGBV இற்கான இலங்கையின் சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

Asia Foundation, WIN உடன் 2six4 செயலி அறிமுகத்திற்காக இணைந்துள்ளது. இந்த செயலியானது பாதிப்படைந்தவர்கள் அல்லது பார்ப்பவர்கள் உடனடியாக குறிப்பிட்ட இலக்கங்களுக்கு அவசர சந்தர்ப்பத்தில் தகவல் பரிமாற வழிசெய்கின்றது. அத்துடன் ஒரு செயன்முறையின் மூலம் பாவனையாளரை அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ள செய்கின்றது. பாவனையாளர் SGBV சட்டங்கள் தொடர்பான தகவல்களையும் இதில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த அனைத்து செயற்பாடுகளினதும் நோக்கமானது குற்றவாளிகள் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படுவதை தடுத்தல் மூலம் பாதுகாப்பான வாழும் நிலையை உறுதிப்படுத்தலும் மேலும் இது போன்ற செயல்களை தடுத்தலும் ஆகும். இவற்றோடு பெண்களை அவர்களின் உரிமைகள் தொடர்பாக அறிவுறுத்தலுக்கான நிகழ்வுகளும் உள்ளன.

பாதிப்படைந்தவர்களுக்கு உதவுவதற்கான  நடவடிக்கைகள் அதிகரிக்க மற்றும் பெண்கள் அவர்களின் குரலை உயர்த்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்க குற்றம் புரிந்தவர்கள் தப்புவதற்கான வாய்ப்புக்கள் குறைகின்றன.பிரஜைகள் இந்த விடயம் தொடர்பில் அதிகமான நடைமுறை நிலைகளையும் சரியான கல்வியையும் பெற்றுக்கொள்ளும்போது காலத்துடன் குற்றம் புரிபவர்களின் எண்ணிக்கையை குறைக்க இயலுவதோடு இலங்கையை மேலும் வாழத்தகுந்த பாதுகாப்பான சமுகமாக மாற்ற முடியும். 

பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் எழுத்தாளரின் முழுப் பொறுப்பாகும் என்பதோடு அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக்களை பிரதிபலிக்கும் அவசியத்தில் எழுதப்படவில்லை.

Related Articles