Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் எதற்காக உருவாக்கப்பட்டது?

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்  சீனாவில் பெய்ஜிங் நகருக்கு என்றும் இல்லாதது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருந்தனர். சுமார் 30,000 பெண்கள் மற்றும் ஆண்கள் 200 நாடுகளில் இருந்து வருகைதந்திருந்தனர்.

வருகைத் தந்த நோக்கம்  

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மனித உரிமைகளை அங்கீகரிப்பதற்கான  நான்காவது பெண்கள் உலக மாநாட்டிற்காக வருகைதந்திருந்தனர். 

முன்வைக்கப்பட்ட கருத்து  

பெண்களுக்கும் அதிகாரமளிப்பதற்கான சம உரிமை வேண்டும் என்றும் பாலியல் சமத்துவம் வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

மாநாட்டில் நடைபெற்ற முக்கிய சம்பவம்…

பெண் அதிகாரத்தை சட்டபூர்வமாக பிரதிநிதுத்துவப்படுத்த வேண்டும் என்ற முக்கிய கருத்து மாநாட்டில் உச்சகட்டத்தை அடைந்தது.

அன்றைய மாநாட்டின் கருத்தின் தொடர்ச்சியாக பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை பற்றி உலகளாவிய முன்னணி இயங்கங்களும் விவாதிக்க ஆரம்பித்தன. பெண்ணதிகாரம், கல்வி, பெண் மனித உரிமை, பாலியல் மற்றும் இனப்பெருக்க சமத்துவம் போன்ற சுகாதார உரிமைகள் தொடக்கம் சம ஊதியம் வரை அனைத்து கோணத்திலும் உரிமை வேண்டி கருத்துகள் வெளிவர ஆரம்பித்தன. இன்று அவ்வமைப்புக்கள் விரிவடைந்து உலகம் முழுவதிலும் பெண் உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. 

பெண் குழந்தைகள் தினம் – பிரகடனம்  

உலகளவில் செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பான பிளான் இன்டர்நேஷனல் (Plan International) அமைப்பின் ஒரு திட்டமாக சர்வதேச பெண் குழந்தைகள் தொடர்பான கவனம் தொடங்கியது. இவர்கள் உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளில் பெண் குழந்தைகளின் வளர்ப்பின் முக்கியத்துவத்தைப்  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “Because I Am a Girl” என்ற பிரச்சாரத்தை நடாத்தினர். இதன் முடிவில் இத்திட்டத்தை சர்வதேச அளவில் கொண்டுசெல்ல நினைத்தனர். இதன் முதற்கட்டமாக கனடாவின் பிளான் இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதிகள் கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒத்துழைப்பு வேண்டியது. அதற்கு அடுத்தகட்டமாக இவ்வமைப்பு  ஐக்கிய நாடுகளின் ஆதரவை நாடியது. 

கனடாவின் பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் அரங்கில் கனடாவினால் தீர்மானிக்கப்பட்ட பெண்கள் கூழாங்கல் தின நாள் முறையாக முன்மொழியப்பட்டது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அக்டோபர் மாதம் 11-ஆம் திகதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவித்தது. பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தை பெறவும், அவர்களின் வெற்றிகளை கொண்டாடவும் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

இன்றைய பெண் குழந்தைகளின் சாதனைகள் 

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

பல தடைகளையும் இன்னல்களையும் தகர்த்தெறிந்து உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் பெண்கள் முன்வந்து இல்லாத துறைகளிலும் கால்பதித்து வெற்றி காண்கின்றனர். அவ்வாறு வெற்றி கண்ட பெண் குழந்தைகள் ஒரு சிலரின் சாதனைகள் இதோ.  

“சிறுமிகளும் வெல்ல முடியும் என்பதை நான் நிரூபிக்க விரும்புகிறேன்” – நிஷி அமண்டா உகல்லே

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சேனல் ஃபோரின் (Channel Four’s) வருடாந்த குழந்தை ஜீனியஸ் (Child Genius) என்பது ஒவ்வொரு ஆண்டும் 8-12 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு நடைபெறும் போட்டி ஆகும். இதில் கணிதம், நினைவாற்றல், அறிவியல், புவியியல், சொல்வதெழுதுதல் மற்றும் சொல்லகராதி ஆகிய பிரிவுகளில்  போட்டி நடைபெறும்.

‘Child Genius’ வெற்றிக் கிண்ணத்துடன் நிஷி

இப்போட்டிக்காக இலங்கையிலிருந்து சென்று வெற்றிபெற்ற குழந்தை நிஷி அமண்டா உகல்லே ஆவர். 12 வயது நிரம்பிய இச்சிறுமி மார்ச் 2, 2019 அன்று ‘Britain’s Brightest Child’ என முடிசூட்டப்பட்டார். IQ வினாக்களில் புகழ்வாய்ந்த இயற்பியலாளர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் இருவரையும் வென்ற இலங்கையைச் சேர்ந்த சிறுமி நிஷி. 

“நான் கிராமத்து உணவுகளை விரும்புகிறேன்” – சந்தீனா

இலங்கையைச் சேர்ந்த சந்தீனா ‘village life’ என்ற பெயரில் தனக்கென ஒரு youtube சேனலை ஆரம்பித்து இயற்கையின் ஒலிகளுக்கு மத்தியில் அவரது பாட்டி சமைக்கும் பாரம்பரிய உணவுகளின் காணொளியை பதிவிட்டு வந்தார். நாளடைவில் அந்த youtube பக்கத்தின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு மில்லியன் ஆதரவாளர்களை பெற்ற youtube பக்கங்களிற்கு வழங்கப்படும் GOLD PLAY BUTTON விருதை youtube இச்சிறுமிக்கு வழங்கி அவரது முயற்சியை பாராட்டியுள்ளது. 

YOUTUBE GOLD PLAY BUTTON விருதுடன் சந்தீனா

இன்று இவரது youtube சேனலிற்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கை 1.3  மில்லியன்களை கடந்துள்ளது. இதுவரை அவர் பதிவிட்டுள்ள காணொளிகளின் எண்ணிக்கை 238 ஆகும். சந்தீனா தனக்கென இன்னுமொரு youtube பக்கத்தை ஆரம்பித்து அதில் அவர் பயணம் செல்லும் இடங்களில் உண்ணும் உணவுகளை பற்றிய காணொளிகளை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும்.” – P . சஞ்சனா 

இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையை சேர்ந்த வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி சஞ்சனா பிரேம்நாத். இவர் தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான அரிய முயற்சியில் ஈடுபட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சுமார் 3 மணி நேரத்தில் 8 மீட்டர் தூரத்தில் 1111 அம்புகளை எய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுளார். 

வில்வித்தை வெற்றிக் கிண்ணத்துடன் சஞ்சனா பிரேம்நாத்

ஒலிம்பிக்கில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இவரது கனவு என்று நேர்காணல்களில் கூறியுள்ளார் சிறுமி சஞ்சனா பிரேம்நாத். 

“எனக்கு அடுத்த தலைமுறை குழந்தைகளையும் ஊக்குவிப்பேன்.” – ஆசியா நியூசன்

 தானே தயாரிக்கும் மெழுகுவர்த்தியுடன் ஆசியா நியூசன்

ஐக்கிய அமெரிக்கா மாநிலங்களில் ஒன்றான மிச்சிகனில் டெட்ராய்ட் நகரில் சுய தொழில் செய்யும் சிறுமி ஆசியா நியூசன். இவர் வெற்றிகரமான முறையில் தனது மெழுகுவர்த்தி வியாபாரத்தை நடத்தி வருகிறார். இவருக்கென இளம் ஊழியர்களும் உள்ளனர். அவர்களை சிறந்த தொழில் முனைவரைகளாக உருவாக்க வேண்டும் என்பதே இவரது லட்சியமாம். இச்சிறுமியை ஊர் மக்கள் ‘Super Business Girl’ என்று அழைக்கின்றனர்.

“எனது சமூகத்தினரின் நலனிற்காக என்றும் போராடுவேன்.” – மேரி கோபனி

பெண்கள் முன்னேற்ற அணிவகுப்பின் இளம் பெண் தூதுவராக மேரி கோபனி

அமெரிக்கா முன்னாள் ஜனாபதி ஒபாமாவை தனது கடிதத்தின் மூலம் ஈர்த்தார் பிளிண்ட் நகரின் சிறுமி மேரி கோபனி. அமெரிக்காவின் பிளிண்ட் நகரின் குடிநீர் பிரச்சினை நிலவிய தருணத்தில் மேரி ஜனாதிபதிக்கு ‘குடிநீர் பிரச்சனைக்காக வாஷிங்டன் அமேரிக்க சட்டமாமன்றத்துக்கு வருகைத் தரும் என்னையும் எனது சமூகத்தினரையும் சந்திக்க வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கடிதம் எழுதியுள்ளார். அப்பிரச்சனைக்காக நிதி திரட்டுதல் ஆதரவாளர்களை தேடுதல் போன்ற மகத்தான செயல்களை இச்சிறுமி செய்துள்ளார். இவர் பெண்கள் முன்னேற்ற அணிவகுப்பின் இளம் பெண் தூதுவராகவும் உள்ளார்.

உலகம் முழுவதிலும் ஆற்றல்மிக்க பெண் குழந்தைகள் ஏராளமானோர்  இருக்கின்றனர். அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும் போது அவர்களின் சாதனைகளையும் இந்த உலகம் பார்க்கும் என்பதில் ஐயப்பாடில்லை. 

Related Articles