ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதன் சுவாமி கோவில் பற்றி நாம் நிச்சயம் கேள்விப்பட்டு இருப்போம் ஆனால் இந்த கோவிலின் சரித்திரம் பற்றி வெளிநாட்டு மக்களுக்கு தெரிந்த அளவுக்கு கூட தமிழர்களுக்கு தெரியாது என்பது தான் நிதர்சனம். 156 ஏக்கரில் பரவியிருக்கும் இந்த கோவில் உலகின் மிகப்பெரிய நடைமுறை கோவில் ஆகும். இன்று நாம் இந்த கோவிலின் சிறப்பு, உலக வரலாறு மற்றும் பல உண்மைகள் பற்றி அறிந்துக்கொள்ள உள்ளோம்.
தமிழ் நாட்டில் எவ்வளவோ சுற்றுலா தளங்கள் இருந்தாலும். வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் எவ்வளோவோ உண்மைகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப்பட்ட வரலாற்று உள்ள ஸ்ரீ ரங்கநாதன் சுவாமி கோவிலின் மகிமையை காண ஒருநாள் போதாது. அந்தளவுக்கு சிறப்புகளும் பாரம்பரியமும் கொண்டுள்ளது இந்த ஸ்ரீரங்கம் கோவில்.
வல்லுனர்களின் கருத்துப்படி பலநூற்றாண்டுகளுக்கு முன்பு கோதாவரி ஆற்றகரையில் கவுதம ரிஷியின் ஆசிரமம் இருந்தது. அவர் தேவலோகத்தில் இருந்து கோதாவரி நதியை அழைத்து வந்தார். இதனால் இவரை அனைத்து திசைகளிலும் மக்கள் போற்ற ஆரம்பித்தனர். கவுதம ரிஷியின் புகழை கண்டு பல ரிஷி முனிவர்கள் இவர் மீது சினம் கொண்டனர். இவரை அனைவரது முன்பும் தாழ்த்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். கவுதம ரிஷி மீது பசுவை கொன்ற குற்றம் சுமத்தப்பட்டது, இதனால் அவரை ஆசிரமத்தை விட்டு வெளியேற்றினர்.
கவுதம ரிஷி இந்த சம்பவத்தால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானர். இதனால் அவர் ஸ்ரீரங்கம் சென்று கடவுள் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தார். ஸ்ரீரங்கம் மக்களின் கூறுகையில் கடவுள் விஷ்ணு ஸ்ரீ ரங்கநாதன் சுவாமி ரூபத்தில் வந்து கவுதம ரிஷிக்கு காட்சியளித்து ஆசிர்வாதம் செய்தார். இதன்பின் இந்த இடத்திற்கு ஆன்மிக பலம் கூடியது. குறுகிய காலத்தில் இங்கு ஸ்ரீ ரங்கநாத சுவாமியின் கோவில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டது . இன்று உலகின் மிகப்பெரிய கோவில் என்கிற பெருமையும் இந்த கோவில் பெற்றுள்ளது.
இந்த கோவிலை கட்டியது யார் என்பது இன்றுவரை ஓர் புரியாத புதிராகவே உள்ளது. இந்த கேள்விக்கான சரியான பதில் என்பது சர்ச்சையாகவே இருந்து வருகிறது. பலரது கருத்துப்படி சோழ வம்சத்தின் ஒரு ராஜாவு காட்டில் ஒரு கிளியை பின்தொடர்ந்து போகும்போது கடவுள் விஷ்ணுவின் சிலை கிடைத்ததாகவும் பிறகு அந்த ராஜா இந்த கோவிலை கட்டியதாகவும் பலரும் நம்புகின்றனர்.
அதேபோன்று மறுபுறத்தில், கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள் சோழர், பாண்டியா, ஹொய்சல் மற்றும் விஜயநகர ராஜ வம்ச காலக் கட்டத்தை காட்டுகிறது. இதனால் தென்னிந்தியாவை ஆண்ட மன்னர் பரம்பரையால் கட்டப்பட்டுள்ளது என சிலர் நம்புகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோவில் மைசூரில் இருந்து தொலைவில் இல்லாத காரணத்தினால், திப்பு சுல்தானுக்கும் இந்த கோவில் மீது ஆர்வம் இருந்தது. முன்னோர்களின் கருத்துப்படி தீப்பு சுல்தான் இங்கு பூஜை செய்யும் ஐயர்கள் மீது மிகவும் மரியாதை வைத்தவராம். இதுமட்டுமின்றி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு போரில் வெற்றிப் பெற்றதுக்கு கோவிலின் ஜோதிடர்கள் காரணம் என தீப்பு சுல்தான் நம்பினார். அவர்களது ஆலோசனையின் பெயரில் தான் தாம் வெற்றி பெற்றதாக முழுமையாக நம்பினார். ஜோதிடர்களுக்கு மரியாதையும் செய்து கோவிலுக்கு தேவையான பல உதவிகளை அவர் செய்தார். இந்தளவுக்கு இந்த கோவிலுக்கு இந்திய வரலாற்றில் மிக முக்கயமான பங்குள்ளது.
ஆன்மிக நோக்கத்துடன் இந்திய மட்டுமின்றி உலகத்தின் பல இடங்களில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால்தான் தமிழ் நாட்டின் முக்கியமான சுற்றுலா தளமாக திருச்சி அருகில் இருக்கும் இந்த ஸ்ரீரங்கம் கோவில் மாறிவருகிறது. இந்த கோவில் 21 கோபுரம் கொண்டு மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. ஒருநாள் முழுதும் நீங்கள் இந்த கோவிலினை சுற்றிப்பர்ப்பது கடினம்தான் அந்தளவுக்கு காண வேண்டிய காட்சிகள் அதிகளவில் இங்கு உண்டு.
‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’’’’’ என்பது அன்றோர் வாக்கு அப்படி பிரம்மாண்டமான 236 அடியில் கட்டப்பட்டுள்ள ‘ராஜகோபுரம்’ பார்ப்பவர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்கிறது. மேலும் இந்த ராஜகோபுரம் தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்குள் விஷ்ணுவின் அதிசயம் நிறைந்த சிலையை கண் குளிர பார்க்க இயலும். கடவுள் விஷ்ணு நமக்கு படுத்துக்கொண்டு தருகின்ற தரிசனத்தை காண்பது நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடும் இந்த கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களின் கருத்தாகும். இதைத்தவிர மற்ற தெய்வங்களின் தரிசனமும் நாம் இங்கு பெறலாம்.
கோவில் அருகில் இருக்கும் 5 முக்கிய சுற்றுலா தளங்கள்
இந்திய பனோரமா: 1.4 கிமீ தொலைவில் உள்ளது.
ஜம்புகேஸ்வரர் கோவில்: 1.6 கிமீ தொலைவில் உள்ளது.
மலைக்கோட்டை: 4.5 கிமீ தொலைவில் உள்ளது.
ஸ்ரீரங்கம் மேலூர் ஐய்யனார் கோவில்: 1.7 கிமீ தொலைவில் உள்ளது
இந்த இடங்கள் அனைத்தும் கோவிலின் அருகினில் இருப்பததினால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ஸ்ரீரங்கம் செல்லவேண்டும் என்றால் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இருந்து பேருந்துவசதி திருச்சிக்கு உள்ளது அதனால் எளிதில் நாம் ஸ்ரீரங்கம் சென்று வரலாம். மேலும் இங்கு தங்குவதற்கு செலவும் மிகவும் குறைவு. கோவிலில் கிடைக்கும் அன்னதானம் சாப்பாடு நமது வீட்டு உணவைவிட பலமடங்கு சுவையானது ஆகும்.
பாண்டிச்சேரி, கோவா எப்போது வேண்டுமானாலும் போகலாம் ஆனால் தமிழன் பெருமையை உலகம் முழுவதும் சொல்லும் இங்கு செல்வது மிகவும் அவசியம் ஆகும். இன்னும் எதுக்கு தாமதம் அடுத்த விடுமுறை காலத்துக்கு நிச்சயம் ஸ்ரீரங்கம் சென்று உலகின் மிகப்பெரிய கோவிலின் தரிசனத்தையும் தமிழன் வரலாறையும் தெரிந்துவாருங்கள்.
சொல்லப்பட்ட செய்திகளில் தவறுகள் இருந்தால் அல்லது எங்களது ஆக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களது கருத்தை கீழே பதிவு செய்யவும்.
Featured image credit / Facebook open graph: pinterest.com