Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

QR குறியீடுகள் பற்றி நீங்கள் அறியாதவை சில!

QR குறியீடுகள் இன்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது. குறிப்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியுடன் 4G வலையமைப்புகள் கூட இன்னும் முழுவேகத்தில் ஊடுருவாத பட்டி  தொட்டிகளில் கூட பலரும் இந்த QR Code தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொண்டுவிட்டனர். QR குறியீடு எனப்படும் விரைவு பதில் குறியீடு ( quick response code) 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை ஜப்பானில் உள்ள டென்சோ வேவ் என்ற போக்குவரத்து தொடர்பான நிறுவனத்தை சார்ந்த மசாஹிரோ ஹரா என்பவரே இந்த QR குறியீடுகளின் ஆரம்ப கர்த்தா ஆவார். Go board என்ற விளையாட்டிலிருந்தே QR குறியீட்டை உருவாக்கும் அவரது எண்ணம் தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது.

QR குறியீட்டை அடையாளம் காண்பதற்கான எளிதான வழி, அதில் காணக்கூடிய மூன்று பெரிய சதுரங்கள் தான். இது Finder pasterns என்று அழைக்கப்படுகிறது. இதனூடே இந்த குறியீட்டைப் படிக்க வேண்டிய திசை அதை ஸ்கேன் செய்யும் கேமராவுக்குக் காட்டப்படும். QR குறியீடுகளில் சுமார் 40 வகைகள் உள்ளன. இவை சேமிக்கக்கூடிய தரவுகளின் அளவுக்கு ஏற்ப பிரிக்கப்படுகின்றன. ,உதாரணமாக V40 QR குறியீடானது ஏறக்குறைய 4296 எண்ணெழுத்துகளை சேமிக்கும் திறன் கொண்டது.

Version 40 QR குறியீடு. (மூன்று பெரிய சதுரங்களுக்கு மேலதிகமாக, தரவை எவ்வாறு படிப்பது என்பதை விளக்கும் சிறிய பெரிய சதுரங்களைக் காணலாம்) – YouTube/ThioJoe

QR தொழில்நுட்பமானது 1D பார்கோட் ( Barcode) தொழில்நுட்பத்தின் நீட்சியே ஆகும். இதன் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் 1D பார்கோடுகளை விட இவை அதிகளவு தரவுகளை சேமிக்கும் ஆற்றலுடையவை. படிப்படியாக, உலகில் கையடக்கத் தொலைபேசிகளின் வளர்ச்சியுடன், மேம்பட்ட கேமராக்கள் தொலைபேசிகளின் இன்றியமையாத பாகமாகின. அதனோடு சேர்ந்து QR தொழில்நுட்பமும் உலகில் மிகவும் பிரபலமடையத் தொடங்கியது, ஏனெனில் 1D பார்கோடுகள் போன்ற சேமிக்கப்பட்ட தரவைப் படிக்க சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை மாறாக கேமராக்களை கொண்ட எந்தவொரு ஸ்மார்ட் ஃபோனிலும் அவற்றை எளிதாக ஸ்கேன் செய்ய முடியும் என்ற நிலை உருவானது. இந்தக் கட்டுரையின் மூலம் நீங்கள் அறிந்திராத QR குறியீடுகளைப் பற்றிய சில விடயங்களை தெரிந்து கொள்வோம்.

1D மற்றும் 2D குறியீடுகள்?

1D (ஒரு பரிமாண) நேரியல் குறியீடு என்பது ஒரு திசையில் மட்டுமே படிக்கக்கூடியவை, பெரும்பாலான தயாரிப்புகளில் பொதுவாகக் காணப்படும் UPC பார்கோடுகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த குறியீடு லேசர் கதிர்கள் மூலம் எளிதாக படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவையாகும். UPCகள், உலகளாவிய தயாரிப்பு குறியீடுகள் (universal product code) என்றும் அழைக்கப்படுகின்றன. 2D பார்கோடுகளுக்கு மிக எளிதான உதாரணம் QR குறியீடு. கணினியில் மிக எளிதாக படிக்கப்படக்கூடிய இது சாதாரண 1D குறியீடுகளை விட அதிக தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டது. எடுத்துக்காட்டாக, மிக நீண்ட இணைய இணைப்பு அல்லது எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட தரவுகளை இதில் இலகுவாக சேமிக்க முடியும். 

அதிக அளவிலான தரவுகளைச் சேமிக்க முடியும் என்ற போதிலும், ஒவ்வொரு வகையான QR குறியீட்டிலும் சேமிக்கப்படும் தரவுகளின் அளவு மாறுபடும். அளவைத் தவிர, இவற்றைச் சேமிப்பதற்கும் குறியாக்கம் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் முறைகளைப் பொறுத்தும் இவை வேறுபடுகின்றன. சில நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட பணிகளுக்காக சிறப்பு QR குறியீடுகளை உருவாக்கியுள்ளன.

நமக்கு அடிக்கடி காணக் கிடைக்காத 2D குறியீடுகள் – YouTube/ThioJoe

QR குறியீடுகள், Data-matrix போன்றே UPS ஆல் உருவாக்கப்பட்ட MaxiCode போன்ற சிறப்பு 2D குறியீடுகள், இவற்றுக்கு நல்ல உதாரணங்களாக அமைகின்றன. MaxiCode இன் முக்கிய நோக்கம் அதிக தரவை சேமிப்பது அல்ல. இது தரவுகளை மிக விரைவாக படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். ஏனெனில் UPS போன்ற நிறுவனங்களுக்கு, வேகம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த Aztec குறியீடு, PDF417 போன்ற குறியீடுகளை சில நாடுகளில் விமானம் மற்றும் ரயில் டிக்கெட்டுகளில் காணலாம். நாம் அடிக்கடி பார்க்காத ShotCode, JAB Code, HCCB Code போன்றவை வேறு நாடுகளில் சிறப்பு நோக்கங்கள் கருதி பயன்படுத்தப்படுகின்றன.

பிழை திருத்தம் (Error correction) காரணமாக சேதமடைந்தாலும் படிக்கக் கூடிய QR குறியீடுகள்.  

பெரும்பாலான 2D குறியீடுகளில் காணக்கூடிய சிறப்பு அம்சம் பிழை திருத்தும் திறன் ஆகும். QR குறியீட்டின் ஒரு பகுதி தெளிவாக இல்லை அல்லது சேதமடைந்திருக்கும் என்ற நிலையிலும் எந்த சிக்கலும் இல்லாமல் தொடர்புடைய குறியீட்டை உங்கள் ஃபோனால் படிக்கக்கூடிய வகையில் இந்த QR குறியீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பம் பலரிடையே பிரபலமடைந்ததற்கு இதுவே காரணமாகும்.

இந்த பிழை திருத்தும் திறன் QR குறியீடுகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. பிழை திருத்தம் ஒவ்வொரு குறியீட்டிற்கும் 7% முதல் 30% வரை இருக்கும். இருப்பினும், இந்த உயர்வான திருத்தும் திறன் கொண்ட QR குறியீடுகளின் தரவு சேமிப்பு திறனானது சாதாரண குறியீடுகளைக் காட்டிலும் குறைவாகவே காணப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் அல்லது பிராண்டின் லோகோ QR குறியீட்டின் நடுவில் இடப்பட்டிருப்பதை நாம் கண்டிருப்போம், ஏனெனில் அந்த குறியீடு பிழைகளை சரிசெய்யும் திறனைக் கொண்டதாகும். தொடர்புடைய லோகோ இருக்கும் இடத்தில் வேறு படிக்கக்கூடிய தரவு இல்லாவிட்டாலும், கேமரா எந்த சிக்கலும் இல்லாமல் முழு QR குறியீட்டையும் படிக்க முடியும்.

உங்கள் வணிகத்திற்காக அல்லது உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உங்கள் சொந்த QRஐ உருவாக்க விரும்பினால், அதற்கு இணையத்தில் பல சேவைதி தளங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான இலவச சேவைகள், மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படும் குறியீடுகளையே வழங்கும். நீங்கள் உருவாக்கிய QR ஓரிரு வாரங்களில் காலாவதியாகும் வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் நீங்கள் qrcodechimp.com போன்ற இணையதளங்களிலிருந்தும் உங்களுக்கான QR குறியீடுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

நீங்கள் பார்க்கும் QR குறியீடுகள் அனைத்தையும் ஸ்கேன் செய்ய வேண்டாம்

ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, ​​குறியீட்டின் முடிவில் இலக்கு இல்லை என்றால், target destinationஐ நீங்கள் பார்க்க மாட்டீர்கள். இதன் காரணமாக, நீங்கள் ஆபத்தான இணையதளத்திற்கு இட்டுச் செல்லப்படலாம். மேலும், இதை நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியில் இருந்து படிப்பதால், தேவையற்ற புரோகிராம்கள் உங்கள் சாதனத்தில் பதிவிறக்கமாக அதிக வாய்ப்பு உள்ளது.

எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது ?

QR Code  read කරපු ගමන් වෙබ් එකට ඔබ අරගෙන නොයන scanner එකක් භාවිත කරන්න. නොමිලේ තිබුණු පලියට හැම Scanner එකම ආරක්‍ෂිත නොවන බව මතක තබා ගන්න. මගේ පුද්ගලික තේරීම නම් Google Lens. මෙය භාවිත කරන්න ප්‍රධානත ම  හේතු දෙකක් තිබෙනවා. එකක් තමයි මේ ඔස්සේ QR එක scan කර වෙබ් ලිපිනයේ preview එකක් ඔබට පෙන්වීම. එතකොට ක්ලික් කරලා යන්න කලින් සැක සහිත ලින්ක් එකක් නම් එයට නොයා ඉන්න ඔබට පුළුවන්. 

QR குறியீட்டைப் படித்த உடனே உங்களை இணையத்திற்கு இட்டுச் செல்லாத ஸ்கேனர்களைப் பயன்படுத்தவும். இலவசமான அனைத்து ஸ்கேனர்களும் பாதுகாப்பானவை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். எங்களது தனிப்பட்ட விருப்பம் Google Lens. இதைப் பயன்படுத்துவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று QR ஐ ஸ்கேன் செய்தவுடன் இணைய முகவரியின் முன்னோட்டத்தைக் காண்பிப்பது. அடுத்து கிளிக் செய்வதற்கு முன்னர் அது சந்தேகத்திற்குரிய இணைப்பாக இருக்கும் என நீங்கள் எண்ணினால், அதைத் தவிர்த்துவிடலாம்.

 QR குறியீட்டைப் படிக்கும் Google Lens – chanukanadun.com

இரண்டாவதாக, இது உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அல்லது ஸ்கிரீன்ஷாட் செய்யப்பட்ட QR குறியீடுகளைக் கூட இதில் படிக்க முடியும். நம்பகமான QR குறியீட்டைத் தவிர, நீங்கள் எந்த செயலியை நிறுவினாலும், கிடைக்கும் QR குறியீட்டைப் படிக்க முன்னர் அவதானமாக இருப்பது  மிகவும் வேண்டப்படுகிறது

QR தொழில்நுட்பம் நமக்கு புதிதல்ல, இப்போது QR குறியீடுகளைப் பயன்படுத்தி பணம் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகள் செய்ய முடியும். கொமர்ஷல் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட Q+ Payment App ஆனது மிகவும் பாதுகாப்பாகவும் எளிதாகவும் பணம் செலுத்துவதற்கான சிறந்த செயலியாகும். நாளுக்கு நாள் தொழில்நுட்பத்துடன் முன்னேறும் நம்மிடையே, Q+ Payment App என்பது கையடக்கத் தொலைபேசிகளில் நிச்சயம் இருக்க வேண்டிய செயலி ஒன்றாகும்.

மூலங்கள்:

YouTube/ThioJoe

Kaspersky.com 

Digitalsignagetoday.com 

Androidpolice.com 

Bostonmagazine.com 

Nytimes.com 

அட்டைப் படம் -Unsplash.com 

Related Articles