ஜெர்மனியின் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு மேற்கு ஜெர்மனிக்குள் நுழைந்த கிழக்கு ஜெர்மானியர்கள் சோவியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடத் தொடங்கியதுடன், சோவியத்தின் உளவுப்படையான கேஜிபியை (KGB) முற்றுகையிட்டனர். தம்முடைய வாழ்வின் இறுதித்தருணத்தை உணர்ந்துகொண்ட சோவியத் அதிகாரிகளால், அவசரஅவசரமாக ஜெர்மனி உற்பட பல்வேறு நாடுகள் தொடர்பாக திரட்டப்பட்ட உளவுத் தகவல்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. தகவல் அறிந்தும் சோவியத்தினால் அவர்களது சொந்த நாட்டு அதிகாரிகளின் உயிர்களை காப்பாற்றும் வழிதெரியாமல் அவர்களை கைவிட்டிருந்தபோது அந்த உளவுப்படையில் இருந்த ஒரு இளைஞன் தன்னையும் சகாக்களையும் காப்பாற்றும்பொருட்டு அந்த அலுவலகத்தில் இருந்த துப்பாக்கியை கையிலெடுத்துக்கொண்டு அத்தனை அதிகாரிகளுக்கும் தலைமை தாங்கினார். அந்த சாமானிய இளைஞரின் பெயர்தான் விளாடிமிர் புடின் (Vladimir Vladimirovich Putin).
“வன்முறை தலைவிரித்தாடிய சோவியத்தின் வெலிங்டன் நகர வீதிகளில் நான் கற்றுக்கொண்டது ஒன்றேயொன்றுதான், சண்டையை தவிர்க்க முடியாது என்கிற நிலை வந்தால் முதல் அடி நம்முடையதாகத்தான் இருக்கவேண்டும்” இந்த சம்பவம் குறித்து விளாடிமிர் புடின் பின்னர் கூறியவைதான் இது!
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சரியாக ஏழு ஆண்டுகளுக்குப் பின் அக்டோபர் 7, 1952 ஆம் ஆண்டு Vladimir Spiridonovich Putin, Maria Ivanovna Shelomova தம்பதிகளின் மூன்றாவது மகனாக பிறந்தார் புடின். புடின் பிறப்பதற்கு முன்பே அவரது இரு சகோதரர்களும் யுத்த சூழலில் இறந்துவிட்டனர். புட்டினின் தாத்தா லெனினிடம் சமையல்காரராக கடமையாற்றியவர். தந்தை ராணுவத்திலும், தாயார் தொழிற்சாலையிலும் பணியாற்றினர். ஜூடோ மீதிருந்த ஈர்ப்பால் இளமையிலேயே தேசிய அளவில் வெற்றிகள் பல பெற்றவர் புடின்.
The Shield and the Sword என்கிற திரைப்படத்தில் வரும் உளவாளிக் கதாபாத்திரத்தால் கவரப்பட்டு தானும் ஒரு உளவாளியாக மிளிரவேண்டும் என தீர்மானித்தார். சட்டம் பயின்று முடித்த கையேடு 1975ஆம் ஆண்டு உலகம் முழுவதிற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ரஷ்யாவின் உளவுத்துறையான KGB அலுவலகத்தில் பணியாற்ற தொடங்கினார். இன்று விளாடிமிர் புடின் ஓர் அசைக்கமுடியாத சக்தியாக விளங்குவதற்கு இந்த அமைப்பிடம் கற்ற பாலபாடமே அடிப்படை. புடினின் சாதுர்யமான பேச்சும், புத்திக்கூர்மையும் இளம் வயதிலேயே அவருக்கு பல வாய்ப்புக்களை தேடிக்கொடுத்ததெனலாம். 1991இல் சோவியத் உடைவுக்குப்பின்னர் அவரது பார்வை அரசியலை நோக்கி திரும்பவே மேயர் அலுவலகத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் தலைவராக பணியமர்த்தப்பட்டார் .
சோவியத் உடைவுக்கு பின்னர் அங்கிருந்த ஏகப்பட்ட பிரச்சினைகளை கண்டுகொள்ளாது தன்னுடைய பதவியை தக்கவைத்துக்கொள்வதிலேயே குறியாக இருந்தவர் அப்போதைய அதிபர் ஹெல்சின். 1999ஆம் ஆண்டு துணைப்பிரதமரான புடின். ஹெல்சின் மீது மக்கள் கடும் அதிருப்தியை கொண்டிருந்தமையினால் அவர் பதவியை ராஜினாமா செய்யவே, இரண்டாயிரமாம் ஆண்டு அதிபர் பதவியேற்ற புட்டினுக்கு எண்ணற்ற சவால்கள் காத்திருந்தன. எல்லாவற்றையும் சளைக்காமல் அவர் எதிர்கொண்ட விதம் ரஷ்ய மக்களை பெரிதும் ஈர்த்தனவெனலாம். ரஷ்யாவின் 36.30% இருந்த பணவீக்கத்தை 6% குறைத்து, தனிநபர் வருமானத்தை உயர்த்தியது, கடனளவை கட்டுப்படுத்தியது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தது என அடுக்கடுக்காக செயற்படத்தொடங்கினார். தனிநாடு கோரிக்கையில் உறுதியாக இருந்த சஸ்ஸானிய (Sassania) அப்போது பல போராட்டக் குலுக்கள்மூலம் ரஷ்யாவிற்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தது. எனினும் சஸ்ஸானியாவின் இயற்க்கை வளம், காஸ்பியன் கடலில் உள்ள எண்ணெய் வளம் என அந்த பகுதியை தமது தொடர் கட்டுப்பாட்டில் ரஷ்யா வைத்துக்கொள்ள விரும்பியதற்கான காரணம் எனலாம். அதுதவிர சஸ்ஸானியா சுதந்திரமடைந்துவிட்டால் அது ரஸ்யாவில் உள்ள மற்ற பகுதிகளின் தலைவர்களை தூண்டிவிடுவதாக அமையும் என கருதியது ரஷ்யா.
2014 ஆம் ஆண்டு சஸ்ஸானியா போராட்டக்குழு பாடசாலையொன்றினுள் புகுந்து பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என சுமார் ஆயிரத்து நூறு பேரை பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்தபோது, அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ரஷ்யப்படையினர் மூன்றாம் நாள் பள்ளியை நோக்கி தாக்குதலை நடத்தவே இதில் நூற்றி ஐம்பத்துமூன்று குழந்தைகள் உற்பட முந்நூற்று அறுபதுபேர்வரை கொல்லப்பட்டு, போராட்டக்குழு வீழ்த்தப்பட்டது. எனினும் இது புடினின் வரலாற்றில் அழிக்கவியலாத கரும்புள்ளியாக மாறியது. ஒருவாறு தனது சாதுர்யத்தை பயன்படுத்தி தனக்கு ஆதரவான ஒருவரை சஷேன்யாவின் தலைவராக்கி அந்த போராட்டத்திற்கு ஒரு முற்றுப்பிள்ளி வைத்துவிட்டார் .
மர்மமாய் காணாமல் போன எதிரிகள்
புட்டினுக்கு எதிராக காய் நகர்த்துபவர்களின் மரணங்கள் கொடூரமானதாகவும் மர்மங்கள் நிறைந்த மரணங்களாகவுமே இருந்து வருகின்றன. இது சர்வதேச அரங்கில் ஹிட்லருக்கு நிகராகவே பார்க்கப்பட்டது . சஷேன்யா கிளர்ச்சியின்போது அத்துமீறி செயற்பட்ட ரஷ்ய ராணுவம் பற்றி செய்தி வெளியிட்ட “Anna Politkovskaya” 2006ஆம் ஆண்டு புட்டினின் பிறந்தநாளன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் . அதேயாண்டு முன்னாள் KGB உளவு அதிகாரியான “Alexander litvinenko”, உளவுத்துறை என்கிற பெயரில் கேஜிபியை வைத்துக்கொண்டு ரஷ்யா செய்த அட்டூழியங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரவே, கொலோனியம் எனும் விஷவாயு மூலம் மர்ம நபர்களால் பிரிட்டனில் வைத்து கொல்லப்பட்டார். 2015 ரஷ்ய அதிபரின் ஊழலுக்கு எதிராக போராடிய எதிர்க்கட்சி தலைவரான போரிஸ் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். 1990களில் ரஷ்ய உளவாளியாக இருந்துகொண்டு ரஷ்ய நாட்டு ரகசியங்களை பிரிட்டனின் உளவு அமைப்புக்கு அளித்து இரட்டை ஏஜெண்டாக செயற்பட்ட Sergei மற்றும் அவரது மகள் Yulia skripal 2018ல் கொடூரமான விஷம் கொடுக்கப்பட்டு பிரிட்டனில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர் . இப்படி உலகைவிட்டு அனுப்பப்பட்ட புட்டினின் எதிரிகள் ஏராளம் .
தொடர்ந்து இரண்டு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட புட்டினுக்கு மூன்றாம் முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு சட்டப்படி இல்லை என்பதால் , இதனை சமாளிப்பதற்காகவே தனது நெருங்கிய நண்பரான மெத்வர்டேவுக்கு அதிபர் பதவியை வழங்கிவிட்டு தான் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின் அரசியலமைப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி நான்கு ஆண்டுகளாக இருந்த அதிபரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில்தான் “கிரீமியா“ என்கிற பகுதிக்காக ரஷ்யாவுடன் மோதிக்கொண்டிருந்த உக்ரேனின் பிரச்சினைக்கு ஓர் முடிவுகட்ட எண்ணினார் புட்டின். அதோடு சேர்த்து சிரியா விவகாரத்தில் ரஷ்யா எடுத்த முடிவுகள் என எல்லாமும் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தன.
ரஷ்யாவை முழுக்கமுழுக்க தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்வகையில் பல காய்நகர்த்தல்களை மேற்கொண்டவர் புட்டின். யாரும் தன்னளவுக்கு அதிகாரம் கொண்டவர்களாக இருந்துவிடக்கூடாது என்பதில் தீர்க்கமான புட்டினின் சொத்து மதிப்பு யாருக்கும் தெரியாத ரகசியம். “பணாமா பேபேர்ஸ்” ஊழல் உற்பட பல ஊழல் புகார்களும் இவர்மீது வைக்கப்பட்டன. அடுக்கடுக்கான ஊழல்புகர் இருந்தாலும் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
சர்வதேச அளவில் சரிந்துகிடந்த ரஸ்யாவின் செல்வாக்கினை மீட்டெடுத்து உலகின் சக்திவாய்ந்த தலைவராக, இரும்பு மனிதராக ரஷ்யாவை இருபது ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் புட்டின் உலக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் . ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதைப்போன்றே புட்டினுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. புட்டின் சர்வாதிகாரியும் அல்ல கம்யூனிஸவாதியும் அல்ல உடைந்துபோன சோவியத்தை நிமிர்ந்து நிற்கச்செய்து ரஷ்யாவில் ஒற்றை அதிகார மையத்தை கொண்ட ஜனநாயகத்தை வடிவமைத்தவர் ஒருபுறம் என்றால், கேஜிபி உளவாளிகளைக் கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர், தனக்கு எதிரானவர்களை வேட்டையாடுவது என்பது மறுபுறம் கொண்டவர். இறுதியில் புட்டினின் எந்த பக்கத்தை பற்றி வரலாறு பேசவேண்டும் என்பதை அவரது எஞ்சிய வாழ்க்கைக்காலமே முடிவுசெய்யும்.
செய்தி மூலம்: நியுஸ்7தமிழ்