நாவல்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் கதை முடிந்தவுடன் இது திரைப்படமாக எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று யோசிப்பது உண்டு. ஆனால் எல்லா நாவல்களும் திரைவடிவம் பெறுவதில்லை. எல்லா திரைப்படங்களும் நாவல்களை தழுவி இயற்றப்படுவதும் இல்லை.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை, ஒரு சில படங்கள் நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படித் தமிழ் நூல்களின் திரைவடிவம் பெற்ற திரைப்படங்களுள் சில இதோ:
ஒரு நாவலை அல்லது சிறுகதையை திரைப்படமாக எடுக்கலாம் என்று இயக்குனர் தேர்ந்தெடுக்கும்போதே, அதில் எந்தெந்த பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதைவிட, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்கிற தெளிவு இருப்பதும் மிக அவசியம்.