சினிமாக்கள் என்பவை மனிதனின் வாழ்வியலை பேசுபவை. சாமான்ய மனிதனுக்கு மிக அருகில் அமர்ந்துக்கொள்பவை. அவனை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துபவை, சிரிக்க வைப்பவை, அழ வைப்பவை, காதல்வயப்பட வைப்பவை, கோவப்பட வைப்பவை, புரட்சி செய்ய வைப்பவை. அவனுக்கான அரசியலை பேசுபவை, அவனுக்கான அடக்குமுறையை பேசுபவை. ஆனால் அவையனைத்தையும் செயற்கையான நாடகத்தன்மையில் அல்லாது இயல்பாக பேசுகிற படங்கள் உலகம் முழுவதும் உள்ள எளிய மனிதர்களாலும் கொண்டாடப்பட்டிருக்கின்றன, வெற்றியடைந்திருக்கின்றன. கலையின் எல்லா வடிவங்களுக்கும் உள்ள பொதுத்தன்மை அதுதான்.