கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தல அஜீத் அவர்களது தோல்வி படங்கள் பற்றி பேசினோம் அதற்கு பல எதிர்ப்பு வந்தது. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது தளபதி விஜய் அவர்களின் தோல்வி படங்கள்.
‘’என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான ரசிகர்களே’’‘ இந்த வாக்கியத்தை கேட்டவுடனே உங்கள் மனதில் தோன்றும் தோற்றம் இளைய தளபதி விஜய் எனது தமிழ் சினிமா அறிந்த ஒரு விஷயம் ஆகும். இளைய தளபதி என்பதை தளபதி என்று மாற்றியபோதே தெரிகிறது நடிகர் விஜய் அவர்களின் தன்னடக்கத்தை காட்டுகிறது. தளபதி விஜய் அவர்கள் 25 வருடங்களாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது கொடியை பறக்கவிட்டு வருகிறார். சமிபத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் மெர்சல் ஆனால் பல்வேறு அரசியல் அமைப்புகளினால் இப்படம் விமர்சனத்திற்கு உள்ளானது, இது முதல் முறை அல்ல இதற்கு முன்பும் விஜயின் பல படங்கள் வெளிவருவதற்கு முன்பும் வெளிவந்த பின்பும் சர்ச்சைகளை சந்தித்துள்ளது. இவ்வளவு சர்ச்சைகளுக்கு நடுவே தனது ரசிகர்களின் உறுதுணையுடன் உயர்ந்து வருகிறார். தனது 25 வருட சினிமா பயணங்களில் விஜய் சந்தித்த வெற்றி மற்றும் தோல்வி படங்கள் பற்றி பார்க்க போகிறோம்.
தளபதி விஜய் அவர்களின் முதல் தோல்வி திரைப்படம் ‘நாளைய தீர்ப்பு’ 1992 ஆம் ஆண்டு விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கி விஜய் திரையுலகிற்கு அறிமுகமான முதல் திரைப்படமே தோல்வி படமாக அமைந்தது என்பதை எந்தவொரு விஜய் ரசிகரும் மறுக்கமுடியாது. இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் படத்திலேயே அதிரடியான கதையில் விஜய் அவர்கள் நடித்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது
தளபதி விஜய் ஒரு பக்கம் இளைஞர்கள் மறு பக்கம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும்படி ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘ஒன்ஸ் மோர்’ மற்றும் காதலுக்கு மரியாதை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஆனாலும் அந்த சமயத்தில் வெளிவந்த ‘பிரியமுடன்’ மற்றும் ‘நிலவே வா’ போன்ற திரைப்படங்கள் அவரை பின்னுக்குத் தள்ளியது.
‘குஷி’, ‘ஃபிரண்ட்ஸ்’ போன்ற திரைப்படங்கள் திரையில் 100 நாட்களை கடந்து திரையில் சாதனைகள் படைத்து வந்த நேரத்தில், அதே காலகட்டத்தில் வெளிவந்த ‘ஷாஜகான்’ மற்றும் ‘பத்ரி’ ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதற்கு காரணம் சரியான திரைக்கதை அமையாதது என்பதுதான்.
புதிய கீதை, உதயா போன்ற திரைப்படங்களும் தளபதியின் தோல்வி படங்கள் பட்டியலில் அடங்கும். ஆனால் இதற்கு பின்பு விஜய் நடித்த கில்லி திரைப்படம் விஜயை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற திரைப்படம் என்று சொன்னால் தல ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள். அதனை தொடர்ந்து வெளிவந்த சுக்ரன், ஆதி போன்ற திரைப்படங்கள் தளபதிக்கு கைகொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
2007 ஆம் ஆண்டு வெளிவந்த போக்கிரி திரைப்படம் விஜய் அவர்களை சந்தை ரீதியாகவும் மற்றும் மற்ற மாநிலங்களிலும் தனது வியாபாரத்தை தொடங்க மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வருடம் வெளிவந்த குருவி மற்றும் வில்லு திரைப்படம் விஜய் அவர்களின் மார்கெட்டை பின்னுக்கு தள்ளியது.
எம்ஜிஆர் அவர்கள் நடித்த தலைப்பில் விஜய் அவர்கள் நடித்த திரைப்படம் தான் வேட்டைக்காரன். இந்த திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றியை அடைந்தது. ஆனால் அதற்கு பின் வெளிவந்த ‘சுறா‘ திரைப்படம் படுதோல்வி அடைந்தது. மேலும் இன்றும் இந்த திரைப்படத்தை பற்றி இன்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேலி செய்வதால் சர்ச்சைகள் உருவாகின்றன.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் மற்றும் துப்பாக்கி திரைப்படம் 100 கோடிக்கும் மேலே வாசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால் அதனை தொடர்ந்து வெளிவந்த தலைவா திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது இதன் காரணமாகவே இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா மற்றும் கத்தி திரைப்படம் வசூல் ரீதியாக சூப்பர்ஹிட் திரைப்படங்களாக அமைந்தது ஆனால் அதனை தொடர்ந்து விஜய் அவர்களின் புதிய முயற்சியில் வெளிவந்த திரைப்படம் ‘புலி’ ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் அமையாத காரணத்தினால் படுதோல்வி அடைந்து விஜய் சர்ச்சைகளில் சிக்க வைத்தது.
2015 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளிவந்த தெறி திரைப்படம் புது ட்ரெண்டினை உருவாக்கியது. ஆனால் அதற்கு அடுத்த வருடம் வெளிவந்த பைரவா தோல்வி படமாக அமைந்தது இதற்கு முன் விஜய் அவர்களை வைத்து இதே இயக்குனர் இயக்கிய அழகிய தமிழ் மகன் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை தர இயலவில்லை.
ஆனால் சமிபத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் அனைத்து சர்ச்சைகளையும் தாண்டி 250 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது உலக அரங்கில் தமிழன் பெருமையை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது
எப்படியும் நான் கூறிய தகவல் சிலருக்கு கசப்பாக இருக்கும் ஆனால் இது உண்மை என தமிழ் சினிமாவுக்கே தெரியும் என்பதால் தைரியமாக எழுதியுள்ளேன் எங்களது தகவலில் தவறோ அல்லது எந்த திரைப்படத்தின் தகவல் தவறாக கூறப்பட்டிருந்தலோ அல்லது திரைப்படங்கள் விட்டு போயிருந்தாலும் எங்களுக்கு கமென்ட் செய்து தெரிவிக்கவும் மீண்டும் ஒரு சுவாரஸ்யமான தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.
Featured image credit: sulekha.com