
தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில் ராட்சத பட்டத்திருவிழா விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் வல்வை விக்னேஸ்வரா சனசமூகசேவா நிலைய ஏற்பாட்டில் உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெற்றது.
இப்பட்டத்திருவிழாவின்போது 200இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டு, ராட்சத பட்டங்களை பறக்கவிட்டதுடன் இதில் 1ம் இடத்தை உருமாறும் மர்மதாக்குதல் விமானத்தை போன்று பட்டத்தை அமைத்த ம.பிரசாந் (31) பெற்றுக்கொண்டார். இவர் தொடர்ந்து 6 தடவைகள் முதல் இடத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் பட்டம் ஏற்றுதலும் ஒன்றாகும் பட்டம் ஏற்றுவதற்கு காற்றின் பங்களிப்பு முக்கியமானதாகும் அந்தவகையில் வாடைக்காற்றின் இறுதிக்காலமான தை மாதத்தில் தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று இப்பட்டப்போட்டி நடாத்தப்படுகிறது.









