மத்திய வங்கியின் COVID-19 நிவாரணத் திட்டங்கள் யாருக்கானது? – சில கேள்வி பதில்கள்

இலங்கையின் மத்திய வங்கியானது, கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வழங்கப்போகும் கடன் உதவித் திட்டத்தின் விவரங்களை கேள்வி பதில் வடிவில் விளக்கி வெளியிட்டுள்ளது.

அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் நாணயத்தின் வீழ்ச்சி அல்லது புதிதாக அச்சிடப்பட்ட உள்நாட்டு நாணயத்தின் தேவையில்  மாற்றம் ஏற்படும் போது இருப்புக்களை இழப்பது குறித்த அச்சங்களை சந்தித்தவன்ணமே மத்திய வங்கி  புதிய பணத்துடன் கடன்களுக்கான மறு நிதியினை அளிக்கிறது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உருவான பணம் அச்சிடும் நிலையின் பின்னர் இலங்கை ஏற்கனவே இறக்குமதியைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டு விலை உயர்விற்கான மாற்றங்களை அதிகரித்துள்ளது.

மத்திய வங்கி முதலில் 50 பில்லியன் ரூபாயை மறு நிதியளிப்பில் அச்சிடப் போவதாகக் கூறியபோதும்,  பின்னர் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள், ஏன்  அதனை 150 பில்லியன் ரூபாயாக உயர்த்தவில்லை என கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அது 150 பில்லியன் ரூபாயாக உயர்த்தப்படும் என்று மத்திய வங்கியினால் கூறப்பட்டது.

கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள் COVID-19 முடக்கத்தின் போது மூடப்பட்டு இருந்தன. பட உதவி: readme.lk/

மத்திய வங்கியின் COVID-19 நிவாரணத் திட்டங்கள் 

கொவிட்-19 வைரஸ் நோய் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் தனிநபர்கள் உள்ளடங்கிய வர்த்தகங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மீதான 2020இல் 04,05 மற்றும் 06ஆம் இலக்கங்களைக் கொண்ட சுற்றறிக்கை, அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் மீதான 2020.03.27 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மற்றும் உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்கள் மீதான உயர்ந்ததபட்ச வட்டி வீதங்கள் மீதான 2020 இன் 1ஆம் இலக்க நாணய விதிச்சட்ட கட்டளை. 

பொறுப்புத்துறப்பு:

கொவிட் -19 இனால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பில் 2020.05.06ஆம் திகதி வரை இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அடிப்படையாகக் கொண்டு இவ் “கேள்வி பதில் தொகுதி” தொகுக்கப்பட்டுள்ளன என்பதனையும் இதனுள் காணப்படுகின்ற பதில்கள், ஏதேனும் எதிர்கால ஒழுங்குவிதிகளை அத்துடன் / அல்லது திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட மாற்றங்களுக்கு உட்படுவன என்பதனையும் தயவுசெய்து கவனத்திற் கொள்க.

கே: COVID-19 நிவாரணத் திட்டத்திற்கு தகைமைபெறும் தனிப்பட்டவர்கள் யார்?

ப: COVID-19 நோய் பரவலின் காரணமாக தமது தொழில்களை அல்லது வருமானத்தினை இழந்த சுயதொழில் செய்கின்ற தனிப்பட்டவர்கள் மற்றும் ஏனைய தனியாட்கள். COVID-19 நோய் தொற்றின் காரணமாக தமது வருமானங்கள்/ வர்த்தகங்கள் மோசமாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயம் உழைப்போர் (வெளிநாட்டு நாணயத்தில் கடன்களை மீளச் செலுத்தவேண்டியவர்கள்).

கே: COVID-19 நிவாரணங்களுக்கு தகைமைபெறும் வர்த்தகங்கள்/துறைகள் யாவை?

ப: 

  • COVID-19 நோய்ப் பரவலின் விளைவாக பணி இடையூறு மற்றும் வெளிநாட்டு முடக்கம் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை மற்றும் ஆடை, தகவல் தொழில்நுட்பம், தேயிலை, வாசனைத்திரவியங்கள், பெருந்தோட்டம், மற்றும் தொடர்புடைய ஏற்பாட்டுச் சேவை வழங்குநர்கள் உள்ளடங்கலாக நேரடி மற்றும் நேரடியற்ற ஏற்றுமதியுடன் தொடர்புடைய வர்த்தகங்கள் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கு இவ்வர்த்தகங்களுக்கு/ துறைகளுகளுக்கென புரள்வு வரையறை எதுவும் எடுத்துரைக்கப்படவில்லை.
  • தயாரித்தல், பணிகள், வேளாண்மை (பதப்படுத்தல் உள்ளடங்கலாக), நிர்மாணம், பெறுமதிசேர்த்தல் மற்றும் ரூபா 1 பில்லியனுக்கு குறைந்த புரள்வுடன் கூடிய அதிகாரமளிக்கப்பட்ட உள்நாட்டு மருந்துப்பொருட்கள் வழங்குநர்கள் (இந்நோக்கத்திற்காக வருடாந்த புரள்வானது இறுதியாக கிடைக்கத்தக்க கணக்குகளின் அல்லது மதிப்பீடுகளின் அடிப்படையில் கருத்திற்கொள்ளப்படும்) உள்ளடங்கலாக வர்த்தகப்படுத்தல் வியாபாரங்கள் போன்ற வியாபாரத் துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள்.
  • வெளிநாட்டு நாணயத்தில் கடன்களை மீளச்செலுத்தவேண்டிய அத்துடன் COVID-19 இன் நோய்ப்பரவல் காரணமாக தமது வருமானம்/ வர்த்தகங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயத்தை உழைக்கின்ற கூட்டுநிறுவனங்கள்.
கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள் COVID-19 முடக்கத்தின் போது மூடப்பட்டு இருந்தன. பட உதவி: நஸ்லி அகமது.

கே: இத்தகையை நிவாரணங்களை நான் யாரிடம ; பெற்றுக்கொள்ள முடியும்?

ப: இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப் படுகின்ற அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் என்பன இந்நிவாரணங்களை வழங்குகின்றன.

கே: இந் நிவாரணங்கள் நடைமுறைக்கு வரும் திகதி யாது?

ப: கடன் 2020.03.25 அன்று அல்லது அதன் பின்னர் செலுத்தவேண்டியவையாக வருகின்ற தவணைக் கொடுப்பனவுகள் அத்துடன்/ அல்லது குத்தகை வாடகைகள். 

கே: இந் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு கோரிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டுமா? அவ்வாறாயின் எவ்வாறு?

ப: 

  • ஆம். அத்தகைய நிவாரணங்களை வழங்குவதற்கு நிதியியல் நிறுவனங்களுக்கு வசதியளிக்கக்கூடிய வாடிக்கையாளரின் பெயர், தேசிய அடையாள அட்டை/வியாபாரப் பதிவு இலக்கம், கடன் தொடர்பு/ கணக்கு இலக்கம் போன்ற ஆகக்குறைந்த அடிப்படைத் தகவல்களுடன் இணையத்தளமூடான வசதிகள் ஊடாக அல்லது மின்னஞ்சல்/ குறுந்தகவல் சேவை/ வட்ஸ்சப் உள்ளடங்கலாக வேறு தொடர்பூட்டல் வசதிகள் ஊடாக 2020.05.15 அன்று அல்லது அதற்கு முன்னர் கோரிக்கையொன்றினைச் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
  • எனினும், சாத்தியமான போதெல்லாம் தகைமையுடைய கடன்பெறுநர் (உதாரணமாக – தனிப்பட்டவர்களுக்கான கடன்கள், மேலதிகப் பற்றுகள், வர்த்தக நிதி, அடகு, கடன் அட்டைகள் போன்றன) மூலம் கோரிக்கையொன்று மேற்கொள்ளப்படாமல் நிதியியல் நிறுவனங்கள் சலுகைகளை வழங்கும்.

மத்தியவங்கியினால் ஜூன் 19 அன்று வெளியிடப்பட்ட இந்த கேள்வி பதில்களில் இருந்து ஒரு சில கேள்விகளை மாத்திரமே இங்கே தந்துள்ளோம். முழுமையான அறிக்கையை நீங்கள் மத்திய வங்கியின் உத்தியோக பூர்வ இணையதளத்தில் காணலாம்.

Related Articles

Exit mobile version