நம் அன்றாட வாழ்வில் நாசா

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) இன்று வான்வெளி ஆராய்ச்சியிலும், தொழில்நுட்பம்  மற்றும் தொலைத்தொடர்பு முன்னேற்றத்திலும் முன்னோடிகளாகத்  திகழ்வது உலகம் அறிந்ததே. நாசா ஆராய்ச்சிக்காகச்  செல்லும் விஞ்ஞானிகள் வான்வெளியில் இருக்கும்பொழுது பயன்படுத்துவதற்காகப்  பல சாதனங்களை பெரிய பொருட்செலவில் உருவாக்குகின்றனர். அது பூமியில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கும் வந்து நம் அன்றாட வாழ்வில் ஒன்றென கலந்துவிடுகிறது. நாசாவின் 2016 புள்ளி விவரப்படி ஏறத்தாழ இரண்டாயிரம் பொருட்கள் அவர்களால் உருவாக்கப்பட்டு கணினித்  துறை, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல், மருத்துவம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் உற்பத்தி தொழிற்சாலை என நாசாவின் கண்டுபிடிப்புகள் பல பரிமாணங்களில் பூமியைச்  சுழன்று வருகிறது. அவைகளில் ஒரு சிலவற்றை மட்டும்  நாம் காணலாம்.

விண்வெளி வீரர்கள் குழு மிக நீண்ட காலம் விண்வெளியில் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் போது அவர்களுக்கான உணவு அங்குள்ள சூழலுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக, பாதுகாப்பாக மற்றும் பல்வேறு சத்துக்கள் நிறைந்ததாக இருத்தல் வேண்டும். குறைந்த அளவே உணவு உட்கொண்டாலும் அதன் சத்துக்கள் அவர்களை நீண்ட நேரம் காப்பதாக இருத்தல் வேண்டும். மறுசுழற்சித்  தன்மை கொண்ட பாக்டீரியா மற்றும் தாவரங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட உணவை இதற்காக தயார் செய்தனர்.

இந்தத்  தயாரிப்பு முறையைப்  பயன்படுத்தி பூமியில் பின்னர் குழந்தைகளுக்கு சத்துணவுகளை உணவு நிறுவனங்கள்  தயார் செய்தனர். இன்று நாம் மருந்தகங்களில் வாங்கும் சந்தையில் உள்ள குழந்தைகளுக்கான  சத்துணவு (Enriched Baby Food) அனைத்திலும் முக்கால் பாகம்  Formulaid என்ற என்ற முக்கியக்  காரணி அமைந்திருக்கும். அது இம்முறையால்உருவாக்கப்பட்டதே. இது குழந்தைகளின் அறிவுத்திறனை வலுப்பெறச் செய்யும்.

குழந்தைகளுக்கான  சத்துணவு (Enriched Baby Food) அனைத்திலும் முக்கால் பாகம்  Formulaid என்ற என்ற முக்கியக்  காரணி அமைந்திருக்கும் படம்: spinofftechnologies

இயந்திரத்திற்கும் தொடர்புகள் ஏற்படுத்தி இயக்கி வந்தனர். நாசாவின் மருத்துவர் குழுவுடன் இணைந்து இதே தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி இருதயத்தை செயற்கையாகத்  துடிக்கச  செய்யும் கருவிகளை உருவாக்கினர். உடலுக்கு ரத்த ஓட்டத்தை தடையில்லாமல் அளிக்கும் இந்த கருவிகள் இதயமாற்று அறுவை சிகிச்சை மற்றும் பைபாஸ்  சிகிச்சைகள் செய்யப்  பெரிதும் உதவுகிறது. இதுவரை சில கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

செயற்கைத்  தோல் மற்றும் தசை அமைப்புகள் கொண்டு செயற்கை மனித உறுப்புகளை உருவாக்கினர். விண்வெளி ரோபோட்டுகளுக்குப் பொருத்தி அதனை பயன்பாட்டிற்கும், பரிசோதனைக்கும் உட்படுத்தினர். இதே தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகளுக்குச்  செயற்கை கை, கால்கள் தயாரிக்கவும் உதவியது.

நாசாவின் ரோபோட்கள் அதிர்ச்சியை உறிஞ்சும் தன்மை வாய்ந்தவை. இதே தொழில்நுட்பத்தை பூமியில் பயன்படுத்திக்  கட்டிடங்களை நிலநடுக்கத்திலிருந்து பாதுகாக்க (shock absorbtion) நாம் பயன்படுத்தி வருகிறோம்.

இதே தொழில்நுட்பத்தை பூமியில் பயன்படுத்திக்  கட்டிடங்களை நிலநடுக்கத்திலிருந்து பாதுகாக்க (shock absorbtion) நாம் பயன்படுத்தி வருகிறோம். படம்: spinofftechnologies

விண்வெளி விமானம் ஏறும்போதும், இறங்கும்போதும் ஏற்படும் அதிர்ச்சியில் இருந்து பயணிகளை காக்க வளையும் தன்மை கொண்ட மிருதுவான செயற்கை குஷன் பஞ்சுகள் (Temper foam) சுமார் 1970’களில் நாசாவால் உருவாக்கப்பட்டது. நம் வாகனங்கள், சோபா, மெத்தைகள் அனைத்திலும் இதன் தொழில்நுட்பம் இன்றளவும் பயன்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (Water Purification) தொழில்நுட்பம் விண்வெளிக்காக  முதலில் உருவாக்கியதும் நாசா தான்.

ஒரு நிறுவனத்துடன் இணைந்து நீரை மறுசுழற்சி செய்து, சுத்திகரித்துப்  பயன்படுத்தும் முறை மற்றும் கடல் நீரை சுத்தமான நீராகப்  பயன்படுத்தவும் முயற்சி மேற்கொண்டது. இதைக் கண்டறிய முயற்சி செய்தபோது நவீனமான சிறுநீரக கூழ்மப்பிரிப்பு (kidney dialysis) முறையைக்  கண்டறிந்தனர். இந்த முறை நோயாளிகளுக்கும், மருத்துவ உலகிற்கும் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக இருந்தது.

குட் இயர் (GoodYear) நிறுவனத்திடம்  விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் இறக்கப்  பயன்படும் பலூன், இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையாக இருக்குமாறு தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டதாம். அதனைத்  தயாரித்த பின் குட்இயர் நிறுவனம் அதன் ஆயுள் சிறப்பாக இருந்ததால் அதே தொழில்நுட்பத்தில் ரேடியல் சக்கரங்களை வாகனங்களுக்கு தயாரித்தனர். இவ்வகை சக்கரங்கள் நீண்ட மைல்கள் உழைக்கக்கூடியது.

விண்வெளியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் கண்ணாடிக்  (லென்சுகள்) குவியாடிகள் கீறல் எதிர்ப்பு தன்மை (scratch resistant glasses) கொண்டதாக வேண்டும் என்று ஒரு நிறுவனத்திடம் கேட்டது. பின் அதே தொழில்நுட்பம் இன்று நாம் பயன்படுத்தி வரும் கண் கண்ணாடிகள் மற்றும் தலைக்  கவசத்தின் முன் கண்ணாடி உள்ளிட்டவைகளில் வந்துள்ளது.

இன்று அணைத்து இடங்களிலும் பரவலாகப்  பயன்படுத்தி வரும் கண்காணிப்புப்  புகைப்படக்கருவிகள் நாசா மற்றும் புகைப்படக்கருவி நிறுவனம் இரண்டின் கூட்டு முயற்சியால் விண்வெளிக்காக  உருவாக்கப்பட்டவை. பின் இராணுவ தேவைகளுக்காக இதே தொழில்நுட்பம் பயன்பட்டது. இப்பொழுது நம் அணைத்து வீதியின் கட்டிடங்களின் மேல் அமர்ந்து ஒய்யாரமாக கண் சிமிட்டி கொண்டிருக்கிறது.

படம்: sistemleri-kamera

நாசா மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் ராக்கெட்டில் பயணிக்கும்போது  பயன்படுத்துவதற்காகக்  குறைந்த எடை கொண்ட முகமூடியுடன் கூடிய சுவாசக்கருவிகள், தற்காப்பு கவசம் மற்றும் அலுமினிய கலவையால் ஆன தண்ணீர் புட்டிகளைத்  தயாரித்தனர். இதே தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி தீ தடுப்பு உபகரணங்கள் தயார் செய்தனர். புகைக்  கசிவைக்  கண்டறியும் கருவியையும் சேர்த்து.

நாசா நிலவில் கால் பதித்த அன்றே பாறைகளை துளையிட பயன்படுத்தும் டிரில்லர் கருவி மற்றும் தூசி உறிஞ்சி (வேக்யூம் கிளீனர்) என பேட்டரிகளால் இயங்குமாறு தயார் செய்துள்ளனர். பின்னர் அது விற்பனை சந்தைக்கு வந்துள்ளது.

தானியங்கி விமானத்திற்காக சூரிய சக்தியை மின்னாற்றளாக மாற்றும்  பேட்டரிகள் மற்றும் பேனல்களைத் தயார் செய்தனர். அது இன்று உலகளாவிய பயன்பாட்டில் உள்ளது.

உராய்ராதலைத்  தவிர்ப்பதற்காகவும், மிருதுவான பாகங்கள் இயங்கவும் கடல்சார் ராக்கெட் மையங்களின் பயன்பாட்டிற்காக  பவுடர் வடிவில் லூப்ரிகன்ட்  தயாரித்தனர். இது அணைத்து என்ஜின் இயக்கத்திலும் இப்பொழுது  பெரும்பங்கு வகிக்கிறது.

gps எனப்படும் நிலைகாட்டி
படம்: spinofftechnologies

உலோகத்துறையில் புதிய கண்டுபிடிப்பாக நீரகஉலோகம் என்ற ஒன்றை பல உலோகங்களின் கூட்டுப்பொருளாக உருவாக்கியது. எளிதில் உடையாமலும், கீறல் விழுகாமலும் இருக்கும் இந்த உலோகம் இன்று பென்ட்ரைவ், மௌஸ் உள்ளிட்ட பல கருவிகள் தயாரிக்கப்  பயன்படுகிறது.

நீண்டகாலம் புவியீர்ப்பு விசை இல்லாமல் விண்வெளியில் இருக்கும்பொழுது உடல் பலவீனம், எலும்புகள் அடர்த்தி இழத்தல் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும். இதற்காகக்  காற்றழுத்தத்தைப்  பயன்படுத்தி புவியீர்ப்பை ஒற்றி இயங்கும் ட்ரெட்மில் இயந்திரங்களை உருவாக்கினர். தினமும் இதில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அவர்களுக்கு புவியீர்ப்பு சக்தி கிடைக்கும். நாசாவிடம் உரிமை பெற்று இன்று புவியீர்ப்பு விசைக்கு எதிரான ட்ரெட்மில் உருவாக்கி சந்தையில் புழக்கத்திற்கு வந்துள்ளது.

விண்களத்தில் தாவர வளர்ப்பு ஆராய்ச்சிகாக எல்.இ.டி. (LED) பல்புகளை உருவாக்கினர். இதே தொழில்நுட்பம் விரிவு செய்யப்பட்டு இன்று நம் மருத்துவமனைகளில் தசை பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றிற்கு இவ்வகை பல்புகளை காட்டி வலி நிவாரணம் தரப்  பயன்படுகிறது.

நீங்கள் உங்கள் கைகளில் இருக்கும் கைப்பேசியில் ஒரு புகைப்படம் எடுத்தால் கூட அதுவும் நாசா தொழில்நுட்பம் தான். கையடக்க கேமராக்கள் தேவை இருந்ததால் உருவாக்கப்பட்டு பின்பு நம் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

படம்: spinofftechnologies

இறுதியாக, நாசாவின் ஸ்பின்ஆப் என்ற நிறுவனம் வர்த்தக பொருட்கள் தயாரிப்பு மற்றும் சேவைகளை நாற்பது வருடங்களுக்கு மேலாக வழங்கி வருகிறது. நாசாவின் தொழில்நுட்ப உதவி, நேரடி காப்புரிமை, ஆராய்ச்சி உதவி என்ற அனைத்தையும்  இந்நிறுவனம் வழங்குகிறது.

பூமியில் நம் வாழ்க்கையை  மேம்படுத்த. விண்வெளி களத்தில் நம் வாழ்க்கையை  நீட்டிக்க, உயிர்களைக் கண்டுபிடிக்க என்று உழைக்கும் அவர்களை நாம் பாராட்டுவோமே….

 

 

உசாத்துணைகள்:

NASA -spin off technologies

 

Related Articles

Exit mobile version