மகாராணியின் மறைவு: “ஓபரேஷன் யூனிகோர்ன்”எனும் பெயரில் திட்டமிடப்பட்டுள்ள இறுதி நிகழ்வுகள்!

பிரித்தானியாவின் நீண்ட கால அரச ஆட்சியாளராக விளங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 71 வது ஆட்சியாண்டின் 214வது நாளன்று (செப்டெம்பர் 8, 2022) ஸ்கொட்லாந்தின் பெல்மோரல் அரண்மனையில் இயற்கையேதினார். ராணியாரின் இறுதிச் சடங்குகள் தற்போது பிரித்தானியாவில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் பத்து நாட்கள் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பாதி முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் சுருக்கத்தைக் காண்போம். 

கடந்த இரு ஆண்டுகளில் அரச குடும்பம் மற்றும் அவர்களின் நடத்தைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகளும், உரையாடல்களும் இணையத்தில் நிகழலாயின. அதன் வழியே அரச குடும்பம் குறித்து முக்கியமான செய்தியவந்து பேசு பொருளாகியது; அரச குடும்பத்தை நிர்வகிக்கும் ஒரு நிழற்குழு. ஓட்டு மொத்த பிரித்தானிய அரச குடும்பமும் இந்த கைகளால் ஆட்டுவிக்கப்படும் பாவைகள் மட்டுமே என பலரும் பேசத் தலைப்பட்டனர். அரச வாழ்க்கை கூண்டிலில் அடைபட்ட பறவைகள் போன்றதே என விமர்சனங்கள் எழுந்தன.

அரச குடும்பமானது “நிறுவனம்” ஒன்றினால் கட்டுப்படுத்தப்படுவது அனைவரும் அறிந்த மந்தனமாக உள்ள நிலையில்  அந்த நிறுவனம் யார்? அவர்களின் செயற்பாடுகள் என்ன? என்பது இது வரை தெளிவாக தெரியவில்லை. அரச குடும்பத்தினர் எப்போது, எங்கு, யாரை சந்திக்க வேண்டும், யாரிடம், என்ன, எப்படி பேச வேண்டும், சுற்றுப் பயங்களின் போது எங்கு, எவ்வளவு நேரம் தங்க வேண்டும் என்பது தொடங்கி என்ன, எப்போது, எவ்வாறு உண்ண வேண்டும் என அனைத்தையும் முடிவு செய்யும் இந்த நிறுவனம் இப்போது மகாராணியின் இறுதிச்சடங்குகளுக்கும் அடி முதல் நுனி வரை அனைத்தையும் திட்டமிட்டுள்ளனர். திட்டத்தின் பெயர்; ‘ஓபரேஷன் யூனிகோர்ன்’

இளவரசர் ஹரியின் திருமண நிகழ்வின் போது அரச குடும்பத்தினர்: புகைப்பட உதவி:BBC.com

ஐக்கிய ராஜியம் போன்ற ஒரு வளர்ச்சியடைந்த வல்லரசின் மகாராணியின் இறப்பென்பது உலகளவில் பல்வேறு தாக்கத்தை உண்டாக்கக்கூடிய ஒரு நிகழ்வாகும். மகாராணியின் இறப்பு மற்றும் இறுதியடக்கம் ஆகிய தினங்கள் அரச விடுமுறைகளாக அறிவிக்கப்படுவதுடன், அன்றைய தினங்களில் பிரித்தானிய பங்குச்சந்தை முழுவதும் மூடப்படும், இது நாட்டிற்கு பல மில்லியன் இழப்பை ஏற்படுத்தும் என்றாலும், அரச குடும்பத்தின் மீது உள்ள மதிப்பின் பேரில் இவை செய்யப்பட்டேயாக வேண்டும். மாகராணியின் இறப்பு என்பது பல கோடி பவுண்டுகள் செலவை ஐக்கிய ராஜியத்துக்கு ஏற்படுத்தும், பல்வேறு உலகத் தலைவர்கள் ஒன்று கூடும் இடம் என்பதால் பாதுகாப்பு செலவீனங்களும், பராமரிப்பு செலவீனங்களும் பெருகும்.

கட்டுக்கடங்காமல் வரும் மக்கள் திரளை நெறிப்படுத்த அதிகளவு மனித வலு தேவைப்படும். இவ்வாறான பல நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளவும், அரச குடும்பத்தின் உயர்வான நெறிமுறைகளை பேணுவதற்காகவும் ‘நிறுவனமானது’ 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரு திட்டங்களை வகுத்துவிட்டது. ஒன்று, “The London Bridge is Down” மற்றொன்று, “Operation Unicorn”. முதலாவது திட்டமானது மகாராணியார் பாக்கிங்ஹாம் மாளிகையில் இறக்கும் பட்சத்தில் பின்பற்றப்பட வேண்டிய திட்டமாகும், இரண்டாவது ராணியார் லண்டனுக்கு வெளியே இறக்கும் பட்ச்சதில் பிணபற்றப்பட வேண்டியது. தற்போது மகாராணி ஸ்கொட்லாந்தில் மரணமடைந்துள்ளதால் இரண்டாவது திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. 

ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூடியிருக்கும் பொதுமக்களை சந்தித்த  அரச குடும்பத்தினர்  : புகைப்பட உதவி -meaww.com

மகாராணியின் மரணத்தையடுத்து செப்டெம்பர் 9ம் திகதி அன்று அரசர் சார்ல்ஸ், செப்டம்பர் 19 திங்கட்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கையொட்டிய அடுத்த ஏழு நாட்கள் வரை அரச குடும்பம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சடங்கு துருப்புக்கள் அனைவரும் துக்கம் அனுஷ்டிக்கவுள்ளதாக அறிவித்தார். செப்டெம்பர் 10ம்  திகதி, 70 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு ஆண் பிரித்தானியாவின் அரசனாக பதவியேற்றார். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் மூன்றாம் சார்ல்ஸ் என்ற அபிஷேக நாமத்துடன் பதவியேற்றார் அரசர் சார்ல்ஸ்.

அன்றைய தினம் வின்ட்ஸர் அரண்மனையின் முகப்பில் வேல்ஸ் இளவரசர் வில்லியமும், சஸ்ஸெக்ஸ் சீமான் ஹாரியும் தங்கள் மனைவியருடன் வந்து போது மக்களால் விட்டுச் செல்லப்பட்ட மலர் அஞ்சலிகளை பார்வையிட்டனர். கடந்த ஆண்டு ஹரியும், அவர் மனைவி மேகனும் அரச குடும்பபணிகளிலிருந்து விலகி வட அமெரிக்காவுக்கு சென்றதில் இருந்து அரச குடும்பதிதில் சேர்க்க முடியாத ஒரு பிரிவு உண்டாகி விட்டதாக பலரும் கருதினார். ஆனால் மகாராணியின் மறைவு, சகோதரர்களுக்கு இடையே இருக்கும் உளத்தாங்களை மறந்து அவர்களை ஒன்றுபட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

செப்டெம்பர் 10ம் திகதி வரையில் பெல்மோரலில் வைக்கப்பத்திருந்த மகாராணியின் பூதவுடல் அடுத்த நாள் ஸ்கொட்லாந்து தலைநகரான எடின்பர்கிற்கு கொண்டு செல்லப்பட்டு செப்டெம்பர் 12ம் திகதி மதியம் வரை அங்குள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையின் சிம்மாசன அறையில் வைக்கப்பட்டிருந்தது. திங்கட்கிழமை பிற்பகல், புனித கில்ஸ் கதீட்ரலுக்கு பூதவுடலை எடுத்துச் செல்ல ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையிலிருந்து ஒரு சடங்கு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து இரங்கல்களை பெற்றுக் கொள்வதற்கொன மன்னரும் அரச குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். மாகராணியின் உடலுக்கு கதீட்ரலில் ராயல் கம்பெனி ஆஃப் ஆர்ச்சர்ஸின் பாதுகாப்புடன் மக்கள் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டனர்

நேற்றைய தினம், செப்டெம்பர் 13 அன்று, மூத்த இளவரசி  ஆன்  Anne) அவர்களுடன் மகாராணியின் பூதவுடல் எடின்பர்க் விமான நிலையத்திலிருந்து அரச  விமானப்படையின் விமானம் மூலம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. மாலையில் RAF நார்த்டோல்ட்டை அடைந்த மகாராணியின் பூதமேனி, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள வில் அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளது.

பிக் பென் (Bigben)  கோபுரம்: புகைப்பட உதவி -Amazon.ca

 

இன்று, செப்டெம்பர் 14ம் திகதி முதல் பல்லாயிரக்கணக்கான மக்களின் பார்வைக்காகவும், இறுதி அஞ்சலிக்காகவும் மாகராணியின் உடல் பக்கிங்ஹாம் மாளிகையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் கூடத்திற்கு கொண்டுவரப்படும். பல்லாயிரம் கணக்கான மக்கள் வீதிகளின் இருபுறமும் கூடியிருக்க மகாராணியின் உடலானது பிக் பென் (Bigben)  கோபுரம் மிகச்சரியாக மணிக்குறி சத்தத்தை எழுப்பும் தருணத்தில்  வெஸ்ட்மினிஸ்டர் கூடத்தை அடையும். அங்கு எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும்.

*அரச குடும்பம், மற்றும் நிறுவனத்துக்கு இடையிலான தொடர்பும், அதனால் அரச குடும்பத்தவர்கள், குறிப்பாக அரசகுடும்பத்துக்கு வாழ்க்கைப்பட்டு வருபவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சில அரச குடும்பத்தவர்களால் போது ஊடகங்களில் பேசப்பட்டுள்ளது. அதில் மிகவும் குறிப்பாக பார்க்கப்பட வேண்டியவை 1995 இல் இளவரசி டயானா அவர்கள் BBC இற்கு வழங்கிய நேர்காணலும், கடந்த ஆண்டு மேகன் மார்க்களும், இளவரசர் ஹாரியும்  ஓப்ரா வின்ஃப்ரேக்கு வழங்கிய நேர்காணலும். இவ்விரு நேர்காணல்கள் குறித்துமான விவரமான கட்டுரைகளை எங்கள் தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். 

கட்டுரைகளுக்கான இணைப்புகள்:

https://roar.media/tamil/main/features/princess-diana-interview-with-bbc 

https://roar.media/tamil/main/features/oprah-with-meghan-and-harry

 

 

 

Related Articles

Exit mobile version