Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வேற்றுகிரகவாசிகளை எப்போது நாம் சந்திப்போம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா காணொளி(வீடியோ) ஒன்றை தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதில் நிலவில் மனித உருவம் நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அது வேற்றுகிரக வாசியாக இருக்கலாமோ என்ற பரபரபரப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. அந்த வீடியோ யூ- டியூப் தளத்தில் பதிவேற்றபட்டது . சில நாட்களிலேயே உலகம் முழுவதும் 20 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் பார்த்து சிலர் பரவசப்பட்டார்கள், சிலர் இது ஏமாற்றுவேலை என்று நம்ப மறுத்தார்கள். கடைசியில் அது வெறும் தூசுதான் என்று விளக்கமளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது நாசா.

படம்: youtube

இதே போன்று  அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹௌஸ்டன் நகர வானில் மேகங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான பொருளைப் பல மக்கள் புகைப்படம் எடுத்து தமது டுவிட்டர் மற்றும் ஏனைய சமூகத் தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள் . அப்பொருள் வட்ட வடிவில் வித்தியாசமான ஒளிகளுடன் ஒரு மர்ம பறக்கும் தட்டு போன்ற தோற்றத்தில் இருந்தது . உண்மையில் நம்மைச்  சுற்றியுள்ள பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா?அவர்களை நாம் எப்போது சந்திப்போம். இந்த கேள்வி நமக்கு மட்டுமல்ல விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் தீர்க்கப்படாத கேள்வி.

உயிர்களைத் தேடுவது ஆசாத்தியமான பணி

நிண்ட நெடுங்காலமாகவே வானவியல் விஞ்ஞானிகளுக்கு பிரபஞ்சத் தனிமையில் ‘நாம் இருக்கிறோமா? என்ற கேள்வி ஏற்பட்டது. இந்த பரந்த பிரபஞ்சத்தை ஆராயவும், தெரிந்து கொள்ளவும்  நாம் மட்டுமே முயற்சி செய்கிறோமா, நமக்குத்  துணையாக வேற்று கிரகவாசிகள் இல்லையா? என்ற ஆதங்கம் இருக்கிறது.

விஞ்ஞானிகள் செயற்கை கோள்களையும், `கலீலியோ’ போன்ற வானில் மிதந்து கொண்டே ஆராய்கிற டெலஸ்கோப்புகள் மற்றும்  பூமியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான டெலஸ்கோப்புகளையும்  கொண்டு இந்த பிரபஞ்சத்தை துருவித் துருவி ஆராய்ந்து  கொண்டிருக்கிறார்கள்.

வேற்றுகிரக வாசிகளைத்  தேடுவது  விஞ்ஞானிகள் உட்பட அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது. இதன் வெளிப்பாடாகவே பறக்கும் தட்டு கதைகள். பறக்கும் தட்டுகள் உண்மையில்லை என்கிறது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா . ஆனால் கென்னத் ஆர்னால்டு என்பவர் “மூன்றடி வெள்ளி மனிதர்கள்” என்ற நூலை வெளியிட்டு பலகோடி டாலர்கள் சம்பாதித்தார். ஹர்பெர்ட்ஜார்ஜ் எழுதிய “உலகங்களுக்கிடையே போர்”, போன்ற நாவல்களும், மென்இன்பிளாக், மார்ஸ்ஆட்டாக், அவதார் போன்ற திரைப்படங்களும் வந்துள்ளன.

படம்: proofofalien

நாம் வாழும் பூமி மிகப்  பிரமாண்டமான பிரபஞ்சத்தின் ஒருபகுதியே. இதில் உயிர்களைத் தேடுவது ஆசாத்தியமான பணியாகும். பல சமன்பாடுகள், டெலஸ்கோப்புகள், ஒளியுணர்கருவிகள், டிஸ்ஆண்டனாக்கள், செயற்கைக் கோள்கள் மூலமாக விண்வெளியில் பிற கிரக வாசிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

சிலநூறு கிரகங்களில் வளர்ச்சியடைந்த உயிர்கள் வசிக்கலாம்

எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் வேற்று கிரகவாசிகள் நிச்சயமாய் இருப்பார்கள் என்கிறார் பிராங்டிரேக் என்ற விஞ்ஞானி. அவரின் கணிப்புப்படி நம் சூரியன் அங்கம் வகிக்கும் ஆகாயகங்கை(milkey way) நட்சத்திர மண்டலத்தில் 60 கோடி கிரகங்களில் உயிர் வசிக்கலாம். அதிலும் சிலநூறு கிரகங்களில் வளர்ச்சியடைந்த உயிர்கள் வசிக்கலாம் என்கிறார். இந்த முடிவை ஒரு சமன்பாட்டின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.

N=n.p1,p2,p3,p4,t1/T

N-வெளியுலக சமுக எண்ணிக்கை, n- பால்வெளிமண்டல நட்சத்திரங்களின்  எண்ணிக்கை, p1-நட்சத்திரங்களைச்  சுற்றி கிரகங்கள் இருப்பதற்கான நிகழ்தகவு, p2-கிரகத்தில் உயிர் தோன்றுவதற்கான் நிகழ்தகவு, p3-நுண்ணிய பரிணாம வளர்ச்சிக்கான நிகழ்தகவு, p4-நுண்தொழில் சகாப்த நிகழ்தகவு, t1- தொழில் கலை சகாப்த நிகழ்தகவு, T – பால்வெளிமண்டலத்தின் வயதுடன் ஒப்பிடக்கூடிய கால அளவு.

இந்த சமன்பாட்டை வைத்துக்  கொண்டு ஆகாயகங்கை நட்சத்திர மண்டலத்தில்  தேட ஆரம்பித்தால் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

படம்: proofofalien

விண்வெளி மனிதர்களுக்கான முதல் செய்தி

வேற்றிகிரக மனிதர்களைத்  தேடுவதற்கு ‘சேதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் (seti – search fore extra terrestrial intelligence). 1974 நவம்பர் 16ல்  நமது சூரியனுக்கு ஒரு ஓளியாண்டு (ஒரு நொடியில் ஒளிசெல்லும் வேகம் 1லட்சத்து  80 ஆயிரம் கீலோமீட்டர், இவ்வளவு வேகத்தில் நாம் போனாலும் சீரிஸ் நட்சத்திரத்தை  அடைய ஓரு ஆண்டு ஆகும்) தூரத்தில் உள்ள சீரிஸ் நட்சதிரத்திற்கு மின் அலைகள் மூலம் விண்வெளி மனிதர்களுக்கான முதல் செய்தி அனுப்பப்பட்டது.  நாம் அனுப்புகிற செய்தி சரியான நட்சத்திரதிற்கு போய் சேருமா? சந்தேகம் தான். ஏன் என்றால் பிரபஞ்ச வெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களும் ஒரு மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் செய்தி அனுப்பிய நட்சத்திரம் ஒரு ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாக வைத்துக்  கொண்டால், நாம் பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளியானது ஒரு ஆண்டுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு வந்த ஒளியாகும். இந்த சூழ்நிலையில் நாம் செய்தி அனுப்புவதோ, பெறுவதோ மிகமிக சிரமமான பணியாகும். வேறு என்ன தான் வழி ? விண்வெளி மனிதர்கள் செய்தி அனுப்பினால் பெறுவதற்காக 1985 முதல் ஹார்வேர்ட் பல்கலைக்  கழகத்தில் மாபெரும் அலைதிரட்டி செயல்பட்டு வருகிறது. இதைப் போன்று ஒளி சமிக்சை மூலம் செய்தி அனுப்பினால் ஒருநொடியில் நூற்றில் ஒருபங்கு  நேரத்தில் ஏற்படும் மாறுதல்களை பதிவு செய்ய ஒளிவாங்கி அமைத்து கண்காணிக்கிறார்கள். ஆனால் இதுவரை நாம் சந்தோசப்படும் படியாக எந்த செய்தியும் வரவில்லை.

அறிவுஜீவி உயிர்கள் வாழ்வது சாத்தியமே

மற்ற நட்சத்திரங்ளை சுற்றி வருகிற கிரகங்களை கண்டுபிடி த்திருந்தாலும் கூட ஒரு கிரகத்தில் உயிர் தோன்றி நிலைத்து பரிணாம வளர்ச்சியடைவது சாதாரண விசயம் அல்ல. பூமி தோன்றி 400 கோடி அண்டுகளில் 150 கோடி அண்டுகளாகத்தான் உயிர்த் தோற்றமும், அதிலும் சில லட்சம் ஆண்டுகளாகத்தான் மனித பரிணாமமும் ஏற்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் நமது ஆகாய கங்கையில் மட்டுமே 1 அல்லது 2 கிரகணகளில் அறிவுஜீவி உயிர்கள் வாழ்வது சாத்தியமே என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிறகு ஏன் அவர்கள் நம்முடன் தொடர்புகொள்ள மறுக்கிறார்கள். சில விஞ்ஞானிகள் சொல்வதைப்போல நம் பூமியில் இருக்கும் விலங்குகள், தாவரங்கள்,பூச்சிகளுக்கு இடையே ஏற்படும் மிகநுட்பமான தகவல் பரிமாற்றத்தை கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது பிற கிரக வாசிகள் அனுப்பும் செய்திகளை நாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும் என்கிறார்கள்.

விண்வெளி வீராங்கனை ஜோசிலின் பெல் பர்னல்  அடுத்த 20 ஆண்டுகளிலிருந்து 100 ஆண்டுகளுக்குள் வேற்றுக் கிரக உயிரினங்களுடன் அல்லது மனிதனுடன் நமக்குத் தொடர்பு ஏற்பட்டுவிடும் என்று நிச்சயமாக நம்புகிறார்.

வேற்றுக் கிரகங்களில் வாழும் மனிதர்களிடமிருந்து வரக்கூடிய ரேடியோ சமிக்ஞைகளுக்காகத் தினந்தோறும் இடைவிடாமல் கண்காணிப்பு தொடர்கிறது. குரலாகவோ, சூசகமான சமிக்ஞையாகவோ ஒளி அடையாளமாகவோ, வேறு எதுவாகவோ விண்வெளியின் எந்தத் திசையிலிருந்தாவது, ஏதாவது வருகிறதா என்று நவீனக் கருவிகள் உதவியோடு தொடர்ந்து தேடுகின்றனர். ஆனால் இதுவரையில் ஒரு முனகல் சத்தம் கூட எங்கிருந்தும் வரவில்லை.

ஆக வேற்றுகிரக வாசிகளை நாம் எப்போது சந்திப்போம் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா? காத்திருப்போம்.

Related Articles