
இலங்கையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட வரி வீதங்களின் நிமித்தம் மாதவிடாய் கால Sanitary நாப்கின்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் பாடசாலை மாணவியர்களும், பெண் ஆசிரியர்களும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அண்மையில் BBC செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை மாணவியர்களில் கணிசமானோர் மாதவிடாய் காலத்தில் பாடசாலைகளுக்கு வருகை தருவதில்லை என்றும் அவ்வாறான நிலைமை பிள்ளைகளின் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Advocata எனும் கொள்கை வகுப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, மேலும் இலங்கையில் மலையக பிரதேசங்களிளேயே மாதவிடாய் நாப்கின்கள் ஆகக்குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது.அங்கு 12% பெண்களே சதவீதமானவர்களே நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர்.
அதற்கடுத்து ஊவா மாகாணத்தில் குறைந்தளவில் நாப்கின்கள் பாவிக்கப்படுகின்றன என்றும், அங்கு 20 – 22 சதவீதமானவர்களே மாதவிடாய் நாப்கின்களை பயன்படுத்துவதாக இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் Sanitary நாப்கின்கள் தொடர்பான வரிகளை நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அது தொடர்பில் அதிகாரபூர்வமான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி : BBC Tamil