தந்தையின் பாத்திர வரையறையானது கடந்த நூற்றாண்டுகளில் பல்கிப்பெருகி வந்துள்ளதோடு பல்வேறு கலாச்சாரங்களிடையே அவை வேறுபட்டும் நிற்கின்றது. வரலாற்று ரீதியாக நோக்கும்போது தந்தை எனும் நபர் பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தபோதும் சிறு கட்டுப்பாட்டுடன் கூடியவராகவும் இருந்துள்ளார். ஒரு காப்பாளரக, வழங்குனராக, கண்டிப்பாளராக அனைத்திற்கும் மேல் தார்மீக வழிகாட்டியாக ஒரு தந்தையின் பாத்திரம் பலமுகங்களை கொண்டது. ஆனாலும் குழந்தை வளர்ப்பில் அவர் சற்று பங்களிப்பு குறைந்தவராகவே இருப்பார்.
ஆர். எல். கிரிஸ்வோல் தனது 1993 ஆம் ஆண்டு எழுதிய ‘ஃபாதர்ஹுட் இன் அமெரிக்கா: எ ஹிஸ்டரி’ புத்தகத்தில், ‘1970 களில் பாரம்பரிய தந்தையிலிருந்து பிள்ளைவளர்ப்பில் அதிக பங்களிக்கும் ‘புதிய தந்தைக்கு’ மாற்றம்பெற ஆரம்பித்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுகுறித்த பெரும்பாலான ஆய்வுகள், எம்மைப் போன்ற மேற்கத்திய சாரா கலாச்சாரங்கள் தந்தையின் பரிணாமத்தை புறக்கணித்தன என்றே குறிப்பிடுகின்றது.
இலங்கையில் தந்தைத்துவ பங்களிப்பு
இலங்கையை பொருத்தவரை, தன் குடும்ப நலனுக்கென பணம் சம்பாதிப்பவரே தந்தை எனும் பாரம்பர்யம் இருந்துவந்தது. எனினும் இப்போது இது மாற்றம்பெற்று வருகின்றது. எந்த வயதில் ஒரு குழந்தைக்கு பெற்றோரின் பிணைப்பு முக்கியமாக தேவைப்படுகிறதோ அச்சந்தர்பங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தந்தையர் பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்கிறார்கள் or விளக்கி வைக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் பாரம்பர்யம் பேணுகின்ற குடும்பம் ஒன்றினுள், குழந்தை வளர்ப்பில் குறிப்பாக அக்குழந்தையின் ஆரம்ப ஆண்டுகளில், அதன் மென்மையான திறன்களை வளர்த்தெடுப்பதிலும், குழந்தையை சமூகமயப்படுத்துவதிலும், பொதுவாக தாயின் தீவிரமான பங்களிப்பானது பிரதானமானதாக சொல்லபடுகின்றது. ஆனால் இது ஒரு சிக்கலை முன்வைக்கிறது. இந்த ‘மென்மையான’ பிணைப்பு நடவடிக்கைகளில் ஆண்களின் பங்கெடுப்பு பெரும்பாலும் தடுக்கப்படும் சிந்தனையே நிலவுகிறது.
இவ்வகைச் சிந்தனை, நல்லதை விட அதிக தீங்கையே விளைவிக்கும். குழந்தை வளர்ப்பில் அத்தகைய ஒரு முக்கியமான கட்டத்தில் தந்தை இல்லாதது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கக்கூடும., இவ் இடைவெளி அக்குழந்தைகள் ஒரு தயத்துடன் வளர வழிவகுக்கும். அதன் தாக்கம் காலம் தாமதித்த பின்னர் மட்டுமே புரியும்.
சமூக அழுத்தம் பெரும்பாலும் குழங்கைகளை கவனிப்பதும் , டயப்பர்களை மாற்றுவதும் அல்லது குழந்தைகளுக்கு உணவளிப்பதும் ஒரு ஆணின் வேலை அல்ல என்று கூறப்படுவதால் அவர்கள் இச்செயல்களில் பங்கேற்பதை தடுக்கிறது. அப்படி இருந்தப் போதிலும், இலங்கை ஆண்கள் இந்த பாத்திரங்களை நிறைவேற்ற முற்படுகிறார்கள், பாரம்பரிய குடும்ப அலகுக்குள் உள்ள இயக்கவியலை மாற்றுவதில் சிறப்பாக பங்கெடுக்கின்றனர்.
தந்தையர் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். பெற்றோர்-குழந்தைப் பிணைப்பை ஊக்குவிக்கின்ற செயல்களில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்துகின்றனர். மேலும் அவர்களுக்கு வெளிப்படையாக அதிக அன்பை காட்டுகிறார்கள். குழந்தை வளர்ப்பில் ஒரு தந்தையின் செயல்திறன்மிக்க பாத்திரப்பங்களிப்பு அவர்களின் தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன.
இதற்கிடையில், ஒற்றை பெற்றோர் (Single Parent) எனும் பொறுப்பில் உள்ள தந்தையர் பல ஆண்டுகளாக பாரம்பரிய தந்தைவழி மற்றும் பிள்ளைவளர்ப்பு பாத்திர வரையறைகள் இரண்டையுமே நிறைவேற்ற பாடுபட்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவை நவீன யுக தந்தைத்துவமெனும் இவ் மாற்றத்தை நோக்கிய அத்தியாவசிய வினையூக்கிகள் ஆகும்.
தந்தையின் செயற்திறன்மிக்க பங்கேற்பின் நன்மைகள்
ஆரம்ப காலங்களில், குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றிய அறிவைக் கற்கத் தொடங்குகிறார்கள், மொழிகளைக் கற்கிறார்கள் மேலும் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்னும் இயக்கத் திறன்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள். அந்தக் கட்டத்தில் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிப்படுத்த தேவையான மிக முக்கியமான கூறுகள் ஊட்டச்சத்து, தூண்டுதல் மற்றும் வெளிப்படையான அன்பும் பாதுகாப்புமாகும்.
சிறு பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றோரின் நடத்தைகளைப் பின்பற்றி (அவதானித்து கற்கும் குணாதிசயம்) அவற்றையே வெளிப்படுத்துவதால் எதிர்மறையான நடத்தைளையும் வெளிப்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளது. இதை எதிர்ப்பதற்கான ஒரே முறையான வழி, முடிந்தவரை நேர்மறையான பல நடத்தைகளை வெளிப்படுத்துவதாகும்.
பிள்ளைகளின் சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை மேம்படுத்துவதில் தந்தையின் பாத்திரம் பெரும் பங்கு வகிக்கிறது. குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் நிகழும் தொடர்பாடல் குறையானது வளர்ந்துவரும் அவர்களின் உணர்ச்சிகளையும் தொடர்பாடல் திறன்களையும் முடக்குவதாக அமைகின்றது.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக் (AAP) “தங்கள் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சியில் தந்தையின் பாத்திரங்கள்” எனும் தனது அறிக்கையில், “மூன்று வயதில், தந்தை-குழந்தை இடையேயான தொடர்பு என்பது குழந்தையின் மேம்பட்ட மொழி வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான முன்கணிப்பாளராக செயற்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம், தந்தைக்கும் குழந்தைக்கும் இடையிலான நேரடி அனுகூலமான தொடர்புகள் பிற்காலத்தில் சிறப்பானதொரு உலகத்தை உருவாக்கும் என்றும் சொல்லபடுகிறது. குழந்தைக்கு மாத்திரமின்றி அது தந்தையர்க்கும் திருப்திகரமான நிறைவை தரும்.
ரோஸ் டி. பார்க் தனது 1996ம் ஆண்டில் எழுதிய புத்தகமான ‘fatherhood’ இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒரு தந்தை தனது குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளும் முதன்மையான விடயங்களில் ஒன்று, அவருடைய தேவைகளும் குழந்தையின் தேவைகளுடன் பொருந்தக்கூடியதா என்பதுதான். அவர்கள் வழிக்காட்டுதலுக்கு அவரை எதிர்ப்பார்க்கையில்; அவர்களுக்கான அறிவுரைகளை விரும்பி வழங்குகின்றனர். குழந்தைகள் அவரை ஒரு முன்மாதிரியாகப் (model) எதிர்ப்பார்க்க தொடங்கும்போது தன்னை ஒரு முன்மாதிரியாக மாற்ற முனைவது அவரது முடிவுகளுக்கு கூடுதல் பரிமாணத்தை சேர்க்கிறது. குழந்தைகளின் லட்சியங்களும் சாதனைகளும் அவனுக்கு வித்தியாசமாகத் தெரியம், ஆனால் அவற்றை குழந்தைகளின் கண்கொண்டு பார்த்தால்அவை அவனது லட்சியங்களாய் தென்படும்.”
“ஈடுபாடும் அக்கறையுமுள்ள தந்தையை கொண்ட சம்பந்தப்பட்ட குழந்தைகள் சிறந்த கல்வி பெருபேற்றினை கொண்டவர்கள்” குழந்தையின் அறிவுசார் வலிமையில் என்றும் சாதகமாக பாதிப்பினை உருவாக்கலாம் என்பதற்கு மேற்சொன்ன வரிகளே சான்று. தீவிரமாக ஈடுபாட்டுடன் பிள்ளைவளர்ப்பில் பங்கெடுக்கும் தந்தையர் தங்கள் குழந்தையின் அறிவாற்றல் திறன்களையும் மொழியியல் திறன்களையும் மேம்படுத்த உதவுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தந்தைகள் அதிக ஈடுபாடு கொள்வது எப்படி?
பல புதிய தந்தையர்களுக்கு இது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம்; அவர்கள் இந்த உலகத்திற்கு ஒரு புதிய ஜீவனைக் கொண்டு வர உதவியதையும் தாண்டி, வழிகாட்டுதலுக்கும் ஆறுதலுக்கும் ஈர்க்கக்கூடிய, ஆதரவற்ற ஒரு மனம் அவர்களை நம்பியுள்ளது என்பதையும் ஏற்கவேண்டிய தருணம் இது. ஒரு தந்தை தங்கள் குழந்தையுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி அவர்களை வளர்ப்பதற்கு உதவக்கூடிய பல்வேறு வழிகள் உள்ளன.
உதாரணமாக, புதிதாகப் பிறந்த குழந்தைகள் கண்ணாடி போல் நாம் செய்வதை பின்பற்றுவார்கள். அவர்கள் பெரும்பாலும் எளிமையான தொடர்பாடல்களை கற்பவர்கள். எனவே அவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை அவதானித்து அவர்களின் செயல்களை இலகுவாகப் பிரதிபலிக்க கற்றுக்கொள்கிறார்கள்.
புதிதாகப் பிறந்தவர்களுக்கு பிற உணர்ச்சிகள் இன்னும் அவர்களின் சூழலில் சரிசெய்யப்படுவதால் தோல் தொடர்பு முக்கியம். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோருடன் பழகுவதிலிருந்து கிடைக்கும் அரவணைப்பு அவர்களுக்கு ஆறுதலளிக்கிறது, மேலும் இது ஒரு பிணைப்பை நிறுவுவதற்கான முதற் படியாகும்.
பிறந்த முதல் மூன்று மாதங்களில், குழந்தைகள் சிறந்த பார்வைத் திறனை வளர்த்துக்கொள்வார்கள், அதன் வீச்சு பின்னர் பெரிதும் மேம்படும். அவர்களைப் பார்த்து சிரிப்பதுவும், விளையாடுவதும், அவர்களுக்கு ஒரு புதிய தொடர்பாடல் முறையை கற்றுத்தரும்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பொருட்களையும், படங்களையும், நிறங்களையும் காண்பித்து உலகத்தை பற்றி கற்றுக்கொடுக்கும் காலகட்டமும் இது தான்.
ஆறாவது மாதம் முதல், உணவுப் பொருட்களை கொடுக்கும் பரிசோதனை தொடங்குகிறது. உணவு நேரங்களையும் தொடர்பாடல் அமர்வுகளாக மாற்றுவதன் மூலம், சுவைகள் மற்றும் வெவ்வேறு உணவு வகைகளைப் பற்றி கற்றுக்கொடுக்க முடியும். அவர்கள் உணவை பற்றி அறிய வினோதமான போக்குகளை அல்லது முறைகளை கையாள்வார்கள்.
அவர்கள் தங்கள் பெயர்களை அடையாளம் காணத் தொடங்கிவிட்டால், பொருட்களை அடையாளம் காணவும் பெயர்களை சொல்லிக் கொடுக்கவும், சில எளிமையான விளையாட்டுகளை விளையாடவும் கற்றுக்கொடுக்க உதவும் சிறந்த சந்தர்ப்பமாக அமைகிறது. குழந்தையுடன் தொடர்ந்து உரையாடுவது அவர்களின் மொழியியல் திறன்களை மேம்படுத்த பெரிதும் உதவும், அதேசமயம் கலந்துரையாடும் விளையாட்டுகள் அவர்களின் அறிவாற்றல் திறன்களை வளர்க்கும்.
இந்த நடவடிக்கைகள் தாய்க்காகவே ஒதுக்கப்பட்டவை என்ற பழைமைவாத பார்வை இருந்தபோதிலும், ஒரு தந்தையும் இவற்றில் பங்கேற்பது மிக முக்கியமானது. ஒரு குழந்தையின் நல்வாழ்விற்கு தந்தையின் அன்பும் அரவணைப்பும் உதவியுள்ளது என்பதை தெரியவைக்க வேண்டும். பெற்றோரின் நிபந்தனையற்ற அன்பை எதனுடனும் ஒப்பிட முடியாது, அதிலும் தந்தையரின் அன்பு நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் நமது ஒழுக்க நெறியாளர்களும் தார்மீக வழிகாட்டிகள் மட்டும் அல்ல நம்மீது அன்பும் அக்கறையும் நம் செயலகளில் அதீத ஈடுபாடும் கொண்ட ஜீவன்கள்.
உலகின் முக்கியமான வேலையும் கடிமான வேலையும் குழந்தை வளர்ப்புதான். ஆகவே , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த தொடக்கத்தை வழங்க உதவுவதற்காக, யுனிசெப் இலங்கை, www.betterparenting.lk – என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள இவ்வலைத்தளம் குழந்தை பராமரிப்பு, குழந்தை மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, மற்றும் ஆரோக்கியம் முதலான நால்வகை தகவல்களை கொண்டுள்ளது.