Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சியில் இந்தியா

தற்போதைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாமல் நம் வாழ்க்கை இயங்காது என்ற சூழ்நிலைக்கு வந்து விட்டோம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்சார தேவையை எப்படிப் பூர்த்தி செய்வது என்று பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற ஆய்வுகளும் நடந்து கொண்டுதான் உள்ளன.  புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை ஆற்றல் உற்பத்தி திறன் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் என்பவை குறுகிய கால சூழ்நிலையில் மீண்டும் உண்டாகக் கூடிய வளங்கள் ஆகும். இவ்வளங்கள் சூரியன் , காற்று, மழை, கடல் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. இவ்வளங்கலிருந்து  தேவைப்படும் நேரங்களில் ஆற்றலை மீண்டும், மீண்டும் பெற முடியும். புதுப்பிக்கத்தக்க வளங்கள் இயற்கையில் மிக அதிகளவு கிடைக்கும். மேலும் இவ்வளங்களிலிருந்து ஆற்றலைப் பெறும்போது அவை சுற்றுச்சூழலுக்கு பெரும்பாலும் பாதிப்பை உண்டாக்குவதில்லை.

பொருளாதார வளர்ச்சிக்கும், நாடுகளின் நலனுக்கும் மிக முக்கிய கூறுபாடுகளில் ஒன்றாக  இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைதான் உள்ளது. இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு மின்சக்திதுறையின் இருப்பு மற்றும் வளர்ச்சி மிகவும் அவசியம். உலகில் மிகவும் பரவலாக உள்ள மின்சக்தி துறையில் இந்தியாவும் ஒன்று. மின்சார உற்பத்தியின் மூலங்கள் நிலக்கரி,  லிக்னைட், இயற்கை எரிவாயு,  எண்ணெய்,  நீர் மற்றும் அணு சக்தி ஆகியவை ஆகும். மேலும் மரபார்ந்த மூல ஆதாரங்கள் என்பது  காற்று, சூரிய சக்தி, வேளாண் மற்றும் உள்நாட்டு கழிவுகள் போன்ற இயற்கை ஆதாரங்களிலிருந்து வரக்கூடியவை. தற்போதைய சுழலில் நாட்டில் மின்சார தேவை அதிகளவில் உள்ளது. வரும் காலங்களில் இதை விட அதிகமாக இருக்கக்கூடும். நாட்டில் நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் மின்சாரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் இதன் உற்பத்தித் திறனும் மிக பெரிய அளவில் கூடுதலாகவே தேவைப்படுகிறது.

2050-ம் ஆண்டு எந்த ஆற்றல் மூலங்கள் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் என்ற ஆய்வை மெக்கன்சி நிறுவனம் நடத்தியுள்ளது. அதன்படி இப்போது 41% மின்சார தேவையை நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் பூர்த்தி செய்கிறது. ஆனால் 2050 ஆம் ஆண்டில் 31% மட்டுமே மின்சாரம் நிலக்கரியிலுருந்து கிடைக்கப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக  அந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.

படம்: metering-com

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒரு பெரிய தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் கொள்கை கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக சூரியசக்தி மற்றும் காற்று ஆற்றல் துறை இந்தியாவின் பெரிய ஆற்றல் பங்களிப்பாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கவர்ச்சிகர குறியீடு 2016ன்படி 40 நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.  இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் மொத்தம் நிறுவப்பட்ட மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து கிடைக்கும் மின் உற்பத்தி மட்டும் 15.90% பங்குகளாகும்.

மார்ச் 2017 வரை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்  நிறுவப்பட்ட திறன் 57,260 மெகாவாட் ஆகும். கடந்த ஐந்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க சக்தி 20% வளர்ச்சியைக் கண்டது. 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மொத்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் திறன் 14,400 மெகாவாட் திறன் இருந்த நிலையில்,  டிசம்பர் 2015 இறுதியில் 38,822 மெகாவாட் என்ற அளவிற்கு உயர்ந்தது. தற்போது 2017 மார்ச் மாதம் 57,260 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்றால் இதற்கு முக்கிய பங்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களே ஆகும்.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிற்துறை கணக்கீடுகளில் டிசம்பர், 2015 ல் 25,088 மெகாவாட் மின்சாரமிலிருந்து 2017 மார்ச் மாதம் 29151.29 மெகாவாட் மின்சாரமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உள்ள மூலங்கள் பலவற்றிற்கும் முன்னோடியாக திகழ்வது சூரிய ஆற்றல். சூரியனின் பிரகாசமான ஒளி மற்றும் அதன் வெப்பத்தில் இருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் ஆகும். இதிலிருந்து பெறப்படும் ஆற்றலானது மின்சாரம் உற்பத்தி செய்யவும் நீரை வெப்பப்படுத்தவும், குளிரச் செய்யவும் பயன்படுகிறது. சூரிய ஆற்றலில் இருந்து 750GW மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

படம்: incore

சமீபத்திய ஆண்டுகளில், ஆற்றல் மூலமாக உயிர்மத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது மற்றும் இது உலகின் 14% மின்சார நுகர்வு உடையது. உயிர்மம் என்பது ஒரு வேறுபட்ட மற்றும் நிலையான ஆற்றல் கலவையில் கணிசமான பங்கு வகிக்கக்கூடிய ஒரு ஆதாரமாகும். 2050 ஆம் ஆண்டில் உலகின் முதன்மை ஆற்றல் பயன்பாட்டின் 15-50% பயோமாஸில் இருந்து வரலாம் என்று மதிப்பிட்டுள்ளது. பல நாடுகளும் தமது அரசியல் செயற்பட்டியலில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அதிகப்படுத்தியுள்ளன. உயிரியக்கத்திலிருந்து பெறப்படும் ஆற்றல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஒரு வடிவமாகும். மேலும் கொள்கையளவில் இந்த ஆற்றலைப் பயன்படுத்தி, புதைபடிவ எரிபொருளுக்கு மாறாக ஒரு பெரிய பசுமை வாயு செயல்படுகிறது.  இதில் தட்பவெப்ப நிலையை சேர்க்கக்கூடாது. ஒரு மதிப்பீட்டின்படி  உலகளாவிய ஒளிச்சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் 220 பில்லியன் டன்கள் உயிரியக்கத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா உயிரியக்க மின் உற்பத்தியில் மிகுந்த செல்வாக்கு உள்ள நாடு. 16,881 மெகாவாட் (வேளாண் வளம் மற்றும் தோட்டங்கள்), 5000 மெகாவாட் (கரும்பு சாகுபடி) மற்றும் 2700 மெகாவாட் (கழிவுகளில் இருந்து ஆற்றல் மீட்பு) ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மற்றொரு ஆதாரமாக நீர் உள்ளது. இது ஆறுகள், மற்றும் மழை நீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலைக் குறிக்கிறது. நீர் சக்தி மின்சாரம் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளமாகும். 150,000 மெகாவாட் பரப்பளவு கொண்டிருக்கும் நீர்வழங்கலின் 17% மட்டுமே இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நார்வே, கனடா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தங்கள் நீர்நிலையில் 30% க்கும் அதிகமானவற்றைப் பயன்படுத்துகின்றன, அதே நேரத்தில் இந்தியாவும், சீனாவும் தொலைவில் உள்ளன. உலகில் அதிகளவு நீர்திறன் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 5ஆம் இடத்தில் உள்ளது.

படம்: commons-wikimedia

சி.இ.ஏ (மத்திய மின்சாரம் அதிகாரசபை) தெரிவித்தபடி, இந்தியா 148.700 மெகாவாட் மின்சக்தியை பொருளாதார ரீதியாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டது.

இந்தியாவில் காற்று சக்தி வளர்ச்சி 1990 களில் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. காற்று, பூமியின் வெப்பம், சூரியனின் வெப்ப ஆற்றல், சமுத்திரங்கள் மற்றும் துருவ பனித் தொப்பிகள், வெப்பநிலை சதுரங்களுக்கிடையேயான நிலப்பரப்பு மற்றும் கடலியல் மற்றும் மலைகள், உடல்ரீதியான விளைவுகள் ஆகியவற்றால் ஏற்படும் சிக்கலான வழிமுறைகளால் காற்று உருவாக்கப்படுகின்றன. காற்று பரவலாக விநியோகிக்கப்படும் ஆற்றல் வளமாகும். 2006ன் இறுதியில் மொத்த உலக காற்று திறன் சுமார் 72,000 மெகாவாட் ஆகும்.  தொழில்மயமான உலகில் முன்கூட்டல் சூழலில் காற்று ஆற்றலை உருவாக்கி வருகிறது.  மேலும் அது வளரும் உலகில் கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. புதைபடிவ எரிபொருள் மூலங்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்றால், பல சந்தர்ப்பங்களில், அதன் செலவு குறைந்த தீர்வாக இருக்கலாம். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியாவில் காற்று சக்தியை நிறுவும் திறன் 29151.29 மெகாவாட் ஆகும். தமிழ்நாடு (7,269.50 மெகாவாட்), மகாராஷ்டிரா (4,100.40 மெகாவாட்), குஜராத் (3,454.30 மெகாவாட்), ராஜஸ்தான் (2,784.90 மெகாவாட்), கர்நாடகா (2,318.20 மெகாவாட்), ஆந்திரா (746.20 மெகாவாட்), மத்தியப் பிரதேசம் (423.40 மெகாவாட்) காற்றலை மூலமாக தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சக்தியில் காற்றலை மூலம் மட்டும் 14% மின் உற்பத்தி தயாரிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டளவில் காற்றாலை மூலம் 60,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதில் இந்தியா குறிக்கோளாக உள்ளது.

படம்: tech-spot

நம் புவிகோளம் முழுவதிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களும் அதனை திறம்பட பயன்படுத்தும் வழிகளும் அகல்விரிவாக பரந்துள்ளன. இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெறும் ஆற்றல் வளங்கள் தொடர்ந்து ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு தங்களுடைய ஆற்றல்களை தரும். பின்னர் உருவாகிவரும் சூரியவெப்ப மதிப்பீடு புவிப்பரப்பு வெப்பநிலையைப் பேரளவில் உயர்த்தி புவியின் நீர்ம நிலையில் நீரே இல்லாமல் ஆக்கிவிடும்.

References:

Renewable Energy In India: Potential, Growth And Policies

புதுபிக்கத்தக்க ஆற்றல் 

இயந்திரங்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல மின்சாரம்!

Related Articles