roar தமிழ் டிஜிட்டல் ஊடகம் இலங்கையில் முதன் முறையாக நடாத்தும் roar Top Contributor தமிழ் திறன் காண் போட்டி நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கிறோம்.
இலங்கையின் அடையாளமாகிய உங்கள் திறமைகளை உலகம் அறிய பின்வரும் போட்டி முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து எதிர்வரும் டிசெம்பர் 30ம் திகதிக்குள் எமக்கு அனுப்பி, உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தையும் பரிசினையும் சுவீகரித்திடுங்கள்!
இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் இடம்பெறும். எழுதும் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக கட்டுரைப் போட்டியும், மற்றும் வீடியோ தயாரிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஆவணப்பட போட்டியும் இடம்பெறவுள்ளது.
போட்டிக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கே தெளிவாக தரப்பட்டுள்ளது.
https://roar.media/tamil/main/trending/how-to-apply-for-roar-top-contributor/
கட்டுரை போட்டி
அறிவுசார் / தகவல்சார் கட்டுரைகளை எழுதும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?
இலங்கையின் சரித்தரக் கதைகளை, தமிழ் வரலாறுகளை, தனித்துவமான மனிதர்களை, உலக அறிவை மற்றும் நீங்கள் ஆக்கபூர்வமான கட்டுரை என எண்ணும் எதையும் எங்களுக்கு கட்டுரை வடிவில் அனுப்பலாம்.
எமது roar தமிழ் இணையத்தில் வெளியாகி சிறந்த கட்டுரைகளாக தெரிவுசெய்யப்பட்டு TOP CONTRIBUTOR அங்கீகாரத்தினைப் பெறும் 5 கட்டுரைகளுக்கு சிறப்புப் பரிசுகள்!
டிசெம்பர் 30ம் திகதிக்குள் உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்!
எத்தனை கட்டுரைகளை வேண்டுமானலும் அனுப்பலாம்.
விதிமுறைகள்: https://roar.media/contribute/
முழுமையான விபரங்களை பெற மேலுள்ள Roar Contributor லிங்க் வழியே எமைத் தொடர்புகொள்ளுங்கள்!
ஆவணப்பட போட்டி
பட இயக்கம், காணொளி தயாரிப்பு பிரிவுகளில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?
கீழ் காணும் தலைப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பும் வடிவில் ஆவணப்படம் ஒன்றை தயார் செய்து அனுப்புங்கள்.
- உங்கள் பிரதேசத்திற்கே உரிய உணவு வகைகள்.
- உங்கள் பிரதேசத்தில் காணப்படும் சுற்றுலா தளம்/ தளங்கள்
- உங்கள் பிரதேசத்தில் கவனிக்கப்பட வேண்டிய சூழல் பிரச்சினை.
- உங்கள் பிரதேசத்தில் பண்பாடு கலாசார நிகழ்வொன்றின் ஏற்பாடுகள்.(உ+ம்.காமன் கூத்து/ கோவில் திருவிழா)
- வெளியே அதிகம் தெரியாத, உங்கள் பிரதேசத்தில் வாழும் தனித்துவமான திறமைவாய்ந்த கலைஞர் ஒருவர் . (உ+ம் சிற்பக் கலைஞர்,ஓவியர், மிருக ஆர்வலர்)
எமது roar தமிழ் இணையத்தில் வெளியாகி சிறந்த ஆவணப்படமாக தெரிவுசெய்யப்பட்டு TOP CONTRIBUTOR அங்கீகாரத்தினைப் பெறும் 3 ஆவணப்படங்களுக்கு சிறப்பு பணப் பரிசுகள்!
டிசெம்பர் 30ம் திகதிக்குள் உங்கள் ஆவணப்படங்களை அனுப்ப வேண்டும்!
விதிமுறைகள்
மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் மாத்திரமே இருக்க வேண்டும்.
குறந்தது 3நிமிடம், ஆகக்கூடியது 10 நிமிட காணொளிகளாக இருக்க வேண்டும்.
Video camera, DSLR அல்லது camera phoneகள் மூலமாக HD தரத்தில் எடுக்கப்பட வேண்டும்.
பின்னணி குரல் சேர்க்கும் போது, Sound Qualityஐ கவனத்தில் கொள்ளவும்.
ஒருவர்/ ஒரு குழு ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணப்படங்களை அனுப்பலாம்.
சொந்தமாக எடுக்கப்பட்ட காணொளிகளாக இருக்க வேண்டும்.
copyright free/ royalty free இசைக்கோர்ப்புகளையே பயன்படுத்தவேண்டும்.
சுயமாக ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
வெளியாகும் படைப்புகளின் copyright உரிமைகள் roar media நிறுவனத்திற்கு சொந்தமாக்கப்படும்.
முழுமையான விபரங்களை பெற https://roar.media/contribute/ வழியே எமைத் தொடர்புகொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு: இப்போட்டிகளில் இலங்கையர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும்.