மனநலப் பாதிப்பில் இருப்பவர்களுக்கு அன்றாட வாழ்வில் பெரும் தடையாக இருப்பது அவர்கள் குறித்த பிழையான அபிப்பிராயமும், குறைவான புரிதலும் ஆகும். அவர்கள் அதிலிருந்து மீண்டு வந்தாலும், அவர்கள் எதிர்கொள்கின்ற சமூக சிக்கல்கள் எளிதில் மாறுவதில்லை.
2022 ஆம் ஆண்டில் தேசிய மனநல நிறுவனத்தின் (NIMH) உதவியுடன் ஆசிய அறக்கட்டளையானது, இந்நிறுவனத்திலிருந்து ஆதரவைப்பெறும் 20 பெண் தலைமைக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியது.
அறக்கட்டளையினூடாக இந்தத் திட்டம் அரச பணியாளர்களை வலுவூட்டல், சேவை வழங்கலை மேம்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் இலங்கையில் மனநலம் தொடர்பான களங்கத்தை குறைத்தல் ஆகிய நோக்கங்களுடன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ரசிந்தி, தீபிகா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் தேசிய மனநல நிறுவனத்தின் வாழ்வாதார உதவியைப் பெறும் இருபது பயனாளர்களில் மூவராவர். இவர்கள் தங்களின் தொழில் முயற்சிகளுக்காக மேற்கண்ட உதவியைப் பெற்றுள்ளனர்.
#lka #srilanka #mentalhealth