சுழல்பந்து சூறாவளியாக கிரிக்கெட் உலகில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் ரஷீத் கான், தனது சுழல்பந்துவீச்சால் பல முன்னனி பேட்ஸ்மேன்களை திணரடித்துக்கொண்டு வருகிறார்.இந்நாளில் அவர் பந்துவிச்சை பெரும்பாலான மூத்த கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி விட்டனர். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)கிரிக்கெட் போட்டியில் தனது திறமையால் அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். இந்த கட்டுரையில் ரஷீத் கானின் வாழ்க்கை பற்றியும் அவருக்கு கிரிக்கெட்டில் கிடைத்த அங்கிகாரத்தை பற்றியும் வரைந்திருக்கிறேன்.
கிரிக்கெட் ஆர்வம்
ரஷீத் கான் செப்டம்பர் 20 1998ல் ஆப்கானிஸ்தானிலுள்ள நங்கார்ஹரில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் 10 பேர். ஆப்கானில் நடந்த போர் காரணமாக தனது இளமைப் பருவத்திலேயே அவருடைய குடும்பம் இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்குச் சென்று ஒரு சில வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பின்னர் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பி தங்களது சாதாரண வாழ்க்கையைத் தொடங்கினார்கள்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும், மிக சிறந்த ஆல் ரவுண்டருமான சாகித் அஃபிரிடியை தனது கிரிக்கெட் வாழ்க்கைகான முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு ”ரஷீத்” பள்ளி பருவத்தில் தனது சகோதரர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்
சர்வதேச கிரிக்கெட்டில்
தனது முதல் சர்வதேச ஒரு நாள் 50 ஓவர் போட்டியை, அக்டோபர் 18 , 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையில் நடந்த போட்டி தான். அதே தொடரில் அக்டோபர் 26 அன்று தனது முதல் சர்வதேச டி 20 போட்டியில் களமிறங்கி தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.
மார்ச் 10, 2017ல் அயர்லாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி 20 சர்வதேச போட்டியில் மூன்று ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டர் மற்றும் அனைத்து டி 20 சர்வதேச போட்டிகளில் நான்காவது சிறந்த பந்துவீச்சு, இரண்டு ஓவர்களில் பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைகளை புரிந்திருக்கிறார். இந்த போட்டியை வென்றதும் அப்கானிஸ்தான் அணி தான்.
அதன் பின் தொடர்ச்சியாக தன் பந்துவீச்சு திறமையைக் காட்டி வந்த ”ரஷீத்” மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சர்வதேச 50 ஓவர் போட்டியில் 18 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது சர்வதேச பந்துவீச்சு அட்டவணையில் நான்காவது மிகச்சிறந்த பந்துவீச்சாகும். மேலும் முதல் இணைத் தேசிய கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர் 7 விக்கெட்களைக் கைப்பற்றிய சாதனையையும் நிகழ்த்தினார். இந்த போட்டியின் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். கிரிக்கெட் விமர்சகர்களின் பார்வை ரஷீத் கான் பக்கம் திரும்பியது.
உள்ளூர் மற்றும் அண்டை நாட்டு டி20 போட்டிகள்
டிசம்பர் 7, 2016 இல் அபுதாபியில் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் தரத் கிரிக்கெட் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவர் ஆட்டத்தின் முதல் பகுதியில் 48 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின் இரண்டாவது பகுதியில் 74 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகலுக்கு 25 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வளரும் ஆல்ரவுண்டராக தன்னை கிரிக்கெட்டில் நிலை நாட்டிக்கொணடார்.
2017 கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்),அமேசான் வாரியர்ஸ் அணி நிர்வாகம் தன் அணியில் ”ரஷீத் கான்” விளையாட $ 60,000 அமெரிக்க டால்ர்கள் கொடுத்து ஏழத்தில் எடுத்தது. இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, கரீபியன் பிரீமியர் லீக்கில் வரலாற்றில் முதல் ஹாட்றிக் பதிவிச்செய்து, முதல் ஹாட்றிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
ஆஸ்திரேலியா பிக் பாஷ் டி20 லீக் போட்டிகள் , பாக்கிஸ்தான் சூப்பர் லீக் வீரர்கள் வரைவு டி20 போட்டிகள், இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20 போட்டிகள் என்று உலகத்தில் பல்வேறு இடங்களில் ஆண்டு தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்தியன் பிரிமியர் லீக்
இந்த ஆண்டு நடந்து முடிந்து இந்தியன் பிரிமியர் லீக்கள் மூலம் ரஷீத் கான் மிக பிரபலம் அடைந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் முதல் ஆப்கானித்தான் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 14 போட்டிகளில் விளையாடிய இவர் 358 ரன்கள் விட்டுக் கொடுத்து 17 விக்கேட்டுகளைக் கைப்பற்றினார். ஓவருக்கு சராசரியாக ஓவருக்கு 6.62 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இந்த தொடரில் இவரது சிறந்த பந்துவீச்சு 19 ரன்களுக்கு மூன்று விக்கெட் ஆகும். இந்த தொட்ரின் மூல்ம பலரது பாராட்டையும் பெற்றார். இன்னும் சொல்லப்போனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு சென்றதில் இவருக்கு மிக முக்கிய பங்குண்டு.
ரஷீத் கான் பெற்ற பாராட்டு
ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரஃப்கான் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். அதில், “ஆஃப்கானிஸ்தான் ரஷீத் கான் போன்ற ஹீரோவை கண்டு பெருமைப்படுகிறது. என் சார்பாக இந்திய நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன், எங்கள் நாட்டு வீரர் அவரின் திறமையை வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுத்ததற்கு. ரஷீத் கான் சிறந்த வீரர் என்பதை அவரின் திறமை மூலம் நிரூபித்து காட்டியுள்ளார். அவர் எங்கள் நாட்டின் சொத்து. யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.” என தனது டுவிட்டரில் பிரதமர் மோடியின் விளையாட்டான ட்விட்டுக்கு பதிலாக டுவிட் செய்திருக்கிறார்.
ஐபிஎல் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியதற்கு, ஐதராபாத்தின் ரஷீத் கான் முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 17.5 ஓவரில் 134 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தவித்த நிலையில் களமிறங்கிய ரஷீத் கான் வெறும் 10 பந்துகளை மட்டும் விளையாடி 4 சிக்ஸர் 2 பவுண்டரிகள் விளாசி 34 ரன்கள் குவித்தார் .இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவானான ”சச்சின் டெண்டுல்கரின்” பாராட்டையும் பெற்றார்.
“மிகச்சிறந்த” ஸ்பின்னர் ரஷீத் கான் என்பது தெரியும். அதை எப்போதும் தயங்காமல் சொல்வேன் டி20 உலகின் சிறந்த பவுலர். அதே சமயம் அவர் சிறிது பேட்டிங் திறனும் பெற்றுள்ளார் என்பதையும் நிரூபித்துள்ளார், என்று பாராட்டினார்.
ரஷீத் கான் மிகச்சிறந்த உலகத்தரமான பவுலர். அதை டி-20 கிரிக்கெட்டில் அவர் நிரூபித்துள்ளார். பிற்காலத்தில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் நிச்சயமாக அவர் இடம்பிடிப்பார். ’ என்றார் நியூசிலாந்து ஆணியின் கேப்டனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.இதை போன்று, பல கிரிக்கெட் பிரபலங்களின் பாராட்டை தட்டி சென்றுள்ளார்.
இதுவரை நிகழ்த்திய சாதனைகள்
பிப்ரவரி 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இவர் முதல் இடத்தில் இருந்தார். இதன்மூலம் மிக குறைந்த வயதில் முதலிடம் பிடித்தவர் எனும் சாதனையைப் படைத்தார், அடுத்த சில மாதங்களில் இவர் சர்வதேச 20 ஓவர் போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் இவர் முதல் இடம் பிடித்தார். மார்ச், 2018 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது19, 165 நாட்கள் கேப்டன் பொறுப்பு வகித்தார். இதன்மூலம் மிக குறைந்த வயதில் சர்வதேச போட்டிகளில் அணித்தலைவர் என்னும் பொறுப்பில் இருந்தவர் எனும் சாதனையையும் படைத்திருக்கிறார்.
மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனது 100 வது விக்கெட்டை விழ்த்தினார் . இது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் 100 வது விக்கெட்டாக அமைந்தது. இவர் 44 போட்டிகளிலேயே விளையாடி 100 விக்கெட்டை பெற்றுள்ளார். இதன்மூலம் மிக குறைவான போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் மிட்செல் ஸ்டார்க், 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.
சாதனைக்கு காரணம்
உங்கள் சதனைக்கு காரணம் என்வென்று கேட்டால். என் பவுலிங் சாதனைக்கு லெக் ஸ்பின்னர்களான இந்தியாவின் அனில் கும்ளேவும்,பாகிஸ்தானின் சையத் அஃப்ரிடியும் தான் காரணம் என தெரிவித்துள்ளார். இன்னும் அவர்களின் பவுலிங் வீடியோவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதன் மூலம் துள்ளியமாகவும், நேர்த்தியாகவும் ஸ்பின் ஆவதற்கும் சிறப்பான பயிற்ச்சியாக அந்த வீடியோக்கள் அமைவதாக கூறுகிறார்.மேலும் ஐதராபாத் அணி பவுலிங் பயிற்சியாளரும், உலகின் தலைச்சிற்ந்த ஸ்பின்னர் முரளிதரன் என்னிடம் கூறும் போது, “நீ சரியான வகையில் தற்போது பவுலிங் செய்துகொண்டிருக்கிறாய். எதையும் மாற்ற தேவையில்லை. இதையே முறையாக செய்தால் போதும்.” என தெரிவித்ததாக கூறிருகிறார்.
ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் இத்தனை சாதனைகளை தன் வசப்படுத்திய ரஷீத் கான், இன்னும் தன் கிரிக்கெட் உலக பயணத்தில் பல மைல்கற்களை கடந்து செல்ல எனது வாழ்த்துக்கள். நீங்களும் அவரை வாழ்த்தலாமே.
Web Title: The Cricketer Rashid Khan
Featured Image Credit: dnaindia