நமது சுற்றுச்சூழலைப் பேணும் இரகசிய தாழ்வாரங்களான ESA பகுதிகளை பாதுகாத்தல்

பாதுகாக்கப்பட்ட இயற்கை ஒதுக்கங்கள் மற்றும் சிரமதானங்கள்  செய்வது என்பவற்றை கடந்து நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் செய்தாக வேண்டியவை நிறைய இருக்கிறது. உணர்திறன்மிகு சுற்றுச்சூழல் பகுதிகள் என்பது நம்முடைய சுற்றாடலை பாதுகாக்க திரைக்கு பின்னால் கடுமையாக இயங்கும் சிறிய கால்வாய்கள், வழித்தடங்கள், நீரேந்தல் பகுதிகள் மற்றும் நிலத்திட்டுகள் ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பாகும். 

சுற்றுச்சூழல் அமைச்சு, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்துடன் (UNDP) இணைந்து, இந்த அறிய பகுதிகளைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் ஒரு புதிய தேசியக் கொள்கையை முன்னெடுத்து வருகிறது. இந்த காணொளியில், அவற்றின் முக்கியத்துவத்தையும் அவை தரும் பல நன்மைகளையும் நாங்கள் ஆராயவுள்ளோம்.

Related Articles

Exit mobile version