Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன்

தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கும் கலைஞர்கள் மத்தியில், உலகையே தன் ரசிக சாம்ராஜ்யமாக்கிய வரலாற்று நாயகன்.

மைக்கல் ஜோசஃப் ஜாக்சன், 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் நாளில் ஜோசப் வால்டர் – கேத்ரின் எஸ்தர் என்ற ஆப்ரிக்க அமெரிக்க தம்பதிக்கு ஏழாவது குழந்தையாக அமெரிக்காவின் இண்டியானா நகரில் பிறந்தார். 

குரு மற்றும் இசைப்பயணத் தொடக்கம்

மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோசப் வால்டர் இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராக இருந்தாலும் ஒரு இசைக் கலைஞன். அவர் தனது சகோதரர்களுடன் இணைந்து பேண்டு வாத்திய குழுவை ஏற்படுத்தியிருந்தாலும் அவரால் சாதிக்க முடியவில்லை. ஆனாலும் தன் மகன்களுக்குக் இசையை கற்றுக் கொடுத்தார். அப்படித்தான் ஆறு வயதில் பள்ளியளவிலான பாடல் போட்டியில் முதல் பரிசை பெற்று தனது இசை பயணத்தை துவங்கினார் மைக்கேல் ஜாக்சன். அதன்பிறகு 1964இல் தன் சகோதரர்களின் ஜாக்சன்-5 என்ற இசை குழுவில் இணைந்தார். அதன் பிறகு மைக்கல் ஜாக்சன் உலகப் புகழ் பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே இசை உலகம் அறிந்த நட்சத்திரமாகி போனார் மைக்கல் ஜாக்சன்.

மைக்கெல் ஜாக்சனின் மூத்த சகோதரர்களான டிடோ, ஜெர்மெய்ன், மற்றும் ஜாக்கி சேர்ந்து ஜேக்சன் பிரதர்ஸ் என்கிற ஒரு இசைக்குழுவை உருவாக்கினர். பின்னர் அதில் ஏழு வயதான மார்லன் ஜாக்சனும் ஐந்து வயதான மைக்கேல் ஜாக்சனும் சேர அந்தக் குழு ஜாக்சன் 5 என்கிற பெயரைப் பெற்றது. ஜாக்சன் 5 இசைக்குழு நள்ளிரவு ஒரு ஊரில் இருக்கும் கிளப்பில் பாடிவிட்டு மீண்டும் அதிகாலை 2 மணிக்கு வேறு ஊருக்குச் சென்று மூன்று மணிக்கு வேறு ஒரு கிளப்பில் பாடிக் கொண்டிருப்பார்கள். ஜாக்சன் சகோதரர்களின் இந்த உழைப்பு வீண் போகவில்லை. வெகு விரைவிலேயே அமெரிக்காவில் ‘ஜாக்சன் 5’ குழுவின் புகழ் பரவத் தொடங்கியது. இவர்களது பாடல் தொடர்ந்து நான்கு முறை பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் முதலிடம் வகித்தது. இந்த சாதனையை செய்த முதல் கருப்பின இசைக்குழு ஜாக்சன் 5 தான். மெல்ல மெல்ல குடும்பம் வறுமை நிலையில் இருந்து மீண்டு செல்வம் கொழிக்கத் தொடங்கியது.

jackson (Pic: billboard)

தனிப் பாடகர் மற்றும் விருதுகள்

ஐவரும் ஒவ்வொரு வகையில் ஈர்த்தாலும் குட்டிப்பையன் ஜாக்சன் மீது அதிக கவனம் விழுந்தது. விளைவு ஒன்பது வயதிலேயே அப்போது உலக அளவில் இசையில் உச்சத்தில் இருந்த பாடகி டயானா ராஸுடன் ஒரே மேடையில் பாடும் வாய்ப்பு மைக்கேலுக்கு கிடைத்தது. மைக்கேலின் திறமையை அடையாளம் கண்டுகொண்ட டயானா தொடர்ந்து சிறுவன் மைக்கேலுடன் பாடத் தொடங்கினார்.  ஜாக்சன் 5 குழுவின் முதல் ஆல்பத்தை வெளியிட்டவரும் டயானா ராஸ்தான். இது மைக்கேலை உலக அளவில் கவனம்பெறச் செய்தது. இதனால் ஜாக்சனுக்கும் டயானாவிற்கும் இடையிலான அன்பு வளர்ந்தது. டயானாவை தனது தாய்க்கு நிகராக பார்க்கத் தொடங்கினார் மைக்கேல். கடைசி காலங்களில் தனது தாய்க்குப் பிறகு தனது குழந்தைகளை வளர்க்கும் உரிமையை டயானா ராஸுக்கு மட்டுமே உண்டு என்று கூறியிருந்தார்.  ஒருவேளை தன் தாய்க்கு முன்பு தான் இறக்க நேர்ந்தால் தன் குழந்தைகளை வளர்க்கும் உரிமை தன் தாய்க்கு இல்லை டயானாவிற்கு மட்டுமே உண்டு என்று உயில் எழுதி வைத்திருந்தார் மைக்கேல். ஜாக்சன் 5 குழுவைவிட மைக்கேல் ஜாக்சன் புகழ் பெற ஆரம்பித்தார். ஆனால் அதனால் மைக்கேல் ஜாக்சன் மகிழ்ச்சியாக இல்லை. இது குறித்து பின்னாளில் அவர் பலமுறை வருத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

என்னுடைய குழந்தைப் பருவம் என்னிடமிருந்து முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு விட்டது. கிறிஸ்துமஸ் கிடையாது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கிடையாது, அது ஒரு முறையான குழந்தைப் பருவமாக இல்லை. ஒரு குழந்தைக்குக் கிடைத்திருக்க வேண்டிய எந்த சந்தோஷமும் எனக்குக் கிடைக்கவில்லை. என்னால் என்ன செய்தாலும் திரும்ப வாழமுடியாது. என்று கூறி அந்தக் காலங்களுக்காக ஏங்கியிருக்கிறார் மைக்கேல் ஜாக்சன்.

மைக்கெல் ஜாக்சன் தனது சகோதர்கள் இல்லாமல் தனியாக வெளியிட்ட got to be there நல்ல வரவேற்பைப் பெற 1972 ஆம் ஆண்டு அந்த பெயரிலேயே மைக்கெல் ஜாக்சனின் முதல் ஆல்பம் ரிலீஸானது.  அப்போது மைக்கெல் ஜாக்சனின் வயது 14.  தொடர்ந்து அதே ஆண்டு வெளியான Ben, அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான Music And Me,  Forever Michael ஆகிய ஆல்பங்களும் வெற்றியைப் பெற்றன. இதற்கிடையில் ஜாக்சன் 5 குழுவோடும் இணைந்து ஆல்பம் செய்து வந்தார். ஆனால் மக்கள் ஜாக்சன் 5யை விட தனியான மைக்கேலுக்கே அதிக வரவேற்பை கொடுத்தனர். ஜாக்சன் 5ல் ஜாக்சனின் சகோதர சகோதரிகள் இணைய தி ஜாக்சன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து இயங்கத் தொடங்கினர். ஆனால் தனியான மைக்கேலுக்கு இருந்த மவுசு தி ஜாக்சன்ஸ்க்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து கிட்டதட்ட நான்காண்டுகளுக்குப் பின் Off The Wall ஆல்பம் வெளீயானது. மைக்கேல் சிறுவனில் இருந்து ஒரு விடலையாக மாறியிருந்தது வெளிப்படையாக தெரிந்தது. ஒலி அமைப்பிலும் பல புதுமைகளை செய்திருந்தார் மைக்கேல். இசை உலகின் உயரிய விருது எனக் கருதப்படுகிற கிராமி விருதுகள் உட்பட பலவிருதுகள் மைக்கேலை தேடி வந்தன. 1982 ஆம் ஆண்டு மைக்கெலின் வாழ்வில் மட்டுமல்ல. இசை ரசிகர்களின் வாழ்விலும் , இசை வரலாற்றிலும் மிக முக்கியமான ஆண்டு. மைக்கெல் ஜாக்சனின் ஆறாவது ஆல்பம் Thriller வெளியானது.  பீட்டில்ஸ் போன்ற பெரிய குழுக்களின் பாடல்கள் செய்யாத சாதனையை விற்பனையில் செய்து காட்டியது. Beat It, Billie Jean, Baby Bee Mine, போன்ற பாடல்கள்  இந்த ஆல்பத்தில்தான் இடம்பெற்று இருக்கின்றன. இந்தப் ஆல்பத்திற்காக ஏழு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் அப்போது போடப்பட்ட மூன் வாக் என்று அழைக்கப்படும் நடன அசைவு உலகை அவர் பக்கம் சுண்டி இழுத்தது.

விற்பனையில் பல புதிய சாதனைகளை நிகழ்த்திய Bad ஆல்பத்தில்தான் Man In The Mirror, Smooth Criminel போன்ற புகழ்பெற்ற பாடல்கள் இடம்பெற்று இருந்தன. இதில் Smooth Criminel பாடலில் Anti Gravity Lean என்கிற புதிய நடன அசைவை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார் மைக்கெல் ஜாக்சன்.

ஆல்பத்திற்கு ஆல்பம் மைக்கேலின் தரம் கூடிக் கொண்டே போனது. அடுத்து 1991 வெளியான Dangerous ஆல்பம் வெளியானதும் அதை ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடினர். Heal The World, Black Or White போன்ற பாடல்கள் இடம்பெற்று இருந்த அந்த ஆல்பம் ஏற்கனவே மைக்கேல் ஜாக்சன் பித்து பிடித்து சுற்றிக் கொண்டிருந்த இசை உலகத்தை மைக்கேல் ஜாக்சன் வெறி பிடித்து ஆட வைத்தது. Black Or White வீடியோ ஒரே நேரத்தில் 27 தேசங்களில் ஒளிபரப்பபட்டது.

Dancing Jackson (Pic: time)

பாப் இசையின் சிற்பி

கிங் ஆஃப் பாப் என்றும் இவர் அழைக்கப்பட காரணம் பாப் என்ற புதிய இசைவடிவத்தின் சிற்பியாக இவர் இருப்பதால் தான். பாப் உலகின் முடிசூடா மன்னன் என்றால் என்றும் அது மைக்கேல் ஜாக்சன் தான். இன்று உலகளவில் பிரபலமாக இருக்கும் மியூசிக் வீடியோ பிரபலமடைந்தது மைக்கேல் ஜாக்சனால் தான். மைக்கேலால் வெளியிடப்பட்ட இசைத் தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த Thriller உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது.  இசையின் அடையாளங்களில் ஒருவராக இருக்கும் மைக்கல் ஜாக்சனுக்கு மற்றொரு அடையாளமும் உள்ளது. அந்த அடையாளத்தின் தாக்கம் உலகம் முழுவதும் பல்கி பெருகி பரிணமித்து கிடக்கிறது.

Jackson with coat (Pic: medium)

நடனம் …. இவரது அடையாளம் என்பதை விட, நடனத்திற்கு இவர் ஓர் அடையாளம் என்பதே பொருத்தமாக இருக்கும். மைக்கலின் நுணுக்கமான நடன அசைவுகள் கூட மக்களை அதிசயக்க வைக்கும்… இவரது ரோபோ நடனத்தையும், மூன் வாக்கையும் காண கண்கோடி வேண்டும்.

Web Title: The Performer Michael Jackson

Featured Image Credit: waxpoetics

Related Articles