அசுணம் பற்றிய சங்ககால ஈழத்துப் புலவரின் பாடல்
சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஒரு அதிசய விடயம் இருக்கிறது. அசுணம் என்னும் ஒரு அதிசய மிருகம் பற்றிய தகவலே அது. கற்பனை ஓவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அழிந்துப் போன விலங்குகள் எவ்வளவோ உள்ளன. தொல்விலங்கியல் (Paleontolgy or Paleo zoology) என்னும் துறை இது போன்ற விலங்குகளின் எலும்புக்கூடுகள் ,படிம அச்சுக்கள் (Fossils) ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளன. ஆனால் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அசுணம் பற்றிய எந்தவொரு தடயமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனை பற்றி சங்க இலக்கியங்களில் ஈழத்துப் புலவர் பூதந்தேவனாரும் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அதிசய அசுணம் பற்றி சங்க இலக்கியங்கள் கூறும் விபரங்கள் :